(Reading time: 9 - 18 minutes)

“இன்னும் காலேசுக்கு கிளம்பலியா தாயி..”

“இதோ கிளம்பிட்டேன்.. நீதான் என்ன பிடிச்சு வம்பளந்துட்டு இருக்க..”

“ சரி சரி.. பாத்து பத்திரமா போய்ட்டுவா கண்ணு..”

“சரி ஆச்சி.. வரேன்.. அம்மா அப்பா பாய்.. “

என்றபடி கிளம்பினாள் மலர்.

ங்கே தன்னவளுக்காக வழி மீது விழி வைத்து காத்து இருந்தான் செழியன்.. சென்ற நான்கு நாட்களாக அவளிடம் பேசவில்லை .. மெசேஜ் அனுப்பவில்லை.. எதவுமே இல்லை.. மிகவும் கஷ்டமாக இருந்தது அவனுக்கு.

அவனை பொறுத்தவரை போனிலோ, நேரிலோ பேசுவது என்பது வேறு.. whats up .. மெசேஜ் என்று அனுப்புவது தவறு. நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தாலும், விஷயம் வெளி வரும் முன் அந்த தகவல் பரிமாற்றங்களால் யாருக்கும் எந்த பாதிப்பும் வரக் கூடாது என்பதில் மிக உறுதியாய் இருப்பவன்.. அதனால் தான் அவன் பாடு திண்டாட்டமாக இருந்தது.

ஊருக்கு முதல் நாள் இரவில் வந்தவன், காலையில் கொஞ்சம் சீக்கிரமே கிளம்பி காலேஜ் வந்து விட்டான். ரொம்ப இல்ல.. கேட் திறக்கிற வாட்ச்மன் வருவதற்கு பத்து நிமிடங்கள் முன் தான்.

வாட்ச்மன் அவனை ஏற இறங்க பார்க்க, அப்போதுதான் நேரத்தை பார்ப்பவன் போல் வாட்ச் பார்த்து விட்டு

“அடடா.. பிரண்ட்ஸ் பார்க்க போன இடத்துலே பேசிட்டு இருந்தேன்... நேரமாயிடுச்சோன்னு நினைச்சுட்டு சீக்கிரம் வந்துட்டேன் போலியே.. நான் வேணும்னா போயிட்டு கொஞ்சம் கழிச்சு வரட்டுமா வாட்ச்மன் “ என்று சமாளிக்க,

“அதில் என்ன சார்.. இவ்ளோ தூரம் வந்துடீங்க.. இனிமேல் வெளிலே போயிட்டு எதுக்கு அலையறீங்க.. நீங்க உள்ளே போங்க.. டிபன் சாப்பிடீங்களா சார்.. இல்லாட்டா கான்டீன் திறந்து இருக்கான்னு பார்த்துட்டு வரட்டுமா.. “ என்று வினவினான்.

“வேணாம் வாட்ச்மன்.. நானே அங்கேதான் போறேன்.. போய் ஒரு காபி சாப்பிட்டு விட்டு staff ரூம் போறேன்.. நீங்க வேலைய பாருங்க.. “ என்றபடி நகர்ந்தான்.

ஏற்கனவே காலையில் தன் அன்னையை இதே போல் சமாளித்து விட்டு வந்தது நினைவு வந்தது.

ஏழே முக்காலுக்கெல்லாம் ரெடி ஆகி வந்தவன்

“அம்மா.. டிபன் ரெடியா.. ? இவ்ளோ நாள் தான் காலேஜ் லீவ்.. இஷ்டப்பட்ட நேரத்துக்கு எழுந்து, சாப்பிட்டுன்னு இருந்தேன்.. இன்னிக்கு காலேஜ் திறக்குது..  சீக்கிரமா போக வேண்டாமா..?” என்று தன் தாய்க்கு அர்ச்சனை செய்து கொண்டு இருக்க,

அவன் அம்மாவோ

“ஏண்டா.. என்னமோ இவ்ளோ நாள் எட்டரைக்கு எல்லாம் ரெடி பண்ணி வச்சு, சாப்பிட கூப்பிட்டா .. “ஏன்மா. காலேஜ்க்கும் வீட்டுக்கும் மொத்தமே ரெண்டு கிலோ மீட்டர் தான்.. அதிலும் நான் வச்சிருக்கிற புல்லெட் ஏறி மிதிக்கிற ஸ்பீட்லே காலேஜ் வாசலே வந்துதும்.. எங்க காலேஜ் டைமோ 9.30க்குதான் ..  9.20க்கு கிளம்பினாலே ஐந்து நிமிஷத்திலே போய்டுவேன்.. இதுக்கு ஏன் ஒரு மணி நேரம் முன்னாடியே கிளப்பரதிலே குறியா இருக்குறீங்க..” என்று சண்டை போடுவாய். இன்னிக்கு என்னடா என்றால் சேவல் கூவ அதோட கூட நீயும் எழுந்துரிசுட்டு இருக்கிறவங்கள நக்கலடிக்குதியோ .. உனக்கு என்னாலே ஆச்சு.. எதுவும் மோகினி பிசாசு அடிச்சுட்டுதோ“

என்று அவனுடைய பாலை அசரமால் சிக்ஸர் அடித்துக் கொண்டு இருந்தார்.

ச்சே...  அம்மா நோட் பண்ற அளவிற்கு நடந்துகிட்டு இருக்கோமே என்று ஒரு நிமிடம் எண்ணியவன், அட போங்கையா யாரு என்ன வேணா நினைக்கட்டும்.. மை விழி டார்லிங் பாக்க போறது தான் நமக்கு மூக்கியம்.. என்று எண்ணியவனாக தன் அம்மாவிடம் அசட்டு சிரிப்பை வெளி படுத்திக் கொண்டு காலேஜ் சென்று விட்டான் செழியன்..

இங்கே வாட்ச் மானிடமும் மாட்டிக்கொள்ள.. ச்சே.. இந்த காதல் படுத்தும் பாடு நம்மள மாதிரி இருக்கிறவங்களுக்கே அசட்டு பட்டம் வாங்கி கொடுக்குதே... பாவம் விவரம் தெரியாத சின்ன பிள்ளைகள என்ன பாடு படுத்துமோ.. ?|

ப்ளூ வ்ஹேல் வலையில்ர்ந்து கூட தப்பிட்சுடலாம் போலே.. இந்த காதல் வலையில் இருந்து தப்பிப்பது பெரும் பாடு போலேவே...

செழியன் இப்படியாக தன்னுடைய geology ஆராய்ச்சியை விட்டு விட்டு காதல் படுத்தும் பாடை ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்க , அதே நேரத்தில் மலர் தன் வண்டியில் வருவதை தூரத்தில் இருந்து பார்த்தான்.

மலரின் கண்கள் அன்று போல் இன்றும் வாசலில் நிற்கிறானா என்று தேட, அதை பார்த்த செழியன் மனதிற்குள் மகிழ்ந்தான்..

பிறகு அவள் staff ரூம் நோக்கி வர, செழியனும் staff ரூம் சென்றான்.. இருவரும் நேருக்கு நேர் சந்தித்த உடன் விழிகளால் கதை பேச, அதை கலைப்பது போல்

HOD .. “குட் மோர்னிங் செழியன் & மலர் “ என்று கூற,

சுதாரித்த இருவரும் “குட் மோர்னிங் சார்..” என்றபடி தங்கள் சீட்களில் அமர்ந்தனர்.

department மீட்டிங் என HOD அழைக்க, காலியாக இருந்த ஒரு வகுப்பறையில் மீட்டிங் போட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.