(Reading time: 10 - 19 minutes)

“ அவருக்கு நம்மளயும் சினிமாவையும் விட்டா வேற உலகம் இல்ல கண்ணா..அதே மாதிரி உனக்கும் அப்போஎங்களை விட பெரிய உலகம் இல்லை..இதுல சரி தப்புன்னு எதுவும் இல்லை.. ஆனா ஒன்னு மட்டும் சொல்லுறேன் கண்ணா, அப்பாவும் நானும் உன்னை நினைச்சு ரொம்பவே பெருமை படுறோம்!” என்றார் சுலோட்சனா.

ர்ப்பணாவிடம் பேசிவிட்டு வெளிவந்த ராகவன் முதலில் தொடர்பு கொண்டது நிரூபணாவைத்தான். அர்ப்பணாவின் உயிர்த்தோழி நிரூபணா, அர்ப்பணாவை உயிரென கொண்டவன் ராகவேந்திரன். இருவருக்குள்ளும் அழகிய நட்பொன்று உருவாகிட இதைவிட பெரிய காரணம் வேண்டுமா என்ன?

ராகவனின் அழைப்பினை உடனே எடுத்திருந்தாள் நிரூபணா..

“ரூபி…(இப்படித்தான் அவர் கூப்பிடுவாராம்) எங்க இருக்க?”

“நான் வீட்டில் இருக்கேன்.. சார் என்ன பெரிய வேலை எல்லாம் பார்த்துருக்கீங்கபோல..ஃபோட்டோஸ் பார்த்தேன்… ஆனா எதுவும் சொல்லலையா ..என்ன நடந்துச்சு?”

“அதெல்லாம் பெரிய கதை.. சொல்லுறேன்.. அர்ப்பணாவோட அப்பா அம்மாவை நான் சந்திக்கனும்..நீ வரமுடியுமா?”

“இப்பவா?”

“ஆமா ஏன்?”

“ இல்லை ராகவன் , ஆல்ரெடி இன்னைக்கு நீங்களும் அபியும்தான் ஹைலைட்..கண்டிப்பா உங்க ரெண்டு பேரையும் பல கண்கள் கவனிக்கும்.. இந்த நேரத்தில் நாம எடுத்தோம் கவிழ்த்தோம்னு எதையும் செய்ய வேணாம்..” என்றாள்.அவள் சொல்வது ராகவேந்திரனுக்கும் சரியென்றே தோன்றியது. காலம்தான் அவர்களுக்கு நல்ல தீர்வை தர வேண்டும்.. தந்திடுமா?

கே கண்ணு.. ரொம்ப லேட்டாச்சு.. தேங்க்ஸ் என்னோடு வந்ததுக்கு!” என்றான் வெற்றி.

“ஷபா.. ஓவரா இருக்குடா இதெல்லாம்..சரி நீ எங்க கிளம்புற?உள்ளவா ..நம்ம வீட்டிலேயே தூங்கிக்கோ”என்றாள் கண்மணி. அவளை வீட்டில் இறக்கியவன் காரை அணைக்காமல் அவளை பார்த்து சிரித்தான்.

“ஐயோ ஆளை விடும்மா..நீ வேற இப்போ லவ் பேர்ட்.. உனக்கு கொஞ்சமாச்சும் நான் தனிமை தரனும்ல?”

“டேய் ஓவரா சீன் போடாத”

“ப்ச்ச்..நிறைய வேலை இருக்கு கண்ணு. கதையை யோசிச்சிட்டாலும் ஸ்க்ரிப்ட் எழுதனும்ல?”

“பக்கி.. இவ்வளோ பெரிய வீட்டில் உனக்கு வசனம் எழுத வசதி இல்லையா? வாய மூட்டிட்டு வா” என்றவள் அவன் எதிர்பாராத நேரத்தில் கார் சாவியை பிடுங்கிவிட்டு ஓடினாள்.

“சரியான பிடிவாதக்காரி.. பாவம் சத்யன்..என்ன பாடு பட போறாரோ”என்று அவன் உரக்க சொல்ல,

அது அவரோடவிதி.. நீ அங்கயே நிக்காமல் உள்ளே வா” என ஓடியே விட்டிருந்தாள்.

ஒவ்வொருவரும் அவரவர் கனவு நிறைவேரும் மார்க்கத்தை தேடினார்கள். வெற்றி கிட்டிடுமா?

-வீணை இசைந்திடும்-

Episode # 24

Episode # 26

{kunena_discuss:1055}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.