(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

வீட்டு காலிங்பெல் அடித்தான் யாரும் வரவில்லை

  

”என்ன ஒருத்தருமே இல்லை, கதவு திறந்திருக்கு என்ன செய்யலாம் இப்படியே திரும்பி போயிடலாமா வேணாம் அம்மா திட்டுவாங்க உள்ள போவோம்” என நினைத்தவன் மெதுவாக வலது கால் எடுத்து வைத்து வீட்டிற்குள் நுழைந்துப் பார்த்தான், ஹாலில் யாருமில்லை அதனால்

  

”யாராவது இருக்கீங்களா அக்கா, அண்ணா, அக்கா, தாத்தா, பாட்டி” என தன் வாயில் வந்த உறவு முறையை வைத்து அழைத்தான், யாரும் இருப்பது போன்று தெரியாமல் போகவே சரி வெளியே செல்வோம் என நினைத்தவனுக்கு ஒரு இனிமையான குரல் கேட்டது, அதில் அவனது நடை நின்றது. தன் இரு காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்டு கூர்ந்து கவனித்தான். ஒரு பெண் பாடும் பாடல் ஓசை கேட்டது அருமையான குரல் அதை ரசிக்கலானான்.

  

ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்
ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்
ஹ்ம்ம் ம்ம் பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம்

  

என ஹம்மிங் போட்டபடி பாட அவனுக்குள் உற்சாகம் பிறந்தது. அவனும் அந்த பாடலுடன் இணைந்து  மெதுவாக ஹம்மிங் செய்தபடி பாடினான், அதற்குள் வெளியில் இருந்து ஒரு பெண்மணி வரவும் திடுக்கிட்டான். வந்தவர் கையில் பெரிய பெரிய காய்கறி பைகள் இருக்கவும், சட்டென அதை அவன் வாங்கிக் கொள்ள அந்த பெண்மணியோ

  

”யார்பா நீ எங்க வீட்டுக்குள்ள இருந்து வர்ற” என அதிர்ச்சியுடன் கேட்க சரவணனும் தான் யார் எதற்கு வந்தோம் என்ற விவரத்தை சொல்ல அந்த பெண்மணியின் முகத்தில் மலர்ச்சி

  

”ஓஹோ நீங்கதானா அது, விவரம் சொன்னாங்க தம்பி காலையில வரைக்கும் பார்த்தேன், யாரும் வரலை சரின்னு நான் காய்கறி சந்தைக்கு போயிருந்தேன்” என சொல்ல சரவணனும் அவரின் களைப்பைக் கண்டு பாவப்பட்டவன்

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.