அவன் யாரிடமும் பேசா ஊமை இல்லை ...அனைவரிடமும் கல கலப்பாய் பேசிவிட்டு என்னிடம் மட்டும் மௌன வேஷம் போடுகிறான் ..அவனும் என் தங்கை துரோகியும் சேர்ந்து என்ன ஆட்டம் ஆட தொடங்கினாலும் சரி அது செஸ் ஆக இருக்கட்டும் காராம் ஆக இருக்கட்டும் பல்லாங்குழியாக கூட இருக்கட்டும் இத்தனையும் அவளிடம் ஆடும் அவன் ஒரு முறை கூட என்னிடத்தில் ஆடியதில்லை ..நேரம் போவதே தெரியாது இருவருக்கும் அப்படி ஆட்டத்தோடு ஒன்றி போய் விடுவர் ..
நான் தனிமையில் செய்வதறியாது உறங்க சென்று விட கும்பகர்னி என்ற பெயர் சம்பாதிப்பது மட்டும் தான் மிச்சம் ...
அண்ணன் திருமணம் சிறப்பாக முடிந்திருக்க வந்திருந்த என் காந்திமதி அத்தை என்னிடம் விசாரிக்கும் போது தான் எனக்குமே நினைவு வந்தது நாள் தள்ளி போயிருப்பது
...
This story is now available on Chillzee KiMo.
...
ைச்சுட்டு வாங்க ..என்றாள்
ஆ எல்லாம் ஆச்சு அத்தை நாங்க வரோம் நீங்க கீழ வெயிட் பண்ணுங்க என்று சொல்லி அனுப்பிவிட்டு
ஏய் எதுன்னாலும் நீ எக்ஸ்ட்ரீம் எண்ட் ல தான் நிப்பியா ...? பொறுமையா பேச மாட்ட ..? அமைதியா யோசிக்க தெரியாது ....உன் மண்டைல ப்ரைன்ன்னு ஒன்னு இருக்கா இல்லையாடி என்றான்