(Reading time: 32 - 63 minutes)

ன் அம்மா அப்பாவுக்கு இவங்கள முன்னாடியே தெரியுமா?” இவன் மனதில் தானாக எண்ணம் ஓடுகிறது. இவர்களை ஷாரோனும் விஜியம்மாவும் ஒரு அறக்குள் கொண்டு செல்ல அங்கே கைதட்டலின் ஓசையில் ஜோஷ்வா தலைநிமிர்ந்து நோக்க நிறைய சிறு பிள்ளைகளும் ,வீல்சேரில் பெரியவர்களும் அமர்ந்து புன்னகையுடன் கைதட்டிக் கொண்டிருந்தார்கள். ஷாரோன் ஜோஷ்வாவையும் அபிகேலையும் அழைத்துக் கொண்டு அறையின் முன் பகுதியில் அலங்கரித்த நாற்காலியில் அமர வைக்க ஒவ்வொரு குழந்தைகளும் ஒரு ரோஜா மலர் கொண்டு வந்து இருவர் கையிலும் சேர்த்து கொடுத்து விட்டு “திருமண வாழ்த்துக்கள்” என்று அழகுத் தமிழில் மொழிந்து தம்பதிகளுக்கு கன்னத்தில் முத்தமும் கொடுத்து சென்றனர். ஜோஷ்வாவுக்கு இதெல்லாம் ஆச்சர்யமாகி இருந்தது. குழந்தைகள் வந்து வாழ்த்தி முடிந்ததும் தம்பதிகளை ஷாரோன் வீல்சேரிலிருந்த பெரியவர்கள் பக்கம் அழைத்து சென்றான், ஒரு சிலருக்கு ஒரு கால் இல்லை. சிலருக்கு இரண்டு கால்களுமே இல்லை. சிலருக்கு கால் இருந்தும் முதுகுத் தண்டுவடம் பாதிககப்பட்டதால் நடக்க முடியாதவர்களாய் இருந்தனர். எல்லாப் பெரியவர்களும் சிறு சிறு பரிசுகள் கொடுத்து தம்பதிகள் தலையில் கைவைத்து ஆசிர்வதிக்க ஜோஷ்வாவுக்குள்ளும் அன்பின் அலை இதமாக அடித்து சென்றது!. குழந்தைகளின் ஆடலும் பாடலும் அரங்கேற அப்பொழுதும் இனிதாக நகர்ந்து சென்றது. எல்லோரையும் ஷாரோன் உணவறைக்குள் அழைத்து சென்றான். குழந்தைகள் அபிகேலுடன் ‘அபிம்மி அபிம்மி” என்று அழைத்து சந்தோஷத்துடன் கொஞ்சிக் குலாவுவதைக் கண்டு  “இவளையும் இவங்களுக்கெல்லாம் முன்னாடியே தெரியுமா?’ என்று ஜோஷ்வா நினைத்துக் கொண்டான்.அபிகேலும் ஜோஷ்வாவின் பெற்றோரும் குழ்ந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உணவு பரிமாறுவதில் கைகூட..ஜோஷ்வா பல கேள்விகளுடன் வராண்டாவில் வந்து தோட்டத்தை வேடிக்கை பார்த்து நின்றான்.

‘’என்னண்ணா இங்க தனியா நிக்குறீங்க? பிள்ளைகள் எல்லோரும் சாப்பிட்டு முடிக்க போறாங்க. வாங்க போய் சாப்பிடலாம்: என்று ஷாரோன் வந்து அழைத்தான்

“ஷாரோன் யார் இந்த ஹோம் நடத்துறாங்க. நீங்களா..?”

“என்னண்ணா இப்படி கேக்குறீங்க..உங்களுக்கு தெரியாதா…அபி அக்காதான் நடத்துறாங்க.”

“வாட்..அபிகேலா..எப்பொ இருந்து நடத்துறாங்க..?”

“இந்த அன்பின் அலை தொடங்குனதே அக்கா தான். 4 வருஷமா நடத்துறாங்க.என்னை இந்த நிலமைக்கு கொண்டு வந்ததே அக்கா தான். எனக்கு 10 வயசாயிருக்கும் போது ஒரு ஆக்ஸிடெண்டுல அப்பா இறந்துட்டாங்க.எனக்கு ஒரு கால் முட்டுக்க கீழே போயிடுச்சு. என் அம்மாதான் இங்க எல்லோரும் கூப்பிடுற விஜியம்மா,அவங்க பேயர் விஜி. அக்காவ குழந்தைகள் அபி மம்மினு கூப்பிடுறதால அம்மாவ விஜியம்மானு கூப்பிடுறாங்க. நான் கர்ச்கீப்ல வித விதமா படம் வரையுவேன். டவுண் பஸ்டாண்டுலா ஒரு ஓரமா இருந்து அதை விற்பேன். 4 இயர்ஸ் முன்னாடி அபி அக்கா என்னை பார்த்தப்ப ஒரு கர்ச்சீப் வாங்கினாங்க. அதோட விலை 20 ரூபா தான். அக்கா 1000 ரூபா நோட்ட தந்துட்டு பாலன்ஸ் வேண்டாம் எங்கிட்டயே இருக்கட்டும்னு சொன்னாங்க. நான் தான் “எனக்கு 20 ரூபா போதும் . ஹெல்ப் பண்ணனும்னா பக்கத்துல இருந்த 2 கண்ணும் தெரியாத தாத்தாவுக்கு ஹெல்ப் பண்ணுங்கனு சொன்னேன். அக்கா என்ன நினச்சாங்கனு தெரியாது. அந்த தாத்தாகிட்ட போய் பேசிட்டு அவங்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு போயிட்டாங்க.அடுத்த நாள் அக்கா திரும்பவும் என் பக்கம் வந்தாங்க.”என் கூட வர முடியுமா..எதாவது வேலை அரேஞ்ச் பண்ணித்தரேன்னு கேட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.வர்றேனு சொன்னேன். என்ன ஒரு பிசியோதெரப்பிக்கிட்ட கூட்டிட்டு  போய் என் காலுக்கு மரக்கால் வச்சு தந்தாங்க.இந்த அன்பின் அலை கட்டி முடிக்க ஒன் இயர் ஆச்சு. அக்காவும் அக்காவோட அப்பா சேவியர் அங்கிளும் சேர்ந்து தான் எல்லா வர்க்கையும் நின்னு பார்த்தாங்க. இந்த ஹோம் கட்டி முடியுறவரைக்கும் சேவியர் அங்கிள் ஆபிஸ்ல தான் இருந்து கம்ப்யூட்டர் கத்துக்கிட்டேன். ஹோம் ஸ்டார்ட் பண்ணும்போடு 7 பேர் இருந்தாங்க. அதுக்கபிறகு தான் இப்பொ இருக்குற குழந்தைகளும் பெரியவர்களும் வந்து சேர்ந்தாங்க. என்னால பைக் ஓட்ட முடியும்னு அக்காதான் தன்னம்பிக்கை தந்து கத்துக்க ஏற்பாடு செஞ்சு தந்தாங்க. அன்றைக்கு நானும் அக்காவும் பைக்ல போனது கூட ஒரு குழந்தைய பார்க்கத்தான் போனோம். ஒரு குழந்தைய யாரோ பெற்று விட்டுட்டு போயிட்டாங்க. அந்த தெருவுக்குள்ள கார் போகுறது கொஞ்சம் கஷ்டம். அதனால தான் பைக்குல போயிட்டிருந்தோம்.நீங்க அக்காகிட்ட பேசிட்டு சடார்னு காரெடுத்துட்டு போனதும் அக்காவுக்கு ரொம்ப டென்ஷனும் கவலையாயிடுச்சு.நீங்க வீட்டுல போய் சேர்ந்துட்டீங்கனு தெரிஞ்ச பிறகு தான் அக்காவுக்கு நிம்மதியாச்சு.” ஏதோ கன்னித்தீவு கதை கேட்பதுபோல ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான் ஜோஷ்வா.

குழந்தைகளும் பெரியவர்களும் மகிழ்ச்சியோடு விடைகொடுக்க தன் கையிலிருந்த பிஞ்சுகுழந்தையை முத்தமிட்டு விஜியம்மாவின் கையில் கொடுத்தாள் அபிகேல்.’இது தான் அன்னைக்கு தேடிப்போன குழந்தை”ஜொஷ்வாவுக்கு புரிந்தது. சிவந்த மென் உதடுகளும் இளம் ரோஸ் நிற ரோஜா போன்ற மென் சருமமுள்ள் பால்போன்ற இக்குழந்தையை எப்படி ஒரு தாயால் விட்டு செல்ல முடிந்தது? அதுதான் பைபிளில் கடவுள் செல்கிறாரோ..”பால் குடிக்கும் தன் குழந்தையை அதன் தாய் மறந்தாலும் நான் மறப்பதில்லை.”இப்போது இவனின் பார்வை தானாக அபிகேலை வருடியது.கடவுளின் சாயலாய் இவன் கண்களுக்குள் அவள் பிம்பம்!

“யார் இவள்…?’வீட்டில் வந்து செர்ந்து அரை மணி நேரமாகியும் ஜோஷ்வாவுக்குள் கேள்வித் தொடர்கள்….வீட்டில் சேர்ந்ததும் யாரோடும் பேசாமல் தன் அறைக்குள் சென்று விட்டான்.இவன் அறையின் பின்னால் உள்ள பால்கனியில் போய் நின்றான். அறையின் உள்ளே ஒரே நிறத்தில் சுற்றிலும் திரைச்சீலை போட்டிருப்பதால் அந்த பால் கனியின் வாசல் புதிதாக இவன் அறைக்குள் வருபவர்களுக்கு தெரியாது.திடீரென்று ஜோஷ்வாவின் செல் மனி அடிக்க எடுத்து பார்த்தான். கடந்த ஒரு மாத காலமாக 777 என்று முடியும் எண்ணிலிருந்து மிஸ்டு கால் தான் வரும் . ஆனால் இப்போது அழைப்பு வந்து கொண்டிருந்தது! கடந்த ஏழு நாள்களாக இதிலிருந்து மிஸ்டு கால் வராதது இவன் நினைவுக்கு வருகிறது.’யாராக இருக்கும்’ சந்தேகத்தோடு காதில் வைத்து ஹலோ சொல்ல..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.