(Reading time: 32 - 63 minutes)

ண்களில் எரிச்சல்..உடல் முழுவதும் சுமந்த வலியில் மெதுவாக கண் திறந்து பார்த்தால் அருகில் அப்பாவும் அம்மாவும்.அதென்ன அம்மா முகம் வீங்கியிருக்கிறது..அழுதாங்களா…இவன் அம்மா முகம் பார்க்க “ஜொஷ்வா முழிசிட்டியாப்பா…கடவுளே நன்றி..ரெண்டு நாள்கழிச்சு என் பிள்ளை கண் திறந்துட்டான்,,,”

“ஸ்ஸ் கிரேசி அமைதியா இரு” அப்பா அம்மாவை அடக்கினார்.

இவனுக்கு இப்போது சம்பவித்தது மெதுவாக நியாபகம் வருகிறது..அம்மாவும் அப்பாவும் இவனை கண்ணின் மணி போல பார்த்துக்கொள்ள மூன்று நாள்கள் கழிந்தது. அன்று அம்மா மட்டும்தான் இவனோடு மருத்துவமனையில் இருந்தார்கள். அம்மாவுக்கு ஒரு ஃபோன் பண்ண வேண்டும் என்று அறைக்கு வெளியே சென்றார்கள். அது மிகப் பெரிய மருத்துவமனை என்பதால் வசதி படைத்தவர்களுக்கென்று தனித்தனி ஐசியு அறைகள் உண்டு.எப்போதும் ஒரு நர்ஸ் அங்கே இருப்பார்கள். திடீரென்று கதவைத் தட்டும் ஓசை கேட்க நர்ஸ் கதவைத் திறக்கும் போது சாரா உள்ளே நுழைந்தாள். அவளைக் கண்டவுடன் ஜோஷ்வாவின் முகம் மெலிதாக மலர்ந்தது. “சாரி ஜோஷ்வா..” ஜோஷ் இப்பொழுது ஜோஷ்வாவாக மாறியிருந்தது.ஜோஷ்வா அமைதியாக அவளின் ஜோஷ் என்ற அழைப்புக்காக எதிர்பார்ப்போடு பார்த்தான்,

“ஜோஷ்வா எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு, உங்க ஃபிரெண்ட் ஆனந்த் தான் மாப்பிள்ளை. உங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சுனு அவருக்கு தெரிஞ்சிருக்கு, இப்பொ இங்கதான் உங்களை பார்க்க வரப்போறதா சொன்னாங்க. நமக்குள்ள என்னவேணும்னாலும் நடந்திருக்கலாம். அதெல்லாம் அவர்கிட்ட சொல்லிடாதீங்க. உங்களுக்கு இப்படி ஆயிடுச்சு. சோ பிராக்டிகலா திங்க் பண்ணேன், உங்கள என்னால மேரேஜ் பண்ண முடியாது.நான் மேரேஜ் பண்ண போறவங்க எப்பவும் அழகா இருக்குறது தான் எனக்கு பிடிக்கும்.” இவன் முகத்தின் அதிர்வையோ, அது பிரதிபலிக்கும் வலியையோ காண அடுத்த நிமிடம் அவள் அங்கே இல்லை. போய்விட்டாள்.    

ஒரு மாதம் கழித்து மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகும் மனதின் கனலும் வேதனையும் மாறவில்லை. இவனது மாடி அறை வாசம் இப்போது கீழறைக்கு மாற்றப்பட்டிருந்தது. யாரிடமும் பேசுவதில்லை. அம்மா அப்பா எதாவது கேட்டால் மட்டும் பதில் வரும், ஒரு ஆக்சிடண்டும் ,ஒரு காதலின் தோல்வியும் இவன் தன்னம்பிக்கையை அழித்து தாழ்வு மனப்பான்மையை விதைத்திருந்தது.

ழைய நினைவுகள் படம் போல நினைவினில் ஓட கனத்த இதயத்தோடு நிகழ்கால கேள்விக்கு வந்தான்.

“இந்த போட்டோ எப்படி உங்கிட்ட வந்தது?”

“நீங்க 12த் வரைக்கும் தானே ஊரில இருந்தீங்க. அதற்கப்புறம் நான் உங்கள பார்த்ததே இல்லை.உங்கம்மா என்னோட கேடிகிஸம் டீச்சரா இருந்தப்ப எங்கிட்ட நல்லா பேசுவாங்க. உங்கம்மாகிட்ட என்னோட அம்மா மாதிரி ஒரு நெருக்கமான உன்னதமான அன்பை என்னால ஃபீல் பண்ண முடிந்தது. எல்லா சண்டேயும் சர்ச் வர்ஷிப் முடிஞ்ச பிறகு அம்மா எங்கிட்ட பேசிட்டுதான் போவாங்க. நான் எம்.டெக் முடிச்சதும் அப்பாவோட பிஸ்னசுல ஜாயின் பண்ணிட்டேன். ஒரு நாள் உங்கம்மா எங்கிட்ட சொன்னாங்க  “நான் கடவுள்கிட்ட ஒரு ஸ்பெஷல் விண்ணப்பம் பண்ணிட்டிருக்கேன். நீ என் வீட்டு மகளா வரணும்னு” சொன்னாங்க. எனக்கு திடீரென்று ஒண்ணும் புரியல. “மகள் மீன்ஸ் மருமகள் “ நு சொன்னபிறகு தான் புரிந்தது.எனக்கும் எங்க வீட்டுல அலயன்ஸ் பார்த்திட்டிருந்தாங்க. நான் அம்மாகிட்ட என் பேரண்ட்ஸ் கிட்ட பேசுங்கம்மானு சொன்னேன். அவங்களும் பேசின பிறகு தான் நான் உங்கள பார்க்கணும்னு இந்த போட்டோவை கொண்டு தந்தாங்க.உங்களுக்கு ஆக்சிடண்ட் நடந்த அன்றைக்கு இந்த போட்டோ என் கையில கிடைத்தது. அதைப்பார்த்ததும் இயேசப்பா எனக்கு தரப்போற மணவாளன் இவர்தான் னு ஒரு உணர்வு..உங்கம்மாகிட்ட ஒரு உன்னதமான  தாயன்பை நான் எப்பவும் ஃபீல் பண்ணியிருக்கேன். அதேபோல உங்க போட்டோவ பார்த்ததும் ஒரு ஆத்மீக அன்பை ஃபீல் பண்ண முடிந்தது.அப்பொழுது மனசுல சொன்னேன்” இயேசப்பா வாழ்விலும் தாழ்விலும் இன்பத்திலும் துன்பத்திலும் நான் எப்பொழுதும் இவங்ககூடவே இருக்கணும்”.

நீங்க சுயநினைவு இல்லாம ரெண்டு நாள் கிடந்தப்ப நானும் ஹாஸ்பிட்டல் வந்திருந்தேன். உங்களுக்கு சுய நினைவு வந்தபிறகும் நான் பார்க்க வந்தேன்.அப்போது தான் சாரா உங்ககிட்ட பேசுனதை நான் கேட்டேன்.நான் வாசல் பக்கம் தான் நின்னிட்டிருந்தேன். நீங்க என்னை பார்க்கல. உங்க கண்ணுல் தெரிந்த அந்த வலி என் இதயத்தை துளைத்ததுபோல இருந்தது.” அபிகேல் அமைதியாக நிறுத்தி அவன் முகம் பார்க்க அவன் இவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு அழுத்திவிட்டு

“ம்ம் சொல்லு..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.