(Reading time: 20 - 40 minutes)

ப்பொழுது அவன் கைப்பேசி ஒலித்தது. “முன்பே வா..என் அன்பே வா..பூப்பூவாய் பூப்பூவாய்..”

பதறியடித்து பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து காதில் அனைத்துக்கொண்டான்.

“ஆமா ..மேல தான் இருக்கேன்.. இருக்கோம்.. ரெடியா?”

போனில் பேசிக்கொண்டே இவளைப் பார்த்தான். அவளது பார்வை இவனைப் பார்த்து மாட்டிக்கொண்டாயடா என கேலிப் புன்னகை செய்தது.  

ன்று..

“சில்லுனு ஒரு காதல்னு ஒரு படம் வந்திருக்கே பாத்தியா?”

“இல்ல.. நீ பாத்தியா?”

“ம்ம்ம்.. அப்டியே மயங்கிட்டேன்..சூர்யா பூமிகா லவ் எபிசோட் எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா? அப்டியே நம்ம ரெண்டு பேர் மாதிரி.. “

“டேய்..இதான் சான்ஸ்னு உன்ன சூர்யானு சொல்லிக்கிற போல..”

“அய்யே..அப்போ நீ மட்டும் பூமிகாவா?”

“ஓ ..அப்போ நான் அழகா இல்ல..அப்டி தான? கெளம்பு,,கெளம்பு..வீட்டுக்கு கெளம்பு..மொதல்ல என் பெட் விட்டு கீழ போ..” கையில் வந்திருந்த பென்சிலை ஆட்டி ஆட்டி மிரட்டினாள்.

“ஹேய் ..ஸாரி ஸாரி..நீ செம அழகு..பூமிகா எல்லாம் தள்ளி நிக்கணும்..ப்ளீஸ் ப்ளீஸ்..ஐ எம் ஸாரி" அவள் கையைப் பிடித்துக் கொண்டு இன்னும் நெருங்கி வந்தான்.

அவள் இவனையே முறைத்துப் பார்த்தாள். “அந்த பயம் இருக்கட்டும்"என்றாள் புருவத்தை உயர்த்தி ,அதே கொல்லும் புன்னகையோடு.

“அதுல முன்பே வானு ஒரு பாட்டு இருக்கு..அப்பப்பா..கேட்டுப் பாரேன்..”என்றான்.

“அதெல்லாம் அப்புறம் கேக்கலாம். இப்போ படிக்கலாம்"

“அட..ஜஸ்ட் அஞ்சே நிமிஷம்..ரெண்டு மணி நேரமா படிச்சிட்டு தானே இருக்கோம். அதிகமா படிச்சா கேன்சர் வருதாம்..ரிசர்ச் பண்ணிருக்காங்க..இத மட்டும் கேட்டுட்டுப் படிப்போம்..ஒகே?”

“கடவுளே..ஓகே..இயர்போன் எடு..” சலித்துக்கொண்டாள்.

ஆளுக்கொரு இயர்ப்ளக் மாட்டிக்கொண்டு பாட்டைக் கேட்டனர். ஐந்து நிமிடங்களுக்குப் பின்..

“வாவ்..செம சாங் .. இத எனக்கு ப்ளூடூத்ல அனுப்பு" இயர்போனை சுருட்டினாள்.

“நான் சொன்னா கரெக்டா இருக்கும். உனக்குப் பிடிக்கும்னு அப்போவே தெரியும். முன்பே வா,என் அன்பே வா,,பூப்பூவாய் பூப்பூவாய்"  

“ஹேய் ..ரெண்டு முக்கியமான விஷயம் நீ பண்ணனும் இப்போ"

“என்ன?” ஆர்வமாய் அருகில் வந்தான்.

“ஒன்னு தயவு செஞ்சு பாடாத. கேக்க சகிக்கல.ரெண்டு படிக்க ஆரம்பி..டைம் ஆகுது"

“ஹ்ம்ம்..கஷ்டம்" வெறுப்புடன் புத்தகத்தில் மீண்டும் கண் பதித்தான்.  

ன்று...

 போனை மீண்டும் பாக்கெட்டில் வைத்தான்.

“கீழ போலாம்..”

“ம்ம்ம்" அவனைப் பின்தொடர்ந்தாள்.

இருவரும் அமைதியாய் நகர்ந்தனர். வராண்டாவைக் கடந்து படிகளில் இறங்கினர். இருவருக்குமிடையே நான்கு படிக்கட்டு இடைவெளி இறுதிவரை கூடவோ குறையவோ இல்லை.  

தரைதளத்தை அடைந்தனர். அங்கிருந்த விழா அரங்கத்தைக் கடந்து சென்றனர்.  திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி  கிட்டத்தட்ட அனைவரும் வந்துவிட்டனர். கலந்துகொள்ள வாய்ப்பே இல்லாதவர்கள் பட்டியலில் இருந்தவர்கள் இருவர். ஒன்று அருண் இன்னொன்று அனிதா. நிம்மதியாய் மூச்சு விடக்கூட நேரமில்லாமல் சினிமாவில் நட்சத்திரமாய் உலவும் அருண் இந்த சின்ன விழாவிற்கு வருவானென யாரும் கற்பனை கூட செய்திருக்கவில்லை. பாராட்டு மழையில் நனைந்து போனான் இன்று. முன்னால் மாணவர் சந்திப்பு விழா,இவனது பாராட்டு விழாவாக மாறிப்போனது. இன்னொரு புறம் அனிதா. ஏனோ கல்லூரி முடிந்த பின் யாருடனும் தொடர்பின்றி மொத்தமாய் ஒதுங்கிவிட்டாள்.  

வந்திருந்த கூட்டம் கிட்டத்தட்ட கலைந்திருந்தது. ஒரு சிலர் மட்டும் குடும்பம் சகிதமாக ஆங்காங்கே நின்று செல்பி எடுத்துகொண்டிருந்தனர். அருணின் மனைவி நித்யாவும் குழந்தைகளும் யாருடனோ பேசிக்கொண்டிருந்தனர்.   

“அவ தான் நித்யா..க்ரீன் சல்வார்..என்னோட வொய்ப்"  

“தெரியும்..காலைல வந்ததுமே பார்த்தேன்..பிரெண்ட்ஸ் சொன்னாங்க..ரொம்ப அழகா இருக்காங்க..ஐ லைக் ஹெர்"

நித்யா இவர்களை நோக்கி வந்தாள்.

“ஹை அனிதா..எப்படி இருக்கீங்க? அப்போவே பேசணும்னு நினைச்சேன்..ஸாரிங்க..”

“ஹ்ம்ம்..ஆ..நல்லா இருக்கேன் நித்யா.. உங்களுக்கு என்ன தெரியுமா?”

“தெரியும்..நல்லாவே தெரியும்..நிறைய பேசியிருக்கோம் நானும் இவரும் உங்களைப் பத்தி"

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்துப் போனாள்.  

“நீங்க பேசிட்டே இருங்க. பத்தே நிமிஷம்.. வந்துடறேன்.. ஏங்க..இங்கயே இருங்க..” அவன் கையைத் தொட்டு சொல்லிவிட்டுச் சென்றாள். அவள் சிறிது தூரம் சென்றபின் அனிதா பேசினாள்.

“ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே? நான் வேணா போகட்டுமா அருண்?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.