(Reading time: 20 - 40 minutes)

ம்ம பைனல் இயர் கிளாஸ்ரூம்.. இன்னும் அப்படியே இருக்கு பாத்தியா அருண்?” தான் அமர்ந்திருந்த மேஜையைத் தடவிய படியே கேட்டாள்.  

“ஹ்ம்ம்...கொஞ்சம் கூட மாறல" என்றான் கடைசி பெஞ்சில் ஒரு நாள் தான் காம்பஸ் கொண்டு கீறிய 'அனிதா லவ்ஸ் அருண்'  அப்படியே இருப்பதைப் பார்த்தபடியே.

ன்று, இதே அறையில்...

“அருண்..கொஞ்சம் யோசி.. எங்க வீட்ல என் மேல சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சு..  காலேஜ் முடிஞ்ச அடுத்த மாசமே கல்யாணம்னு சொல்றாங்க. இப்பப் போய் நீ சினிமால ட்ரை பண்றேன்னு சொன்னா எப்படி? இப்போதைக்கு ஒரு வேலைக்குப் போ. அப்புறம் யோசிப்போமே" அவன் கையை தன் மடியில் வைத்துக்கொண்டே கேட்டாள்.

''அனிதா..ப்ளீஸ்..கொஞ்சம் புரிஞ்சுக்கோ.. எனக்கு நீ எவ்ளோ முக்கியமோ அதே அளவுக்கு என்னோட கரியரும் முக்கியம்.  இப்போ தான் எல்லாம் சரியா அமையுது. போன வாரம் தான் ரெண்டு மூணு பெரிய டைரக்டர்ஸ் கிட்ட பேசுற வாய்ப்பு  கிடைச்சுது. அவங்க கிட்ட சேர்ந்து ஒன்னு, ரெண்டு வருசத்துல நானே படம் பண்ணிடுவேன். அதுக்கப்புறம் நம்ம லைப் எவ்வளவு நல்லா இருக்கும்? கொஞ்சம் டைம் தா. நானே வேணாலும் உங்க வீட்ல வந்து பேசுறேன்"

“என்ன சொல்ற நீ? அடுத்த மாசம் கல்யாணம்னு மிரட்டுறாங்கனு சொல்றேன். நீ ரெண்டு வருஷம் டைம் கேக்குற"

“அதெல்லாம் எல்லா அப்பா அம்மாவும் சொல்றது தான். அதெல்லாம் நீ யோசிக்காத. "

“சரி.. உன்னோட விருப்பத்துக்கே வர்றேன். சினிமா என்ன கவர்ன்மென்ட் வேலையா? ரெகுலரா நல்லா சம்பாரிச்சு குடும்பம் நடத்த? என்ன நிச்சயம் இருக்கு சொல்லு?”

“அப்போ என்னோட திறமைல சந்தேகப்படுறியா? மூணு வருஷமா நம்ம காலேஜ்ல என்னோட படம் பெஸ்ட் பிலிம் அவார்ட் வாங்கல?”

“இதெல்லாம் வச்சு ப்யூச்சர் முடிவு பண்ணாத அருண்.  கொஞ்சம் பிராக்டிக்கலா யோசி"

“நான் உறுதியா இருக்கேன். இத நான் எவ்வளவோ தடவை முன்னாடியே சொல்லிருக்கேன்" கையை அவளிடமிருந்து விடுவித்துக் கொண்டான்.

“அப்போ நீ ஏதோ விளையாட்ட சொல்றேனு நினைச்சேன்"

“சரி..இப்போ என்ன பண்ணலாம்?”

“இப்போதைக்கு ஒரு வேலைக்கு போ.  கல்யாணம் பண்ணி ஓரளவு செட்டில் ஆவோம். அப்புறம் ட்ரை பண்ணு"

“எப்போ? முப்பது வயசுல? இல்ல முப்பத்தஞ்சு வயசுல? நம்ம பசங்க கல்யாணம் ஆகி செட்டில் ஆனா பின்னாடியா? செட்டில்னு ஒரு வார்த்தை சொல்லாத தயவு செஞ்சு. வாழ்க்கைல செட்டில்னு ஒரு ஸ்டேஜ் இல்லவே இல்ல. எப்போவும் ஏதாவது கடமை இருந்துட்டே தான் இருக்கும். நமக்கு எப்போ ஒரு விஷயம் பண்ணனும்னு தோணுதோ அப்போவே பண்ணனும். இல்லேன எப்போவும் அந்த டைம் திரும்ப வராது. நான் என்னோட முடிவ மாத்திக்கப் போறதில்ல"

“அப்போ எனக்காக நீ எதுவும் பண்ணப் போறதில்ல?ரைட்?”

“நான் அப்படி சொல்லல"

“வேற என்ன சொல்ல வர்ற அருண்? நீ போனாலும் பரவாயில்ல நான் எனக்கு புடிச்சத பண்ணுவேன்னு சொல்ல வர்ற இல்லையா?”

“உனக்கு அப்படி தோணினா நான் பொறுப்பில்ல"

“சரி.. அப்போ நானும் ஒரு முடிவு எடுக்கத்தான் போறேன்"

“என்ன?"

“நாம அவங்கவங்க வழியில போயிடுவோம்"

“பிரிஞ்சிடலாம்னு சொல்ற"

“இல்ல. நீ சொன்னது தான் நானும் சொல்றேன். நமக்கு சரின்னு படுறத பண்ணுவோம்" சொல்லிவிட்டு எழுந்து கடகடவென வெளியே சென்றாள்.

“போ..ஐ டோன்ட் கேர்" அவள் பின்னால் கத்தினான். அவள் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டாள்.

அதன் பின் இரண்டு வாரங்கள் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. எதிரெதிரே வந்தபோதும் முகத்தைத் திருப்பிக்கொண்டு கடந்து சென்றனர். வாரம் மாதம் ஆனது.   

அருண் இறுதியாய் ஒருமுறை பேசிவிடத் தீர்மானித்தான். பல முறை அவள் இவனது அழைப்பை ஏற்கவில்லை. பின்னொரு நாள்  அவளிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.

“I am done with this Arun. What is love when you are ready to let me go for something else? I should move on with my life too. Good luck with whatever you wanna do with your life. Good bye forever”

அதோடு கிட்டதட்ட எல்லாம் முடிந்துவிட்டது. அவளது தொலைபேசி எண் நிரந்தரமாக செயலிழக்கச் செய்யப்பட்டது. கல்லூரியும் நிறைவடைந்தது. இருவரும் தத்தம் வழியில் பயணிக்கத் தொடங்கினர். அவள் திருமணம் செய்து கொண்டாள் என்று ஒரு நாள் கேள்விப்பட்டான். அன்று மட்டும் அழுது தீர்த்தான். பின்னர் மீண்டும் வாழ்க்கையின் ஓட்டத்தில் கலந்து ஓடத்துவங்கி மாதங்கள் வருடங்கள் ஆக, கொஞ்சம் கொஞ்சமாய் நினைவுகள் செல்லரித்துப்போய் அழிந்து மறைந்தே போயின.  அவை மீண்டும் உயிர் பெறுமென இருவரும் எண்ணவே இல்லை இன்று மீண்டும் சந்தித்துக்கொள்ளும்வரை. மனதின் அடியாழத்தில் புதைந்து போயிருந்த அந்த காதல் மீண்டும் மேலெழுவது போல் ஒரு உணர்வு இருவருக்கும் ஏற்பட்டு, அது ஓர் இனம்புரியாத பயத்தை ஏற்படுத்தியது.    

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.