(Reading time: 20 - 40 minutes)

ங்க பாரேன் அருண். இந்த ஜன்னல் வழியா பார்க்கும் போது அங்க எல்லாம் வயல்காடா இருக்குமே அப்போ. இப்ப பாரு எவ்ளோ வீடு வந்திருச்சு"

கடைசி பெஞ்சிலிருந்து எழுந்து அந்த ஜன்னலருகே சென்றான். அவள் சொன்னது போலவே எல்லாம் மாறியிருந்தது.  இருவரும் தன்னையே அறியாமல் மிக நெருங்கி நின்றிருந்தனர். காற்று மென்மையாக வீசியது. அந்த அதீத நெருக்கத்தை அவன் முதலில் உணர்ந்தான். அவளை நோக்கித் திரும்பினான்.

“என்ன அருண்?”

அவன் பதிள் கூறவில்லை. தலைகுனிந்து நின்றான்.

“ஆர் யூ ஓகே?”  அவனது கன்னத்தைத் தொட்டுக் கேட்டாள்.

அவள் கண்களை ஏறெடுத்துப் பார்த்தான்.  தான் முதன்முதலாய்க் கொஞ்சி மகிழ்ந்த பெண், இன்று  யாரோ ஒருவனுடையதாய் மாறிப்போன உண்மை அவன்  இதயத்தை குத்திக்கிழித்தது. தன் கட்டுப்பாட்டை மீறி உடைந்து அழுதான்.  

“ஹேய்..அருண்.. என்னாச்சு? ப்ளீஸ் அழாத" அவள் அவனது இரு தோள்களையும் பிடித்துக்கொண்டாள்.

அவள் சற்றும் எதிர்பார்த்திடவில்லை. அவன் இவளை இறுக கட்டியனைத்துக்கொண்டான். ஒரு நொடி நிலைகுலைந்துபோனாள். பேச்சற்று நின்றாள். பின்னர் அவளும் கட்டிகொண்டாள். பலவருடப் பிரிவின் துயரை இருவரும் மற்றொருவர் தோளில் தலை சாய்த்து அழுது கண்ணீரால் கரைத்தனர்.

“ஏன் என்ன விட்டுப் போன அனிதா? என்ன ஏன் கொல்ற?” குரல் விம்மியது.

பதில் சொல்லாமல் அவள் அழுதாள். இன்னும் இறுக்கமாய் கட்டிக்கொண்டாள்.  அப்படியே சில நொடிகள் சென்றன. பின்னர் சுயஉணர்வு பெற்றனர் போலும். சட்டென விடுவித்துகொண்டனர்.  என்ன காரியம் செய்துவிட்டோமென யோசிக்கையில் உடல் நடுங்கியது,

“என்ன மன்னிச்சிடு அனிதா. ஏன் இப்படி பண்ணினேன்னு தெரியல"

“நீயும் என்ன மன்னிச்சிடு அருண்"

இருவரும் வெவ்வேறு திசை பார்த்து நின்றிருந்தனர்.   

“அருண், இதுவே நம்ம வாழ்க்கைல சந்திக்கிற கடைசி சந்திப்பா இருக்கட்டும்"

“ஏன்?”

“புரியலையா உனக்கு?  சரியோ தப்போ நாம அப்போ பிரிஞ்சோம். ஆனா இப்போ நம்ம வாழ்க்கைல இன்னொருத்தர் வந்துட்டாங்க. நம்ம உண்மையா நம்பி. அவங்களுக்கு உண்மையா நாம இருக்கணும்னா நம்ம ஒருத்தர ஒருத்தர் சுத்தமா மறக்கணும். நாம ஒவ்வொரு தடவ சந்திக்கும் போதும் இதே மாதிரி திரும்ப திரும்ப பழைய வாழ்க்கைய ஞாபகப்படுத்திக்கிட்டே இருப்போம். அது நல்லதில்ல. அது நமக்கும் வலி, அவங்களுக்கும் செய்யுற துரோகம். ஸோ இன்னியோட நாம விலகிப் போயிடலாம் நிரந்தரமா"

“சரி.. அது தான் நம்ம கதைக்கு சரியான முடிவுனு நானும் நினைக்கிறேன்"  

“தேங்க்ஸ் அருண் புரிஞ்சிகிட்டதுக்கு.. இப்போ கீழ போலாமா?”   

 ருவரும் மீண்டும் அந்த விழா அரங்கத்திற்கு வந்தனர். நித்யா வந்து இனைந்து கொண்டாள்.

“ரொம்ப வருஷம் கழிச்சு மீட் பண்றீங்க,,பேச வேண்டியது எல்லாம் பேசிட்டீங்களா?” நித்யா கேட்டாள்.

“ஹ்ம்ம்..நிறையவே..குழந்தைங்க எங்க?” அனிதா கேட்டாள்.

“அம்மா வீட்ல இருக்காங்க..இப்போ அங்க தான் போறோம்..நீங்க இப்போ எப்படி போகப் போறீங்க?”

“இப்போ அவர் கார் அனுப்பறேன்னு சொல்லிருக்கார். கார் வந்திடும்..”

“ஹ்ம்ம்.. நீங்க இனி எப்போ சென்னை வந்தாலும் எங்க வீட்டுக்கு வரணும்..நானும் உங்க பிரெண்ட் இனிமேல்"

“தேங்க்ஸ் நித்யா.. கண்டிப்பா வர்றேன்..நீங்க டெல்லி வந்தாலும் எனக்கு கால் பண்ணுங்க"

“ஸ்யூர்..உங்க நம்பர் இவர்கிட்ட இருக்கு தானே? கண்டிப்பா வரோம் ஒரு நாளைக்கு"

 அப்போது கார் ஹார்ன் பலமாக பலமுறை ஒலித்தது. கல்லூரியின் நுழைவாயில் முன் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது.

“கார் வந்திடுச்சு..அப்போ நான் கெளம்புறேன்.. உங்க ரெண்டு பேரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. பை அருண்..பை நித்யா..இன்னொரு நாள் பார்ப்போம்" சொல்லிவிட்டு அவனுடன் கைகுலுக்கிக் கொண்டாள், நித்யாவைக் கட்டியணைத்து விடைபெற்றுக் கொண்டாள்.

அருண் தலையசைத்தான். இனி எப்போதும் பார்த்துக்கொள்ளப் போவதில்லை என்பது இருவருக்கும் தெரிந்த வெளிப்படையான ரகசியம்.  

மிக மெதுவாய் நடந்து சென்றாள் காரை நோக்கி. ஏனோ ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். இருவரையும் பார்த்து ஒரு வலியுடன் கூடிய புன்னகையை உதிர்த்துவிட்டு காரில் ஏறி மறைந்தாள்.

வள் சென்றபின் சில நிமிடங்கள் அருண் சிலை போல நின்றிருந்தான்.  

“ஆர் யூ ஓகே,அருண்?” நித்யா இவன் தோளை உலுக்கினாள்.

“ம்ம்,. யா..ஐ எம் ஆல்ரைட்.. கிளம்பலாமா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.