(Reading time: 20 - 40 minutes)

நோ நோ.. நித்யா ரொம்ப நல்ல பொண்ணு.. தப்பா எடுத்துக்க மாட்டா?”

“நீ ரொம்ப லக்கி"

“உன் ஹஸ்பன்ட் ஏன் வரல? அவர நானும் பார்த்ததில்லையே"

“அவருக்கும் உன்ன பாக்கனும்னு ரொம்ப ஆசை தான். ரொம்ப பிஸி இன்னிக்கு கூட. இன்னொரு நாள் உன்னப் பாக்கனும்னு சொன்னார். அவரும் ரொம்ப நல்லவர். நானும் லக்கி தான் இந்த  விஷயத்தில"

“ஹ்ம்ம்..ஐ எம் ரியலி ஹேப்பி"  

“காபி சாப்பிடலாமா? உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லேனா மட்டும்..”

“சீ ..அப்படி எல்லாம் ஏதும் இல்ல..போலாம்"

கல்லூரி கபேடிரியா அன்று திறந்திருந்தது. முன்பிருந்ததைக் காட்டிலும் விரிவு படுத்தப்பட்டு அழகு படுத்தப்பட்டு பளிச்சென இருந்தது. இரு கைகளிலும் இரண்டு கப் சூடான காபியை வாங்கி வந்தான் அருண்.

“தேங்க்ஸ் அருண்"

“கமான்..”

காபியை அமைதியாகப் பருகினர். கபேடிரியாவுக்கு எதிரே பைக்,கார்கள் எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தன. அந்த இடம் அவர்களின் பழைய நினைவுகளைக் கிளறியது.

ன்று..  

மதிய உணவு இடைவேளையில் பைக் பார்க்கிங்கில் இருவரும் அமர்ந்திருந்தனர்.  

“உங்க அம்மா உண்மையாவே சூப்பர் குக் தெரியுமா? எவ்ளோ சாப்டாலும் பசி தீர மாட்டேங்குது..இன்னொரு பூரி எடு..” என்று தனது லஞ்ச் பாக்ஸின்மூடியை நீட்டினான்.

“நான் அவங்களவிட நல்லா சமைப்பேன் தெரியுமா? ஒரு நாளைக்கு நானே சமைச்சு எடுத்துட்டு வர்றேன்"

“ம்ம்ம்..அதையும் பாப்போம்..”

“ஆமா..உடனே திரும்பிப் பாக்காத..அவரு உங்க டிபார்ட்மெண்ட் ப்ரொபசர் தானே? எதுக்கு இப்படி மொறைச்சுப் பாத்துட்டுப் போறாரு? “

சில நொடிகளுக்குப் பிறகு திரும்பிப் பார்த்தான். தலையில் கை வைத்துக்கொண்டான்.

“அய்யயோ..போச்சு போச்சு..முடிஞ்சேன் நான்..அவர் தான் ஆனந்த் சார்..புதுசா ஜாயின் பண்ணிருக்கார் எங்க டிபார்ட்மென்ட்ல.செம ஸ்ட்ரிக்ட்..லஞ்ச் டைம்ல அசைன்மென்ட் முடிச்சுக் கொடுக்க சொன்னாரு..மறந்தே போயிட்டேன்..நான் கெளம்புறேன்..நீ சீக்கிரம் போ" என கை கூட கழுவாமல் எழுந்து ஓடினான்.

“டேய்..மீதிய சாப்டுட்டு போடா" கத்தினாள்.

“மீதிய நீ சாப்டுட்டுப் போ.. நம்ம கல்ச்சர்ல அதான் வழக்கம்" திரும்பிக் கூட பார்க்காமல் பதில் சொல்லியவாறே ஓடினான்.

“கல்ச்சர் மண்ணாங்கட்டி,, நாய்க்கு தான் போடப் போறேன் இத"  

சிரித்தபடியே அந்த பாதி பூரியை சாப்பிடத் துவங்கினாள்.  

ன்று..

இருவரும் காபியைக் குடித்து முடித்திருந்தனர்.  

“அடுத்த படம் எப்போ?”

“இன்னும் முடிவு பண்ணல. மார்ச்ல ஷூட் ஸ்டார்ட் பண்ணுவோம்னு நினைக்கிறேன்"

“நான் வெய்ட் பண்ணுவேன்"

“என்ன?”

“இல்ல..படத்துக்காக"

“ம்ம்ம்..ஓகே"

“ஷர்ட் நல்லா இருக்கு..உனக்கு ரெட் அவ்ளோ பிடிக்காதே?”

“நித்யாவுக்கு ரொம்ப பிடிக்கும்..ஸோ எனக்கும் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு"

“ம்ம்ம்..நைஸ்..”

அவளே மீண்டும் பேசினாள்.

“நம்ம பிரெண்ட்ஸ் யாரெல்லாம் இன்னும் டச்ல இருக்காங்க? யார் கூடவாவது பேசிட்டு...”

'அனிதா..நிறுத்து .. நிஜமாவே உனக்கு இதெல்லாம் தான் பேசணும்னு தோணுதா?'  என்று அவளைப் பார்த்து கத்த வேண்டும் போல இருந்தது அவனுக்கு. ஆனால் முடியவில்லை.

“ அனிதா..ஒரு தடவை நம்ம காலேஜ் பில்டிங் முழுசா சுத்திப் பார்க்கலாமா?”

இந்த ஆசையின் நோக்கம் அவளுக்குப் புரியவில்லை என்றாலும் அது பிடித்திருந்தது.  எத்தனை ஆயிரம் முறை சேர்ந்து நடந்த இடங்கள் அவை.   மீண்டும் பழைய நாட்களை ஒரு சில நிமிடங்கள் வாழக் கிடைத்த வாய்ப்பாகவே தோன்றியது.

“போலாம். எனக்கும் போகணும்னு தோணுது"

இருவரும் சேர்ந்து நடக்கத் தொடங்கினர். கல்லூரி முதல் நாள் இருவரும் சந்தித்துக்கொண்ட அந்த வகுப்பறை, விளையாடி மகிழ்ந்த கெமிஸ்ட்ரி லேப்,  ஆண்டு விழா மேடை என ஒவ்வொரு இடமாகச் சென்றனர். ஒவ்வொரு இடத்தில் கால் பதித்த போதும் துக்கம் தொண்டையை அடைத்தது.  

கடைசியாக தங்களின் இறுதியாண்டு வகுப்பறைக்கு வந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.