(Reading time: 30 - 60 minutes)

 

ந்த ஆக்டோவின் உதவியுடன் வெகு எளிதாக சுவரேறி குதித்து,  அவளது வீட்டின் நீண்ட தோட்டத்தை கடந்து, செக்யூரிட்டிகளுக்கென திறந்திருக்கும் சமையலறை பின் கதவு மூலம் வீட்டிற்குள் சென்று, தன் அறையை தன்னிடமிருந்த சாவியின் மூலம் திறந்து உள்ளே சென்றுவிட்டாள் நிரல்யா.

ஜெஷுரன் மீது உள்ள காரணமற்ற சிறுநம்பிக்கை அஸ்திவாரபடுவது போல் ஒரு உணர்வு. ஆனாலும் மனதிற்குள் மழையென கேள்வி பொழிவு.

அன்று இவள் அறைக்குள் வந்து துப்பாக்கி முனையில் மிரட்டியது யார்? ‘ஜாஷ்’தானா? அன்று இருளில்தான் வந்தவன் உருவம் பார்த்தாள்... முழு முகத்தை இதுவரையும் கண்டதே இல்லை என்பது அடுத்த விஷயம்.

 மற்றபடி இளவரசி,  போர் பயிற்சி அப்படின்னு சொன்ன காரணத்திற்காகவும், இவளறைக்குள் எளிதாக வந்து விட்டான் என்ற காரணத்திற்காகவும் அந்த சாதுர்யமுடையவனாக அதுவரை ஜாஷை மட்டுமே இவள் நினைத்திருந்ததால் எளிதாக அவனை ஜாஷ் என இவள் மனம் முடிவு செய்துவிட்டது. அந்த முடிவு சரிதானா?

இன்று இவளே இவளறைக்கு வரவில்லையா வெகு எளிதாக?...

ஜேசன் கேட்கவில்லையா ‘பிரின்ஸஸ் டூ ஹோல்ட் வெப்பன்’ என, அவர் சொன்னதுமே இவளுக்குள் நெருடியதும் இதுதான்.

‘எக்ஸ் பிரைம் மினிஸ்டர் மகள், கொஞ்சம் அட்வென்சரசா இருந்தா இயல்பாவே இந்த கேள்விய யார்னாலும் கேட்பாங்களே...அத கேட்க ஜாஷ்தான் வரனுமா என்ன? ஜாஷே இயல்பா கேட்டதுதானே!!’

அப்படிஎனில் வந்தவன் ஜாஷாவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எஸ்.

வந்தவன் உங்க எங்கேஜ்மென்ட் பத்தி சந்தோஷபட்டேன்னு ஏதோ சொன்னானே...அப்புறம் எனக்கு எதிரா சதின்னு ஏதோ.... இவள் கல்யாணத்தை குறிச்சு சந்தோஷபடுற நபர் யார்...?இவ யாருக்கு எதிரா சதி செய்தாள்???

அதோட வேற யாரு நெத்தியில் துப்பாக்கிய வச்சு மிரட்ற அளவு கோபமா வந்துட்டு, மயங்கி விழுந்ததற்கு கரிசனையா தண்ணி தெளிக்க பார்ப்பாங்க...இவளே அது ஜாஷ்னு நினைக்கலைனா அப்படி நிச்சயமாக நடிச்சிருக்கமாட்டாளே!!

ஜாஷ் தவிர, துப்பாக்கி தூக்கினாலும் இவள் மீது கரிசனையாய் நடப்பவன்...யாரது?

பல்ப் பளிச்சிட்டது.

‘அதுக்குள்ள நீங்க வந்து....கல்யாணத்துக்கு முன்னயே நாத்தனாருக்கு கெடுதல் செய்ய நினைக்கிறீங்கன்னு நினைச்சு........நீங்க எதையோ சொல்லிதான், அவ என்னை பார்த்து பயபடுறதா நம்பினேன்....பேசுனா புரிஞ்சிப்பான்னு நினைச்சேன்.... பயங்கரமா கோபம் வந்துச்சுது.... சாரி....வெரி சாரி......தென்...ரக்க்ஷத்தை லவ் பண்றவங்க....என் காதலையும் புரிஞ்சிப்பீங்கன்னுதான் உங்கட்ட பேச டிரை பண்ணினேன்....’

ஜெஷுரன்??? வந்தது அகன் ஜெஷுரன்!!!!

எங்கேஜ்மென்ட் நியூஃஸ் கேட்டு சந்தோஷபட்டது...

ஆருவ பிரிக்க இவள் காரணம் என நினைத்தது...அதைதான் சதி என்று சொல்லி இருக்க வேண்டும்..

“பயங்கரமா கோபம் வந்துச்சுது.... சாரி....வெரி சாரி......” என்ற அவன் வார்த்தைகள்...ஜெஷுரனின் கோபத்தை இவள் பார்க்கதானே செய்கிறாள். கோபத்தில் இவளை மிரட்ட பிஸ்டல் ஃபைட்...

அதன் பின் ஜெஷுரன் கோபமாக பேசிய போதெல்லாம் இவளுக்கு மனதிற்குள் குழப்பியதே!...காரணம் குரல். இந்த சூட் வழியா ஜெஷுரன் பேசினப்ப கொஞ்சம் குரல் மாறி கேட்டிருக்கலாம். அப்புறம் அவர் ஒவ்வொருமுறை கோபத்தில் பேசும்போதும் இவள் மனதுக்கு ஏதோ ஒருவித உறுத்தல். அறிவு ஏமாந்தாலும் மனது விழித்திருந்திருக்கிறது போல.

அப்படியெனில் எதனால் திரும்ப மறவழியை விட்டு அறவழிக்கு திரும்பினான் ஜெஷுரன்?

தென்...ரக்க்ஷத்தை லவ் பண்றவங்க....என் காதலையும் புரிஞ்சிப்பீங்கன்னுதான் உங்கட்ட பேச டிரை பண்ணினேன்.... அன்று அவன் சொன்ன வார்த்தையின் பொருள்...

இவள் ரக்க்ஷத்தை மறைத்து நின்று கொண்டு தன்னவனுக்காக கதறியதை ஜெஷுரன் பார்த்திருக்கிறான். உபயம் இந்த ஆக்டோ சூட்.

எதோ ஜிக் ஸா பஸில் முடிந்து முழு படம் தெரிவது போல் இருந்தது நிரல்யாவிற்கு.

ஜெஷுரன் மேல் ஒரு புறம் கோபம் வந்தாலும் மறுபுறம் அவன் மீது மரியாதையும் வந்தது. ‘ஆருவுக்காக என்னவேணாலும் செய்வாராமோ? இங்க வந்தப்ப பிடிபட்டிருந்தா என்னவாயிருக்கும் அவர் நிலமை?’

இவள் மேல் துப்பாக்கி தூக்கும் அளவு கோபமிருந்தாலும் இவளுக்கு தீங்கு செய்யும் எண்ணம் அவருக்கு துளியும் இல்லை. மயங்கி விழுந்தவளுக்கு (நடிப்பு என ஜெஷுரனுக்கு தெரியாதே) தண்ணீர் தேடி தெளிக்க முயன்றதே அதற்கு சாட்சி.

அன்று இருட்டு அறையில் மிரட்ட என வந்தபோதும், இவள் மயங்கி விழுந்தபோது இவள் தலையை மட்டும் தாங்கி அடிபடாமல் தரையில் படுக்கவைத்த விதம், தேவையில்லாமல் இவள் மீது விரல் நகம் கூட தீண்டாதபடி விலகி நின்ற பாங்கு....பறை சாற்றுவது ஜெஷுரனின் கண்ணியம்.

இப்பவும் ‘இவ எப்படியும் போறான்னு’ நினைக்காமல், இங்கு கொண்டு வந்து விட்டுவிட்டு தப்பி தவறி கூட இவளுக்கு எந்த ப்ரச்சனையும் வந்துவிட கூடாது என்று இந்த ஆக்டோவையும் கொடுத்து...

அப்படியெனில் ஆரு நிச்சயமாக எதையோ தவறாக புரிந்து கொண்டிருக்கிறாள். எதை??

ஆரணி இதில் இந்த விஷயத்தில் எதை எப்படி தவறாக புரிந்து கொள்ள முடியும்???

ஆனால் இவளை பிஸ்டலுடன் வந்து மிரட்டியதை ஜெஷுரன் ஏன் அதன் பின்பு இவளிடம் சொல்லவில்லை? மனம் மாறி இருந்தால் இவளிடம் மன்னிப்பு கேட்டிருப்பானே! ஏன்?

ஒருவேளை விஷயம் தெரிந்தால் இவள் இன்னுமாய் அவனை தவறாக நினைப்பாள் என பயந்திருக்கலாம். அடுத்து அவரின் நடவடிக்கை என்ன என பார்க்கலாம்.

‘இதை மறைச்சு நடந்துகிறதால முழுசா அவரை நம்ப கூடாது.’

ப்படியாய் நிரல்யா ஒரு முடிவுக்கு வந்தபோது, அவளை தொலை பேசியில் அழைத்தான் ஜெஷுரன்.

“ஸேஃபா ரீச் ஆகிட்டீங்களா?”

“வந்துட்டேன் சார், இந்த சூட் இருந்தா எவ்வளவு ஈஸியா வந்துட்டு வெளிய போகலாம்னு உங்களுக்கு தெரியாதா?”

“நிரல்யா சிஸ்.....” அவன் அதிர்வது நிரல்யாவிற்கு புரிந்தது. ஆக அன்று வந்தது ஜெஷுரன்தான். ஆனாலும் அவராக சொல்லாத வரை...பார்க்கலாம்.

“தேங்க்ஸ் ஃபார் த சூட் ஜெஷுரன் சார்....”

“இட்ஃஸ் ஓகே நிரல்யா...” ஒரு கணம் தயங்கியவன் மீண்டும் பேச ஆரம்பித்தான்.

“தயவு செய்து சொல்றேன்னு தப்பா எடுத்துகிடாதீங்க....இவ்வளவு ரிஃஸ்க் எடுக்காதீங்க..ப்ளீஸ்...நான் உங்கட்ட ஆரா விஷய்த்தில கேட்ட உதவியே வேற...நீங்க சொன்ன ஒரே காரணத்துக்காகவே ரக்க்ஷத் ஆராவோட என் கல்யாண விஷயத்த கன்சிடர் பண்ண கூட மாட்டான். நீங்க போய் அவன்ட்ட ஜெஷுரனை ஆராவுக்கு பார்கலாம்னு சொன்னா தான் அடுத்து எதுவுமே நடக்கும், அந்த உதவியத்தான் எதிர் பார்த்தேன் உங்கட்ட இருந்து. அதுக்கு உங்களுக்கு, ஆராவுக்கு என் மேல இருக்கும் தப்பான எண்ணம் மாறனும், அதுக்கு மாரல் சப்போட்...., உங்களுக்கு தெரிஞ்ச இன்ஃபோ தாங்க இதுதான் நான் மீன் பண்ண ஹெல்ப்...

இப்படி துப்பாக்கி தூக்கிட்டு துப்பறிய வாங்கன்னு சொல்லவே இல்ல...எல்லாம் ஆரவுக்காகதான் செய்றீங்க அப்படிங்கிறப்ப சந்தோஷமாத்தான் இருக்குது...ஆனா இந்த அன்ப தயவு செய்து இப்படி காட்டாதீங்க...வீட்டில ஏற்கனவே இரண்டு பொண்ணுங்க ஆளுக்கொருவிதமா அழுதுகிட்டு இருக்காங்க...நீங்க வேற...ப்ளீஸ் பீ ஸேப்....”

அன்புக்கும் அதை அதிகாரமாக சொல்ல இல்லாத உரிமைக்கும் இடையில் பேசிய ஜெஷுரன் ஒரு கணம் மௌனமானான்.

நிரல்யாவுக்குமே பரிதாபமாக இருந்தது. ஆரணியை மணந்தால் உறவில் இவளுக்கு அண்ணனாக போகிறவன்.

‘அடிப் பாவி மேரேஜ்னு முடிவே செய்துட்டியான்னு’ மனசாட்சி கேட்ட கேள்வியை அப்போதைக்கு அசட்டை செய்தவள்,

“அண்ணா இனிமே கவனமா இருப்பேன்..” என்றாள்

இந்த பதில் அவன் மனதை தாக்கிய விதம் அவனது அடுத்த பதிலில் புரிந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.