(Reading time: 30 - 60 minutes)

 

நிரல்யாமா!” உடன் பிறந்தவரின்றி வளர்ந்திருந்த நிரல்யாவிற்கு, அண்ணன் தங்கை பாசத்தை புரியவைக்க அந்த ஒரு வார்த்தை, அதை அவன் சொன்ன விதம், போதுமானதாக இருந்தது.

“சாரி அண்ணா....எனிவே இன்னும் கூட பதிலில்லாத....”

“திரும்பவும் நம்பலைன்னு ஆரம்பிக்காத நிரல்யா...ப்ளீஸ்....கல்ப்ரிட் யாருன்னு தெரிஞ்சுட்டு, அந்த ஓநாய நெயில் பண்ணதான் போய்ட்டு இருக்கேன்.

பை தி வே அந்த சூட்...அத நான் எங்க இருந்தோ திருடிட்டு வந்துட்டேன்னு நினைச்சுராத....அது நான் டிசைன் செய்தது, டெரரிஸ்ட் அட்டாக்கில் என் ஃபேமிலி இப்படி ஆன....ஃப்யூ மன்ஸில் டிஃபன்ஸ் சர்வீஸிலிருந்து ரிசர்ச் ஆபர் கிடச்சுது.. ஒரு த்ரீ இயர்ஸ் போய்ட்டேன்.

இந்த டைப் டெக்னிகல் ஆர் அண்ட் டி இல் எனக்கு எப்பவும் இஷ்டம்ங்கிறதால ரொம்ப சீக்கிரமாவே இத டிசைன் செய்துட்டேன். இன்னும் மத்த சிலதும் செய்துருக்கேன். டெரரிஸ்ட்டை ஹேண்டில் செய்ய ஃஸ்பைஸ்...கமண்டோஸ் இவங்களுக்கெல்லாம் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்னு நினைச்சு செய்தேன்...

என் ஃபேமிலிக்கு நடந்த கொடுமை வேறவங்களுக்கு நடக்காம தடுக்கனுங்கிற வெறியில் செய்தது...பிஸினசை கூட அப்படியே தெரிஞ்சவங்கட்ட விட்டுட்டு போனேன்..அப்படி ஒரு வேகம்...அந்த நேரத்தில எனக்கு அப்படித்தான் யோசிக்க முடிஞ்சிது.

ஆனா அந்த டைமில் துவி கூட இருந்திருந்தா, அதுதான் சரியான முடிவா இருந்திருக்குமோன்னு...எனி வே இப்ப உள்ள ப்ரச்சனைக்கு வருவோம்....

நாம ஜேசன் ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பினப்ப துவி நடிக்கிறான்னு எனக்கு உறுதியா தெரிஞ்சுட்டு....கடவுளை தவிர யார் கால்லயும் விழக்கூடாதுங்கிற நம்பிக்கை துவிக்கு எப்பவும் அலாதியா உண்டு.

இப்ப மன நிலை பாதிக்கபட்டிருந்துதுன்னா அர்த்தமில்லாம செய்தாலும் மனசுக்குள்ள உள்ளததான் செய்வா...ஆனா இப்படி மனசுக்குள்ள இல்லவே இல்லாத இந்த கால்ல விழுற வேலை செய்றதுன்னா.....அவ நிச்சயமா யோசிச்சு செய்றா...

அப்படின்னா அந்த அருண்ங்கிற பேரை அவ சும்மா உளறலை. அது யாருன்னு  எனக்கு ஒரு யூகம் இருக்கு அவனைதான் தேடி போறேன்....”

“அது யாரு??” பேச்சை தொடரவிடாமல் அவசரமாய் கேட்டாள் நிரல்யா.

வன் முன்னால ரக்க்ஷத்ட்ட வொர்க் பண்னான். கிட்டதட்ட ரக்க்ஷத்துக்கு அடுத்த இடம் அவனுக்குங்கிற அளவுக்கு ஆஃபீஸில் அவனுக்கு பவர் உண்டு. ரக்க்ஷத்தோட எல்லா ப்ராபர்டிஸையும் சுருட்டனும்னு அவனுக்கு தோணி இருக்குது.....அதுக்கான கிரவ்ண்ட் வொர்க் ஆரம்பிச்சதுமே ரக்க்ஷத் அவனை பிடிச்சுட்டான்...அருண் மேல லீகல் ஆக்க்ஷன் எடுத்தான்.....அப்போதைக்கு அருண் செய்திருந்தது ஒயிட் காலர் க்ரைம்...ஃபைன்...3இயர்ஸ் இம்ப்ரிசன்மென்ட்னு ஜட்ஜ்மென்ட் ஆச்சுது.

அப்புறம் அவனபத்தி எந்த தகவலும் எனக்கு தெரியல...பட் அவன்ட்ட இந்த துவி எப்படியோ மாட்டி இருக்கனும்...ஒருவேளை அவன்ட்ட ஏமாந்து இருக்கனும்....இல்லனா இப்ப உன்னை காப்பாத்த ட்ரை பண்ண மாட்டாளே....ஆரா விஷயத்திலும் இந்த அருண் தான்....பழி வாங்கனும்னு...ஏதாவது...இருக்கும்.”

மௌனமானான்.

“துவி அருணால உனக்கு ஆபத்தாகிடும்னு பயபடுறா, அதோட அவ ஒளிஞ்சு இருக்கா....அப்படின்னா அருண் இன்னும் அவள தேடுறான்...உனக்கும் பக்கத்தில இருக்கான்னு அர்த்தமாகுதுல்ல...

மே பி ஆராவுக்கு நடந்தத வச்சு இந்த துவியே உனக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு பயபடவும் செய்யலாம்....அவன் இந்தியாவிலேயே இல்லங்கிறதால இங்க வந்து அவ ஒளிஞ்சும் இருக்கலாம்...தெரியல.....

எதுக்கும் நீ ரொம்ப ஸேஃபா இரு..அதுக்குதான் நான் ஆஃபீஷியலா தவிர யார்ட்டயும் சொல்லாத ஆக்டோ சூட் விஷயம் உனக்கு தெரிஞ்சாலும் பிரவாயில்லனு சூட்டை கொடுத்தேன்...நிலமைய புரிஞ்சுட்டு நல்ல பொண்ணா வீட்டில இருமா...ப்ளீஸ்

ஆரா விஷயம் தெரிஞ்சா ரக்க்ஷூ கஷ்டபடுறதவிட அத அவன்ட்ட மறச்சுட்டு நீ போய் ஆபத்துல மாட்டிகிட்டனா இன்னும் அதிகமா அவன் கஷ்டபடுவான்..அத ஞாபகம் வச்சுகோ....ஆராட்ட நடந்துகிட்டு இருக்கிற எல்லாத்தையும் சொல்லு அவ என்னை நம்பாட்டாலும்...அவளே உன் ஸேஃப்டிகாகவாவது  ரக்க்ஷட்ட விஷயத்த சொல்ல சொல்லுவா...ரக்க்ஷு உள்ள வந்தா அந்த ஓநாய பிடிக்க ரொம்ப வசதியா இருக்கும்...

நானும் இப்ப அந்த ஓநாய பிடிக்கதான் ட்ராக் பண்றேன்....

அப்புறம் அன்னைக்கு பிஸ்டலோடு வந்து உன்ன மிரட்டுனதுக்காக சாரி..ப்ளீஸ் மன்னிச்சிடுமா...நான் ஏன் அப்படி செய்தேன்னு உனக்கே புரிஞ்சிருக்கும்...ஆராவுக்கு ஏதோ கெடுதல் செய்ய தான்...நீ....என் மேல அபாண்டமா பழி போடுறேன்னு நினச்சேன்மா ..உன்ன மிரட்டி ஆராவ விட்டு விலகி இருக்க சொல்லனும்னுதான் வந்தேன்...ரக்க்ஷத் மேல உனக்கு இருக்கிறது உண்மையான அன்புன்னு தெரிஞ்சதும்...உன் மேல ஒரு மரியாதை ....நம்பிக்கை.....என் மேல உனக்கு இருக்கிறது தவறான அபிப்ராயம்...அத மாத்திட்டா.......எல்லாம் சரி ஆயிடும்னு தோனிச்சு....அப்புறம் நடந்தது உனக்கு தெரியுமே.... ஆரா விஷயத்தில நான் நிரபிராதின்னு நிரூபிச்ச பிறகு இந்த மிரட்டல் விஷயத்த சொன்னால் உனக்கு என்ன மன்னிக்க ஈஸியா இருக்கும்னு நினைச்சேன்...உனக்கு இப்பவே தெரிஞ்சுட்டுதுன்னு புரியுது...அப்புறம் அதுக்காகவும் என்னை சந்தேகபடுவ...சாரி நிரல்யாமா!!

அப்புறமா டீடெய்லா பேசுறேன்...ஸேஃபா இரு...பை”

பேசி முடித்தபோது நிரல்யா மனதில் அகன் ஜெஷுரன் குற்றமற்றவன் என்ற எண்ணம் பெரிதாக தலைதூக்கியது.

 ஆரணி நிச்சயமாக எதையோ தவறாக புரிந்து கொண்டிருக்கிறாள். எதை?? குழப்பம் தீர வழி என்ன?

துவிதான் சற்று சாத்தியமுள்ள கதவாகபட்டது.

தட்டினாள்.

ஜேசனை அழைத்தாள். துவியை பற்றி துளைத்தாள்.

துவி கனடாவிலிருந்து வரும்போதே கர்பிணி. பிரசவத்திற்கென அவள் தெரிந்தெடுத்ததுதான் ஆசிரமம். விஷயம் ஜெஷுரனுக்கு தெரியகூடாது என்ற அடிப்படையில்தான் அவள் இங்கு வந்து தங்கியதே! மிகவும் மனம் சோர்ந்திருந்தாள் அப்பொழுது. கவுன்சிலிங்கிற்காக ஜேசன் அறிமுகம். ஆனால் அவனிடம் பழைய காதல் எதையும் பற்றி அவள் பேசியதில்லை.

நல்ல நட்பு மருத்துவருக்கும் மனம்வாடி இருந்தவளுக்கும் உருவாகிய தருணம் அது. ஜேசன் அவளை விரும்ப தொடங்கியதும் அப்பொழுதுதான். அவன் குப்பை தொட்டி குழந்தை. எவன் எந்த பெண்ணை ஏமாற்றியதன் பின்விளைவோ இவன்?

அந்த வகையில் துவியின் மீதும் அவளுக்குள் வளரும் குழந்தைகள் மீதும் ஒரு பிடிமானம் இவனுள். ஆனால் இதுவோ அல்லது வேறு எதுவோ காரணம் கிடையாது இவன் காதலுக்கு.

காதல் பலவிஷயங்களுக்கு காரணமாய் இருக்குமே தவிர, காதலுக்கு காரணம் இருக்குமா என்ன?

ஆனாலும் துவியிடம் ஜேசன் அதை பற்றி குறிப்பால் கூட கூறியது கிடையாது. நட்பும் பரி போய்விடும் என்ற பயம் தான் காரணம்.

அகனிடம் குழந்தை விஷயத்தை சொல்ல சொல்லி ஜேசனும், ஆமி அம்மாவும் துவிக்கு ஆலோசனை சொல்லி கொண்டேதான் இருந்தனர். ஆனாலும் குழந்தை பிறக்கும் வரையுமே துவி அகனை சந்திக்க மறுத்துவிட்டாள்.

பிறந்ததும் துவிதான் பிள்ளைகளுக்கு பெயர் வைத்தது. அகன்யா, துதித்யா பெயர்கள் அவளுக்கு குடும்பம் மீது இருக்கும் பாசத்தைதான் காட்டின.

ஆனாலும் தன் அண்ணனுடன் சண்டையிட்டு சொத்தை பிரித்து வாங்கினாள். இவர்கள் கூறிய எந்த ஆலோசனையையும் அவள் கேட்கவில்லை.

ஜெஷுரன் எந்த காலத்திலும் அவளை பின் தொடர கூடாது என்றுதான் பழி அது இது என்று கடிதம் எழுதி இருப்பாள். மற்றபடி அவன் மீது அவளுக்கு கோபமே கிடையாது.பிள்ளையின் பெயரும் அதற்கு சாட்சி.

பின் பிள்ளைகள் பெயரில் ஒரு பெரும் தொகையை டிபாசிட் செய்தவள் திடீரென காணாமல் போய்விட்டாள். பிறந்து சில நாள் ஆன பிஞ்சுகளை விட்டு எப்படித்தான் போனாளோ போயிருந்தாள். தவித்து போனான் ஜேசன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.