(Reading time: 37 - 73 minutes)

வள் காதலுக்காக அவர்களை பலியிடுவதாமா?

ஆக இறுதியில் கவினுக்கு எழுதிய கடிதத்தில் அவள் உணராமலே பதிவாகி இருந்தது வேரியின் இந்த மனநிலைதான்.

வீட்டிலிருந்து  பேருந்து நிலையம் வரை ஆட்டோவில் போனவள், அங்கிருந்து மதுரையிலிருக்கும் அவள் தாய்வீட்டிற்கு பேருந்து ஏறினாள்.

பயணம் முழுவதும் தறியின் நாடா போல் முன்னும் பின்னுமாய் ஓடிக்கொண்டு இருந்தது மனம். ஒரு நேரம் வெறுப்பு, மறு  நேரம் காதல் தவிப்பு...

கவினின் ஒவ்வொரு காதல் கவனிப்பு செயல்கள் ஞாபகம் வர, அதோடு என்னமாய் நடித்திருக்கிறான் என்ற நினைவும் வர.....மதுரையில் இறங்கி ஆட்டோவில் தன் வீட்டை நோக்கி போகும் வரை வீட்டில் வரவேற்பு எப்படி இருக்கும்...குறிப்பாக அம்மா மாலினி எப்படியாய் எதிர் கொள்வார் என்ற நினைவே வரவில்லை.

  சற்று தொலைவில் வரும் போதே கவனித்தாள். இவள் வீட்டின்  கேட் திறந்திருக்கிறது.

இன்நேரம் அவள் அம்மா வீட்டில் இருக்கும் வாய்ப்பே கிடையாது...அவரது கேங்குடன் வாக்கிங் போயிருப்பாரே....அப்பாதான் தனியாக இருப்பார்...அவரிடம் சொல்லி அம்மாவிடம் பேச சொல்வது சற்று எளிதாக இருக்கும்...இப்பொழுது என்ன செய்ய?...எது எப்படியோ... முன்னைப் போல் அம்மாவிடம் பயந்து நடுங்க இனி இவளால் முடியாது....மனதில் பட்டதைப் பேசி ஆக வேண்டும்...இவள் முடிவெடுத்துக் கொண்டு இருந்த போதே....ஆட்டோ நிற்க... வாசலில் நின்ற அம்மா மாலினி கண்ணில் பட்டார். இவளை நோக்கி வந்தார்.

“என்ன நீ இப்படித்தான் செய்வியா...?”  கடு கடுவென ஆரம்பித்தவர் இவள் இறங்கி நின்றவுடன் இவள் முழு கோலத்தயும் பார்த்தவர்

 “ இப்டி இருக்றப்ப ஆட்டோலயா வருவ...சரி பார்த்து வா...முதல்ல ஜூஸ் ஏதாவது குடி...” என்று  கரிசனை கலந்த குரலுக்கு மாறினார்.

அதோடு இவளது ஒற்றை கேண்ட் பேக்கை தன் வசமாக்கிக் கொண்டு மறு கையால் இவளது கையை வேறு பிடித்து அவர் அவளை வீட்டிற்குள் நடத்தினார்.

குழப்பத்தில் தனக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லையோ என்று இருந்தது வேரிக்கு. முன்னெல்லாம் இவள் வீட்டிற்கு வந்தாலே இவளை ஒழித்து வைக்க முயலும் அம்மா....

வீட்டின் வரவேற்பறையில் நுழையும் போது அப்பா கண்ணில் பட்டார். “வாம்மா...உட்காரு....மாலு நீ போய் அவளுக்கு குடிக்க எதாவது கொடு..” என்று தன் பங்குக்கு தானும் வரவேற்றார்.

அப்பாவை சிறு வயதில் இவள் பெரிதாக கண்டு கொண்டது கிடையாது...எப்பொழுதாவது தான் பார்வையில் கிடைப்பார் என்பதாலோ என்னவோ? ஆனால் பின் நாட்களில் பார்த்திருக்கிறாள் அவாது பார்வையில் கனிவு இருக்கும். ஆனால் அம்மா முன் ஒன்றும் பேச மாட்டார்.

இன்று இவளுக்காக அம்மவை ஏவிக்கொண்டு இருக்கிறார்.

இதற்குள் அம்மா மாதுளம் ஜூசுடன் ஆஜர்.

“இல்லமா...அப்புறமா...” மறுத்தாள். எங்காவது போய் தனியாய் விழ வேண்டும் என்றது மனது.

“குடிச்சிட்டு போ....முகத்தைப் பாரு...உதடெல்லாம் காஞ்சு போய்...”

அம்மா ஆரம்பிக்க அதான் சாக்கு என “முகம் கழுவிட்டு அப்புறமா...” என சொல்லிக்கொண்டே வீட்டின் பின்புறமிருந்த தன் அறையை நோக்கி நடக்க தொடங்கினாள். முன்பானால் அந்த அறையை பற்றி நினைக்கும் போதே மனம் வலிக்கும்.

வீட்டின் சமயலறைக்கும் பின்னால் இருக்கும்  அது. இவள் பாட்டி வீட்டில் இருந்து இங்கு  வந்தால் அங்கு தான் தங்க வேண்டும். யாரும் வீட்டிற்கு வந்தாலும் இவள் அறை வரை இயல்பில் தேடி வர மாட்டார்கள் என்பதற்காக இப்படி ஒரு ஏற்பாடு...

வீட்டை பொறுத்த வரை இவள் ஒழித்துவைக்கப் பட வேண்டிய அவமான சின்னம்... இன்று அங்குபோய் ஒழிந்து கொள்ள மனம் நாடுகிறது..

“அதை ஸ்டோர் ரூமா மாத்திட்டோம் வேரு....உனக்கு மிர்னி ரூமுக்கு அடுத்த ரூம்...” சொல்லிக்கொண்டே இவள் கையில் வந்து ஜூசை திணித்தார் அம்மா...

”முதல்ல குடிச்சிட்டு அப்புறமா போ...” மருந்தை குடிப்பது போல் அதை கட கடவென குடித்துவிட்டு வரவேற்பறையை அடுத்திருந்த அந்த ரூமிற்குள் நுழைந்தாள்......எதையும் நினைக்க பிடிக்கவில்லை.

அறையின் திரை விலக்கி உள்ளே போனால் அங்கு கவின்.

பெருமூச்சு விட்டுக் கொண்டாள். இப்படி கற்பனையின் அவன் கானல் வடிவத்துடன் வாழ இவள்  பழகித்தான் ஆக வேண்டும்.

கதவை தாழிட்டு மெத்தையில் சென்று விழுந்தாள்.

ஏசியை ஆன் செய்தான் கவின்.

“நீங்களா...? இங்கயும் வந்துட்டீங்களா...? எவ்ளவு தைரியம்....? முதல்ல வெளிய போங்க...” உச்ச ஸ்தாதியில்  அலறியபடி துள்ளி எழுந்தாள் வேரி.

இவள் பேருந்தில் மதுரை வந்து சேரும் முன் அவன் காரில் இங்கு வந்து சேர்ந்திருந்தான்.

அவன் பதில் சொல்லும் முன் அறை கதவுக்கு அப்பாலிருந்து சத்தம்...”ஏன்டி இந்த நேரத்திலும்  இப்படியா கத்துவ...? குழந்தைக்கு என்னமாது ஆயிடபோது...மாப்பிள்ள பக்கத்துலதான இருக்கார் மெதுவா பேசு...”

வேறு யார் அம்மா மாலினிதான்..

மான ரோஷமே இல்லாத அம்மா...எத்தனையாய் அவர்களை அசட்டை செய்துவிட்டு போனான்...நேற்று வரை இவர்கள் ஞாபகம் இருந்திருக்குமா இவனுக்கு? இன்னைக்கு மாப்பிள்ளையாம்.....

முதல்ல பக்கத்துல இருக்கிறவனை கவனிப்போம்...அப்புறமா அம்மாவ கவனிக்கலாம்....

“இ..”

இவள் ஆரம்பிக்கும் முன் அவன் தொடங்கினான்....

“எப்ப என்னால உன் உயிருக்கு ஆபத்துன்னு உனக்கு தோணிட்டோ...அப்பவே உன் கூட இதுவரைக்கும் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கும், நீ என் மேல காமிச்ச அன்புக்கும் அர்த்தமில்லைனு ஆகிபோச்சு.....

 ஆனாலும் நான் ஏன் இங்க வந்து நிக்றேன்னா.... வாழ்விலும் தாழ்விலும் மரணம் பிரிக்கும் வரைக்கும்  இவளை என் மனைவியா நேசிப்பேன்னு கல்யாணத்தப்ப நான்  கடவுள்ட்ட கொடுத்த அந்த வாக்குறுதி....அதனால எனக்கு உன் மேல இருக்கிற கடமை அதுக்காகதான்....அதே நாள் இந்த வாக்குறுதிக்கு நீ சம்மதிச்சதால எனக்கு உன் மேல வந்த உரிமைய இனி நான் நினைக்க கூட மாட்டேன்....

அதோட உன் விருப்பத்தினால மட்டும் உனக்கு கொடுக்கப் பட்டதுன்னு சொல்லியிருக்கியே  இந்த குழந்தை....அதுல ஒரு கரெக்க்ஷன்...நம்ம விருப்பத்துக்காக நமக்கு கொடுக்கப் பட்டது இந்த குழந்தை...நீ ஆசைப்பட்டாலும் நானும் விரும்பி சம்மதித்து எடுத்த முடிவுதான் அது.... அது நம்ம குழந்தை... உன் மேல எனக்கு இருக்கிற உரிமையை எனக்கு பயன்படுத்த விருப்பமில்லை... ஆனால் குழந்தை மேல் எனக்குள்ள எதையும்....ஒரு புள்ளியை கூட ....விட்டு கொடுக்க மாட்டேன்.... அதோட சர் நேம் சத்யா தான்..

அதனால நீ எங்க இருக்கியோ நானும் அங்கதான் இருப்பேன்....உன்னால ஆனதை பாரு....”

 கதவை திறந்து கொண்டு வெளியே சென்றேவிட்டான் கவின்.

வேரிக்கு இதற்கு எப்படி ரியாக்ட் செய்வதென்றே புரியவில்லை. அவன் முகத்தில் இருந்த உறுதியைத் தவிர எதையும் அவளால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அவன் வார்த்தைகளின் அர்த்தத்தில் இருந்த கோபம்...வலி ....ஏமாற்றம்....கூட அவன் உடல்மொழியில் இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.