(Reading time: 23 - 46 minutes)

" ய்  !!!"

" ஹா ஹா கூல்  !  சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன் .. இந்த காலத்து பையனுக்கு நம்ம நட்பை புரிஞ்சுகிறதா கஷ்டம் ?"

" அதுவும் நீ எனக்காக கடைசிவரை கல்யாணம் பண்ணாமல்  இருக்கிறாய்ன்னு சொள்ளிகிரதுக்கு  நான் சந்தோஷபடுவேனா டா .. எனக்கு நீ கல்யாணம் பண்ணிக்கிறதை பார்க்கனும்னு ஆசை இருக்காதா சொல்லு ?"

" திருடன்டா  நீ .. இப்போதான் மனசில இருக்குறதை எல்லாம் கொட்டுற போல !"

" பின்ன உன்னை மாதிரி எப்போ பார்த்தலுமா வளவளன்னு பேசுவாங்க ?" என்று சிரித்தவன்

" உன்கிட்ட நானும் ஓர் உண்மையை சொல்லணும் " என்றான் அருள் . அதற்குள் சந்தோஷின் கார் ஹாரன் சத்தம் கேட்க

" சந்தோஷ் வந்தாச்சு வா " என்று அருள் கைகளை பிடித்து கொண்டி மாடியிலிருந்து இறங்கினாள்  சாஹித்யா ..

சரியாய்  தனக்கும் வானதிக்கும் இடையில் மலர்ந்த காதலை பற்றி சொல்லும் நேரமாய் பார்த்து சந்தோஷின் கார் வந்து நின்றதால் அந்த பேச்சு பாதியிலே தடைப்பட்டது . தடைபடாமல் இருந்திருந்தால் வருங்கலத்தில் வரும் பிரச்சனையை  தடுத்திருக்கலாமோ ..?

துள்ளலுடன் கீழே வந்தவள் , தனது பெற்றோரை பார்த்ததும் இயல்பாய் எழுந்த தயக்கத்தில் கால்கள் பின்ன அப்படியே நின்றாள் ..

" அடடே யாரோ வந்திருக்காங்க பாருடா " என்று வாசலுக்கு வந்தார் அர்ஜுன் . காரிலிருந்து ஸ்டைலாய் இறங்கிய சந்தோஷ்ம் சைந்தவியையும் அழைத்து கொண்டு வந்தான் .. தூரத்தில் இருந்து சந்தோஷை பார்த்ததுமே

" நம்ம பிசாசுக்கு ஏற்ற ஜோடி " என்று மனதிற்குள் எண்ணினான் அருள் . லேசாய் அர்ஜுனின் அருகில் சென்று

" அப்பா , இவர்தான் சந்தோஷ் , நம்ம சத்யாவுடைய .... " என்று இழுத்தான் .. அவன் சொல்வதின் அர்த்தம் புரிந்து கொண்டவராய்  ஆராயும் பார்வையுடன் இருந்தார் அர்ஜுன் . வாசலுக்கு வந்த சத்யா சந்தோஷின்  காதல் பார்வையில் இருந்து தப்பி சைந்தவியிடம் வந்தாள் ..

" வாங்க அக்கா .. எப்படி இருக்கீங்க ?"

" நான் நல்லா இருக்கேன் ... நீ எப்படி இருக்க ? உன்னை பார்க்கணும் போல இருந்துச்சு " என்று அவள் கன்னத்தை கிள்ளினாள்  சைந்தவி ..

" ஸ்ஸ்ஸ்  ஆ.. இதுவரை நல்லத்தான் இருந்தேன் அக்கா .. இப்போதான் நீங்க வந்துட்டிங்களே " என்று சிரித்தவள்

" உள்ளே வாங்க " என்று சைந்தவியையும் பார்வையாலே சந்தோஷையும்  வரவேற்றாள் ..

" அம்மா , அன்னைக்கு கோவிலில் காப்பாற்றினேன்னு  சொன்னேனே இவங்கதான் ... இவங்க தான்  சைந்தவி அக்கா " என்று துல்லியவள்  " இவர் சந்தோஷ் , அவங்க கணவரின் தம்பி " என்று சொல்லி முடிப்பதற்குள் திணறினாள் .. மகளின் முகத்தில் தெரிந்த தேஜஸ் பெற்றோர் நால்வரின் கருத்திலும் பட்டது ..

" வாம்மா ... வாங்க தம்பி .. இப்போ எப்படி இருக்கீங்க ? எத்தனை மாசம் " என்று பெண்கள் இருவரும் சைந்தவிடம் பேச தொடங்கிட  ரவிராஜும் அர்ஜுனும் சந்தோஷுடன்  பேச தொடங்கினர். பதற்றத்தில் கைகள் சில்லிட எப்போதும் போல  அருளின் கைகளை பிடித்து கொண்டாள்  சத்யா .. முதலில் அதை சரியாய் கவனிக்காமல் சந்தோஷை ஆராய்ந்தவன் அப்போதுதான் பதறி சந்தோஷின் முன் கைகளை விளக்கி கொண்டான் .. சில நொடிகள் என்றாலுமே அது சந்தோஷின் கருத்தில் பதியாமல் இல்லை ..

" நீங்க என்னை நீ வா போன்னு  பேசலாமே அங்கிள் .. நானும் உங்களுக்கு அருள் மாதிரி இல்லையா " என்று கேட்டு அவர்களை மலைக்க வைத்தான்  சந்தோஷ் ..

" தம்பி எப்பவும் இப்படித்தான் .. பாசமா இருந்தா உடனே ஒட்டிப்பான்  " என்றாள்  சைந்தவி ..

" சத்யாவுக்கு ரொம்ப நன்றி கடன் பட்டுட்டேன் அம்மா.. அவ மட்டும் இல்லாம இருந்திருந்தா , நானும் என் குழந்தையும் " என்று பதறி நிறுத்தினாள்  சைந்தவி ..

" இப்போ எதுக்கு சைந்தவிம்மா அதையெல்லாம் நினைச்சுகிட்டு அதான் எல்லாம் சரி ஆகிடுச்சே ..தைரியமா இரு " என்றார் சுஜாதா .. சுமித்ராவும் " ஆமா சைந்தவி .. கூடிய சீக்கிரம் உன்னை மாதிரி அழகா ஒரு பாப்பா பிறந்துட்டான்னு நீ சொல்லத்தான் போற பாரு " என்றார் ..

மாமனார் இருவரையும் தனது பேச்சினாலேயே வீழ்த்தி கொண்டிருந்தான் சந்தோஷ் . சந்தேகபார்வை மறைந்து அவனை மரியாதையாய் பார்த்தனர் இருவரும் .. வீட்டை சுற்றி பார்ப்பது போல எழுந்தான் சந்தோஷ் ..

" சத்யா , வீட்டை சுற்றி காட்டும்மா " என்றார் அர்ஜுனன் .. கணவரின் அர்த்தமுள்ள பார்வையை பார்த்தே அவர் மனதில் இருப்பதை படித்தார் சுமித்ரா ..

அருள் , சாஹித்யா , சந்தோஷ்  இருவரும் வீட்டை சுற்றி பார்த்துவிட்டு தோட்டத்திற்கு சென்றதும் , முகபாவனையை மாற்றி கொண்டான்  சந்தோஷ் ..

" எனக்கிது பிடிக்கல " என்றான்

" எ ... என்னாச்சு சந்தோஷ் ?" என்று கேட்ட அருளின் முகத்தில் தீவிரம் படர்ந்தது ..

" பின்ன , நீ என் சத்யூவுக்கு மட்டும்தான் ப்ரண்டா  ? எனக்கு ப்ரண்ட்  ஆகமாட்டீயா ?" என்று கேட்டு இருவரையும் மகிழ்ச்சியின் உச்சியிலே நிற்க வைத்தான் சந்தோஷ் ,

" நீங்க ... நீ " - அருள்

" என்ன நீங்க போங்கன்னு  ? நீயும் சத்யாவும் பெஸ்ட் ப்ரண்ட்ஸ்ன்னு எனக்கு நல்லாவே தெரியும் அருள் .. ஒரு பெண்ணை காதலிச்சா , இதை கூட தெரிஞ்சு வெச்சிக்க மாட்டேனா ?" என்றான் அவன் .. மேலும் அருளின் கைகளை பிடித்து  அதில் சத்யாவின் கரத்தையும் அழுத்தியவன்

" புனிதமான நட்பு எல்லாருக்கும் கிடைக்காது அருள் .. நான் பொசசிவ் தான் ...ஆனா அதுக்காக நல்ல உறவை  பறிக்கிற அளவுக்கு  வில்லன் எல்லாம் இல்லை ... சத்யாவை உங்ககிட்ட இருந்து பிரிக்க மாட்டேன் , மாறாக என்னையும் உங்களோடு சேர்த்துக்கனும் " என்றான் அவன் கலகலப்பாய் .. எங்கோ மிதந்து கொண்டிருப்பது போல இருந்தது  சாஹித்யாவுக்கு ... அருள் சந்தோஷை ஆரத்தழுவி கொண்டு

' தேங்க்ஸ் மச்சி " என்றான்

சந்தோஷும் " ஓகே டா மாப்பிளை " என்று சிரித்தான் ..

" ஒரு நிமிஷம் இருங்க வந்திடுறேன் " என்று ஓடினான் அருள் ..

" அவன் எங்க போறான் " என்றான் சந்தோஷ்

" வேறெங்கே? எல்லாம் நமக்கு தனிமை கொடுக்கணும்னு தான் போயிருக்கான் " என்றாள்  சத்யா தனது நண்பனை எண்ணி சிலிர்த்தபடி ..

" ஏன் அப்படி ?"

" ஏன்னா அவன் என்கிட்ட கேட்டான் ..அதற்கு நான் ஒரு பதில் தந்தேன் " என்று மர்மமாய் சிரித்தாள் சாஹித்யா..

" அது என்ன செய்தியோ தேவி ?" என்றான் சந்தோஷ் பணிவுடன்..

" ஹா ஹா .. ஒருவேளை சந்தோஷுக்கு என்னை பார்த்ததும் புடிச்சு போயி நீ மனசு சந்தொஷபடுற மாதிரி ஏதாச்சும் நடந்தா என்ன பண்ணுவன்னு என்னை பார்த்து அவன் கேட்டான் "

" அதுக்கு மேடம் என்ன சொன்னிங்க ?"

" அவன் கண்ணை மூடிட்டு "

" மூடிட்டு ?" என்று குறும்பாய் சந்தோஷ் சிரிக்கவும் ..

அவன் மார்பில் பூமாலையாய் விழுந்தவள் " இப்படி கட்டி பிடிச்சுப்பேன்னு  சொன்னேன் " என்றாள் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.