(Reading time: 23 - 46 minutes)

" ஹே சத்யூ ... "

" ம்ம்ம்ம் "

" சான்ஸ் ஏ  இல்ல .. அசத்துற .. இப்படி ஒரு பர்த்டே நான் எதிர்பார்கவில்லை " என்றான்

" ம்ம்ம்ம் நானும் தான் சந்து ... நம்ம வீட்டுல ஓகே சொல்லிடுவாங்க தானே ?"

" ஓகே யா  ? இந்நேரம் என் அண்ணி கல்யாண டேட்டை  பிக்ஸ் பண்ணி இருப்பாங்க " என்றான் .. விழி அகல அவனை அவள் நிமிர்ந்து பார்க்க, அவளது மூக்கு கண்ணாடியை கலட்டி , அவள் இமைகளில் தனது முதல் முத்திரையை பதித்தான் சந்தோஷ் ..

" நிஜம்மாவா சந்து ?"

" நிஜம்மாத்தான் வேணும்னா மறுபடியும் கிஸ்  பண்ணி ப்ரூவ் பண்ணட்டுமா ?"என்றான் .

" யோவ் .... " என்று அவள்  விரல் நீட்டி மிரட்ட ,அவள் விரல்களை செல்லமாய் கடித்து சிரித்தான் சந்தோஷ் .. இங்கு  வரவேற்பறைக்கு ஓடி வந்த அருளின் செவிகளில்  அவர்களது பேச்சு கேட்டது ..

" நீங்க வேணும்னா உங்களுக்கு தெரிஞ்ச கிட்ட சொல்லி விசாரிச்சுட்டு அதன் பிறகு சொல்லுங்க அம்மா .,.. சைந்தவி எனக்கு  தங்கச்சி மாதிரி .. முதல் தடவை உங்க வீட்டுக்கு  வரேன் . ஒரு பொய்யான காரணத்தோடு வரவேணாம்ன்னு தோணிச்சு .. அதான் சாஹித்யாவை சந்தோஷுக்கு இப்போவே கேட்டுடேன் " என்று விளக்கம் அளித்தாள்  சைந்தவி ..

" உனக்கு நல்ல மனசு சைந்தவி . சந்தோஷையும்  எங்களுக்கு பிடிச்சிருக்கு தான் .. ஆனா சத்யா கல்யாணமே வேணாம்னு இருக்கா " என்று தயங்கினார் ரவிராஜ் ..

" அதெல்லாம் அப்போ டேடி  ... மேடம் தோட்டத்தில் டுயட் பாடிகிட்டு இருக்கா , வேதாளம் வெங்காய லாரி ஏறுறதுக்கு முன்னாடியே கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுங்க " என்று அவளது மனதை அவர்களின் முன்னிலையில் சொல்லி விட்டிருந்தான்  அருள் .. முகம் முழுக்க சந்தோஷமும் வெட்கமும் கொப்பளிக்க,  சந்தோஷுடன்  இணைந்து நடந்து வந்தாள்  சாஹித்யா ..

" அப்போ சந்தோஷ் - சாஹித்யா கல்யாணத்துக்கு எங்களுக்கு சம்மதம் தான் " என்று அர்ஜுனன் கூறவும் தந்தையின் தோளில்  சாய்ந்து கொண்டாள்  சாஹித்யா வெட்கத்துடன். மகளின் மனமாற்றில் உச்சி குளிர்ந்தனர் பெற்றவர்கள் .. தன்னையும் மீறி அருளின் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியது .. அதை தூரத்தில் இருந்து பார்த்த சைந்தவி " இவன் நல்ல நண்பன் " என்று எண்ணி கொண்டாள்  ... அதன்பிறகு சுபாஷ் ஏற்கனவே சொல்லி இருந்தது போல, இரவு அந்த 5 நட்சிதிரரக ஹோட்டலில் அனைவரும் சந்திப்பதாக பேசி கொண்டனர் .

பல திருப்பங்களை சுமந்து கொண்டு வானில்  ஊஞ்சலாடியது பால்நிலா. வெள்ளைநிற புடவையில் தேவதையாய் மிளிர்ந்தாள் சாஹித்யா .

" உனக்கொரு சர்ப்ரைஸ் இருக்கே " என்று சொன்னான் அருள் .

" என்னடா ? "

" இன்னைக்கு உனக்கு ஒருத்தவங்களை அறிமுகப்படுத்தி வைக்க போறேன் " என்றான் அருள் ..

" யாரு ?"

" நீயே நேரில் பாரு !"

" த்து .... சரி நானே பார்த்துக்குறேன் .." என்றாள்  உற்சாகமாய் , தனது உற்சாகமும் மொத்தமும் வடிந்து போக போவதை அறியாமல் ..

" நாம இப்போ எங்க போயிட்டு இருக்கோம் வானதி ?"

" உங்களுக்கு ஒருத்தரை அறிமுகப்படுத்தனும் அண்ணி "

" யாரு டா ?"

" அதுவந்து " என்றவளின் முகத்தில் வெட்கத்தின் ரேகைகள் ..

" நான் நினைக்கிறது நிஜம்மா வானதி ?"

" என்ன அண்ணி ?"

" நீ , உன் மனசை வென்ற ஒருத்தரை எனக்கு காட்ட போற ..ரைட்டா ?"

" வாவ் ..நீங்க பக்கா மாஸ் அண்ணி " என்று சிரித்தாள் ..அவளது பாவனையில் கவிமதுராவும் புன்னகைத்தாள் , அந்த புன்னகை பறிபோக போவது அறியாமல் ..

மூன்று மேஜைகளை இணைத்தபடி அமர்ந்திருந்தனர் அனைவரும் அந்த ஹோட்டலில் .. முதலில்  கண்ணன்- மீரா தம்பதியர் , அவர்கள் அருகில் ரகுராமன் - ஜானகி தேவி, அவர்களின் எதிரில் அர்ஜுனன்- சுமித்ரா அவர்களது அருகில் ரவிராஜ் - சுஜாதா.. பெரியவர்களை தொடர்ந்து சுபாஷ் -சைந்தவி, அவர்கள் எதிரில் சந்தோஷ்- சாஹித்யா , சாஹித்யாவின் எதிரில் அருள்மொழிவர்மன்  . அவன் அருகில் ஒரு நாற்காலி காலியாய் இருந்தது . அதே போல அவன் எதிரில் மூன்று இருக்கைகள் இருந்தன ..

" கிரி வரலையா அண்ணா ?" என்றார்  ரகுராமன் ..

" வந்துகிட்டே இருக்கான் ரகு .. "

" டேய் என்னடா யாரோ வாராங்கன்னு சொன்ன "- சாஹித்யா ..

" இரு டீ "  என்றவன் வானதியை அழைத்தான் .,..

" நதி "

" ம்ம்ம் "

" எங்க இருக்க"

" வாசலில் இருக்கேன் .. இப்போதான் வந்தேன் ,..ஜீவா அழறான் ..அதான் அண்ணி சமாதானம் பண்ணுறாங்க "

" இதோ நான் வரேன் " என்றவன்

" அம்மு 2 மினிட்ஸ் " என்று எழுந்து சென்றான் ..

ஐந்து நிமிடங்கள் கழித்து அங்கு நிழலாடவும்  வானதியின் கைகளை உரிமையாய்  பிடித்தபடி  அருள் முன்னே வர  , அவன் பின்னே கவிமதுரா ஜீவாவுடன் வந்தாள் ..  பேச்சின் ஸ்வாரஸ்யத்தில்  முதலில் கண்ணபிரானும் - மீராவதியும்  கவிமதுராவை கவனிக்கவில்லை .. ஆனால் சிரிப்போசை கேட்டு  நிமிர்ந்தவள் அவர்களை பார்த்து உறைந்தே போனாள்  ..

" ஈரமான தரை , ஜாக்கிரதை !" என்று அருகில் இருந்த வாசகத்தை படிக்காமலே அதிர்ச்சியாய்  அடுத்த அடி வைத்தவள்  நழுவி விழப்போக, ஓர் வலிய  கரம் அவளை பற்றி  நிறுத்தி அதே வேகத்தில் அழுத ஜீவாவை அணைத்து  கொண்டது .. தன் குழந்தையை தூக்கியது யாரென கவிமதுரா நிமிர , யார் குழந்தை இது என்று கிரிதரனும் அவள் முகம் பார்க்க, இருவரின் விழிகளும் சந்தித்த பாதை நெஞ்சுக்குள் பூத்தது புதுமலரா ? அல்லது வெடித்தது பூகம்பமா ? என்று புரியாமல் எகிறித்துடித்தது இரு இதயமும் . அதேவேளை வானதியின் தோளில்  கை போட்டு அருள் நிற்கவும் , சாஹித்யா அதிர்ச்சியில் விழி உயர்த்த ,

" ஓஹோ இவங்கதான் எங்க மருமகளா " என்று அர்ஜுனன் சிரிக்க, தன் குடும்பத்திற்கே தெரிந்த இந்த விஷயம் தனக்கு எப்படி தெரியாமல் போனது ? என்று கேள்வியில் சத்யாவின் இதயத்தில் வெடி வெடித்தது ..

அடுத்து என்னல்லாம் வெடிக்க போகுதுன்னு அடுத்த எபிசோட்ல சொல்றேன்

தவம் தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:838}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.