(Reading time: 31 - 62 minutes)

துளசியோ, காருண்யாவையும், சரணையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்... காருண்யா பற்றி தங்கள் ரிசெப்ஷனில் அறிந்திருந்தவள், இவள் கரணது முன்னாள் பிரண்ட், இவளால் அன்று சரணுக்கும் தனக்கும் சண்டை வந்தது என்று நினைவு வர, இன்று எதற்காக வந்திருக்கிறாளோ, தெரியவில்லையே.... நல்ல நாளில் இவளுக்கு இங்கு என்ன வேலை.. பார்த்தால், சரண் அவளை அழைத்ததாக தெரியவில்லை... பாவம் அத்தை, இத்தனை நேரம் மகிழ்சிசியாக இருந்தவர்கள், கரண் பற்றி இவள் பேசியவுடன், வாடிய முகத்துடன் சென்று விட்டார்.

சற்று, வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்த துளசியை பார்த்த காருண்யா,' இவளுக்கு வந்த வாழ்வைப் பார்' என்று எண்ணி, "ஹ்லோ, துளசி... என் வாழ்த்துக்கள்... இனி பிஸிதான்... அம்மா ஆகப் போகிறாய்.. குழந்தையை பார்த்துக் கொள்ளவே உனக்கு நேரம் சரியாகி விடும்... பாவம் எங்கள் சரண்... அவனுக்கு போட்டியாக குழந்தை வந்து விடும்... ஏங்கிப் போய் விடுவான்", என்று ஏதோ ஜோக்குப் போல குத்தலாக அசிங்கமாக சொன்னவள், "இந்தாருங்கள் என் சின்ன பரிசு" என்று துளசியிடம் ஒரு அட்டை டப்பாவை கையில் கொடுத்தாள்.

வெறுப்புடன் அவளை பார்த்த சரண் , முகம் சுழிக்க, சட்டென்று அவளை ஏதோ சொல்ல வந்தவன், துளசியின் இருண்ட முகத்தைப் பார்த்து விட்டு, அவளை ஆறுதலாக கையைப் பிடித்தான்.

"இதோ பார் காருண்யா," என ஆரம்பிக்க, அப்பொழுது அங்கு விவேக்குடன் , கீதாவும், ராதாவும் வந்தனர்.

கீதா, துளசியை அணைத்துக் கொண்டு, "எதற்காக எங்கள் சார் ஏங்கிப் போக வேண்டும்... துளசிக்கு, தன் கணவரையும், குழந்தையும் ஒரு சேர சமாளிப்பது எப்படி என்று தெரியும்... சரண் சார் என்ன துளசிக்கு எல்லாவற்றிற்கும் துணையாக இருக்க மாட்டாரா என்ன" என்று பதிலடி கொடுத்தவள், துளசியிடம் தன் வாழ்த்துக்களை கூறி தன் பரிசை அளித்தாள்.

காருண்யா முகம் கருக்க , அங்கு வந்திருக்கும் தன் சொந்தக்காரர் ஒருவருடன் பேசி விட்டு வருவதாக சொல்லிவிட்டு அங்கிருந்து மெல்ல நழுவினாள்.

துளசி காருண்யாவை கண்டு கொள்ளாமல் , பல வருடங்களாக பார்க்காத தன் தோழி ராதாவை அணைத்து கொண்டு அவள் நலத்தை விஜாரித்தாள். விவேக் சரணுக்கு வாழத்து கூற, அதை நல்லபடியாக ஏற்றவன் அவனுடன் பொதுவாக பேசிக் கொண்டு, துளசியை அவ்வப்போது பார்த்தவண்ணம் இருந்தான்.

ராதா துளசியிடம், விவேக், கீதாவை திருமணம் புரிந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக சொல்ல, உடனே தோழி கீதாவை அணைத்துக் கொண்டு துளசி அவளுக்கு தன் வாழ்த்துக்களை சொன்னாள். சரணுக்குமே இந்த செய்தி புதியது.. விவேக்கை வாழ்த்தியவன், துளசியை பார்க்க, அப்பொழுது அவளுமே அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். துளசிக்குமே, இதில் சந்தோஷமே. தன் தோழிக்கு நல்ல வாழக்கை கிடைத்தது பற்றி அவளிடம் பேசிக் கொண்டிருந்தவள், போனஸாக ராதாவுக்கும் திருமணம் அவள் அத்தை மகனுடன் திருமணம் முடிவு செய்யப் பட்டிருப்பதால், அவள் திருமணம் முடிந்தவுடன், தங்கள் திருமணம் இருக்கும் என்று சொன்னாள் கீதா.

சிரித்து கொண்டிருந்தவர்களை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் காருண்யா. எப்படியாவது இந்த துளசியை சரணிடம் இருந்து பிரிக்க வேண்டுமே..... நான் வாழாத இந்த வாழக்கை இவளுக்கு எப்படி கிடைக்கலாம், பொறுக்கவில்லை அவளுக்கு. சரணுடன் தனியாக பேச ஏதாவது சந்தர்ப்பம் வருமா என்று காத்துக் கொண்டிருந்தாள்.

சியாமளாவும், மாமியும் துளசியின் அருகே வந்தவர்கள், டயமாகி விட்டதால், துளசிக்கு சரணுடன் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து முடித்தனர். பின்னர் உறவினர்கள் அனைவரையும் உணவருந்துமாறு அழைத்தனர்.

ஒவ்வொருவராக தோட்டத்தில் உணவு பறிமாறும் பந்தியை நோக்கி செல்ல,

சியாமளா சரணிடம், எதற்க்காகவோ, பணம் கேட்க, ரூமில் இருந்து எடுத்து வருவதாக சொன்ன சரண், மாடியில் இருந்த தன் அறையை நோக்கிச் சென்றான்.

சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த காருண்யா, சரண் மேலே மாடிக்குச் செல்லவும், அவனறியாமல் பின் தொடர்ந்தாள்.

பணப் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டவன், தன் அறையில் இருந்து வெளியே வர, மாடி ஹாலில் நின்று கொண்டிருந்த காருண்யாவைப் பார்த்து நின்றான்.

முகத்தை சுளித்து, "சாப்பிட்டு விட்டு போக வேண்டியது தானே... இங்கே என்ன செய்கிறாய்" என்று அதட்ட,

காருண்யாவோ, 'இதெற்கெல்லாம் பயந்து விடுவேனா, இவன் வீட்டு சாப்பாட்டுக்குத்தான் நான் காத்திருக்கேன்' என மனதினில் கூறிக் கொண்டு, வெளியே சிரித்த முகமாக," இல்லை சரண்... போக வேண்டும்.... நீங்கள் இங்கு வருவதை பார்த்தேனா... உங்களுடன் ஒன்று பேச வேண்டும்... அதான் நின்று விட்டேன்", என்று கொஞ்சலாக சொல்ல,

எரிச்சலுற்ற சரண், 'இவளை... என்ன செய்வது... முதலும், கடைசியுமாக இவளிடம் பேசி இனி இங்கு வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்'... " என்ன விஷயம்.. சொல்லி தொலை.. எனக்கு அவசரமாக போக வேண்டும்"...

காருண்யா அதற்கெல்லாம் அசருவாளா என்ன.... நிதானமாக, "சரண்... உனக்கே தெரியும்... உன் அண்ணன் கரண் என்னை காதலித்தான். நான் எவ்வளவு மறுத்தும் கூட என்னை மறக்க முடியாது... என்னை திருமணம் புரிந்து கொள்கிறேன் என்றான்.. அதனால் தான் நானும் சரி அவனை மணக்க ஒப்புக் கொண்டேன்... ஆனால் பார், கடைசியில், தனக்கு தீராத நோய், தான் செத்து போய் விடுவேன் என்றான். அப்பொழுது கூட நான், இனி எப்படி வேறு ஒருவரை மணப்பது என்று எண்ணி, அவனையே கொஞ்சம் காலமாவது மணந்து வாழ்ந்து விடுகிறேன் என்றதற்கு ஒப்புக் கொண்டவன், ஒண்றுமே சொல்லாமல் திடீரென செத்து விட்டான்"..... வராத கண்ணிரை துடைப்பது போல் பாவனை செய்தவள், மீண்டும், "சரி, அவன் என்னை விட்டு போய் விட்டானே, என்ற துக்கத்தில் இருந்த போது, அந்த அமெரிக்க மாப்பிள்ளை என்னை ஒரு பார்ட்டியில் பார்த்து விட்டு, மணக்க கேட்டான்.... ஆக்சுவலாக நான் அந்த சமயத்தில் ஒரே துக்கத்தில் இருந்தேன்... கரணை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த நான், அவனைப் போலவே இருந்த அவன் தம்பியான உன்னை ஏன் மணக்க கூடாது என்று உன்னிடம் கேட்கலாம் என்ற் தீர்மானித்த போதுதான், உங்கள் திடீர் திருமண ரிசெப்ஷன் என்று பேப்பரில் பார்த்துவிட்டு, அதிர்ச்சியுடன் இருந்தேன். சரி, இனி என்ன இருக்கிறது எனக்கு என்று அந்த சமயத்தில் என்னை மணக்க கேட்ட அமெரிக்க மாப்பிள்ளைக்கு ஓ.கே. சொன்னேன்.

ஆனால் பார் சரண், அந்த கயவன், நான் உங்கள் அண்ணனுடன் சுற்றிக் கொண்டிருந்தேன், என்ற ஒரே காரணத்திற்காக என்னை மறுத்து திருமணத்தை நிறுத்தி விட்டான். நான் தான் இப்பொழுது என்ன செய்வது?... இங்கு வந்து பார்த்தால் தான் தெரிகிறது... என்று இழுத்தவள், நான் சொல்கிறேன் என்று தப்பாக நினைக்காதே சரண்... உன் மனைவி துளசியைப் பார்த்தால் எதோ சரியில்லை.... அவள் கம்ப்யூட்டர் கிளாஸ் செல்லுவதாக சொல்லிவிட்டு அந்த விவேக்குடன் ஜோடி போட்டுக் கொண்டு சுற்றுகிறாள்... அவனுக்குமே இவள் மேல் கண் போல் இருக்கிறது.... இவள் எல்லாம் இந்த பாரம்பரியமான குடும்பத்திற்கு சரி வருமா.... யோசி.... எதோ தெரியாமல் அவளை மணந்திருக்கலாம்... பேசாமல் குழந்தை பெற்றவுடன், அவளை கழட்டி விட்டு, டைவர்ஸ் கொடுத்து விடு... உன் அண்ணனை இழந்த என்னை திருமணம் செய்து கொள்... உங்கள் குடும்பத்திற்கு ஏற்றவள் நானே... வேண்டுமானால் குழந்தையை நாம் இருவரும் சேர்ந்து வளர்ப்போம்... அவளை துரத்தி விடு... இன்று கூட சற்று முன்னால் அந்த விவேக்குடன் சிரித்துக் கொண்டிருந்தாள்".... என்று இழுத்தவளை,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.