(Reading time: 31 - 62 minutes)

ரு வேளை இந்த ரிப்போர்ட் தவறாக இருக்குமோ?.... மீண்டும் ஒரு முறை பெயரைப் பார்க்க, அதில் எந்த தவறு இருப்பதாகவும் தெரியவில்லை.. சந்தேகத்திற்கு இடமின்றி நல்ல கொட்டை எழுத்தில், 'ராம் கரண்' என்று எழுதப் பட்டிருந்தது...... ஒரு வேளை பெயர் தவறுதலாக மாறி இருந்தால் கூட, அதில் ராம் கரணது வியாதியைப் பற்றி, சரியாகவே இருந்தது.

மருத்துவமனையில் ஏதாவது தவறு நடந்திருக்கக் கூடுமோ?... இப்பொழுதுதான், மருத்துவமனைகளில் அவ்வப்பொழுது இந்த மாதிரி தவறுகள், ரிப்போர்ட்டுக்கள் கொடுக்கும் பொழுது நடப்பதாக சொல்லுகிறார்களே?

ஆனால் அது எப்படி முடியும்... இந்த மருத்துவமனையோ, நல்ல பெயர் போன நம்பிக்கையானது என்றார்களே?.... அதனால், அவர்கள் மேல் எந்த தப்பும் இருக்க வாய்ப்பில்லை. பின் எங்குதான் நடந்தது இந்த தவறு?.... மருத்துவ அறிக்கை என்னவோ, ராம் கரண் தந்தையாகும் பாக்கியம் அற்றவன் என்று துல்லியமாக கூறுகிறது.... சட்டென்று நினைவுக்கு வந்தவள், இந்த விஷயம், சரணூக்குத் தெரியுமா?..... தன் அண்ணன் பற்றி தெரிந்து இருந்தால் எப்படி துடித்திருப்பான்.... ஒருவேளை, இதை தெரிந்து கொண்டே மறைத்து விட்டானோ?.... என்ன காரணம் இருக்கும் இதை மறைப்பதற்கு?..... முதலில் யாரிடம் எல்லாம் இதை மறைத்தான்.... என்னிடமா... இல்லை அவன் அண்ணன் ராம் கரணிடம் கூடவா? ...

ஒரே குழப்பமாக இருந்தது துளசிக்கு... ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிந்து விட்டது, இந்த ரிப்போர்ட் படி, என் வயிற்றில் வளரும் குழந்தை ராம் கரணது இல்லை என்று..... ராம் கரண் தந்தையாகும் தகுதி இல்லாதவன் என்றால், எதற்காக, யாருக்காக இந்த வாடகைத்தாய் மூலம் குழந்தை? இதில் யாருக்கு என்ன லாபம் இருக்கக் கூடும்?...

ஒரு வேளை, .... சரண்.... சரண் தான், இதில் ஏதோ செய்து இருக்க வேண்டும்..... குழந்தையை முதலில் கலைத்து விடுகிறேன் என்று சொன்ன பொழுது கூட ஒப்பவில்லையே..... அப்படியானால் இவன் தன் அண்ணண் கரண், குழந்தை பெற தகுதி இல்லாதவன் என்று அறிந்திருந்தால், இந்த வாடகைத் தாய் கான்செப்ட்டே வேண்டாமே?... ஏதோ ஒரு காரணத்திற்காக இதை செய்தானா? ஒரு வேளை சரணுக்கும் இந்த நோய்.... வந்திருக்குமோ.... சே..சே... எப்படி இப்படி நான் யோசிக்கிறேன்.... ஆம்... வேண்டுமானால் இப்படி இருக்கலாம்... இரட்டையர்களான இருவரும், எல்லாவற்றிலும், ஒற்றுமையாக இருப்பது போல், இதிலும், இவனும், தந்தையாகும் தகுதி இழந்தவனோ?.... அம்மா, அப்பா, குடும்ப வாரிசு ஆசையால், வேறு எவன் கருவையோ, என்னை சுமக்க வைத்து விட்டானோ?....

கட்டாயம் இப்படித்தான் இருக்க வேண்டும், என்று உறுதியாக நினைத்தவள், கண்களில், கண்ணீர் வழிய, என்னென்னோ எண்ணிக் கொண்டிருந்தாள். சரண் இதை தெரிந்தே செய்தானா. இல்லை தெரியாமலா... ஒன்றும் புரியாமால் குழப்பத்தில் அழுதபடி படுத்திருந்தாள்.

ரவு மிகவும் லேட்டாக வந்த சரண், சியாமளா மூலம் துளசி உடம்பு முடியாததால், ரூமிலேயே இரவு உணவு உண்டுவிட்டு தூங்கி விட்டாள் என்று அறிந்தான். பின்னர் தானும் உணவை முடித்தவன், தாயிடம், அன்று மருத்துவமனையில், துளசியின் உடல் நிலை பற்றி சொன்னதை கேட்டு விட்டு, தனது ரூமிற்க்கு வந்தவன், இரவுக் குளியல் முடித்து துளசியின் அறைக்கதவை தட்டினான். தாளிடப்படாமல் இருந்த ரூமிலிருந்து, 'உம்' என்ற துளசியின் குரல் வர,, உள்ளே கதவை திறந்து நுழைந்தவன், 'என்ன ரூம் ஒரே இருட்டாக இருக்கிறது.... ஒரு வேளை உடம்பு முடியாததால் தூங்கி விட்டாளோ? , டிஸ்டர்ப் செய்ய வேண்டாம், வெறும் பார்த்து விட்டு சென்று விடலாம், என்று எண்ணி, விளக்கைப் போட்டவன், அழுதழுது, கண்கள் சிவந்து , முகமெல்லாம் வீங்க, சன்னலருகே, அமர்ந்து இருட்டை, வெறித்து கொண்டிருக்க, துளைசியை, பார்த்து, பயந்து விட்டான் சரண்.

வேகமாக அவளருகில் சென்றவன், துளசி,, 'கண்ணம்மா', என்ன ஆயிற்று... முகமெல்லாம் ஏன் வீங்கி இருக்கிறது?... அழுதாயா... என்ன... என்னவாயிற்று?... வயிறு வலிக்கிறதா? டாக்டரிடம் போகலாமா? என்ற படபடப்பாக கேட்டவனை,,

"கண்ணம்மாவா? என்று நக்கலாக கேட்டாள்., துளசி.

இப்பொழுதெல்லாம், மனதுக்குள், துளசியை, கண்ணம்மா என்று அழைத்து பழகி இருந்தவன், தன்னையறிமால் உளறி விட்டதை உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டான்.

சட்டென்று சமாளித்து என்னவாயிற்று?..... துளசி... டாக்டரிடம் இன்று செக்கப்புக்கு போனாயே? எல்லாம் நார்மலாகத்தானே, இருக்கிறது? வேறு ஏதாவது உடல் உபாதையா...

"போதும்... நிறுத்தங்கள்.....உங்கள் ஜாலப் பேச்சை... கண்ணம்மாவாம் கண்ணம்மா?.... ஏமாற்ற எவளாவது கிடைத்தால் ஏன் பேசமாட்டீர்கள்... என்ன அக்கறை... இந்த அக்கறை எதற்கோ?... சரியான பித்தலாட்டுக்காரன்"...

சட்டென்று மூண்ட கோபத்துடன், "ஏய் என்ன உளருகிறாய்.... ஜாக்கிரதை, நாவடக்கத்துடன் பேசு... பித்தலாட்டகாரனா?... என்ன பித்தலாட்டம் செய்து விட்டேன்... அது சரி, என்ன அக்கறையா..... ஏன் நான் உன் மேல் அக்கறை படாமல் தெருவில் போறவனா அக்கறை படுவான்'"? என்று ஒற்றை விரலை காட்டி மிரட்டியவனை,

லட்சியமே செய்யாமல், "ஆமாம், ஆமாம், என் பேச்சு, உளரளாய் தான் இருக்கும்... இவர் பெரிய சத்தியவான்.... அப்படியே புத்திசாலிதனத்துடன் பேசுவார்"

ஒன்றும் புரியாமால் சரண், "என்ன துளசி, என்னம்மா என்னவாயிற்று உனக்கு... ஏன் எப்படி பேசுகிறாய்... நீ இப்படி பேசுபவள் இல்லையே.... யாராவது ஏதாவது உன் மனம் புண்படும்படி பேசினார்களா? ஏன் இன்று இப்படி நடந்து கொள்கிறாய்? அழுதாயா? என்ன முகமெல்லாம் வீங்கி வேறு இருக்கிறது?... உடம்பு சரியில்லை என்றால் சொல்லு, டாக்டரிடம் போகலாமா...." என்று தன்மையாகவே கேட்டான்...

ஒன்றும் பேச பிடிக்காமால். பக்கத்தில் இருக்கும் டேபிளை காட்டியவள்,

"ஓ...ரிப்போர்ட்ஸ் வந்து விட்டாதா? அதற்கு ஏன் டென்ஷனாகிறாய்.... ரிப்போர்ட்டில், அப்படி என்ன இருக்கிறது" என்று கேட்டபடி,

கையில் எடுத்தவன், மேலே இருந்த துளசியின் ரிப்போர்டை பார்த்து விட்டு, இது உன் பழைய ர்ப்போர்ட் ஆயிற்றே என்று பார்த்தவன், இதில் என்ன வந்தது... என்று எண்ணியவாறு, அதனுடன் இருந்த மற்றொரு ரிப்போர்ர்டை அது கரணது என்று அறிந்து, படிக்க ஆரம்பித்தவுடனேயே துணூக்குற்றான்.... இது.... மறைத்து வைத்திருந்த கரணது ர்ப்போர்ட், இவள் கையில் எப்படி வந்தது,... திகைப்புடன், துளசியையும், கையில் இருந்த ரிபோர்ட்டையும், மாறி மாறி பார்த்தவன்,

நிமிடத்தில், ஒரு முடிவு எடுத்தவன், இவளை எப்படி சமாளிப்பது என்று தயங்கி, "துளசி... என்று மெல்ல இழுத்தான்...

"என்ன ஷாக்கிங்காக இருக்கிறதா... படித்த எனக்கு எப்படி இருந்திருக்கும்?.... நிங்களே சொல்லுங்கள்...

"இவ்வளவு மோசமானவரா நீங்கள்?.... நம்ப முடியவில்லை.... இந்த ரிப்போர்ட் படி பார்த்தால், ... உங்கள் அண்ணன் ராம் கரண், ஒரு குழந்தையை பெற நோயின் வீரியத்தால் தகுதி அற்றவர் என்று துல்லியமாக சொல்லுகிறது... எப்படி உங்களால் இப்படி ஒரு விஷயத்தை என்னிடம் மறைக்க முடிந்தது... இவ்வளவு பெரிய உண்மையை எதற்காக, யாருக்காக மறக்க வேண்டும்?... , உங்கள் அண்ணன் குழந்தையை பெற தகுதி அற்றவர் என்றால், இந்த வாடகைத்தாய் என்று எதற்கு என்னை இதில் இழுத்தீர்கள்... சாகும் நிலையில் இருக்கும் உங்கள் அண்ணன் பெயர் சொல்ல, ஒரு வாரிசு வேண்டும்,... அதுவும், நல்ல குடும்ப பெண்ணாக, கருவையும் சுமக்க தயாராக இருக்கும் குணசாலியான பெண் வேண்டும் என்று , என் பணத் தேவைக்காக என்னை ஏன் இதில் சம்பந்த படுத்தினீர்கள்... கடவுளே, நான் என்ன காரியம் செய்ய துணிந்தேன்"...

கோபத்துடன், அவன் சட்டையை பற்றிக் கொண்ட துளசி, "சொல்லுங்கள் சரண், ஏதற்காக பொய் சொன்னீர்கள்.... நான் சுமக்கும் இந்த கரு யாருடையது?.... உங்கள் அண்ணன் வாரிசை சுமப்பதாக கூறினீர்களே... குழந்தையை பெற தகுதி அற்றவர், என்று முன்பே உங்களுக்கு இந்த ரிப்போர்ட் படி தெரிந்திருக்கிறது.... பிறகு ஏன் இதை , இந்த வாடகைத்தாயாக என்னை இருக்க வைத்தீர்கள்... யாருடைய குழந்தை என்று தெரியாமலேயே என்னை சுமக்க வைத்து வீட்டிர்கள்... என் பணத்தேவையை பயன்படுத்தி இதில் என்னை தேவையில்லாமல் எதற்காக இந்த வேண்டாத கருவை சுமக்க வைத்தீர்கள்.... பணத்தேவைக்கு, எத்தனையோ பேர், தங்கள் சினை முட்டையை தானமாக தருவது போல் நானும் செய்து விட்டு, போயிருக்கலாமே?... தேவையில்லாமல் கருவை சுமக்க வாடகைத்தாயும் வேண்டும் என்றதால் தானே நான் இப்படி செய்தென்?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.