(Reading time: 31 - 62 minutes)

ருமகள் சோர்ந்து அமர்வது தெரிந்தால், உடனே, துணைக்கு சியாமளாவை அனுப்பி கவனிக்கச் சொல்வார். மொத்தத்தில், அவளை, பூப்போல தாங்கினர் இருவரும்.

வேலைக்காரர்கள் கூட துளசியை தங்கள் பங்குக்கு, அவளை நன்கு பார்த்துக் கொண்டனர்,

துளசிக்குத்தான், எதுவுமே இப்பொழுதெல்லாம் பிடிக்கவில்லை.. கம்ப்யூட்டர் கிளாஸ் முடிந்து விட்டதால் அதற்கு கூட செல்ல வழியில்லாமல் போர் அடித்து எதிலும் பிடித்தம் இல்லாமல் இருந்தாள். ராதாவும், கீதாவும் அவரவர் கல்யாண பிஸியில் இருந்ததால் அவர்களிடமும் பேச முடியாமல் இருந்தாள். சோர்வும், தூக்கமும் அவளை இந்த கர்ப்பம் பாடாய் படுத்தியது.

உடல் சோர்வுடன், உள்ளச் சோர்வும் சேர்ந்துக் கொள்ள எப்பொழுதும் எதையோ சிந்தித்து கொண்டிருந்தாள். இந்த வீட்டை விட்டு இன்னும் இரண்டு மாதத்தில் போக வேண்டுமே.... எப்படி ராமை விட்டு போவது.... ஒரு வேளை தான் முன்பு டைவர்ஸ் கேட்டிருந்ததை, நினைவில் வைத்துக் கொண்டு, டைவர்ஸ் கேட்டால், என்ன செய்வது... அவனுக்கு டைவர்ஸ் கொடுத்து விட்டு பிரிந்து செல்வதா... அவனை பார்க்காமால் தன்னால் இனி இருக்க முடியுமா? தாயை சிறு வயதிலேயே இழந்த எனக்கு பெற்றவர்களை விட அருமையாகப் பார்த்துக் கொள்ளும், அத்தையையும், மாமாவையும், எப்படி விட்டு விட்டு செல்வது?' என்று எண்ணி எண்ணி ஏங்கினாள். தினமும் மார்னிங் வாகிங்கை எதிரிபார்த்து காத்துக் கொண்டு இருக்கலானாள். மனம் அவன் அருகாமையை ரொம்பவும் நாடியது.

இந்த மனத் துன்பம் போதாது என்று, குழந்தையின், திடீர் அசைவுகள் வேறு அவளை மிகவும் யோசனையில் மூழ்க வைத்தது. ஒவ்வொரு முறை வயிற்றில் குழந்தை உதைக்கும் போதும், அப்படி இப்படி என்று உருளும் போதும், தன் மேடிட்ட வயிறை தடவிக் கொடுத்து, தனக்குள், 'கண்ணா, இந்த அம்மா, நீ பிறந்தவுடன் உன்னை கொடுத்து விட்டு செல்ல வேண்டும். என்னை மன்னித்து விடுடா ' என்று தன் வயிற்றில் உள்ள பிள்ளையிடம் பேசியபடி இருந்தாள்.

அன்று அவளுக்கு மாத பரிசோதனை தினம்..... சோதனையாக, சரணுக்கு அன்று, சீக்கிரம் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம்... ஒரு முக்கியமான காண்ட்ராக்ட்டில் புதிய ஒப்பந்தம் ஒன்று உடன்படுக்கை செய்வதாக இருந்ததால், அவனால் அன்று துளசியுடன் ஹாஸ்பிடல் செல்ல முடியாமால் போக, சியாமளாவுடன் மருத்துவமனைக்கு செல்லுவதாக முடிவு செய்யப் பட்டது.

சரணுடன் மருத்துவமனைக்குச் செல்லுவதை மிகவும் விரும்பி எதிர் பார்ப்பாள் துளசி. அவனுடன் செல்லும் பொழுது ஏதோ பெரியதாக சாதித்து விட்டது போல், நினைத்து பூரித்துப் போவாள்.... குழந்தையின் அசைவுகளை சோனோகிராமில் பார்த்து பார்த்து, அதன் ஒவ்வொரு அசைவையும், பற்றி டாக்டரிடம் கேட்டு தன் சந்தேகங்களை ஒன்று விடாமல், தெளிவு செய்து கொள்பவனை, டாக்டரிடம் ஒன்றும் கேட்காமல், அவன் முகத்தை அவன் அறியாதபடி ஏக்கத்துடன் பார்த்தவாறு இருப்பாள் துளசி.

தன்னையறியாமல் இந்த குழந்தை முறைப்படி சரணை மணந்து அவனுக்குப் பிறந்த குழந்தையாக இருக்கக் கூடாதா? நிஜ கணவன், மனைவியாக இருந்தால் நன்றாக இருக்குமே? எனக்கு அந்த கொடுப்பினை இல்லையே ... என்று மனதுக்குள் மறுகுவாள்.

அன்று, மருத்துவமனையில் சியாமளாவுடன் சென்ற துளசி, எப்பொழுதும் போல் எல்லா டெஸ்ட்டும், முடிந்தவுடன், டாக்டர் சுபாவிடம், சியாமளா துளசியின், உடல் நிலைப் பற்றி ஏதோ தன் சந்தேகத்தை கேட்டுக் கொண்டிருந்தார்.

ரிப்போட்டுக்காக வெயிட் செய்து கொண்டிருந்த துளசி, அந்த செவிலிப் பெண் கொடுத்த ர்ப்போர்ட்டை வாங்கிக் கொண்டவள், டாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு இருவரும் வெளியே வந்தனர்.

சியாமளாவுக்கு ஏதோ தோழியிடம் இருந்து போன் வர, அவர் அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டு பேசலானார்... அப்பொழுது, பாட்டிக்கு ஆஞ்சியோகிராம் செய்த பொழுது டுயூட்டில் இருந்த , ஒரு செவிலிப் பெண், துளசியைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டு, அவளிடம் ஓடி வந்தவள், "பாப்பா, நன்றாக இருக்கிறாயா" என்று கேட்டு விட்டு, "உன் பாட்டியின் பழைய ரிப்போர்ட்ஸ், அப்புறம் அன்று எடுத்த பிளட் டெஸ்ட் ரிப்போர்ட், எங்களிடமே இருக்கிறது... நீ அதை கலெக்ட் செய்ய மறந்து விட்டாய்... இரும்மா எடுத்து வந்து கொடுக்கிறேன்", என்று சொல்லி விட்டு, சிறிது நேரத்தில் வந்தவள் துளசியிடம் அந்த ரிப்போர்ட்டுக்களை கொடுத்து விட்டுச் சென்றாள்.

போன் பேசி முடித்து விட்டு வந்த சியாமளா, என்ன துளசி என்று கேட்டதற்கு, "ஏதோ பாட்டியின் பழைய ரிப்போர்ட் இங்கே விட்டு விட்டேனாம். அது தான் கொடுத்து விட்டு போகிறார்கள்... இனி இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது?" என்று சொல்லியபடி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, "வாருங்கள் அத்தை, வீட்டிற்கு போகலாம்" என்றவள் ,சியாமளாவுடன் காரில் ஏறி வீட்டை அடைந்தனர்.

மதிய உணவு முடிந்தவுடன், "அத்தை, நான் என் ரூமில் ரெஸ்ட் எடுக்கப் போகிறேன். ரொம்பவும் டயர்டாக எனக்கு இருக்கிறது" என்று சொல்லி விட்டு அன்றைய ரிப்போட்டுக்களுடன் மாடிக்கு தன் அறைக்குச் சென்றாள் துளசி.

மேலே தன் ரூமிற்குச் சென்ற துளசி, வேறு உடை மாற்றி படுத்தவள், ரிப்போர்ட்டுக்களை, எடுத்து வைக்க எண்ணி கையில் எடுத்தவள், கீழே அனைத்தும் விழ , குனிந்து கையில் அவற்றை எடுக்க, முதலில் அவளது விட்டுப் போன ப்ளட் ரிப்போர்ட் என்று செவிலி சொன்னது அவள் கையில் அகப்பட, என்ன ரிப்போட் அது என்று பார்க்காலாம் என்று எண்ணி, அதை படிக்க ஆரம்பித்தாள்.

படிக்க படிக்க, தலை சுற்றியது துளசிக்கு. இது எப்படி சாத்தியம்? என்று கண்கள் மயங்க அப்படியே உட்கார்ந்து விட்டாள் துளசி.

திகைத்து பிரமை பிடித்தது போல உட்கார்ந்து இருந்தாள் துளசி. தான், கண்டதும், படித்ததும் நிஜமா?, ஏதாவது கனவு கண்கிறோமோ? , தன் கையை கிள்ளிப் பார்த்தவள்,... தன்னையே கேட்டுக் கொண்டாள்,... படித்தது நிஜமே... கையிலிருந்து, கீழே, தவற விட்டிருந்த ரிப்போர்ட்ஸை மிண்டும் எடுத்தாள்.

இரண்டு ரிப்போர்ட்டுக்கள் ஒன்றாக இணைக்கப் பட்டிருந்தது. ஒன்றில் துளசியின் சினை முட்டைகள் கருவாக உருகாக முடியும் , துளசி தாய்மை அடைய ஏற்றவளே, என்று ஊர்ஜிதப் படுத்தியிருந்தது.... இன்னொன்றிலோ,...... இறந்து போன ராம் கரணின் ரிப்போர்ட்ஸ் இருந்தது.... அதில் இருந்ததோ, நம்பமுடியாததாக இருந்தது... படித்த அவளுக்கு, யாரோ, தன் தலையில், பெரிய அணு குண்டை தூக்கி போட்டது போல் இருக்க, ஸ்தம்பித்து மீண்டும் ரிப்போர்ட்டை கையில் எடுத்து படித்துப் பார்த்தாள்... நான் தான் சரியாக படிக்க தெரியாமல் படித்து விட்டேனோ..... எத்தனை முறை படித்தாலும் படித்த செய்தி ஒன்றே.

'ராம் கரண், கான்சர் நோய் தாக்கத்தால், கரணது விந்தணுக்கள் ரொம்பவும் வீக்காகவும், மிகவும் பாதிக்கப்பட்டு விட்டதால், ஒரு குழந்தைக்கு தந்தையாகும் சாத்தியம் மிகவும் குறைவாகவும் இருப்பத்தால், அவன் தந்தையாக முடியாது என்றும், ஒரு வேளை எதோ காரணத்தால் அவன் தந்தையானாலும், அது பிறக்கப் போகும் குழந்தைக்கு பின் விளைவுகள் ஏற்படும் என்ற காரணத்தால், அவனது விந்தணுக்கள் சேகரித்து வைத்தாலும், அனேகமாக பயனற்றவையே' என்று தெள்ள தெளிவாக விளக்கி இருந்தது.

படிக்க படிக்க துளசிக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன இது? இப்படி கூட நடக்கக் கூடுமா? அப்பொழுது இது எப்படி சாத்தியமாகும்? என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவள், தன் வயிற்றை மெல்ல தொட்டுப் பார்த்தாள்.

அப்படியானால்,..... இந்த குழந்தை ராம் கரணின் குழந்தை இல்லையா? பின்னர் யாருடையதாக இருக்கக் கூடும். யார் குழந்தையை நான் சுமக்கிறேன்.... கடவுளே என்ன ஒரு கேவலம்.

'அப்பன் பெயர் தெரியாதவனா என் குழந்தை..... என் குழந்தையா.... அதில் அவளுக்கு எந்த சந்தேகமுமில்லை. தான் ஒரு தாய் ,தன் குழந்தை, அதைதான் தன் வயிற்றில் சுமக்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லாமல் அதில் உறுதியாக இருந்தாள். ஆனால் தகப்பன்.... தலை வலித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.