(Reading time: 31 - 62 minutes)

"ய்.... போதும் நிறுத்து உன் அசிங்கம் பிடித்த பேச்சை. பாவம் போனால் போகிறது என்று பார்த்தால், என்னென்னவோ, பேசிக் கொண்டே போகிறாய்... ஜாக்கிரதை... உன்னை... நீ கீழே உளரும் போதே துரத்தி அடித்திருக்க வேண்டும்.. எல்லோர் முன்னாலும் அவமானப் படுத்த வேண்டாம் என்று பார்த்தால், ஓவராகப் பேசுகிறாய்.... உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்.... அடித்து பல்லை கழட்டி விடுவேன்... போகிறது அன்னியப் பெண் என்று பார்த்தால்.... நீ யார் துளசியைப் பற்றி சொல்ல.. எனக்குத் தெரியும் என் மனைவியைப் பற்றி.... அவள் யாருடன் பேசிகிறாள், என்ன செய்கிறாள், எல்லாம் எனக்குத் தெரியும்... போனால் போகிறது, என் அண்ணன் உன்னை காதலித்து தொலைந்து விட்டானே, என்று அன்றே ரிசப்ஷனில் சும்மா இருந்தேன்.... உனக்கு ஒன்று தெரியுமா, என் அண்ணனுக்கு உன் குணம் நீ மணக்க கேட்ட அன்றே தெரிந்து விட்டது... பணப் பிசாசே... உன்னை சாகும் முன்பு மணந்து கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவன், அன்று நீ உன் தோழியுடன் ஹோட்டலில் பேசுவதை கேட்டு வருத்தப் பட்டான்... அவனை மணந்து அவன் சொத்தில் பாதியை அடையலாம் என்று நீ திட்டம் போட்டதை கேட்டு விட்டவன், உன்னை ஒன்றும் சொல்லாமல் என்னிடம் வந்து சொல்லி வருத்தப் பட்டுக் கொண்டான். அன்றே அவன் உன்னை கொன்று போட்டிருக்க வேண்டும்..... அதை அன்றே செய்திருந்தால், இபொழுது நீ எல்லாம் என் மனைவியை பற்றி என்னிடமே குறை கூறிக் கொண்டு எனக்கு நல்லது செய்வது போல் அட்வைஸ் செய்கிறாய்.... அவள் பத்தரை மாற்று தங்கம்.... உனக்கு என்ன தெரியும்...

இப்பொழுது கேள்.... துளசிதான் என் மனைவி... இந்த ஜென்மத்திற்கும், இனி எந்த ஜென்மத்திற்கும் அவள் தான் என் மனைவி.. தேவையில்லாமல் இனி குறுக்கே வராதே.... இன்னொரு முறை, என்னை மணந்து கொள், துளசியை துரத்திவிடு, என்று உளறிக் கொண்டு இந்த வீட்டு வாசல் படி ஏறினால் உன்னை தொலைத்து கட்டி விடுவேன்... நல்ல காலம் கரண் தப்பித்தான்... உன்னை மணப்பதற்கு அவன் இறந்ததே மேல்... போவதற்கு முன் இன்னொன்று கேள்.... விவேக்குக்கும், கீதாவிற்கும் திருமணமாகப் போகிறது. அவர்கள் வாழ்க்கையில் ஏதாவது குறிக்கிட்டால் உன்னை கொன்றே போட்டு விடுவேன்.... கெட் அவுட்..." கோபமாக அவளை திட்டி வாசலை நோக்கி கையை காண்பித்த சரண் வேகமாக கீழே தன் தாயைக் காண விரைந்தான்.

அவமானத்தில் முகம் இருள, ' இனி இவனிடம் நம் பப்பு வேகாது.. எல்லாம் தெரிந்தது போல் பேசுகிறான்... எல்லாம் நம் நேரம்.. பேசாமல் இங்கிருந்து போய் விடலாம்' என்று முடிவு செய்து நடையை கட்டினாள் காருண்யா.

அவர்கள் இருவரும், கீழே இறங்கிச் செல்ல , இவர்கள் பேச்சை இத்தனை நேரமாக ஹாலின் மறு பக்கத்தில் இருந்த ரூமிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த துளசியும், கீதாவும் மெல்ல வெளியே வந்தார்கள்... துளசி, கீதாவுடன் வேறு இளகுவான சேலை மாற்றி வருவதாக சியாமளாவிடம் சொல்லி விட்டு, கீதாவை அழைத்துக் கொண்டு சேலை மாற்றி வந்தவள், காருண்யா மேலே வந்து சரணிடம் ஏதோ பேச வேண்டும் என்றவுடன், கீதாவுடன் சட்டென்று, அவளை அழைத்துக் கொண்டு பக்கத்து ரூமிற்கு சென்று, தோழியுடன் அவர்கள் சென்றதற்கு பிறகு செல்லலாம் என்று சொல்லி விட்டு அங்கு அமர்ந்தனர். அவர்கள் இருவரும் பேசியது இவர்களுக்கு நன்றாகவே காதில் விழ, இது எல்லாவற்றையும் கேட்ட இருவரும் அதிர்சிசியில் சற்று நேரம் பேசாமல் இருந்தனர்.

முதலில் சுதாரித்துக் கொண்ட கீதாதான், " என்னடி, துளசி. இந்த காருண்யா இவ்வளவு கேடு கெட்டவளா, இப்படி நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறாள்.... எப்படியோ, நம் சரண் சார் எவ்வளவு நல்லவர்... உனக்காக எப்படி பரிந்து பேசினார். அவர் கிடைக்க நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்.... தேவையில்லாமல் விவேக்கையும் பேசி விட்டாள்... இவளை என்ன செய்வது.."..

துளசியோ, காருண்யாவின் பேச்சை கேட்டு ஆத்திரமுற்றவள், பின்னர் சரண் தனக்காக பேசியதைக் கேட்டு மகிழ்ச்சியில் மனம் தத்தளிக்க, சரணின் மனதில் தான் இருப்பது அவனது பேச்சால் நிச்சயமாகி விட, கீதாவிடம், "ஆம் .. கீதா. சரணை கணவராக அடைய நான் கொடுத்து வைத்திருக்கிறேன்... இனி, அந்த காருண்யா நம்மிடம் வாலாட்ட மாட்டாள்... எதற்கும், நீங்களும் ஜாக்கிரதையாகவே இருங்கள் ... வா வா நேரமாகிறது... புடவை மாற்ற சென்ற என்னை காணாமல் அத்தை கவலைப் படுவார்கள் ", என்று சொல்லி அவளை அழைத்துக் கொண்டு, உணவு உண்ண சென்றாள்.

ன்றிரவு, தனிமையில் பால்கனியில், நின்றிருந்த சரணுக்குள்ளே, ஒரு பிரளயமே நிகழ்ந்து கொண்டிருந்தது..... நான் ஒன்று நினைக்க, நடப்பதோ, ஏதெதோ... தேவையில்லாமல், இன்று காருண்யா வந்து வம்பு செய்து விட்டாள். அவளை நினைத்தாலே அவனுக்கு எரிச்சலாக இருந்தது.... அவளை எச்சரித்து விட்டாளும், கொஞ்சம் ஜாக்கிரதையாகவே துளசியை பார்த்துக் கொள்ள வேண்டும். துளசியை நினைத்தவுடன், அவனது மனம் இன்றைய ஆனந்த்தில் மூழக, 'இன்று துளசி எவ்வளவு அழகாக இருந்தாள். தாய்மையின் பூரிப்பில் முகம் ஜொலிக்க, அந்த பச்சை பட்டு புடவையில் இருந்தவளை எண்ண எண்ண மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. .... துளசியின் மனம் நன்கு என் மேல் சாய்ந்து விட்டது... அதில் ஐயமில்லை. எனக்கும் இனி அவளன்றி இருக்கக்கூடும் எனத் தோன்றவில்லை..... ஆனால் இவை இப்படியே பிரச்சனையின்றி முடியுமா.... நல்லது என்று எண்ணி செய்தது எப்படி முடியுமோ... எவ்வளவு நாள் இப்படியே இருப்பது.... என பலவாறு சுய அலசல்களும், கேள்விகளும் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவன், விடியலின் போது ஒரு முடிவுக்கு வந்தது நிம்மதியாக உறக்கத்தின் பிடியில் தன்னை தொலைத்தான்.

துளசிக்கு இப்பொழுது எட்டாம் மாதம் நடந்து கொண்டிருந்தது. இப்பொழுதெல்லாம் ராம் சரண் அவளை கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டான். முடிந்தவரை, அவளுடன் நிறைய நேரம் செலவழித்துக் கொண்டிருந்தான்.

தினமும் காலை அறரை மணிக்கு மெல்ல அவளை நடை பயிற்ச்சிக்கு, அழைத்துக் கொண்டு சென்றான். அவள் நடைக்கு தகுந்தவாறு, அவனும் நடந்து கொண்டே ஏதையோ பேசி அவளை உற்சாகம் மூட்டினான்.

அன்றும் மெல்ல நடந்து கொண்டிருந்தவர்கள், துளசி பெரிய பெரிய மூச்சுக்களை விட்டுக் கொண்டு, நடக்க முடியாமல், "இனி என்னால் ஒரு அடி கூட நடக்க முடியது ராம்" என்று அவன் கைகளை பிடித்துக் கொண்டு, மேலே ஒரு அடி கூட நடக்க முடியாமல் நின்று விட்டாள். சின்ன குழந்தையை போல் மக்கர் பிடிக்கும் துளசியை கண்டு சிரித்த சரண், மெல்ல அவள் கையை வருடி, "என் செல்ல துளசி, பார், நாம் இப்பொழுது எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்று... வீட்டிற்கு ஒரு மூலையில் நடந்து வந்து விட்டோம்... எப்படியானாலும் வீட்டை அடைய இன்னும் கொஞ்சம் தூரம் திரும்பி நடக்கத்தான் வேண்டும்"..... 'ஐய்யோ", என்று மலைத்து நின்ற துளசியை பார்த்தவன்,

"வேண்டுமானால் ஒன்று செய்யலாம்"... என்றவன், அவன் என்ன சொல்லப் போகிறான் என்று அவனையே ஆவலாகப் பார்த்தவளை, "உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால், நான் வேண்டுமானால் உன்னை தூக்கிக் கொண்டு செல்லவா".... 'ஆ ' என்று வாயை பிளந்தவளை, "என்ன ஒன்று இப்பொழுது நீ கொஞ்சம் வெயிட் தான்... பரவாயில்லை. சுளுக்கு பிடித்துக் கொண்டால் நீ எனக்கு மூவ் தடவ மாட்டியா என்ன" என்று சிரிக்காமால் சொன்னவனை, துளசி வெட்கத்துடன், "ஆசை ஆசை தான்" என்று சிரித்தவள், மெல்ல அவன் கையை விட்டு விட்டு, முன்னால் நடக்கலானாள்.... சரணோ, மனதிற்குள், 'ஆசை நிறைய உன் மேல் இருக்கிறது.... அது உனக்குதான் புரியவில்லை' என்று பெரு மூச்சு விட்டு அவளை பின் தொடர்ந்தான்.

அவனே இப்படி துளசியைப் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டால், அவன் பெற்றோர் அவனுக்கு மேல் இருந்தனர்.... சியாமளா அவளை ஒரு வேலையும் செய்ய விடுவதில்லை. நேர நேரத்திற்கு, ஜூஸ், பால், பழம் என்று சத்தான உணவுகளை கொடுத்து கவனிந்துக் கொண்டிருந்தார். நல்ல பாடல்களை கேட்க வைத்தார். கிருஷ்ணனோ, தன் பங்கிற்கு, நல்ல கருத்தான புத்தகங்களை, தங்கள் வீட்டு நூலகத்தில் இருந்து எடுத்துக் கொடுத்து, அவளுக்கு அவற்றை அறிமுகப் படுத்தினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.