(Reading time: 46 - 92 minutes)

த்து நிமிடங்களில் திரும்பி வந்த ரமேஷ் உல்லாசமாக விசில் அடிக்க, கோபத்துடன் நிமிர்ந்தான் பிரகாஷ்.

"மெதுவா எழுந்து போ மச்சான்.. தங்கச்சி அந்த ஜூஸ் குடிச்சு முடிக்கும் போது நீ நினைச்சது நடக்கும்"

"என்னடா சொல்ற?"

ஒரு சிறிய பொட்டலத்தை அவனிடம் தந்தவன்,

"இதை அந்த ஜூஸ்ல கலந்துட்டேன்"

சிறு அதிர்வுடன் அதை கையில் வாங்கி பார்த்தவன் நம்ப முடியாமல்,அவளை திரும்பி பார்க்க மது அந்த ஜூஸின் கடைசி சொட்டு வரை குடித்திருந்தாள்.

"என்னடா இது"

"தெரியலையா மச்சான் போதை மருந்து டா"

"அட பாவி.. மது பாவம் டா, அவளுக்கு போய்" கொத்தாக ரமேஷின் சட்டையை பிடித்திருந்தான் பிரகாஷ். உண்மை காதலின் வலி முகத்தில் தெரிந்தது.

"மச்சி உனக்காக தான்"

"ச்சீ வாய மூடு உன்னை எல்லாம் என் ப்ரெண்டுன்னு நம்பி எல்லாம் சொன்னேன் பாரு போடா முட்டாள்" அவனை உதறி தள்ளிய வேகத்தில் மதுவிடம் விரைந்திருந்தான் பிரகாஷ்.

வெளியில் பைக்கை நிறுத்தி விட்டு சாவியை விரலில் சுழற்றிய படி ஆவலுடன் வந்து கொண்டிருந்தான் ஆதி. பிரகாஷ் மதுவின் முன் வரும் நேரம் சரியாக அவளுக்கு ஏதோ ஆவதை உணர்ந்தாள்.

கண்கள் தெளிவாக தெரியாமல் கண்களை கசக்கி தலையை உலுக்கி பார்த்தவள் அப்பொழுதும் அதே போல் இருக்க, முன்னும் பின்னும் ஆடிய தலையை நேராக வைக்க முயன்று தோற்பதை காண சகிக்காமல் சட்டென அவளருகில் அமர்ந்து அவள் தலையை தோள்களில் சாய்த்து கொண்டான் பிரகாஷ்.

பாதிக்கும் மேல் நினைவை இழந்த நிலையில் அவன் தோள்களில் சாய்ந்தவள் அவன் கைகளை அனிச்சையாய் பிடித்து கொண்டாள்.

ள்ளே நுழைந்த ஆதி பார்த்தது இந்த காட்சியை தான். பின்னிருந்து அவன் பார்த்தல் பக்கவாட்டு முகம் மட்டுமே அவனுக்கு தெரிந்தது. எதற்காக யாருக்காக ஐந்து வருடங்கள் தன் மனதில் காதல் வளர்தனோ அவளா இப்படி? மனம் நொந்து வெளியில் வந்தவன் பைக்கில் ஏறி அப்படியே அமர்ந்து விட்டான்.

தோளில் சாய்ந்தவள் துவண்டு விழவும் கண்ணில் துளிர்த்த கண்ணீரை துடைத்து கொண்டு அவளை நடத்தி கூட்டிக்கொண்டு சென்றான் பிரகாஷ். ஆதியை சுத்தமாய் மறந்து போனான். ஹோட்டலின் பின்புறம் நிறுத்தியிருந்த காரில் அவளை அமர வைத்து காரை முன்பக்க வாயில் வழியாக கொண்டு செல்கையில் மீண்டும் அவன் தோளில் சாய்ந்த மதுவை தான் பார்த்தான் ஆதி.

கோபம் தலைக்கேற நேரே ஆரதனாவிடம் சென்றவன் அமெரிக்கா பயணத்தை பற்றிய நிச்சயத்தோடு தான் வீடு சேர்ந்தான்.

மதுவை மருத்துவமனையில் சேர்த்து விட்டு அவள் டீமை சேர்ந்த வசுந்த்ராவிற்கு தகவல் சொன்னவன் டாக்டரை பார்க்க சென்று விட, வசுந்தரா மேகாவுடன் வந்து விட்டாள். அவர்கள் இருக்கும் போது மக்டுவிடம் பேச முடியாதென புரிந்து கொண்டு மேகாவிடம் மட்டும் அவளை பார்த்து கொள்ளுமாறு கூறி விட்டு சென்று விட்டான்.

அதன் பின் மதுவை காண அவனால் முடியவில்லை. ஓராண்டிற்கு பிறகு தான் பார்க்க முடிந்தது.

சொல்லிவிட்டு அவன் காரை சஞ்சனாவின் வீட்டின் முன் நிறுத்தியிருந்தான். நாதனும் சித்ராவும் என்ன சொல்வதென புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்.

மனதின் வலி துல்லியமாய் அவன் முகத்தில் தெரிந்தது.

"டேய் கண்ணா இதுல உன் தப்பு எதுமே இல்லையே டா?"

"ம்ம்ம் இல்லம்மா எல்லாமே என்னால தான்"

"ப்ச் அப்படி சொல்லாதடா இப்போ தான் உனக்கும் மதுக்கும் கல்யாணம் ஆக போகுதே டா" , நாதன்.

"இல்லப்பா மது ஆதியை லவ் பண்ற"

"என்னடா தம்பி சொல்ற" , சித்ரா பதற நாதன் அவரை அமைதி படுத்தினார்.

"ஆமாம் ம்மா, இத அவ முதல் தடவை அவ பிறந்த நாள் அப்போ அவங்க அப்பா அம்மா கிட்ட பேசும் போதே என்கிட்ட சொல்லிட்டா"

"அதுக்கு அப்புறமும் நீ அவ கூட வாழ நினைச்சியா?" நாதன் அவன் முகத்தை கூர்ந்து நோக்கியவாறு கேட்டார்.

"அப்போ ஆதி மக்டுவை விட்டுட்டு போய்ட்டான் அப்பா, ஆனா இப்போ அவனே திரும்பி வந்துட்டான், அதுவும் இல்லாம"

"ம்ம்ம் சொல்லு", நாதன்.

"நான் சஞ்சனாவ கல்யணம் பண்ணிக்க போறேன் அவங்க வீடு தான் இது வாங்க உள்ள போய் பேசலாம்"

"என்னடா இப்படி உளறிட்டு இருக்க", சித்ரா கத்த,

"சித்ரா அமைதியா இறங்கு உள்ள போய் பேசிக்கலாம்" என்ற கணவனின் குரலில் அடங்கி வண்டியை விட்டு இறங்கி நடந்தார். மகனின் தோளில் கைபோட்டு தட்டி கொடுத்தவர் ஒரு புரிதலுடன் அந்த வீட்டினுள் நுழைந்தார்.

" லவ் யூ பிரகாஷ்" கண்களில் நாணத்தோடு நேராய் அவன் விழிகளுக்குள் நோக்கி சிறு நிமிர்வுடன் சொல்லியிருந்தாள் அம்மூன்று வார்த்தைகளை.

வெண்ணிற சுடிதாரில் பிரத்தியேகமாக செய்ய பட்ட அலங்காரத்துடன் துப்பட்டாவின் முனையை கசக்கியவாறு கொஞ்சமாய் தலை சாய்த்து தன் விழிகளுக்குள் பார்த்து தயக்கமோ பயமோ இல்லாமல் நிதானமாய் காதலை சொல்பவளை புரியாமல் பார்த்து கொண்டிருந்தான் பிரகாஷ்.

"சஞ்சனா?!"

"ம்ம்ம்"

"இதுக்கு தான் இங்க வர சொன்னியா?"

"ஆமா உனக்கு தெரியாதா?"

"தெரிஞ்சிருந்தா இங்க வந்துருப்பேன்னு நீ நினைக்கறியா?"

"நிச்சயமாய்.."

"அது உன் முட்டாள் தனம்"

"தெரிஞ்சுக்கிட்டு தான் நீ வந்துருக்க"

"வாட் நான்சென்ஸ் சஞ்சு"

"உன் டைரி எங்கே?"

"ப்ச் நான் என்ன பேசிக்கிட்டு இருக்கேன். நீ என்ன கேட்கிற?"

"எங்கேன்னு சொல்லு டா"

"என்கிட்ட தான் இருக்கு"

"நேத்து நீ டைரி எழுதலையா?"

"இல்ல கொஞ்சம் பிஸி"

"நேத்து உன் வீட்டுக்கு வந்தேன்ல அப்போ உன் டேபிள் மேல இருந்த டைரில ஒரு லெட்டெர் வெச்சுட்டு தான் வந்தேன் அதை போய் படி புரியும்"

"..."

"அதுல எழுதியிருந்தேன் அதா படிச்சு தெரிஞ்சுக்கிட்டு தான் என்கூட வந்தேன்னு நினைச்சேன்"

"ரப்பிஷ்"

"ஏன் கோபப்படற?"

"வேறென்ன பண்ண சொல்ற? இப்போ என்ன இந்த கண்ட்றாவி?"

"அப்படி எல்லாம் சொல்லாத டா ப்ளீஸ்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.