(Reading time: 46 - 92 minutes)

பெற்றோர் அனைவரும் நெகிழ்ந்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்க.. மது ரகு மெகாவிற்கு நடுவில் அமர்ந்து இருவரையும் கட்டி கொண்டாள். மூவரின் விழிகளிலும் ஆனந்தத்தின் அடையாளம்.

மேகா தான் என்றாலும் நண்பன் இன்னொரு பெண்ணின் கணவன் என்ற உண்மை மூளையை எட்டிய அளவு மனதை எட்டவில்லை. அவள் முகத்திலிருந்தே அதை படித்த இருவரும் ஒருவராய் ஒருவர் பார்த்து கொண்டு அவள் இரு கன்னங்களிலும் முத்தமிட்டனர். அவள் வியந்து பார்க்க,

"எப்பவும் உன்கூட தான் இருப்பேன் டா அம்மு" என ரகு சொல்ல , மது மேகாவை பார்த்தாள்,

"இந்த தாலி மட்டும் போதும் டி என் புருஷன உன் பிரெண்டா உன்கூடவே வெச்சுக்கோ, ஆனா ஒரு கண்டிசன் என்னையும் வெச்சுக்கணும்" என அவள் சிரிக்க வார்த்தைகள் தேவை இல்லாமல் போனது மதுவிற்கு இருவரையும் கட்டிகொண்டாள் மீண்டும். மேலும் கீழும் தலை அசைத்தவாறே.

டுத்த அடுத்த சடங்குகள் நடக்க, அங்கே நின்று அவர்களை பார்த்து கொண்டு இருந்த ஆதியை பார்க்க முடியாமல் தனிமையை நாடி சென்று விட்டாள்.

சடங்குகள் முடிந்து ஜோடிகளை மாப்பிள்ளை வீட்டிற்கும் பெண் வீட்டிற்கும் அழைத்து சென்று விட்டு மீண்டும் அனைவரும் மண்டபத்தில் கூடும் வரைக்கும் எவரும் மதுவை தேடவில்லை. ஒரு ஜோடியுடன் இல்லை என்றல் மற்றொருவர் வீட்டில் இருக்கலாம் என்ற நினைப்பிலேயே இருந்தனர்.

ஆதியும் வெளியே சென்று விட அவனையும் யாரும் தேடவில்லை.

இப்போது இருவரையும் காணமல் அனைவரும் தேடிக்கொண்டு மாடிக்கு செல்ல அங்கே தான் இருவரும் இருந்தனர்.

"ல்லாரையும் கஷ்ட படுத்திட்டு இப்போ எதுக்கு டீ இங்க வந்து அழுதிட்டு இருக்க?" ஆதி கோபமாய் கத்தி கொண்டு இருந்தான்.

"இங்க இருந்து போங்க"

"போக முடியாது பதில் சொல்லு டி அந்த பிரகாஷ் செஞ்ச தப்புக்கு அவன மன்னிச்சுட்ட,ஆனா என்ன? உன் ப்ரெண்ட் என் தம்பி அந்த ப்ராடு எல்லாருக்கும் கல்யாணம், நம்ம கல்யாணமும் நடந்திருக்க வேண்டியது உன்னால தான் டி ஏன் டி சாவடிக்கிற?"

"நீங்க போக வேண்டாம் நானே போறேன்"

"ஏய் நில்லு டி என்ன தான் டி நினைச்சுட்டு இருக்க? சரி நான் வேண்டாம். அப்போ என்ன பண்ண போற?"

"என்னமோ பண்றேன்"

"அதான் என்ன?"

"வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்...."

முதல் முறையாய் மதுவை அடித்திருந்தான் ஆதி..!!

"என்ன மனுஷிடி நீ ச்சை.. இப்போ சொல்றேன் கேளு இனி நீயே ஒத்துகிட்டாலும் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் குட் பை"

என்று வெறுப்புடன் கூறியவன், விறுவிறுவென அனைவரையும் கடந்து செல்ல மது அங்கேயே அமர்ந்து அழுதாள். அவ்வளவு நேரம் ஒன்றும் பேசாமல் அனைத்தையும் வேடிக்கை பார்த்த அனைவரும் எதுவும் பேசாமல் கலைந்து சென்றனர்.

 "ம்ம்ம்மாஆஆ ஐயோ அம்ம்மாஆ" என கத்தி கொண்டிருந்தாள் அமிர்தா.

"என்னடா குட்டி" என்று அவளை தூக்கி கொண்டு தன் மனைவியை பார்த்தான் ஆதித்யன்.

"பாதுப்பா .. பாப்பாக்கு புது டெஸ் போடா மட்டேன்குதா அம்மா"

"அவ போடலைன என்ன வாங்க நான் போடு விடறேன்" என தன ஒன்றரை வயது மகளை கிளப்பி கொண்டிருந்தான் ஆதி. அவனிடம் வந்த ரகு

"என்னடா எங்க உன் பொண்டாட்டி" என வினவ,

"உன் ப்ரெண்ட் ஆச்சே நீயே தேடு போ" என அவனை விரட்டி விட்டு அவர்களின் அறையில் இருந்து அவன் வெளியில் வர,

அங்கே வருணும் ஸ்வேதாவும் தங்கள் மகன் யாத்ராவுடன் நின்றிருந்தனர்.

"யாத்தா கிட்ட" என அமிர்தா இறங்கி ஓட,

"பாத்து டா தங்கம்" என்றவன்

"நீங்க ரெடி ஆகிடிங்களா?" என்றான்,

"அத்தான் நாங்க எல்லாம் எப்பவுமே பாஸ்ட்" என ஸ்வேதா கூற

"அதன் தெரியுதே" என கேலி சிரிப்புடன் அமிர்தாவை விட மூன்று மாதங்கள் பெரியவனான யாத்ராவை பார்க்க,

"வருண் நான் போய் மேகா ரெடி ஆயிட்டாலான்னு பார்கிறேன்" என்று நழுவி விட்டாள் ஸ்வேதா.

"ஏன் அண்ணா அவளை வம்பு இழுக்குறிங்க?" என வருண் கேட்டான்.

"அட பாவி அநியாயத்துக்கு பொண்டாடிக்கு சப்போர்ட் பண்ணாதே டா"

"அப்புறம் உன்ன மாதிரி பொண்டாட்டிய பிரெண்ட பார்த்துக்க சொல்லிடு மகளை கொஞ்சிகிட்டு இருப்பன அவன்" என ரகு கேட்க,

"ரகு இங்க வாங்க" என்ற மேகாவின் குரலில் அவன் ஓட

இருவரும் சிரித்தனர்.

"வருண். பிரகாஷ் கிட்ட சொல்லிட்டியா?"

"சொல்லிட்டேன் அண்ணா, அவங்க நேரா தியேட்டர் வந்துருவாங்களாம்"

"ம்ம் சரி சரி" என் ஆதி மணியை பார்க்க,

ரகு தன் மகள் அபியை தூக்கி கொண்டு வர மேகாவும் வந்தாள். அனைவரும் ரெடி ஆகி ஹாலில் காத்திருக்க ஆதியின் மனைவியை மட்டும் காணவில்லை.

"மிதா.. லேட் ஆகுது பாரு" என் ஆதி குரல் கொடுத்தான்,

"போய் தான் பாரேன் டா இங்க நின்னு கத்துற" என ரகு சலித்து கொள்ள

அவர்கள் அறைக்குள் விரைந்தான்.. படுக்கரையை தாண்டி உடை மாற்று டிரெஸ்ஸிங் அறையை ஒட்டி இருந்த பாத்ரூமிற்குள் இருந்து வந்தாள் மதுமிதா.

அவனுக்கு பிடித்த நீல வண்ணத்தில் புடவை. அவளை ரசித்தவன் அவள் முக சோர்வை கண்டு

"என்னடா டயர்டா இருக்க? வேணும்னா நம்ம வீட்டிலேயே ரெஸ்ட் எடுப்போமா?" என வினவ

அவனை கண்டு கொள்ளாமல் ஒரு முறைப்புடன் தயாரானாள் மது.

அவளை பின்னால் வந்து மேடிட்ட வயிற்றின் மீது கை வைத்து மென்மையாக அணைத்து கொண்டவன்,

"என் தங்கத்துக்கு என் மேல என்ன கோவமாம்" என கேட்கவும்

"இன்னும் ஒரு வருஷம் போகட்டும் சொன்ன கேட்டிய இப்போவே பையன் வேணும் அது இதுன்னு அந்த குட்டியும் உனக்கு சப்போர்ட் போங்க டா" என பொய்யாய் சலித்து கொண்டவள் ஆஹ்டியின் கை மீது தன் கையை வைத்து ஆசையை அவனை பார்த்தாள்.

"ஹே முட்டகண்ணி இப்படி எல்லாம் பார்த்து வைக்கத டீ வெளில எல்லாரும் வெயிட் பண்றாங்க"

"ஆள பாரு ஐயாவுக்கு இப்படி வேற நினைப்பு வா போகலாம்" என நடந்தாள்.

மூவரும் ஒரே வீட்டில் தங்கலாம் என ரகு மது ஸ்வேதா தான் யோசனை கூறினர். அதன் படியே ஒரு பெரிய வீட்டை கட்டி அதில் மூன்று ஜோடிகளும் இருந்தனர். பிரகாஷ் மட்டும் சஞ்சனாவின் மருத்துவத்திற்கு ஊட்டியின் இயற்கை சூழலும் நன்றாக இருக்குமென அங்கேயே செட்டில் ஆகி விட்டான். மாதம் ஒரு முறை இப்படி அனைவரும் வெளியில் போவது வழக்கம் தான்.

அனைவரும் வீட்டை விட்டு கிளம்ப வைஷ்வியிடம் இருந்து போன் வந்தது,

"அண்ணா நான் ஸ்கூட்டில வந்துடறேன் நீங்க வந்துருங்க" என வருனிடம் கூறி விட்டு வைத்தாள்.

அனைவரும் காரில் ஏறி புறப்பட... மது ஆதியின் அருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்தவாறு இனிய நினைவுகளில் சஞ்சரித்தாள்.

ன்று அவளை அடித்து விட்டு அவன் போன பின் தனிமையில் யோசித்த பின் தான் அவனின் மீதான காதலும் தன் பிடிவாதமும் புரிந்தது. அதன்வழியிலேயே உறங்கியவளை அடுத்த நாள் அவள் திருமண நாளாக வரவேற்றது. ஆதிக்கும் இது ஆச்சர்யம் தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.