(Reading time: 46 - 92 minutes)

தோளில் கிடந்த துண்டை உதறி போட்டவர்,

"அட கழுதை இதுக்கு எல்லாம யோசிப்பிங்க, இதுங்களுக்காக தானே சம்பந்தி நம்ம வாழ்றதே அதுங்க சந்தோஷம் தானே முக்கியம் இப்போ என்ன நிச்சயம் தானே அவன் அவன் ஊரு நாட்டுல விவாகரத்து பண்ணிட்டு பத்து கல்யாணம் பண்றான்.. விடுங்க ராஜா சம்பந்தி கிட்ட நான் பேசறேன் போன போடுங்க" என உரத்த குரலில் பேசினார்.

அதில் சற்று தெளிவான மகேஷ் சரண்ராஜை போனில் அழைத்தார்.

"லோ சரண்", மகேஷ்

"ஹலோ மச்சான்.. நானே உங்களுக்கு கூப்பிடனும்னு நினைச்சேன்", சரண்ராஜ்

"ஒ.. என்ன விஷயம் ராஜா",மகேஷ்

"அது வந்து...",சரண்ராஜ்

"சொல்லுங்க நானும் ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்னு பேசணும்",மகேஷ்

"அப்போ முதல்ல நீங்க சொல்லுங்களேன்",சரண்

"இல்ல மச்சான் நீங்களே சொல்லுங்க",மகேஷ்

"அது நம்ம ஸ்வேதா.. ஸ்வேதாவிற்கு ஆதி.. ஸ்வேதாவிற்கு இந்த கல்யாணத்தில இஷ்டம் இல்லையாம்.. சாரி மகேஷ்  நீங்க ஒன்னும் தப்பா"

"ஐயையோ.. ராஜா நம்ம ஆதிக்கும் இதுல விருப்பம் இல்லைன்னு இப்போ தான் எங்களுக்கு தெரிஞ்சுது"

இரு பக்கமும் இருவரும் போனை ச்பீகரில் போட்டு பேசி கொண்டிருக்க இரண்டு குடும்பத்தாரும் ஒரு நேரத்தில் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய்

"என்ன?!" என்றனர்.

மகேஷ் தன் வீட்டில் ஆரதனாவும் ஸ்ரீகாந்தும் சொன்னதையும், தமிழ்மணி வந்ததையும் எடுத்துரைக்க, சரண்ராஜ் ஸ்வேதா தன்னிடம் பேசியதை சொல்ல ஆரம்பித்தார்.

ஸ்வேதா வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு முன்பு....

சரண்ராஜின் மடியில் படுத்து கொண்டு பேசிகொண்டிருந்த மகளை பார்த்தவாறே வந்தார் திவ்யா.

"என்ன அப்பாவும் மகளும் கொஞ்சல்ஸ் ஆ?"

"அம்மா நீங்களும் வாங்க"

"என்னடி?"

"அம்மா அப்பா நான் ஒன்னு சொல்லணும், எனக்காக என்ன வேணாலும் செய்விங்களா?"

"அம்மாடி சொல்லும்மா.. நீ ஒரே மக எங்களுக்கு உனக்கு செய்யாம யாருக்கு செய்ய போறோம்?", சரண்.

"என்னடி கல்யாணத்துக்கு நகை புடவை இன்னும் வேணுமா?", வித்யா.

"இல்லம்மா.. இந்த கல்யாணம் ஆதி கூட வேண்டாம்"

வித்யா அதிர்ந்து நோக்க, சரண்ராஜ் நெற்றி சுளிப்புடன் மகளை ஊடுருவி பார்த்தார்.

"என்னடி சொல்ற?!" வித்யா அலற,

"ஸ்ஸ்ஸ்ஸ்" என அவரை அடக்கிய சரண்ராஜ் மகளிடம் கேட்டார்.

"என்னடா என்ன உன் மனசுல இருக்கு? என்னம்மா பிரச்சனை?"

"அப்பா..." என தொடங்கி வருண் தன்னிடம் காதலை சொல்லியதிலிருந்து இன்று மது சொன்னது வரை அனைத்தையும் கொட்டி விட்டிருந்தாள் ஸ்வேதா.

"ஏங்க நரேன் அண்ணாக்கு போன போடுங்க, பேசுவோம்" என திவ்ய போனை எடுத்து வர போக, ஸ்வேதாவும் சரன்றாசும் அவரை வியப்பாக பார்த்தனர். சரண்ராஜ் புரிதலுடன் புன்னகைத்தார்.

அது தான் திவ்யா கணவனுக்கு ஏற்ற மனைவி. சீரியலில் வரும் அம்மக்களை போல் அல்லாமல் நிதானமாகவும் சட்டேனவும் முடிவு செய்ய அவரால் மட்டுமே இயலும். ஒரு விஷயம் ஒத்து வரவில்லை என்பது தெரிந்து அடுத்த கணம் அதை பற்றி நினைப்பை முற்றிலும் அகற்றி விட்டு நடக்க வேண்டியதை பார்ப்பவர்.

ரேன் வீட்டில்...

வருண் சொன்னவற்றை கேட்டு கண்கள் சிவக்க ஆண்பிள்ளை என்றும் பாராமல் அவன் கன்னத்தில் அறைந்திருந்தார் நரேன். எதிர்பாராமல் விழுந்த அடியில் வருண் நிலைகுழைய, பானுமதி அழுது கொண்டே கணவனை சாந்த படுத்த முயன்றார்.

வைஷ்வியோ அண்ணனை கட்டி கொண்டு வேறு ரூமிற்கு அழைத்து சென்றாள். வருநின் கோபம் பன்மடங்கு உயர்வதை வைஷ்வியால் உணர முடிந்தது.

"என்னடி நினைச்சுட்டு இருக்கான் உன் பிள்ளை, எவன் மூஞ்சியிலே முழிக்கவே கூடாதுன்னு நான் இருக்கானோ இவனால என் சொந்த தங்கச்சி வீட்டிற்கு ஒரு நல்லது கேட்டதுக்கு கூட போகாம இருக்கனோ அவன் வீடு பொண்ண லவ் பண்றானாம் லவ்" வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்து கத்தி கொண்டிருந்தார் நரேன்.

"ஐயோ அதுக்காக பிள்ளையை அடிப்பிங்களா? நம்ம பிள்ளைங்க அவன் சொன்ன கேட்டுகுவான், பொறுமையா சொல்லுங்க" பானுமதி நிலைமையை சரி செய்ய அவ்வாறு சொல்ல,

"அம்மா விடும்மா அடிக்கட்டும் அடிக்க சொல்லு ஆனா ஸ்வேதா தான் உங்க மருமக" என சீறி கொண்டு வந்தான் வருண்.

இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முத்தி போக, வருணின் போனும் நரேனின் போனும் அடித்ததை எவரும் கண்டுகொள்ளவில்லை. அடுத்த அரை மணிநேரத்தில் வீட்டின் நிலைமை இன்னும் மோசமாக மாறியிருக்க,திர்ணதிருந்த கதவை லேசாக தட்டி விட்டு

"அண்ணே நாங்க உள்ள வரலாமா ?" என கேட்டவாறு திவ்யா நுழைய, சரன்ராஜும் ஸ்வேதாவும் பின் தொடர்ந்தனர்.

அவர்கள் மூவரை அங்கு கண்டதில் நால்வரும் மூச்சு விட கூட மறந்து நிற்க, நேராக நரேனிடம் சென்ற சரண்ராஜ் அவரை தழுவி கொண்டு,

"எப்படி டா இருக்க மாப்பிள்ளை?" என வினவவும்,

"நா..நான் நல்லா இருக்கேன் டா  மச்சான்.. நீ எப்படி டா இருக்க?" என தழுதழுத்த குரலில் வினவினார் நரேன்.

மன்னிப்பு கேட்கும் படலம் ஏதும் இல்லாமல் வெட்டுவேன் குத்துவேன் என்ற சினிமா வசனங்கள் இல்லாமல் இயல்பாக அவர்கள இணைந்ததை கண்டு அனைவரும் உணர்ச்சி வசப்பட்டனர்.

தொண்டையை செருமி கொண்டு திவ்யா தான் பேசினார்,

"அக்கா வராதவங்க வீடு தேடி வந்துருகோம் இப்படியே நின்னா எப்படி?" என கேட்கவும்.

"ஐயோ உட்காருங்க மாமா, வா வித்யா, வாம்மா ஸ்வேதா" என வரவேற்றவாறே

"இதோ காபி போட்டு கொண்டு வரேன்" என நகர, வித்யாவும் இனைந்து கொண்டார்.

ஐந்து நிமிடத்தில் மாறி போயிருந்த இனிய சூழ்நிலை அனைவருக்கும் பிடித்திருந்தது. வைஷ்வி ஸ்வேதாவை கண்ட மகிழ்ச்சியில் அவளை தன்னுடன் தனது அறைக்கு அழைத்து சென்று விட,

"அப்புறம் கல்யானத்த எப்போ மாப்பிள்ளை வைச்சுக்கலாம்?" என்று வருணின் தோளில் கை போட்டபடி சரண்ராஜ் வினவிய சமயம் தான் மகேஷின் அழைப்பு அவருக்கு வந்தது.

நடந்ததை அவர் கூற கேட்டு, ரஞ்ஜனி தன் குடும்பம் இணைந்ததில் அனந்த கண்ணீர் விட, மகேஷும் நெகிழ்ந்து இருந்தார்.

"அண்ணா என்மேல கோபம் போயிடுச்சா?" என ரஞ்ஜனி தேம்ப,

"என்னம்மா உன்மேல எனக்கு என்ன டா கோபம், அண்ணன மன்னிச்சுடும்மா" என நரேனும் நெகிழ்ந்தார்.

" அட மனுஷங்க எல்லாம் ஒன்னு மண்ண பழகுன தான நம்ம மனுஷங்க சொந்த பந்தம்ன்ன அடிச்சுக்க வேண்டியது தான், பங்காளிங்க அடிசுக்களைன்னா யாரு அடிச்சுக்க போறா, சந்தோசமா கல்யாண ஏற்ப்பாட்ட பாருங்க, ஆதி தம்பி கிட்ட பேசிட்டு ஒரே மேடையில ரெண்டு கல்யானத்த வெச்சுடுவோம்.. என்ன நான் சொல்றது?" என்று சிரித்தார் தமிழ்மணி.

"அதுக்கு என்ன சம்பந்தி அப்படியே பண்ணிடலாம், அப்போ வெச்சுடவா? என அணைப்பை துண்டித்தார் சரண்ராஜ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.