(Reading time: 46 - 92 minutes)

"யோ அக்கா எல்லாரும் என்னவே குத்தம் சொல்லாதிங்க நன் செஞ்சது தப்பே இல்லைன்னு நான் சொல்லல தப்பு தான். ஆனா அப்போ மது என்கிட்ட லவ் சொல்லி இருக்கல நானும் தான், அந்த பிரகாஷ் வேற கம்பெனி ல யார் கிட்டயோ மதுவ அவன் லவ் பண்றன்னு சொல்லி.. ச்ச தப்பு தான் அனா அவ மேல உயிரையே வெச்சுருக்கேன் அக்கா, அன்னைக்கு இவ கண்ணு முன்னாடி ஸ்வேதா ஓட கைல மோதிரம் போடும்போது.. ஏன் அன்னைக்கு நிச்சயத்துக்கு முன்னாடி இவ ரூமுக்கு தானே போனேன். அப்போ ஒரு நிமிஷம் எத்தன சந்தோஷம் தெரியுமா.. ஒரே ஒரு நிமிஷம் என் உலகமே கைக்குள்ள இருந்த மாதிரி.. தீபாவளி அன்னைக்கு... பிரகாஷ் இவ கைய பிடிச்சு மோதிரம் போட்ட அன்னைக்கு.. எத்தன தடவை என்னால சாக முடியும் அக்கா.. இவளுக்கு நான் இவள தான் உயிரை நினைக்கிறேன் இவளுக்காக நான் இருப்பேன்னு ஆவுது தெரியுது ஆனா எனக்கு? பிடிவாதத்துல கல்லு மாறி இருக்காளே இவ"

வேகமாய் அனைத்தையும் கொட்டி தீர்த்தவன் அவன் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டான். அனைவருக்குமே அவன் செய்தது தவறு என்றாலும் மதுமிதா மேலிருந்த அளவில்லா காதல் தான் அதை செய்ய தூண்டியது என பட அவனுக்காக கவலை கொண்டனர்.

"அட என்னம்மா நீ கல்யாணத்துக்கு நாளை குறிச்சு பண்ணி வெச்சுட்ட அதுக அப்படியே சமாதானம் ஆகிட போகுதுங்க" என விசும்பி கொண்டிருந்த ரன்ஜனியிடம் கூற

"சாரிங்க எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை, ரகு வீட்டிற்கு போலாம்" என கூறி விட்டு வாசலுக்கு சென்று விட்டாள்.

எவரும் எதையும் பேசும் மனநிலையில் இல்லாததால் ஒரு தலை அசைப்புடன் மதுவின் குடும்பம் விடை பெற்று சென்று விட்டது.

றுநாள்  அழகாய்  விடிந்தது

பாதி தூங்கியும் தூங்காமலும் எழுந்து கொண்ட ரகு தோட்டத்தில் உலவுகையில் பிரகாஷின் கார் அவன் வீட்டிற்குள் நுழைந்தது அதை தொடர்ந்து சஞ்சனாவின் கார்.ரகு கேள்வியை பார்த்து கொண்டிருந்த போதே பிரகாஷ் இறங்கி அவனுடன் கை குலுக்கினான். குழப்பத்துடன் ரகுவும் கை குலுக்க, அதற்குள் திவாக்கரும் மூர்த்தியும் வாசலுக்கு விரைய, அவர்களிடம் மௌலீச்வர்,

"என் பேர் மௌலீஷ்வர்.. மிலிட்டரி ல இருந்தேன் ,இப்போ சென்னை அண்ட் ஊட்டி ல பிசினஸ் எஸ்டேட் ன்னு இருக்கேன்.. உள்ள கூப்பிடுவீங்கள?" என புன்னகையுடன் கேட்க, அவசரமாய் அவர்களை மூவரும் வரவேற்றனர்.

அதற்குள் வந்திருப்பவர்களை பார்த்து விட்டு தன்யாவும் லலிதாவும் காபி கொண்டு வந்தனர். அனைவரும் காபி குடிக்கும் வரையிலும் நிசப்தம்.பிரகாஷின் பெற்றோர் சங்கடத்துடன் அமர்ந்திருப்பதை புரிந்த கொண்ட மௌலீஷ்வர் பேச்சை தொடங்கினார்,

"என் மாப்பிள்ளை பிரகாஷ் என் பொண்ண தான் கல்யாணம் பண்ணிக்க போகிறார்" என அவர் கூறவும், அடுத்த அதிர்ச்சி தாக்கியது அனைவரையும்.

"மாமா ஒரு நிமிஷம் அங்கிள் ப்ளீஸ் மதுவையும் கூப்பிடுங்க அவங்களும் இருக்கட்டும்" என பிரகாஷ் கூற ரகு சென்று மதுவையும் கற்பகத்தையும் அழைத்து வந்தான்.

அனைவரின் முன்னும் பிரகாஷ் நடந்ததை விவரிக்க கோபத்தில் திவாக்கரும் ரகுவும் பிரகாஷின் சத்திய பற்றி அவனை அடிக்க போக யார் தடுத்தும் கேட்காமல் அவன் மீது பாய்ந்தனர். மதுவும் சஞ்சனாவும் கெஞ்சி கேட்டு கொள்ள, ஒருவாறு அவனை அவர்களிடம் இருந்து விடுவித்தனர். அடிவாங்கிய பிரகாஷ் மதுவை பார்த்து கரம் கூப்பி மன்னிப்பு கேட்டான்.

மௌலீஷ்வரும் எடுத்து கூற ரமேஷின் மீது தான் தவறு என்பதை திவாக்கரும் ரகுவும் உணர்ந்தனர்.

அடுத்து பொதுவான விஷயங்களை அவர்கள பேசி கொண்டிருக்க மது வாசலையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

"என்ன ஆச்சுடா" என ரகு கேட்க

"உனக்கு ஒரு சர்ப்ரைஸ்" என கண் சிமிட்டி சிரித்தவள் கார் சத்தம் கேட்டதும் வாசலுக்கு ஓட, காரிலிருந்து மேகாவின் பெற்றோர் இறங்கினர். மேகா திக்கு முக்காடி போக, மேகாவின் தந்தை ரன்வீர் ரகுவை அணைத்து கொண்டார்.

"என்னே மாப்ள எப்படி இருக்கிங்கோ?" என அவர் தமிழ் பேசி அனைவரும் ஆச்சர்ய படுத்த,

"எப்படி என் ஏற்பாடெல்லாம்?" என மது காலரை தூக்கி விட்டு கொண்டாள்.

"அடி பாவி இதெல்லாம் உன் வேலையா? " என ரகு கேட்க மெகாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது.

அனைவரும் புரியாமல் விழிக்க, கற்பகம்

"அவ என்கிட்டயும் சொல்லிட்டா, நானும் சம்பந்தியும் பேசி முடிவெடுத்துட்டோம் எப்பவோ? என சொல்ல.

ரகுவும் மேகாவும் திரு திருவென விழித்தனர். வீட்டிலிருந்த அனைவரும் சிரிக்க, தன்யா பிரகாஷ் குடும்பத்திற்கும் மௌலீஷ்வர் சஞ்சனாவிற்கும் அவர்கள் காதல் கதையையும் மது அவர்களுக்கு தெரியாமல் மேகாவின் பெற்றோரிடம் பேசியதையும் கூறினாள்.

கலகலப்பாக பேசி கொண்டே காலை உணவை முடித்தவர்கள் கிளம்பும் போது,

"எங்க இரண்டு கல்யாணத்தையும் ஒரே மேடையில வெச்சுக்கிட்டா என்ன?" என மௌலீஷ்வர் கேட்கவும்,

அனைவரும் சிறு யோசனைக்கு பிறகு ஒத்து கொண்டனர், அதே சமயத்தில் வருனிடம் இருந்து அழைப்பு வர அவர்கள் கலயனதிற்கும் சம்மதம் கிடைத்ததை பகிர்ந்து கொண்டான்.

அனைவரும் சந்தோசமாக கலையான வேலைகளை பார்க்க துவங்க, ஆதியும் மதுவும் தனிமையை நாடினார்கள்.

மூன்று கல்யாணத்தையும் ஒரே மேடையில் வைத்து கொள்ளலாம் என பேசி முடிவெடுக்க பட்டு, அடுத்த வரம் வந்த முகுர்த்ததிலேயே நாளும் குறிக்க பட்டது.

இரண்டே நாட்களில் பத்திரிகைகள் தயாராகி ஆண்கள் அனைவர்க்கும் அதை கொடுக்க, பெண்கள் குழு துணிமணிகள்,சீர் பொருட்கள் என நேரம் இல்லாமல் பறந்தனர். எட்டு குடும்பிதனரும் ஒரே குடும்பமாய் இணைந்து ஆளுக்கு ஒருவராய் வேலையை செய்ய நான்கே நாட்களில் அனைத்தும் முடிந்தது.

மணப்பெண்கள் மூவரும் அழகு படுத்தி கொண்டு கேலி கிண்டல் என வலம் வர, அவரகளுடன் துணைக்கு என்று இருந்தாலும் அவ்வபோது தனிமையில் கண்ணீர் விட்டாள் மது. யாரும் அவளை கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஆதி மட்டும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தான்.

திருமண நாளும் வந்தது.. அதிகாலை முகுர்த்தத்தில் ஒரே மேடையில் ரகு, வருண்,பிரகாஷ் அமர்ந்திருக்க.. மது ரகுவின் அருகில் நின்று கொண்டு அவனுக்கு தலையை சரி செய்வதும் வியர்வையை துடைத்து விடுவதும் கிண்டல் செய்வதுமென அனைத்தையும் மாறாக முயன்று கொண்டிருந்தாள்.

பிரகாஷின் அருகில் அவன் பெற்றோரும் மௌலீஷ்வரும் நிற்க, வருணின் அருகில் வைஷ்வியும் ஆதியும் நின்று  அவனை கேலி செய்து கொண்டிருந்தனர்.

முகுர்த்த நேரம் வரவும் ஐயர் கூப்பிடவுடன், மயில்கழுத்து நீளத்தில் உடலும் மரகத பச்சையில் பார்டரும் கொண்ட பட்டு புடவையில் தலை முதல் கால் வரை ஒரே அலங்காரம் நகைகள் என மூவரும் தேவதைகளாய் வந்தனர்.

மேகாவை ஓடி சென்று மது அழைத்து வந்து ரகுவின் அருகில் அமர வைக்க, வைஷ்வி ஸ்வேதாவின் கையை பற்றி கொண்டு வந்து தன் அண்ணனின் அருகில் அமர வைத்தாள் வைஷ்வி. சித்ரா தன் மருமகளை தானே அழைத்து வந்து பிரகாஷின் அருகில் அமர வைத்தாள்.

பெண்மையை மூவர் மட்டும் குத்தகைக்கு எடுத்தது போல மென்மையும் நாணமுமாய்  மணப்பெண்கள் அமர்ந்திருக்க, கள்ள பார்வையில் அவர்களை அள்ளி பருகி கொண்டு பெருமிதத்துடன் அமர்ந்திருந்தனர் மணமகன்கள் மூவரும்.

அனைவரது பெற்றோரும் சுற்றத்தாரும் சூழ்ந்திருக்க, ஐயரின்,"கெட்டிமேளம் கெட்டிமேளம்" என்பதை தொடர்ந்த மந்திரம் ஓத,

மூவரும் தங்களின் வாழ்வின் எல்லை வரை கரம் பிடித்து கூட வரும் துணையின் கழுத்தில் மாங்கலயம் அணிவித்தனர். அறுவர் நெஞ்சத்திலும் நிரந்த காதலுடன் ஒருவராய் மற்றொருவர் பார்த்து கொண்டனர். மதுவின் மனதில் எழுந்த உணர்சிகளின் குவியலில் புதைந்து கண்களில் வழியும் நீரை கூட துடைக்காமல் நின்றிருந்தாள். ஆதியின் பார்வை மதுவின் மீதே இருக்க, அவன் விழியோரம் நனைந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.