(Reading time: 46 - 92 minutes)

"ரி சொல்லி தொல இப்போ என்ன புதுசா லவ்?"

"இப்போ இல்ல.. இது புதுசும் இல்ல"

"பின்ன?!"

"பர்ஸ்ட் யெஅர்ல இருந்தே லவ் பண்றேன்.. நீன்னா எனக்கு ரொம்ப இஷ்டம் உன்கூட   இருந்து புரிஞ்சுக்கணும்னு நினைச்சேன் அதன் இந்த மூணு வருஷமா உன்கூடவே இருக்கேன் புரிஞ்சுகிட்டேன்.. இன்னும் பிடிச்சுருக்கு உன்னை.."

"ஸ்டாப் இட்"

"பிர..."

"ஐ செட் ஸ்டாப் இட்"

அவன் அதிர்ந்து கத்துவதை எந்த வித வேறுபாடும் முகத்தில் காட்டாமல் அவனையே பார்த்திருந்தாள் சஞ்சனா.

"ப்ச் என்ன சஞ்சனா இது மூணு வருஷமா நல்ல பிரெண்ட்ஸ தான இருக்கோம் இப்போ என்ன இப்படி எல்லாம் உளறிட்டு திரியுற, லுக் எனக்கு லவ் வரது அப்படியே வந்தாலும் அது உன்மேல வராது"

சொல்லி விட்டு நகர்ந்திருந்தான் பிரகாஷ். அவன் சொற்களின் தாக்கமாய் சிறு புருவ சுளிப்பு மட்டுமே, மறுகணமே புன்னகைத்து கொண்டு அவளும் அவனை பின் தொடர்ந்தாள். காரில் ஏறி வீடு செல்லும் வரையிலும் அவள் ஏதும் பேசவில்லை. அவனும் பேச முனையவில்லை.அவளது காரில் தான் அழைத்து சென்றிருந்தாள் சஞ்சனா. அவனுக்காக அங்கே ரிசார்ட்டில் செய்திருந்த ஏற்பாடுகளை நிறுத்துமாறு தகவல் அனுப்பிவிட்டு மௌனமாகவே காரை செலுத்தி கொண்டிருந்தாள்.

ஒரு மணி நேர பயணத்தின் முடிவில் அவன் வீட்டின் முன் கார் நிற்க அவன் இறங்கும் முன் அவள் இறங்கி அவனருகில் வர,

"உள்ளே வா" என்று யாருக்கோ கூறுவதை போல சொல்லி விட்டு நகர்ந்தான் பிரகாஷ்.

அவன் கையை பிடித்து தடுத்தவள் மறுப்பை தலை அசைத்து நிதானமாக கூறினாள்,

"உனக்கே நல்ல தெரியும் எந்த விஷயத்தையும் அம்மா கிட்ட கேட்காம நான் செய்ய மாட்டேன், என் அம்மா எனக்கு சொல்ற விஷயங்களும் தேர்ந்தெடுக்கிற முடிவுகள் எப்பவுமே சரியானதா தான் இருந்துருக்கு இருக்கும்.. அம்மா இப்போ உன்ன செலக்ட் பண்ணியிருக்காங்க..

அதுவும் இல்லாம நானும் உன்னை தான் லவ் பண்றேன் யாராலையும் என்கிட்ட இருந்து உன்னை எடுத்துக்க முடியாது உன்னால கூட, இதுக்கு அப்புறம் நீ என்கிட்ட பேசாம போகலாம், ஏன் என் மூஞ்சில கூட முழிக்காம போகலாம் ஆனா நம்ம கல்யாணம் நடக்கும் மார்க் மை வோர்ட்ஸ்..பை.. ஐ லவ் யூ"

அவன் கையை விட்டவள் அவன் பேசும் முன் காரில் ஏறி பறந்து விட்டாள்.

தன் பின் வந்த நாட்களில் அவன் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.ஒரு சிரிப்புக்கு கூட நாள் கணக்கில் தவம் இருந்தாள் சஞ்சனா. ஆனால் அவள் இருக்கும் திசைக்கே கும்பிடு போட்டு விட்டான் பிரகாஷ்.

அவனுக்கும் அவளை பிடிக்கும் மிகவும் நல்ல பெண் தான், மிலிடரியிலிருந்து வந்த அப்பா கோடிகணக்கில் சொத்து, பங்களா கார் என்ற சொகுசு வாழ்கை ஆனாலும் அளவுக்கு மீறிய திமிர் என்றுமே கண்டதில்லை தான்.

இந்த மூன்று வருடங்களில் தங்கள் குடும்பத்தில் ஒருத்தியை போல மிகவும் ஒன்றி விட்டாள் தான். ஆனால் ஏனோ அவள் மீது காதல் வரவில்லையே.

காதல் என்ன "ஆல் தி பெஸ்ட்" சொல்வது போன்றா? அவள் சொன்னால் இவளும் திரும்பி சொல்ல. அதனால் தான் அவள் மனதை மேலும் கலைக்கும் விருப்பமில்லாமல் மொத்தமாய் விலகி விட்டான்.

காரணம் அவள் அன்று கடைசியாய் சொல்லி சென்ற விஷயம். அம்மாவை பற்றி கூறினாளே?! எஸ்டேட், பூந்தோட்டம் என பிசினஸ் செய்து கொண்டிருந்த மௌளீஸ்வருக்கு (சஞ்சனாவின் அப்பா) மிலிட்டரியில் சேர வேண்டும் என்ற ஆவலின் மிகுதியில் தனி பயிற்சி பெற்று சஞ்சனா பிறந்த மறு ஆண்டே சென்று விட்டார்.

வருடம் ஒரு முறை வந்து சென்றவரை நிரந்தரமாய் வர வைத்தது சஞ்சனாவின் அம்மாவுடைய இறப்பு தான். அவள் எட்டாம் வகுப்பு படித்த போது இறந்து போனாராம். ஏன் எப்படி என அவளும் சொல்லவில்லை இவனும் கேட்டுக்கொள்ளவில்லை.

ஆனால் வாழ்வில் எந்த முடிவானாலும் அம்மாவிடம் கலந்து உரையாடுவாள். இவள் என்ன சொல்வாளோ என்ன பதில் கிட்டுமோ ஆனால் இது அம்மா சொன்னாங்க என கூறுவாள். முதலில் கிண்டல் செய்தவன் பின் பரிவு கொண்டான். ஒரு சில நேரங்களில் கவலையுடன் திட்டி இருக்கிறான். ஆனால் அவள் சொன்னவை எல்லாம் அப்படியே நடக்கவும் செய்யும் அதில் தான் அவனுக்கு ஆச்சர்யம். ஆனால் இப்பொழுது?!

தாயில்லாத பெண் என்பதால் அவன் வீட்டிற்கு எப்போது வந்தாலும் பாசமும் பரிவுமாய் தான் சித்ராவும் நாதனும் பார்த்து கொண்டனர். ஆனால் இவள்?

இல்லை இதற்கு மேலும் இதை வளர விட்டாள் அவள் வாழ்வே கேள்வி குரியாகுமென முடிவு செய்து அவளை தன் வாழ்விலிருந்து முழுதும் புறக்கணித்து விட்டான்.

சஞ்சனாவும் அதற்கு பின் அவனை தொந்தரவு செய்யவில்லை. அவனை போலவே அவளும் கண்டுகொள்ளாமல் இருந்தாலும் அவனை பற்றிய தகவல்கள் அனைத்தும் சேகரித்து கொண்டு தான் இருந்தாள். அவன் தேர்வான அதே கம்பெனியில் தானும் தேர்வாகி அவன்  டெல்லிக்கு செல்ல இவளும் சென்றாள்.

ஆனால் பிரகாஷ் தன் வாழ்வில் சஞ்சனா என்ற ஒருத்தி இல்லவே இல்லை என்பதை போல் தான் நடந்து கொண்டான். அவனை பார்த்து கொண்டு அவனருகில் இருப்பதே போதுமானதாய் இருக்க சஞ்சனாவும் மீண்டும் அவனிடம் பேச முயற்சிக்கவே இல்லை. ஒரு வேலை அவள் பேச முயன்றிருந்தால் இவ்வளவு தூரம் நடந்திருக்கதோ?!

இதற்கிடையில் தான் பிரகாஷிற்கு சென்னைக்கு மாறுதல் கிடைத்தது. ஆனால் சஞ்சனுக்கு கிடைக்கவில்லை என்பது தெரிந்தவுடன் அவள் வேலையை ராஜினாமா செய்து விட்டாள். எனினும் நோட்டீஸ் பீரியட் இருந்ததால் பிரகாஷ் சென்னை சென்ற பின் ஒரு மதம் அவள் டெல்லியில் இருந்து அதன் பிறகு தான் வர முடிந்தது.

வந்தவளை வரவேற்றதே பிரகாஷின் தோளில் சாய்ந்தவாறு காரில் அமர்ந்து ஒரு பெண் செல்லும் காட்சி தான். ஆனாலும் அவள் சந்தேகமோ வெறுப்போ துளிகூட கொள்ளவில்லை.

ஆனால் நட்பு வட்டாரத்தில் விசாரணை தொடங்கிய போது, ரமேஷ் மூலமாக செய்தி தெரிய வரவும் முதன் முறையாய்  தன் தாயின் வார்த்தை பொய்த்து போனதில் மனம் உடைந்து போனாள்.

ஒரே நேரத்தில் இரு காதலை பலி கொண்ட பெருமை ரமேஷை சேர்ந்தது அவன் அறியாமலே.

சென்னையில் இருக்க பிடிக்காமல் ஊட்டி வந்தவள் அங்கும் மௌலீஸ்வருடன் தாங்காமல் தனி வீட்டில் தங்கினாள்.

பூந்தோட்டத்தை மூலதனமாக வைத்து மலர்கொத்துகள் செய்து விற்பனை செய்யும் கடை ஒன்றை உயர்தரத்தில் நிறுவி அதை பார்த்து கொண்டாள். அதனால் மௌலீஸ்வருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை.

ஆனால் காதலின் தோல்வியை தாங்க முடியாமல் மது போதை பொருட்கள் என அவள் வாழ்வு சீர்கேடுவதை  சட்டத்துக்குள் அடைக்க பட்ட அவள் அன்னையால் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு வருடம் இப்படியே போக, சென்னையின் மிக பெரிய ஹோட்டல்களிலும் கல்யாண மண்டபங்களிலும் பூவேளைப்பாடிற்கு வந்து குவிந்திருந்த ஆர்டர்களை முடிக்க மேனேஜர் திணறி கொண்டிருக்க தானும் உடன் வருவதாய் கூறி கொண்டு கிளிம்பி விட்டிருந்தாள் சஞ்சனா. காலையில் இருந்து சில மண்டபங்களில் வேலையை முடித்தவள் மதியம் அந்த பெரிய ஹோட்டலில் ஒரு திருமண வரவேற்ப்பு விழாவிற்கு அலங்கார வேலைகளை முடித்து கொடுத்து அவர்கள வற்புறுத்தலின் பெயரில் அதில் கலந்து கொண்டு கிளம்பும் நேரம் பிரகாஷை கண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.