(Reading time: 47 - 93 minutes)

ரணிடம் பாம்ப்ளாஸ்ட் பற்றி கேட்டால் பெருசா ஒன்னும் இல்லை…… நோ டெத் டோல்….இப்ப எதுக்கு அதப் பத்தி பேச்சு என பேசவே மறுத்துவிட்டான். ஆக அத்தனை பெரிய ஃபாக்டரிக்கு சின்னதா ஒரு பாம் யார் எதற்காக வைக்கவேண்டும்?

லியா என்னை ரிவெஞ்ச் எடுக்கன்னு உன்னை எதுவும் தொந்தரவு செய்துட்டாளா என கேட்டுப் பார்த்தால்….அதற்கும் இப்ப எதுக்கு இந்த பேச்சு என்ற அதே பதில்….  ஒரு வேளை இந்த அளவுக்கு அவனது காயம் பட்ட குழந்தை ரியாக்ட் செய்துவிட்டாளோ? ஓடுற ட்ரெயின்ல வெளிய விட்டு கதவை பூட்டியவள்…..என்ன செய்யமாட்டானு நினைக்கிறது? உயிர் சேதம் இல்லை என்பது மட்டுமே இவனுக்கு இருந்த ஆறுதல். மீடியாவிற்கு காசிப் லீக் பண்ற அளவுக்கு சின்ன விஷயமா பாம்ப்ளாஸ்ட்டை எடுத்துக்க முடியாதே!!

கூடவே இவனது அம்மா இந்த சூழலில் இப்படித்தான் கல்யாணம் செய்ய கேட்பாங்க என தன் அம்மாவை புரிந்து வைத்திருந்தவன், அந்த அம்மா ஹாஸ்பிட்டல் பெட்ல இருந்துட்டு கேட்கிறப்ப தன் காதலை உணராமலே இந்த லியா கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டு….பின்னால அதுக்காகவும் பயங்கரமா ரியாக்ட் செய்வாள் எனவும் நினைத்தான்.

 பாம்ப்ளாஸ்ட் அளவு போகிறவளிடம் ரிஸ்க் எடுக்கவும் முடியாதே… அதே நேரம் இந்த நேரத்தில் அம்மாவிடம் போய் லியாவின் இந்த முகத்தையும் சொல்ல முடியாதே…..ஏனெனில் அம்மாட்ட இதுவரை அவளது ராட்சச கோபத்தை பற்றி அவன் சொன்னதே கிடையாது…..லியா மாறிவிடுவாள் என்பது இவன் நம்பிக்கை…..தேவை இல்லாமால் அம்மாவிடம் ஏன் இவளை விட்டுகொடுத்ததாக இருக்க வேண்டும் அதோடு அம்மாவுக்கும் அது தேவையில்லாத டென்ஷன் என சொல்லி இருக்கவில்லை. தான் அவளை விரும்புவதாக மட்டும் சொல்லி இருந்தான்.

இப்போது அம்மா இருக்கும் உடல்நிலையில் அம்மாவுக்கு நிலையை புரிய வைப்பதை விட, அப்படி ஒரு நிலை வராமல் தவிர்ப்பதே நல்லது என்பது அவன் எண்ணம். அவள் அங்கே இல்லையெனில் அம்மாவை சமாளித்துவிடாலாம்…..அதோடு இப்பொழுது லியாவைப் பற்றி நெகடிவாக சொல்லிவிட்டு மீண்டும் நாளை அவளை மணக்க போவதாக அம்மாவிடம் போய் எப்படி சொல்வதாம்? ஆம் எந்த சூழ்நிலையிலும் அவளை மறப்பதாக ஒரு எண்ணம் இவனிடம் கிடையாது…. இவள் இவனது காட் கிவ்வன் ஈவ்.

You might also like - Enna thavam seithu vitten... A family drama

 

ஆக சங்கல்யாவை கிளம்பிப் போகச் சொன்னான்…..என்னதான் காதல் இருந்தாலும் அந்த நேரத்தில் அவள் மீது இவனுக்கு கடும் கோபம் இருந்ததும் நிஜம். அவள் செய்து வைத்திருப்பது ஒன்றும் சிறு விஷயம் இல்லையே…..

அதில் ஒரு திருந்தின பாவித் தொனியில் அவள் பேச….அவன் நினைத்ததுதான் சரி என்று அவனுக்கு தோன்ற கத்தி தீர்த்துவிட்டான். அம்மா அப்பா இல்லைனு சொன்னாளே….மத்தவங்கட்ட அவ எவ்ளவு சாஃப்டா மூவ் பண்ணுவா….அவள போய் இப்படி திட்ட வேண்டி இருக்கேன்னு இன்னொரு பக்கம் மனசுக்குள்ள வலி…..இப்ப கிளம்பி எங்க போவா? என ஒரு தவிப்பு….அவன் அம்மா இருக்கும் நிலையில்….இவன் இதையெல்லாம் நினைத்து வேறு மறுகுவது என்றால்?

அடுத்து பேசிய அரணோ…..நீ பேசுனதுக்கு பிறகு லியா ரொம்ப அரண்டு போய் தெரியுறா…அவ ஆறுதல் படுற மாதிரி நீதான் பேச முடியும் என்றான். இருந்த மன அழுத்தத்தில் “அவ ஒரு ராட்சசி…அவ எதுக்கும் அசரமாட்டா” என இவன் விட்டேற்றியாய் பேச….அதெல்லாம் இல்ல..சில விஷயத்துக்கு ரொம்ப பயந்து பயங்கரமா ரியாக்ட் செய்றா என அவன் பதில் சொல்ல, அப்படி என்ன விஷயம் என இவன் அழுத்தி கேட்டதில் லியாவின் பீச் விசிட்..…ரேப் அட்டெம்ட்… அவளது போலீஸ் பயம்…கத்தி வெட்டு என்பவற்றை சொன்னான் அரண். அப்ப கூட அரண் அந்த டைரி விஷயத்தை சொல்லவில்லை. இந்த நிலையில இவனை இன்னுமாய் ஏன் கஷ்டபடுத்த வேண்டும் என நினைத்திருக்கிறான் அவன்.

ஆக அவள் பயத்தில் கையை வெட்டிக் கொண்டாள் என கேள்வி படவும் இவனுக்கு மனது ரொம்பவும் பதறி விட்டது. சோ அவளுக்கு திரும்பவும் கால் பண்ணினான். அவள் சுகபத்திரம் தெரிந்தாக வேண்டும்….ஆனாலும் அவளை ஹாஸ்பிட்டலுக்கு திரும்பி வரவும் வைத்துவிடக் கூடாது.

அதோடு இவனுடன் லியாவுக்கு திருமணம் நடக்கும் முன்பாவது அனவரதன் அவளது அரண் பற்றிய ரிப்போர்ட்டை நம்பலாமாயிருக்கும்……ஆனால் அதன் பின் கண்டிப்பா நம்ப மாட்டார்……கூட்டு சதின்னு சொல்லிட்டு போய்டுவார்…. ஆக அரண் வீட்டைவிட்டு வெளியேறும் லியா அவளறிந்த ரிப்போர்ட்டை இப்போது கொடுத்து பார்க்கட்டுமே என்றிருக்கிறது……லெட் ஹெர் டூ சம்திங்க் குட் டூ அரண்.  இப்போது அவளிறுக்கும் டெம்பஅரரி திருந்தின மூடுக்கு நிச்சயமாக அரணைப் பற்றி மோசமான ரிப்போர்ட் கொடுக்க மாட்டாள். உண்மையை சொல்வாள்.

அதோடு ரிப்போர்ட் கொடுக்காமல் டீலை இவள் பிரேக் செய்துவிட்டாள் என இப்போதைக்கு அனவரதன் இவளை டிஸ்டர்ப் செய்யாமல் இருக்க இது உதவும்…. அபவ் ஆல் இவன் இன்டியா ரீச் ஆகிற வரை அவள் எங்கே இருக்கிறாள் என இவனுக்கு புரிந்திருக்கும்…

அதனால் லியாவை அனவரதனிடம்  போகச் சொன்னான். ஆனால் இவனிடம் எல்லாவற்றிற்கும் தலையாட்டிவிட்டு இவன் அங்கு ரீச் ஆகிற டைம் அப்படி ஹாஸ்பிட்டலில் வந்து நின்றாள் அவள். இவன் எதை தவிர்க்க நினைத்தானோ எக்‌ஸாக்ட்லி அதே சிச்சுவேஷனை உண்டுபண்ணி இருந்தாள்.

அதில் அம்மா கல்யாணத்துக்கு கேட்டதும் ஆமா சாமி வேற….ஆட்டம் பாம் வெடித்தது  அவன் மனதில் அப்போது…. ஆக கொட்டி தீர்த்துவிட்டான்……தேளாக கொட்டியும் தான்….

ஆனால் இவன் கோபத்தைப் பார்த்த அரண் அப்போதுதான் நடந்த அனைத்தையும் இவனிடம் விளக்கினான். “முன்னால எப்பயும் விட அவ இப்பதான்டா உன்னை அதிகமா லவ் பண்றா….பாம்ப்ளாஸ்ட் லியா வேலையா கண்டிப்பா இருக்காது….. ப்ளாஸ்ட் வெல்ப்ளான்ட் அன்ட் டெக்னிகலி வெல் அட்வான்ஸ்ட்….ஒரு தனியாள் இதை செய்துறுக்க முடியாது….இப்டி ஒரு டீமை ஹயர் செய்யனும்னா அந்த கல்ப்ரிட் ஒரு ரிச் லோஃபரா இருக்கனும். நீ குழம்பாம இப்ப அவளை கல்யாணம் பண்ணு…..அம்மா, நீ, லியா உங்க மூனு பேருக்கும் இப்ப இந்த கல்யாணம் நல்லது பண்ணும்…..” என்றான்.

மனம் உருகிப் போனான் இவன். டைரி விஷயம் தப்புதான் என்றாலும்….. அதை அவள் செய்ய காரணம்….??? அனவரதன் அங்கிள் இப்படி மிரட்டினதாய் சொன்னாராமே….. இதோ சூழ்நிலை நிமித்தம் இவன் அவளை பாம்ப்ளாஸ்ட் செய்துவிட்டதாக நினைத்து திட்டித் தீர்க்கவில்லையா?  அதே போல் இவனை தவறாக புரிந்து கொண்டு அவள் அஸ்யூஸ்வல் ராட்சச கோபத்தை காண்பித்துவிட்டாள்.

வித்யாசம் என்னவெனில், கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்களை நடை முறைப்படுத்தும் பலம் இவனுக்கு இருக்கிறது….அது அவளுக்கு இல்லை. குருடனால் ராஜபார்வை பார்க்க  முடியாததைப் போல், இவள் கோபத்தை ராட்சச தனமாக வெளிப்படுத்தாமல் இருக்க அவளுக்கு இயலாது. அந்த இடத்தில் அவளுக்கு ஹீலிங் தேவை. அதற்கான ட்ரீட்மென்டுக்கு கணவனாய் இனி இவன் தான் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும்.

வெட்டிங் லாக் நிச்சயம் அவளுக்கு அவன் மீது ஒரு நம்பிக்கையையும்….இவனுக்கு அவள் மனதை  கேட்டறிய உரிமையையும் கொடுக்கும்….அதை சுகபடுத்தவும் தான். அதோடு ஆயிரம் வார்த்தை தராத நம்பிக்கையை அன்பான நியாயமான நடவடிக்கைகள் தரத்தானே செய்யும்….கணவனாய் அவன் கேர் எடுக்கும் பட்ச்சத்தில் அவளும் இவனை புரிந்து கொள்வாள்.

மேலும் இவன் எதற்காக சொல்லியிருந்தாலும் அவள் அனவரதனை தேடிப் போனதின் நோக்கம்…அதுவும் இத்தனை மன உளைச்சலான சூழலில்….? நிச்சயமாக அதற்கு உள்நோக்கம் கடமை உணர்வு  கிடையாது….….அரணுக்காக, உங்களுக்காகதான் வந்தேன்னு அனவரதன்ட்ட சொன்னாளமே….. ஆண்களுக்காக யோசித்திருக்கிறாளே…

எல்லாவற்றிற்கும் மேல இவனின் இத்தனை கோபத்திற்கும் பலியாடு போல் தலையை கொடுத்துக்கொண்டு நின்றிருக்கிறாளே தவிர ஒரு வார்த்தை இவன் மனம் வலிக்கும் வண்ணம் பதில் சொல்ல அவள் முயல கூட இல்லைதானே? ட்ரெய்ன்ல வெளியவிட்டு கதவை பூட்டிய சங்கல்யாவுக்கும் இந்த லியாவுக்கும் எத்தனை வேறுபாடு??  அடிப்படையில் நல்லவள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.