(Reading time: 47 - 93 minutes)

ஸ் அ ரெஸ்பான்ஸ் தன் வலக்கையால் தன்னவன் கன்னத்தை தொட்டாள். அவள் மாற்றத்தை உணர்ந்தவன் “என்ன விது ?” என்றான். கரிசனை வந்திருந்தது அவன் குரலில். “எதுவும் கஷ்டமா இருக்குதா?”

“ஒன்னும் இல்ல ஜீவா… ஜூனியர் விம்பிள்டென் ஞாபகம் வருது..”

“ஹேய் என் ஞாபகம் வரனும் இந்த நேரத்துல….இது என்ன டென்னிஸ் தாட்…?” மகிழ்ச்சியாய் ஒரு குறை சொல்லல்…. “மத்ததுல எப்படியோ இந்த விஷயத்துல உன் ஹஸ்பண்ட் ஜெலசி ஃபெல்லோதான்…”

“இது தான் நான் ஃபர்ஸ்ட்டைம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ண ஒரு ஈவன்ட் தெரியுமா….? அந்த அரண் வேணுக்கும்னு ஒன்னும் என் காலை வூன்ட் பண்ணலை…..நீங்க நினைக்கிறது தப்புன்னு என் அப்பாட்ட ப்ரூவ் பண்றதுக்காக அத்தனை வலியோட விளையாடி ஜெயிச்ச ஈவன்ட்….. அந்த வகையில இது முழுக்க முழுக்க நீங்க சம்பந்தபட்ட விஷயம்தான்…..உங்க ஜெலசிய பத்ரமா வச்சுகோங்க…”

“அப்ப அந்த வயசுலயே அத்தானை சைட் அடிச்சேன்ற…. சரியான கிரிமினல்டி நீ”

You might also like - Pani paarai... A family drama...

 

“ஆமா நினைப்புதான்…..நம்ம விடியல் பாயை விடாம பிடிச்சுகிட்டுறுக்கிற ஃப்ரெண்டாச்சே….நமக்கும் நல்ல ஃப்ரெண்டா வருவான்னு அப்போ நினச்சேன்….”

அவன் கழுத்தோடு மாலையாய் கை கோர்த்தாள் மனைவி.

துணை வந்த விடியல் உன்னால்

இயலவில்லை இரவுகள் என்னில்

தனி வழிப் பாதை என் பயணம்

தவறி இருப்பேன் நான், சாய்ந்தும் ஓய்ந்தும் தான்

பாதை மாறி பறந்தும் இருப்பேன்,

பயத்தில் பதராய் விளைந்தும் இருப்பேன்

தீங்கு செய் தீயாய்

தீது செறி கள்வனாய்

நோய் செய் உயிரியாய்

நேர்கண்ட சிதையாய் சிதறியும்தான்

தாகம் கொண்ட இதயத்தில்

தடமின்றி வந்து தங்கியவனே

நான் கண்ட நட்பே

நடைமுறைபடவில்லை இவை அனைத்தும்

துணை வந்த விடியல் உன்னால்

இயலவில்லை இரவுகள் என்னில்

போர்களம் தன்னில் நான்

போகும் முன்னே போர்வாள் தந்தவன் நீ

கவசமும் தான், கவசமாய் வந்தவனே

வில் அம்பு தந்தாய்

விளாமல் செய்தாய்

வெறும் விரல் கொண்டு

வெண்கல வில் வளைக்க

வழி வகை சொன்னாய்

விண்ணுலகில் உண்டு சொர்க்கம்

மண்ணுலகில் நட்பில்

அது நடைமுறைப்படும்

இடைவெளி இல்லாத,

ரகசியம் கொள்ளாத

நட்பிற்காய் ஜீவனை வார்ப்பதின் மேலான அன்பு ஏதுமில்லை

என்பது வேதம்.

நீ அதன் சாரம்

நம்மில் வரலாகாது தூரம்

மரணம்காதும்

நாம் என்பது ஓர் வரம்.

அட் அவளுக்கு அறிமுகமான அந்த கவிதை…. அட் டுடனான நட்பு…..ஜீவா என பெயரிட்டது…..பெண்ணிற்கு நியாபக ப்ராவகம். அந்த காதல் சடுகுடு நியாபகம் வரவில்லை எனினும் லாஜிக் புரிகிறதுதானே….அந்த ஜீவாதான் இந்த ஹஸ்பண்ட் என….

“அந்த பால்பக்கெட் பத்தி கவிதை எழுதிதான் என்னை ட்ரஅப் பண்ணீங்களா ஜீவா…? சே என்ன ஒரு அநியாயம்….எனக்கு இப்ப என்னப் பத்தி ஒரு கவிதை இன்ஸ்டென்ட்டா சொல்லலை இன்னைக்கு ஒன்னும் கிடையாது….” அவளுக்கு என்ன நியாபகம் வந்திருக்கிறது என அவனுக்கும் புரிகிறது தானே….

பாவை கொலுசுகளின் ஓசை கேட்க இங்கு

தினம் பாலை செவிகள் இரண்டு ஏங்குதே

அவள் பாதம் சூடு பட்டு மோட்சம் ஏகும்

பாதை மண்ணாகிட மனம் வேண்டுதே

காற்றில் அலையும் அவள்  கூந்தல் காட்டில்

தொலைய என் சுவாசம் அது போகுதே

நீரும் உண்டு அதில் நெருப்பும் உண்டு

எனும் அவள் விழிகள் தீண்டல் அது வேண்டுமே.

 

அன்பிட்டு உன்னில் அடைகலமாக

அருகினில் நெருங்கி வந்தேன்

அனலிட்டு என்னை எரித்துக் கொள் என்றாய்

எங்ஙனம் உன் மொழி மறுப்பேன்

 

மரண வாசல்களின் கதவின் தாழ் திறந்து

காற்றில் ஏறி நான் கரைகையில்

விரலில் ஏறி பின்பு விழுந்துவிட்ட உன்

மருதோன்றி துகளின் தொடுகையால்

கலைந்த உயிரும் இணைந்தே

இவன் இதயம் உள்ளே திரும்புதே

ஜீவன் கொண்டு எழுந்துவிட்ட

என் சரீரமெங்கும் உன் வாசமே

 

மரணங்கள் எல்லாம் மரணிக்கும் என்னுள்

மங்கை உன் மீதென் காதல் செயல்

என்னுடன் இணைய விலை எனக் கேட்டால்

நூறுமுறை இறந்தெழுவேன், சுகவிதை சொல்

 

அவன் சொல்ல, இப்பொழுது அவனை இறுக அணைத்திருந்தாள்.

“இப்டிலாம் எழுதிருந்தீங்கன்னா நான் உங்கள லவ் பண்ணாம இருக்றது எப்படியாம்…?”

ஜீவ சங்கமம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.