(Reading time: 47 - 93 minutes)

காலையில் சங்கல்யா விழிக்கும் போது மனதில் ஓடிய விஷயம். அவன் ஐ லவ் யூ சொன்னானா? இல்லை அது கனவா? என்பதுதான். எது எப்படியோ அதன் இனிமை இன்னும் உயிரில் தித்திக்கிறதுதான்.

விழித்துப் பார்த்தால் அருகில் அவன் இல்லை. அவசர அவசரமாக   வெளியே போய் அவனைத் தேடினால் மாடிப்படி தரை தொடும் இடத்தில் கடைசி படியில் இவன். ப்ளூ டெனிமும் ப்ளாக் கஅஷுவல் ஷர்டுமாய் முழுவதுமாய் கிளம்பி அத்தனை ஃப்ரெஷ்ஷாய் கண்ணுக்கு விருந்தாய்….. இடக் கையில் ஹயாவை தூக்கி இருந்தான்.

வலக் கையில் அவன் வைத்திருந்த கார் கீயால் குழந்தைக்கு விளையாட்டுக் காண்பித்துக் கொண்டே, படியை ஒட்டி தரையில் நின்ற சுகவிதாவிடம்  இவன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.

“அதெங்க ஹயாகுட்டிய கூட ஈசியா தூங்க போட்றுலாம் போல…. இவள தூங்கப் போடுறது இருக்கே….”

ஐயோ மானத்த வாங்குறானே!!! கேட்டிருந்த சங்கல்யாவிற்கு காதுவரை  பரவுகிறது சூடு.

“ஏய் சும்மா ஓட்டாத….ஹாஸ்பிட்டல்ல வச்சுப் பார்த்தேனே….உன் கைய பிடிச்சதும் தூங்கிட்டா…” சுகவிதா தான்.

You might also like - Ainthu... A horror genre story to scare you...

“அதுவா…. சின்ன பிள்ளைங்க சில நேரம் பூச்சாண்டி பயத்துல கூட தூங்கும்….பக்கத்துல நீ இருந்தல்ல பயந்திருப்பா…. மத்தபடி என் கூட தனியா இருக்றப்ப சேட்டை சேட்டை தாங்க முடியல…”

‘சேட்டையா….? அதுக்கு சுகா டிக்க்ஷனரில என்ன மீனிங்கோ? நான் எப்படி சுகா முகத்துல முழிப்பேன்…. அவஸ்தைடா உன்னோட’ சங்கல்யா மனதுக்குள் வெட்கமும் சந்தோஷமுமாக வைதாள் அவனை.

“என்னது நான் பூச்சாண்டியாமா …?” ஆனால் சுகவிதாவோ இந்த பாய்ண்டை பிக் அப் செய்தாள்.

“இதுல உனக்கு இன்னுமா டவ்ட்……ஹயாமா இங்க பாருங்க…..நீங்க சொல்லுங்க மாமா சொல்றதுதான கரெக்ட்?”

அவன் வலக்கை ஆள் காட்டி விரலில் தொங்கிக் கொண்டிருந்த கீயை எடுப்பதில் படு மும்முரமாய் ஈடுபட்டிருந்த குழந்தை இப்பொழுது அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தலையை மேலும் கீழுமாய் ஆட்டிக் கொள்கிறது. பின்பு முழு சிரிப்புடன் தனக்குத்தானே இரு கையை தட்டிக் கொண்டு ஒரு துள்ளல்…அடுத்து அவனது இரு புருவங்களையும் பிடித்து அதை மேலே தள்ளி…….

படிகளின் மேல் முடிவில் முதல் தளத்தில் நின்றிருந்த இவளுக்கே அதைப் பார்க்க ஆசை அள்ளுகிறது…. ஆனால் அருகில் நின்ற சுகாவோ….

“ப்ரபு நீ என்னப்பத்தி என்ன சொல்லி குடுத்றுக்க அவளுக்கு?” நிஜமாவே அழுதுவிடுவாள் போலும்…

“குழந்த முன்னால எதுனாலும் மரியாதையா கவனமா பேசுன்னு சொல்லிருக்கேன்ல…..என்ன சொன்னாலும் அத அப்படியே பிடிச்சுப்பா…”

“மகா கணம் பொருந்திய திருமதி சுகவி ஆதித்யா அவர்களே …… இந்த மரியாதை போதுமா…? இங்க பாரு அவட்ட நான் ப்ரோஸை மேலே கீழே ஆட்டி காமிச்சா அவ அதுக்கு ட்ரை பண்றேன்னு தலைய மேலே கீழே ஆட்டிப்பா…..” சுகாவைப் பார்த்து சொன்னவன்

புருவத்தை ஏற்றி இறக்கியபடி “ஹயாமா அம்மா ரொம்ப புத்திசாலி என்னமா…?” என குழந்தையிடம் கேட்க ஹயா இப்பொழுதும் தலையை மேலும் கீழும் ஆட்டிக் கொண்டது. பின் மீண்டும் வெற்றிச் சிரிப்பு, கை தட்டல், அவன் புருவம் தள்ளல்…

“பாரு…இல்லனா இதுக்கெல்லாம் உன் பொண்ணால ஆமான்னு சொல்ல முடியுமா…?” இப்பொழுது அவன் வார, சுகவி கண்ணிலிருந்து தீ. காதிலிருந்து புகை….

குழந்தை இதற்குள் சுகவியிடம் எதையோ கண்டு தாவ…. அதே நேரம் இங்கு சங்கல்யா பின்னால் சத்தம்.

“யாருடா அது என் பொண்டாட்டிய புத்திசாலி இல்லைனு சொல்றது..?” அரண் வந்திருந்தான். இவளை கண்டதும் “ஹாய் லியா….” என்றான்.

“அந்த உண்மைய சொல்ல இங்க தைரியமுள்ள ஒரே ஆள்….” அரண் கேட்டதும் பதில் சொல்லியபடி திரும்பிய ப்ரபாத் அப்பொழுதுதான் சங்கல்யாவைப் பார்த்தவன்

 “ஹாய் பி எஃப் ….” என்றபடி இரண்டு இரண்டு படியாக ஏறி மேலே வந்தான்.

“வா வா உனக்காகத்தான் வெயிட்டிங், ஃபாக்டரில ஒரு சின்ன வேலை இருக்கு…..முடிச்சுட்டு அம்மாவ பார்க்கப் போகனும்…”

“என்ன நீ இன்னைக்கு எந்த ஃபாக்டரிக்கு போகனும்ன்ற….? அதெல்லாம் எங்கயும் போக வேண்டாம்…..நேத்துதான் ப்ளாஸ்ட்டாயிருக்கு” பயந்து போய் சொன்னது சுகவிதான் 

“அப்படில்ல சுகா, உடனே போனாதான் நமக்கு க்ரவ்ண்ட் ரியாலிட்டி தெரியும்…” ப்ரபாத்திற்கு சப்போர்டிற்கு வந்தது சங்கு. என்னதான் சுகவி கேட்டுகிட்டதுக்காக சுகான்னு பேர் சொல்லி கூப்பிட்டாலும், ஜோனத் இப்படி கூப்பிட ஒத்துப்பானா மாட்டானா என்ற ஒரே சிந்தனைதான் அவளுக்கு அப்போது. அரணை அண்ணானு சொல்ல சொன்னான் தானே!!

பொங்கி வந்த குறும்புச் சிரிப்பை இதழுக்குள் மறைத்து ப்ரபாத் அரணைப் பார்க்கும் போது அவனும் அதைத்தான் செய்து கொண்டிருந்தான்.

“சிக்‌ஸருக்கு ரிவஞ்சா…நடத்து நடத்து” தங்கள் அறையை நோக்கி சங்கல்யாவை கையோடு இழுத்தபடி ப்ரபாத் அரணைக் கடக்கும் போது, அரண் தன் நண்பனுக்கு மட்டும் கேட்கும் சிறு குரலில் சொல்லி சிரித்தான்…

“குழந்தைய நான் ரிவெஞ்ச் எடுக்றது இல்லை” அதே குறும்பு குரலில் பதில் சொல்லிவிட்டுப் போனான் ப்ரபாத். “நர்சரி நடத்தனும்னு நம்ம ரெண்டு பேருக்கும் லாட்”

ங்கள் அறைக்குள் சங்கல்யா பின் நுழைந்தவன்  அவள் எதுவும் கேட்கும் முன் “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பி எஃப்” என்றான். அவளுக்கும் வேறு என்ன வேண்டும். நிறைவாய் அவன் முகத்தைப் பார்த்தாள். “அம்மாவப் பார்த்துட்டு வந்தேன்….ஷி இஸ் ஃபைன்….நிம்மதியா சந்தோஷமா இருக்கு…”

“ஓ ஏற்கனவே போய்ட்டு வந்துட்டீங்களா?”

“ம்…கொஞ்ச நேரம் தான் விழிச்சு இருந்தாங்க….உன்னை பார்க்கனும்னு சொன்னாங்க….உன்னை கூப்ட தான் வந்தேன்”

“சரி இப்பவே கிளம்புறேன்…” வேகமாக அறையின் உள்பக்கம் பார்த்து திரும்பியவளை கை பிடித்து நிறுத்தினான்.

“இல்ல இப்ப உடனே அம்மாவ பார்க்க முடியாது....அவங்களுக்கு ரெஸ்ட் வேணும் அதனால ரிலாக்‌ஸா கிளம்பு……இன்னொரு விஷயம் உனக்கு ஓகேனா சாரி கட்டிட்டு வா, அம்மாவுக்கு பிடிக்கும்….”

“ஓ..ஓகே…”

போய் இவள் குளித்து புடைவை கட்டி வரும்போது அறையிலிருந்த பெட்டில் கால்களை வெளியே தொங்கவிட்டபடி குறுக்காக படுத்து இரு கைகளையும் தலைக்கு அடியில் அணையாக கொடுத்தபடி தூங்கி இருந்தான் அவன். ஏதோ யோசனையில் படுத்தவன் போலும்…

இரண்டு நாளாய் பயணம்…..இரண்டு தூக்கமில்லா இரவுகள்……ஜெட் லாக்…அத்தனை மன உளைச்சல் அம்மாவைப் பார்த்துவிட்டு வரவும் தான் பையனுக்கு தூக்கம் வந்திருக்கிறது…. அவனைப் பார்க்க பாவாமாக இருந்தது அவன் மேல் காதல் கொண்டிருந்தவளுக்கு….

இந்த பொஷிஷன்லயே தூங்கினா கஷ்டமா இருக்காது?

தலைக்கு அடியில் இருந்த கைகளை மெல்ல உருவி விட்ட பின் ஒருவேளை அவன் கால்களை கட்டிலுக்குள் கொண்டுவர இவளால் முடியுமாயிருக்கும்….

அவன் கால்களுக்கு அருகில் நின்றபடி அவன் முகத்திற்கு நேராக குனிந்து, அவன் வல  கையை உருவி, இட கையை மென்மையாக உருவும் போது விழித்துவிட்டான் அவன் காரணம் சரிந்து அவன் மீது விழுந்த இவளது ஈர முடி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.