(Reading time: 47 - 93 minutes)

ன்ன பதிலைக் காணும்? “ எழுந்து படுக்கையைப் பார்த்து போய்க் கொண்டிருந்தவன் இவளை திரும்பிப் பார்த்தான்.

சிவந்திருக்கும் இவள் முகத்தைப் பார்த்தால் இன்னுமாய் சீண்ட மாட்டானாமா? வெட்க பட வெட்கமே தடை போட அவசரமாக முக பாவத்தை இறுக்கி….சைட் அடித்ததை சடுதியில் மறைத்து “அது….அம்மா உங்களை அவங்க கவனிச்சுகிட்ட மாதிரி கவனிச்சுக்க சொன்னாங்க அதான்” என்றாள்.

கடைசியில் இதெல்லாம் அம்மா சொன்னதற்காகதானாமா….? தவித்துப் போனான்….அளவுக்கு மீறி விளையாடிட்டேனோ? அவளை ஹர்ட் செய்துட்டனா?

இவளுக்கு என்ன சொல்லவென தெரியவில்லை. தேவையில்லாமல் ஒரு வேதனையான உணர்வை தூண்டிவிட்டுவிட்டாளோ? அம்மா சர்ஜரிய ஞாபகபடுத்திட்டனோ? சே நல்லா போய்ட்டு இருந்த நேரத்தை….

“சாரி ஜோனத்….அதான் இப்ப எல்லாம்….” இவள் அவனை சமாதானப் படுத்த தொடங்க

“விட்று லியாமா முதல் நாளே மனசுக்கு பிடிக்காத விஷயங்களைப் பேச வேண்டாம்னு தான் சில விஷயத்தை நான் பேசலை…..”

‘ ஓ அவன் கோப பட்ட விஷயத்தை குறிப்பிடுகிறான் போலும்…’

“இல்லப்பா நீங்க என் மேல கோப பட்டதுல எனக்கு உங்க மேல எந்த வருத்தமும் இல்லை….” அவசர அவசரமாக விளக்க முயன்றாள்.

அவனுக்கோ டாபிக் எங்கு போகுமோ என்று இருக்கிறது. இன்னைக்கு அவளை அழ விட கூடாது. “லியாமா முதல் நாள் இந்த பேச்செல்லாம் வேண்டாமே ப்ளீஸ்….. டைம் செட்டாகிறப்ப  நானே உன்ட்ட பேசுறேன்….இப்ப தூங்கலாம்.”

You might also like - A-Aa-E-Ee... A quick fire feel gud romantic story...

 

ஒரு கணம் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது அவளுக்கு. அவன் வா என்றால் வரவேண்டும் போ என்றால் இவள் போய்விட வேண்டும் எனபதுதான் இவள் நிலையா இவன் வரையில்? பேசக் கூட அப்பாய்ன்ட்மென்ட் ஃபிக்‌ஸ் பண்றான்…... என்றிருந்தது.

அதே நேரம் அவன் அம்மாவுக்காகதான இப்ப இந்த கல்யாணம்….நியாயப்படி இவள் மேல எத்தனை கோபம் இருக்கும் அவனுக்கு இப்போது…..அந்த நிலையிலே இதுவே ரொம்ப அதிகம்….புரிதல் வரும் போது பிரிவு சுவர் உடைந்து விடும்னு நம்பி தானே கல்யாணம் செய்தேன்…. இப்ப இருந்த அரை மணி நேர மாய சொர்கத்தில் அதை மறந்துட்டு…. இதுக்குள்ள மனசு நொந்தால் எப்படியாம்? உன்ட்ட வந்து பேசுறேன்னு சொல்றான் தானே… பேசுறப்ப சரியாகிடும்….. வெயிட் பண்ணலாம்…மனதிற்குள் இவள் ஒரு தெளிவிற்கு வர

அவனோ “லியாமா ப்ளீஸ் நம்ம ரெண்டு பேருக்கும் தூக்கம் தேவைமா…எதையும் போட்டு குழம்பாம தூங்கு….” என்றான் ஒருவிதமாக.

சம்மதமாக தலையாட்டிவிட்டு போய் படுக்கையின் ஓரத்தை ஆக்ரமித்தாள். அதன் குஷன் அவளை அள்ளி எறிந்துவிடும் போல் அப்படி துள்ளியது. இதுல எந்த மூலையில் படுத்தாலும் உருட்டி கூட படுத்துருக்கவங்க மேலயே தள்ளும் போலயே!!!

மற்ற ப்ரச்சனைகளையும் தாண்டி அந்த மெத்தை டென்ஷனிலேயே அவளுக்கு தூக்கம் வரவில்லை. இப்பொழுது அவன் இவள் முதுகு புறம் படுப்பதை உணர முடிந்தது. இவள் பக்க மெத்தையை இறுக பிடித்தபடி அசையாமல் இவள்.

பக்கத்தில் படுத்திருந்தவளைப் பார்த்திருந்தான் அவன். இவனை மட்டுமே உறவாய் உலகில் கொண்டவள்.

 அவள் இவனையும் பார்த்து பயப்படுற மாதிரி இவன் நடந்துகொண்டால் பாவம் அவள் என்ன செய்வாள்? இவனைப் பார்த்து அவள் பயப்படுவது அவனுக்கு புரிகிறதுதானே? அதோட இவன் வார்த்தையில் நெருங்கும் போது மலர்வதும் விலகும் போது துடிப்பதுமாய் அவள் முகமும் கண்ணும் சொல்லும் செய்தி என்ன? இவன் காதலை, கணவனாய் இவனது அருகாமையை அவள் விரும்புகிறாள் என்பதைத்தானே…..

சற்று நேரம் செல்ல, “லியா பொண்ணு “ என்றான். இதுவரை அவன் குரலில் அப்படி ஒரு மென்மையை அவள் கண்டதே இல்லை. பஞ்சாய் பட்டாய் வருடியது அது வலித்திருந்த மனதை.

“தூங்கலையாடா நீ?”

“ம்ஹூம்…”

அது பூனைக் குட்டியின் மியாவ் போல் இருப்பதாக இவளுக்கே தோன்றுகிறது. எதையாவது சொல்லி அது புது ப்ரச்சனையை கொண்டு வரவா என்ற பயம் தான் குரல் கம்ம காரணம்.

“லியாமா கொஞ்சம் இங்க பாரேன் ப்ளீஸ்….”

நோ சொன்னா அதையும் தப்பா எடுத்துப்பானோ? திரும்பும் போது அவனை இடித்துவிடக் கூடாது என்று மிக கவனமாக திரும்பி அவனைப் பார்த்து படுத்தாள்.

அவன் பார்வை அவள் கண்களை வருட,

“உன்னை தொடலாமா ?” என்றான்.

என்ன ஆச்சு இவனுக்கு?!!!!

மொத்த கண்ணையும் விரித்துவிட்டாள் போலும்.

அவசரமாக விளக்கம் சொன்னான். “நெத்திய மட்டும் தான்…. உனக்கு தூக்கம் வரும்….”

இவள் பார்வையில் என்ன கண்டானோ

அவள் நெற்றியை வருட தொடங்கினான்.….. அவளையும் மீறி கண் மூடிக் கொண்டாள்.

“உன் மேலே எனக்கு எந்த கோபமும் கிடையாது லியா பொண்ணு.” அவன் சொல்ல சட்டென விழித்துப் பார்த்தாள். வெடித்துவிடுமோ எனும் வண்ணம் இவன் கோபப்படும் போது புடைத்த அந்த கழுத்து நரம்பிருந்த பகுதிக்கு சென்றது இவள் பார்வை.

“அதப் பத்தி நாளைக்குப் பேசுவோம்….பட் இப்ப கோபம் இல்லை….இனி கோப படவும் மாட்டேன்….ஓகேவா…?”

அவன் நெற்றி வருடலில் மீண்டுமாய் கண் மூடிக் கொண்டாள்.

“முத நாள்ள வருத்தமான விஷயம் எதையும் பேச கூட வேண்டாம்னு சொல்றேன்….நீ வருத்தப் பட்டு தூங்காம இருக்க…. தூங்குமா….” தூக்கத்திற்குள் சரிய தொடங்கினாள்.

“உன் மேல எனக்கு எந்த வருத்தமும் கிடையாது…. இன்ஃபஅக்ட் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்….” கண் திறந்து அவன் முக பாவத்தைப் பார்க்க வேண்டும் என அவளுக்கு எங்கோ ஒரு ஆசை. ஆனால் கண் இமைகள் அவன் வருடலுக்கு  அடிமையாய் துயிலின் ஆட்சியில்…

“ஐ லவ் யூ குட்டிமா”

அவள் மொத்தமாய் தூக்கத்திற்குள் முழுகிய வினாடி நெற்றியில் அவன் இதழ் ஸ்பரிசம்.

“ஐ லவ் யூ டி மை டியர் பொங்கல் ஃபேக்ட்ரி….”

தூங்கும் அவளையே பார்த்திருந்தான். இவளை விலக்கி நிறுத்துவதை விட விரும்பிச் சேர்வதுதான் சரியான அப்ரோச்சோ? 

ங்கு அரணது அறையிலோ சங்கல்யாவை அனுப்பிவிட்டு சுகவிதா உள்ளே நுழையும் போது அரண் எழுந்து படுக்கையில் அமர்ந்திருந்தான்.

“தூங்கலையா நீங்க?” சற்று கடிந்து கொள்ளும் தொனி அவள் குரலில்.

“ நீ இல்லைனா தூக்கம் வர மாட்டேங்குது விது….. அங்க லியா கூட பேசிட்டு இருக்கன்னு பட்டுது….அதான் நான் வரலை….”

நான் இல்லாம இந்த 6 மாசம் எப்படி இருந்தானாம் இவன் என்ற கேள்வி மனதில் ஓட அமர்ந்திருந்தவன் தோளில் சென்று உரிமையாய் சாய்ந்தாள். இருகைகளாலும் அவளை அணைத்தபடி படுக்கையில் சரிந்தான் அவன்.

“என்ன பொண்ணு ரொம்ப சந்தோஷமா இருக்ற மாதிரி தெரியுது…”

“ஆமா கீழ லியா எதுக்கு வந்திருந்தா தெரியுமா?”

“எதுக்கு? கம்பு கட்டைனு எதாவது எடுக்றதுக்கா? ஒருத்தன் மலையேறி இருந்தானே அவனை இறக்க?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.