(Reading time: 47 - 93 minutes)

யோ என் செல்லகுட்டி உன்னை ரொம்ப படுத்திட்டனே என்று இருக்கிறதுதான்…..கல்யாணம் என முடிவு செய்துவிட்டான்தான்.

ஆனாலும் இத்தனையும் தாண்டி ஒரு ஓரத்தில் இவன் மீது அவளுக்கான காதலை உணராமல் இவனது அம்மாவுக்காகதான் இவள் இவனை திருமணம் செய்கிறாள் என்ற எண்ணம் சுடுகிறது வலிக்கிறது. அம்மா பாவம் ஜோனத்…அப்படின்னு தான வெட்டிங்க்கு ரீசன் சொன்னா?

 ஒருவேளை தன் காதலை உணர்ந்துவிட்டாளோ எனவும் தோன்றுகிறதுதான்…. அப்படியானால் அதை இவனிடம் ஒத்துக் கொள்ள அவளுக்கு மனமில்லை என்றாகிறது…. இந்த விஷயம் இவனுக்கு முழுதாய் புரிகின்றது என்று சொல்வதற்கு இல்லை.

மேலும் இவன் இத்தனை நாளும் அவளிடம் பச்சை மிளகாயாய்தான் தன்னை காண்பித்திருக்கிறான். இதில் இன்றைய சூழலில் இத்தனை சண்டைக்கும் வாயடிக்கும் அடுத்த நிமிடம் இவன் காதல் பாராட்டினால், இவனோடதை காதல் என புரிந்து கொள்வாளா? அல்லது வெறும் பிசிகல் டிசையர் என நினைத்து வைப்பாளா? அல்லது அதையும்விட மோசமாக இவன் திட்றப்பல்லாம் மறுப்பு சொல்லாம திட்டு வாங்கின மாதிரி…. மனசுக்கு பிடிக்கவில்லை எனினும் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவாளா? அப்படியெனில் உள்ளுக்குள் துடித்துப் போவாள். அதோடு அது அவளது மனகாயத்தை கொடூரமாய் குதறிவிடும். அப்படி ஒரு கொடுமையை இவன் தவறிக்கூட செய்துவிடக் கூடாது.

ஆக அவள் தன் காதலை உணர்ந்து இவன் காதலை புரிந்து அதை இருவரும் மனம்விட்டு பேசி சரி செய்து கொள்ளும் வரை இவனுக்கு பொறுமை அவசியம்.

அவளாய் வந்து பழகும் நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் இவன் தன்னை தன் காதலை கன்ட்ரோல் செய்துதான் ஆக வேண்டும். ஹாஸ்பிட்டல்லயும் சுகா கையை பிடித்து கொடுக்க போய் இவன் பக்கத்தில் அமர்ந்தவள் தூங்கிய பின்தான் இவன் தோளில் சாய்ந்தாள்.

தூங்கின பிறகுதான் அவளை தன் மடியில் சாய்த்துக் கொள்ள இவனால் முடிந்தது. விழித்ததும் சாதரணமாக கூட எழுந்து கொள்ளவில்லை அவள்…என்னமோ தொடக் கூடாதவனை தொட்டுவிட்ட மாதிரி அப்படி ஒரு ரியாக்க்ஷன்…..

அம்மா சர்ஜரி முடிவை கேட்கும் அந்த நேரம் இவனுக்கு என்ன ஒரு ஸ்ட்ரெஸ்ஸான டைம்…..இவன் மனைவியாய் உணர்ந்திருந்தாள் அப்படி இவனோடு வர மறுத்திருப்பாளா? இப்பொழுது இவன் இவளிடம் எவ்வளவு தூரம் பழகலாம்…எப்படி பழக கூடாது?.... 

You might also like - Neengalum thupariyalam.. A series to bring out the detective in you...

 

ன் அறைக்கு உடை மாற்ற சென்ற சங்கல்யா அப்பொழுதுதான் அதை கவனித்தாள். அவள் வைத்துவிட்டு போயிருந்த நகை பெட்டிகள் மிஸ்ஸிங்…. பகீர் என்றது. அறையை பூட்டி சாவியை வீட்டின் சாவிகள் இருக்கும் இடத்தில் தான் வைத்துப் போயிருந்தாள். நம்பிக்கையானவர்கள் தவிர யாரும் எளிதில் வர முடியாது.

இப்பொழுது இவள் என்ன செய்ய வேண்டும்? அதுவும் நிச்சய நகைகள்….அவன் தந்த முதல் நகையல்லவா….அவன் அணிவித்த எங்கேஜ்மென்ட் ரிங் வரை காணாமல் போயிருக்கிறது….. இதயம் தாண்டியும் வலி….. இன்நேரம் இவள் இதை யாரிடம் சொல்ல முடியும்…?

கூடவே ஒரு எண்ணம் ஒருவேளை வீட்டிற்குரியவர்கள் பார்த்து பத்திரமாய் எடுத்து வைத்திருக்கலாம்…….சுகவிதாவாக இருக்க வேண்டும்….இவளது ஜோனத்திற்கான கடிதத்தை பார்த்திருப்பாளாய் இருக்கும்…. அதனால் தான் இவள் கம்ஃபர்டபிளாய் ஃபீல் பண்ண வேண்டும் என இன்று பார்த்து பார்த்து செய்கிறாள் போலும்….. அரண் அண்ணா மாதிரியே தான் சுகாவும்……இவள் கில்டியா ஃபீல் பண்ணக் கூடாதுன்னு இப்படி ஒரு கேர்…..இருவரும் தப்பை பனிஷ் பண்ற விதம் ரொம்ப அலாதி……

மனம் சற்று அமைதியுற சிறு குளியலுக்குப் பின் இன்னொரு காட்டன் சல்வாருக்கு மாறியவள் மீண்டுமாக தங்களுக்கான அறையை நாடிச் சென்றாள்.

இவள் உள்ளே நுழைவதை திரும்பி பார்த்தவன் மீண்டும் முந்தைய நிலை.

நேத்துல இருந்து ஒரே ட்ரஅவல்….இன்னைக்கும் இப்படி நின்னுட்டே இருந்தா எப்படியாம்? இன்னும் நின்று கொண்டிருப்பவனைப் பார்த்து இவள் மனதில் யோசனை ஓடியது.

‘பால்ல கொஞ்சம் மிளகும் மஞ்சளும் போட்டு குடிச்சா நல்லா தூக்கம் வரும்’  பாட்டி சொல்லி இவள் அவ்வப்போது செய்வதுதான்.  ட்ரை பண்ணலாம்.

கீழே இறங்கி கிச்சனுக்கு வந்தாள். வேலை ஆள் யாரும் இல்லை. இத்தனை மணிக்கு எதிர் பார்க்க முடியாதுதான்.

அடுத்த வீட்டு கிச்சன் என கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும், அரணோ சுகவிதாவோ கண்டிப்பாக இதை வித்யாசமாக நினைக்கப் போவதில்லை என்ற எண்ணத்தில் ஃப்ரிட்ஜை திறந்து பாலை தேடினாள்.

அதிகமாகவே இருந்தது. ஒரு பாக்கெட்டை எடுத்து காய்ச்சி….மிளகு பொடியை கண்டுபிடிக்க முடியாமல், மிளகை எடுத்து மிக்‌ஸியில் அடித்த போது சற்று தொலைவில் இருந்த ஹாலில் யாரோ போவது போல் உணர்வு..

சத்தத்தில் யாரையும் எழுப்பிவிட்டாளோ? ஹாலுக்குப் போய் பார்த்தாள். யாரும் இல்லை. ப்ரம்மையோ என்ற நினைவில் திரும்பினால் வெளிவாசல் கதவு சாவி துவாரத்திலிருந்த சாவிக் கொத்து ஆடிக் கொண்டிருந்தது.

‘யாரோ இந்நேரம் வெளிய போயிருக்காங்க……’ கதவை இழுத்துப் பார்த்தால் பூட்டி இருந்தது. ஹவ்? சாவி உள்ள இருக்கும் போது வெளிய யார் எதுக்கு பூட்டனும்…? அதுவும் வீட்ல இருக்றது இவங்க 4 பேர் மட்டும் தான். ஹயா தான் ஐந்தாவது நபர்.

மணி இரவு இரண்டு. இத்தனை மணிக்கு???

இதற்குள் பால் பொங்கும் உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சத்தம். கிட்ச்சனைப் பார்த்து ஓடினாள். பாலை இறக்கி முடிக்கும் போது மீண்டும் ஆள் அரவம். திரும்பிப் பார்த்தால் சுகவிதா. ஓ சுகாதான் வெளிய போனாதா?

“ஏதோ சவ்ண்ட் கேட்குதுன்னு வந்தேன்…” சுகா நட்பும் கனிவுமாய்

“அது….மிளகு பால் குடிச்சா தூக்கம் வரும்னு…அவங்க தூங்காம….” விளக்க முயன்றாள். கான்ஃபிடென்ஸ் வர மாட்டேங்குது… ஏனோ திக்குகிறது.

“சாரி சாரி….நானே இதெல்லாம் கொடுத்றுக்கனும்….அவன் சாப்டவே இல்லை…யார் சொல்லியும் கேட்கலை….இதுல இத்தனை மணிக்கு பால் கொண்டு வந்து வச்சா இன்னும் கொஞ்சம் மூஞ்ச தூக்குவானோன்னு….. சாரி….. ஆக்சுவலி நைட் எப்ப வேணும்னாலும் சாப்டுறதுக்குன்னு ஒரு சப்ஜியும்…. பிசைந்த சப்பாத்தி மாவும் ஃப்ரிஜ்ல இருக்கும்……ரெண்டு போட்டுத் தாரேன்…..எப்டியாவது அவனை சாப்ட வைங்க…..” 

சுகவி சப்பாத்தி தேய்க்க இவள் தவாவில் போட்டெடுக்க….அவனில் சப்ஜியை சூடு செய்யவென…..இப்பொழுது மீண்டும் ஆள் நடமாட்டம் ஹாலில்.

பார்த்தால் ப்ரபாத் தான். லியாவைக் காணாமல்தான் தேடி வந்திருந்தான்.

ய் அரைடிக்கெட் இங்க என்ன வேலை உனக்கு….? அப்பவே போய் தூங்கச் சொன்னேன்ல….” சுகவிதாவிடம் தான் பேசினான்.

“போடா பால்பாக்கெட் முதல்ல பொய் சொல்றத நிறுத்து….. உன் ஃப்ரென்ட் தூங்கனுமேன்னு சொன்ன….நான் தூங்கனும்னா சொன்ன….? அங்க அப்பாவும் பொண்ணும் அப்பவே தூங்கியாச்சு….அதோட இப்ப நீ வந்துறுக்கது லியாவைத் தேடி….இதுல எனக்காக பார்க்கிற மாதிரி சீன்..…கூட்டிட்டுப் போ உன் சிக்‌ஸரை….. அதோட தவத்தை முடிச்சுட்டு அவங்க தர்றதை சாப்டுட்டு தூங்கு….”

இது எதற்கும் பதில் சொல்லாமல் “அவள அவங்க இவங்கன்னு பேசுறத முதல்ல விடு…. உன்னை விட சின்ன பொண்ணுதான் அவ….” என்றான் அவன்.

“நாம குடுக்றதை சாப்டுவேன்னு சொல்றானா இல்லைனா? இவன் என்ன சொல்ல வர்றான்?” சங்கல்யா எண்ணம் இப்படி ஓட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.