(Reading time: 47 - 93 minutes)

ரு கணம் அவனுக்கிருந்த அரை தூக்க நிலைக்கு ஒன்றும் புரியவில்லை எனும் போதும் அடுத்த வினாடி அவன் கண்ணில் தெரிவது அவனது ஃபேவ், பொங்கல் உதடுகள்… சூழ்ந்திருப்பது அவன் செல்ல சிக்‌ஸர்….என்பது வரை புரிய….அத்தனை போராட்டங்களுக்குப் பின் வந்துதித்திருந்த நிம்மதிக்கும் அவள் அருகாமைக்கும்… அவளை மென்மையாய் கைகளால் வளைத்து…. ஸ்வீட் எடு கொண்டாடு….

அதோடு நில்லாமல் அவன் தன்னவளை கைகளில் அள்ள, அவளது “ஜோனத் ப்ளீஸ்” என்ற வார்த்தை. அவ்வளவுதான் சட்டென எல்லாம் உறைக்க நிறுத்திவிட்டான். “சாரி..வெரி சாரி…”

“ சாரில்லாம் ஒன்னும் வேண்டாம்….பட் உங்கட்ட கொஞ்சம் பேசனும்….” பேசிய பிறகு தடை இல்லை என்கிறாள்…

“அதுக்குத்தான் இந்த சாரி…எல்லாத்தையும் பேசி ரிசால்வ் செய்துகாம…” என்று நிறுத்தியவன் ஒரு கணம் எதிரிலிருந்தவள் கண்களை பார்வையால் ஊடுருவினான்…

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

“மேரேஜ்ல பார்ட்னர்ஸ்ன்றவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் சமமா ஃபீல் பண்ணனும்…. நான் உன்னை அப்டித்தான் ஃபீல் பண்றேன்…என தொடங்கி ட்ரெயின் இன்சிடென்டை சொன்னால் அவள் இவனிடம் ரொம்பவும் கில்டியாக தாழ்வாக உணருவாளோ இந்த ஸ்டேஜில் என நினைத்து அதை மட்டும் தவிர்த்து…..அவளைப் பற்றி அவனது அத்தனையையும் சொல்லி முடித்தான். இறங்கி அடித்து விளையாடுவது அவனது ஸ்டைல்….. எத்தனை நாள்தான் இவளிடம் இப்படி பேச வேண்டுமா அல்லது அப்படியா என குழம்பிக் கொண்டிருப்பதாம்….? ஃபேஸ் இட் மேன்…

அவன் முன்பு யூகித்த எந்த வகையிலும் இல்லாமல் வேறு ஒரு கோணத்தில் சங்கல்யா ரியாக்ட் செய்து வைத்தாள். இவன் காதலை அவள் சந்தேகப் படவில்லை. இவனது வெறும் பிசிகல் டிசையர் எனவும் அவள் நினைக்கவில்லை…..அவன் இழுத்த இழுப்புக்கும் வர அவள் தயாராய் இல்லை.

அவனது டெம்பஅரரி திருந்தின மூடு என்ற பதம் அவளை தாக்கிய விதம் பயங்கரம். இப்பவும் நான் திருந்திட்டேன்னு நான்தான நினைக்கிறேன்….நாளைக்கே நான் வேற எதாவது ஒரு எதிரடையான சிச்சுவேஷ்ன்ல திரும்பவும் கிரிமினல் வேலை செய்ய மாட்டேன்னு  என்ன நிச்சயம்….? முன்ன ஜோனத்ட்ட பேசுனப்ப இனி தப்பு பண்ண கூடாதுன்னு மனம் உணர்ந்து தானே முடிவு பண்ணேன்….. பட் இம்மிடியெட்டா எவ்ளவு பெரிய கிரிமினல் வேலை பார்த்து வச்சேன்….சோ இதுவும் அது மாதிரி டெம்பஅரரி ரிப்பென்டன்ஸா இருக்காதுன்னு என்ன நிச்சயம்? என்னை மாதிரி இம்பேலன்ஸ்ட் இன்கன்சிஸ்டென்ட் பொண்ணுகூட சேர்ந்து இவன் வாழ்க்கை கெட்டு போகக் கூடாது….என் பேக்ரவ்ண்ட்ல வந்து பொண்ணுக்கு கல்யாணம்ங்கிறதே தப்பான டெசிஷன்…..கெட்டவனை கல்யாணம் செய்தா அவனால நானும்……நல்லவனை கல்யாணம் செய்தா என்னால அவனும்  நரகத்தைப் பார்த்திருவாங்க…..

இப்படி ஓடியது அவள் மனம்.

 ‘அம்மா சரியாகி வர்ற வரைக்கும் தான் நான் இங்க இருப்பேன்……. தென் ஐ வில் மேக் ஷ்யூர் ஹீ கெட்ஸ் செட்டில்ட் வித் அ ப்ராப்பர் கேர்ள்…’ இந்த அவளது முடிவு அவளை உயிர் வரை சுட்ட அளவில்தான் தனக்கான அவன் மீதான காதலின் ஆழத்தை உணர்ந்தாள் அவள்.

இப்பதான் கொஞ்சம் முன்னால நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பி எஃப் என்றவன் நிம்மதியை இவளது இந்த முடிவை சொல்லி கலைத்துப் போட  அவளுக்கு தெம்பு இல்லை. ப்ராப்பர் டைம்ல சொல்லிக்கிடலாம்.      

 ஆக அதன் பின் அவனிடம் எதுவும் பேசாமல் மௌனமாக கிளம்பித் தயாரானாள்.

“லியா இதென்ன ரெஸ்பான்ஸ்…? என்ன நினைக்கிறன்னு சொன்னாதானே தெரியும்?” இதை அத்தனை விதமாக கேட்டுப் பார்த்து பதில் பெறாமல் அவளைப் பார்த்துக் கொண்டு மட்டும் இருக்கும் நிலை கணவனானவனுக்கு.

அன்று அவனுடன் ஹாஸ்பிட்டல் சென்றாள். அதன் பின் வந்த நாட்களில் அவன் மருத்துவமனை வாசம்.

இவள் அரண் வீட்டிற்கும் ஹாஸ்பிட்டலுக்கும் சண்டிங்….. ஜோன்த்துடன் பேசும் சூழல்களை தவிர்த்தாள். இரவில் அரண் வீட்டில் இவள் தங்கி இருந்த அறையில் மௌனமாய் தனிமையில் அழுதாள்.  ஜோனத்திற்கு இவள் எதற்கு இப்படி ரியாக்ட் செய்கிறாள் என புரியவே இல்லை. அதை சரி செய்யும் வாய்ப்புகளும் இந்த மருத்துவமனை சூழலில் அவனுக்கு இல்லை.

இருந்த ஒரே ஆறுதல் மூன்று வேளையும் இவனோடுதான் சாப்பாடு அவளுக்கு. அரண் சுகவிதா காரணம். அவர்களிடம் மறுக்க முடியாமல் இங்கு வந்துவிடுவாள். இவன் ஊட்டும் முதல் வாய் உணவை அவள் மறுத்ததே இல்லை….

இன்று திருமணமாகி நான்காம் இரவு. அரண் வீட்டில் இவளது அறையில் இவள். மாலை நடந்த நிகழ்வின் நினைவில் மூச்சடைத்துக் கொண்டு வருகிறது. இவர்களுக்கான டின்னரை எடுத்துப் போயிருந்தாள் அவள். அன்பரசி இன்னும் ஐ சி யூவில் தான் இருக்கிறார். ஜோனத் தங்குவதற்கென ஒரு அறை இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது தான். செக்யூரிட்டி ரீசன்ஸ். வாசலில் எப்போதும் காவல். அறைக்குள் ஒன்றிரண்டு விசிடர்ஸ் என இவர்களுக்கு தனிமை கிடைப்பதென்பது குதிரை கொம்புதான் இதுவரை. ஆனால் இன்று சென்ற போது வாசல் காவலோடு சரி. உள்ளே அவன் தூங்கிக் கொண்டிருந்தான்.

நைட்டெல்லாம் சரியா தூக்கம் இருந்திருக்காது. அதான் அன்டைம்ல தூங்குகிறான் என்பது இவளுக்கு புரிகிறது. அறையில் ஒரு சிங்கிள் காட்டும் ஒரு கவுச்சும். அவன் காட்டில். சோ இவள் கவுச்சில் அமர்ந்து அவனை side பிஸினஸாய் சைட் அடிப்பதாய் இல்லாமல் மெயின்ஸ் எக்‌ஸாமிற்கு படிப்பது போல் முழு கவனமாய்ப் பார்த்திருந்தாள். எப்படி தூங்கினாள் என தெரியவில்லை. இவளுக்கும் தானே தூக்கம் பற்றாகுறை. விழித்துப் பார்க்கும் போது இவள் மடியில் தலை வைத்து  கவுச்சிற்குள் சுருண்டிருந்தான் அவன்.

தன் குழந்தையைப் பார்க்கும் போது தனக்கு என்ன உணர்வு வரும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தாள் அவள். கூடவே  இங்கு தனியாய் தங்கி இருப்பது எப்படியாய் இருக்கிறது அவனுக்கு என்பதும் புரிகிறது. அவன் தலை கோத தானாக செல்கிறது இவளது கை. ஒரு கட்டத்தில் அவன் தலை கோதுவதை இவள் நிறுத்த, தன் கண் திறவாமலே அவள் கையை எடுத்து தன் முடி மீது வைத்தான் அவன். கன்டின்யூ என்ற பொருளில்.

ஓ அவன் விழித்திருக்கிறான் என புரிகிறது. பிரிய நினைப்பவள் விலகி எழுந்திருக்க வேண்டாமா? ஆனால் அப்படி எதையும் செய்ய நினைக்க கூட முடியவில்லை என்பதோடு அல்லாமல் அவன் தலை கோதலை தொடராமல் இருக்க கூட தெரியவில்லை இவளுக்கு…. மீண்டுமாய் அவன் தூக்கத்தில் ஆழ்ந்து, அடுத்தும் பின் எழுந்து இரவு உணவை இவளோடு உண்ட பின்னே திரும்பி வந்திருக்கிறாள். இவள் அவனை எப்படி பிரியப் போகிறாள்???

இப்பொழுது இங்கு இதை நினைத்து முட்டிக்கொண்டும் மூச்சடைத்துக் கொண்டும்…..எழுந்து அறையைவிட்டு வெளியே வந்தாள். சாவியை எடுத்துக் மெயின் கதவைத் திறந்து வெளியில் வந்தாள். தோட்டத்தில் வாக் போகலாம். ஆனால் இத்தனை மணிக்கு கதவை திறந்து போட்டுவிட்டு எப்படி போவதாம்.? கதவை வெளியிலிருந்து பூட்டப் பார்த்தால் அதில் லாட்ச் எதுவும் இல்லை. ஒன்லி கீ ஹோல். சட்டென உறைக்கிறது…. இவளது திருமண இரவில் கதவை சுகவிதா வெளியிலிருந்து பூட்டி இருக்கும் போது இங்கு உள்ளே கீ ஹோலில் கீ இருந்ததே எப்படி? ஸ்பேர் கீயை வைத்து வெளியிருந்து பூட்டக் கூட உள்ளே கீ ஹோல் காலியாக இருந்திருக்க வேண்டுமே!!!!! தென் ஹவ்?

யோசித்துக் கொண்டே இவள் நடக்க “நாந்தான் முன்னமே சொன்னேன்ல அது லூசுன்னு…இப்பவாவது உனக்கு புரிஞ்சுதே….” ஒரு குரல். அசையாது நின்றுவிட்டாள் இவள். யார் எங்கிருந்து என்ன பேசுகிறார்கள்?? ஓடிப் போய் பிடிக்க முயன்றால் தகவல் கிடைக்காமல் போக வாய்ப்பு….பெர்பெஃப்க்ட் ரிப்போர்ட்டர் புத்தி….

“இருந்தாலும் சொந்த வீட்டுக்கே பாம் செட் பண்ணுது அது…..கூட இருக்ற யாருமே கண்டு பிடிக்கலை….” மற்றொரு வாய்ஸ்.

“மொத்த குடும்பமே லூசுங்க கோஷ்டி….அப்படித்தான் இருக்கும்….”

“அப்டில்லாம் சொல்லாதே….இப்ப ஒரு பிச்சக்காரிக்கு புது பணக்காரி வேஷம் போட்றுக்காங்க பாரு….யாருமே வராத நிச்சயத்துக்கு ஸ்டேஜ் போட்டு பெருசா ஃபங்ஷன்…. கல்யாணத்துக்கு கழுத்துல போட தாலி கூட இல்லாமன்னு……இதுல்லாம் பக்காவா ப்ளான் போடுவாங்க…….”

“ஆமா பெரிய ப்ளான்…….வெளக்குமாறு…..முன்னால ஒரு சின்ன குட்டிய கூப்பிட்டுட்டு சுத்துனாரே அந்த ப்ரபாத்து…..பின்னால ஏதோ பெருசா தொகை கொடுத்து செட்டில் பண்ணாங்க போல…”

“ம்….தெரியும் தெரியும்….  அந்த பொண்ணாவது அழகா இருக்கும்…. இவ இருக்கா பாரு ஒரு கரிச்சான் குருவி மாதிரி….”

“ப்ச் இது வேற…. இந்த பொண்ணு முன்னால ஒருக்கா ஓடுற ட்ரெய்ன்ல அந்த ப்ரபாத்தை வெளியவிட்டு கதவ பூட்டிட்டாம்….அதான் இப்ப பார்த்தவுடனே தள்ளிட்டு வந்துட்டார் போல பலி போட…”

“ஏய் அங்க யாரோ நிக்ற மாதிரி தெரியுது….வா போலாம்…”

இப்பொழுது சத்தம் வந்த திசையைப் பார்த்து வேக வேகமாக ஓடினாள் சங்கல்யா…. யாருமில்லை….எவரும் இல்லை…..

“சே…  வேலக்காரங்களோட வெத்து காசிப்….வாயிறுக்குதுன்றதுக்காக என்னல்லாம் பேசுறாங்க…”

 வீட்டிற்கு திரும்பி வந்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் ப்ரச்சனை இல்ல டாடி…..எல்லோரும் தூங்கியாச்சு…..தைரியமா பேசலாம்….. யாரு அந்த அரணா….? அவன் என்னைய சந்தேகமே பட முடியாதபடி பக்காவா ட்ராமா போட்டு வச்சுறுக்கேன்…..நீங்களும் இப்ப டைம் பார்த்து வந்து சேர்ந்துகிட்டீங்கல்ல யாருக்கும் நம்ம மேல சந்தேகமே வராது…. இந்த ப்ளாஸ்ட்ல 200க்ரோர்ஸ் லாசாம்…. இதோட இவன நான் சும்மா விடப் போறது இல்ல…..என்ன ப்ளான் பண்ணி டிஸ்ட்ரக்ட் பண்ணதுக்கு ஐ’ல் மேக் ஹிம் டு பே” அவளது டாடியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் சுகவிதா.

 

Friends, இப்ப இந்த லாங் எபிசொடை படிச்சு முடிச்சிருப்பீங்க….How do you feel now? அதை சொல்லுங்களேன் please…. நெக்‌ஸ்ட் எபியை பெட்டரா ப்ரெசென்ட் செய்ய அது நிச்சயம் உதவும். Thanks in advance.

தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:879}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.