(Reading time: 25 - 49 minutes)

ப்படியே மூன்று வருடங்கள் கரைந்து ஓட, தனது தொழிலில் ஒரு நல்ல நிலைக்கு வந்து நிமிர்ந்து இருந்தார் கல்யாணராமன்.

ஒரு நாள் சந்திரிக்காவிடம்  சொன்னார் அவர். 'போதும்...எல்லாம் போதும்... என் கையை பிடிச்சிட்டு நான் கூப்பிடற இடத்துக்கு வா...'

சந்திரிக்காவுக்கும் இதில் மாற்று கருத்து இல்லை என்ற போதிலும் தனது மனதின் ஓரத்தில் இருந்த ஆசையை வெளிப்படுத்தினார் சந்திரிக்கா

'நானும் பரதநாட்டியம் ஆடலாம்னு எல்லாரும் ஒத்துக்கணும். அது மாதிரி ஒரு படம் பண்ணிட்டு நான் உங்களோட வரேன்.'

அப்போது இருந்த அந்த சூழ்நிலையில் அது நடக்கும் என தோன்றவில்லை கல்யாணராமனுக்கு.

கடைசியாக 'அட்லீஸ்ட் ஒரு டான்ஸ் ப்ரோக்ராமாவது பண்ணனும். அதோட போதும்...' கெஞ்சலுடன் சந்திரிக்கா கேட்க...... இது நல்ல யோசனையாக தோன்றியது ராமனுக்கு. கடகடவென இதற்கான வேலைகளில் அவர் இறங்க அந்த அரங்கத்தில் ஏற்பாடு ஆனது வைதேகியின் அரங்கேற்றம் .இப்போது சந்திரிக்காவின் கண்ணில் பட்ட அதே அரங்கம்.

மூன்றே நாட்களில் எல்லா ஏற்பாடும் நடந்து முடிய. விஷயம் வெளியே சொல்லப்பட்டால் எதிர்ப்பு கிளம்பும் என தெரிந்தே ரகசியமாக வைக்கப்பட்டது. முக்கியமாக மேகலாவை எந்த செய்தியும் எட்டிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ராமன். அழைப்பிதழிலும் வைதேகி என்ற பெயரே இடம்பெற்றது. தனது நண்பர்கள், வி.ஐ.பி.க்கள் என நிறைய பேரை நேரில் சென்று அழைத்தார் ராமன்.

'என் ஃப்ரெண்ட்டோட அரங்கேற்றம்..' என்று சொல்லியே அனைவரையும் அழைத்தார். அரங்கேற்றம் ஆரம்பிக்கும் வரை ஆடப்போவது சந்திரிக்கா என்று யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அப்போது மீடியா அவ்வளவு தூரம்  வளர்ச்சி அடைந்திராத நிலையில் இது அவ்வளவு கஷ்டமான விஷயமாக இருக்கவில்லை.

வைதேகி மேடை ஏறி நாட்டியம் ஆரம்பம் ஆனதும் அவரது நாட்டிய திறமையில் பேச்சிழந்து போயிருந்தனர் வந்தவர்கள். நிகழ்ச்சி நிறைவடைய வந்திருந்தவர்களின் பாராட்டு மழையில் திக்குமுக்காடிப்போனார் வைதேகி.

மறுநாள் சில பத்திரிக்கைகள் நியாமான பாராட்டை வெளியிட்டிருக்க, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சந்திரிக்காவின் திறமையை பற்றி பேசத்துவங்க, இரண்டு நாட்களில் சந்திரிக்கா புகழ் ஏணியில் கொஞ்சமாக ஏறத்துவங்க மறுபடியும் பற்றி எரிய ஆரம்பித்தது மேகலாவின் இதயம்.

கார் சஞ்சாவின் கெஸ்ட் ஹௌசை அடைந்திருக்க பழைய நினைவுகளில் இருந்து விடுப்பட்டார் சந்திரிக்கா.

ண்டபத்திலிருந்து சஞ்சா குடும்பத்தினர் வீட்டுக்கு வந்துவிட்டிருந்தனர். இரண்டு ஜோடி மணமக்களுக்கும் ஆரத்தி எடுக்கப்பட அவனருகில் நின்றவளின் இதயம் பயத்திலேயே சிறைப்பட்டு கிடந்தது. யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாத குற்ற உணர்ச்சி வேறு ஒரு பக்கம். அவள் முன்பு செய்த அந்த காரியம் எல்லார் மனதிலும் நிறையவே வருத்தத்தை புகுத்தி இருக்கும் என்பது அவளுக்கு தெரியாமல் இல்லை.

அருகிலேயே தானே நின்றிருந்தான் அவள் மனம் படிக்கும் மன்னவன்.???? உள்ளம்  கொஞ்சம் உறுத்தி அவள் உடல் குறுகுவதற்குள் அவள் தோள் தொட்டிருந்தது அவன் கரம். எல்லாம் சரியாக நடக்கிறது என்று சொல்வதை போன்றதொரு வருடல்.

பயந்து பயந்து வீட்டினுள் கால் எடுத்து வைத்தாள் அவள். அடுத்து என்ன செய்ய வேண்டும்??? அவள் குழம்பி நின்ற தருணத்தில் அவள் கையை பிடித்து உள்ளே இழுத்து சென்றாள் அவன் தங்கை.

அவள் கைகளை பிடித்துக்கொண்டு சொன்னாள் அவள், 'ரொம்ப தேங்க்ஸ் அண்ணி. நேத்து நான் ரொம்ப பயந்துட்டேன். என்ன நடக்குதுன்னே புரியலை. இன்னமும் ஒண்ணும் புரியலை. ஆனா நீங்க உள்ளே புகுந்து காப்பத்திட்டீங்கன்னு மட்டும் புரிஞ்சது. தேங்க்ஸ் அண்ணி. வாழ்கை பூரா நான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டே இருப்பேன்.' அவள் சொல்ல அஹல்யாவின் முகத்தில் கொஞ்சம் நிறைவின் சாயல்.

மனம் முழுவதும் ஆக்கிரமித்து இருந்த குற்ற உணர்ச்சி இடம் பெயர்ந்து மனதின் ஓரத்துக்கு சென்றது போல் தோன்றியது. அவள் தங்கை அங்கிருந்து நகர்ந்தவுடன் கொஞ்சம் தைரியம் கலந்த நடையுடன் அறையை விட்டு வெளியே வந்தாள் அருந்ததி. அவள் நினைத்தை போல் யாரும் அவளிடம் கோபத்தை காட்டாதது, இயல்பாக நடந்துக்கொண்டது அவளுக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தது,

சில நிமிடங்கள் கழித்து அரவிந்தாட்சனுடன் தனிமையில் நின்றிருந்தான் சஞ்சா. அவரை அவன்தான் அழைத்து வந்திருந்தான். கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவன் அவரையே பார்த்திருக்க, குழப்பத்தில் மட்டுமே அவரது முக பாஷையாக இருந்தது.

சில நொடிகள் இப்படியே கரைய 'அப்பா....' என்றான் அவரை பார்த்து

ஆடிப்போனார் அரவிந்தாட்சன். 'என்ன கூப்பிட்டீங்க மாப்பிள்ளை.???'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.