(Reading time: 25 - 49 minutes)

ண்ணீரை துடைத்துக்கொண்டு தனது பின்னால் அமர்ந்திருந்தவனை அருந்ததி திரும்பி பார்க்க சட்டென எழுந்து விட்டான் ரிஷி. அவள் அவனை அழைக்க முற்பட, அவள் கண்களை சந்திக்கும் சக்தி இருப்பதை போல் தோன்றவில்லை அவனுக்கு. பேசாமல் நடந்து சென்று பால்கனி கதவை திறந்துக்கொண்டு சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான் ரிஷி.

அவன் மனநிலை புரிந்திருக்க கட்டில் மீதே அமர்ந்திருந்தாள் அவள். அவனிடம் பேச வார்த்தைகளை தேடித்தேடி எதுவுமே கிடைக்காமல் யோசித்திருந்தவளின் பார்வையில் பட்டது அந்த மருதாணி கோன். அதை கையில் எடுத்துக்கொண்டு விறுவிறுவென நடந்து அவனருகில் சென்று அமர்ந்தாள் அருந்ததி.

மெல்ல திரும்பி அவளை பார்த்தவனிடம் அந்த கோனை நீட்டிவிட்டு புன்னகையுடன் அவனிடம் கையை நீட்டினாள் அருந்ததி. கண்ணுக்கெட்டும் தூரத்தில் கடல் அலையடித்துக்கொண்டிருந்தது. கடற்காற்று அவள் கேசம் கலைத்துக்கொண்டிருக்க பேசாமல் அவள் கையில் கோலம் போட ஆரம்பித்தான் ரிஷி. ரோஜாப்பூக்கள்!!!!! அவள் கையில் அழகழகான ரோஜாப்பூக்கள் பூக்க ஆரம்பித்தன.

அவள் இதழ்களில் புன்னகை மாறவில்லை. அவன் கவனம் அவள் கையில் இருக்க அவள் உதடுகள் மெல்ல அசைந்தன 'டேய்.. வசி...'

ஏதோ புரிந்தது போல் அவன் சட்டென நிமிர, இமை தாழ்த்திக்கொண்டாள் அவள். புரியாமல் இல்லை அவனுக்கு. தனக்குதானே தலை அசைத்துக்கொண்டான் அவன்.

'எனக்கு விலங்கிட்டவள் அவளாகவே விலங்கை விலக்காத வரையில் நான் பேசப்போவதில்லை.' ஆனால் அவன் அறிந்திருக்கவில்லை. அவன் தன்னையும் மறந்து அவளிடம் படபடவென பேசித்தீர்க்கும் ஒரு சந்தர்ப்பம் வெகு விரைவில் வருமென நினைத்திருக்கவில்லை அவன்.

'ஏன் இந்த கையில் அடிப்பட்டதாம் என்று இருந்தது அவளுக்கு. அது சரியாக இருந்திருந்தால் இன்னும் சிறிது நேரம் அவனை உரசியபடியே அமர்ந்திருக்கலாம். கள்வன் இப்போது எதுவுமே பேசாமல் எழுந்து சென்று விடுவானே???

வரைந்து முடித்துவிட்டு அவன் விழி நிமிர்த்த அவன் கண்களுக்குள் பார்த்தாள் அருந்ததி. அவள் கன்னம் அவன் உதடுகளுக்கு மிக அருகில் இருக்க, எதையோ எதிர்ப்பார்த்தது பெண் மனம். அது அவனுக்கும் புரியாமல் இல்லை. அவளை ஏமாற்றி விட்டு அங்கிருந்து எழுந்து போகும் எண்ணமும்  இல்லை அவனுக்கு. இதழ்களில் மென்னகை ஓட சில நொடிகள் அவளையே பார்த்திருந்தவன் சட்டென அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

அப்படியே கண்களை மூடிக்கொண்டாள் அவள். சில நொடிகளில் விலகி அவள் மூக்கை செல்லாமாக கிள்ளி விட்டு அங்கிருந்து எழுந்து சென்று குழந்தையின் அருகில் படுத்துக்கொண்டான் ரிஷி.

தே நேரத்தில் தனது தோளில் முகம் புதைத்து படுத்திருந்த அகல்யாவின் கன்னத்தில் இதழ் பதித்தான் சஞ்சா 'மரக்கட்டையாமில்ல... மரக்கட்டை... மரக்கட்டைக்கு இப்படி வெட்கமெல்லாம் வருமா .....லூசுடி நீ...'

சில நிமிடங்களுக்கு முன்னால் இதுதான் நடந்தது. அவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொள்ள தனது கையின் அருகில் இருந்த ரிமோட்டை இயக்கினான் சஞ்சா. அந்த அறையின் சுவற்றில் இருந்த அந்த பெரிய டி.வி.யில் ஓட துவங்கியது. அந்த திரைப்படம். அஹல்யாவும் அவனும் இணைந்து நடித்த அந்த திரைப்படம். அந்த திரைப்படத்தில் அவனை துரத்தி துரத்தி காதலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் அவள். அந்த திரைப்படத்தில் அவனது பெயர் சஞ்சாதான். அவளது கொஞ்சலும் கெஞ்சலுமாகதான் காட்சிகள் நகரும்.

கண்களை மூடிக்கொண்டு உறங்கும் பாவனையில் படுத்து கிடந்தவளின் செவிகளை வருடிக்கொண்டே இருந்தன. கஷ்டப்பட்டு அசையாமல் அப்படியே படுத்திருந்தாள் அவள். அப்போது வந்தது அந்த காட்சி. அவர்களது திருமண இரவு காட்சி.

'ப்ளீஸ் ... சஞ்சா எனக்கு வெட்கமா இருக்கு'

என்னது வெட்கமா உனக்கா எங்கே நான் பார்க்கணுமே!!!'

'விடு சஞ்சா ப்ளீஸ்...சும்மா இரு... '

'முடியாது..'

'சஞ்சா...'

அந்த திரைப்படத்தில் அவள் குரலிலும் அவன் குரலிலும் வசனங்கள். இரண்டு முறை... மூன்று முறை என திரும்ப திரும்ப ஓட விட்டுக்கொண்டே இருந்தான் சஞ்சா. கண்களை மூடி படுத்திருந்தவளின் இதழ்களில் தன்னாலே வெட்க புன்னகை ஓட துவங்கியது. மறுபடி... மறுபடி அவளின் சிணுங்கல்கள்...

'சஞ்சா.. ப்ளீஸ்... ஆஃப் பண்ணு அதை...'

'நீ தான் மரக்கட்டை ஆச்சே. உனக்கு என்ன பிரச்சனை??? பேசாம தூங்கு. மறுபடி அந்த காட்சி ஓட அப்படியே அவன் தோளில் முகம் புதைத்தாள் அவள். அவள் கன்னத்தில் இதழ் பத்திதான் சஞ்சா

'மரக்கட்டையாமில்ல... மரக்கட்டை... மரக்கட்டைக்கு இப்படி வெட்கமெல்லாம் வருமா .....லூசுடி நீ...' என்றபடியே டி.வி யை நிறுத்திவிட்டு அவள் முகம் நிமிர்த்தினான் அவன்.

'சஞ்சா...' என்றாள் அவள். 'எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சஞ்சா உன் பக்கத்திலே வர...... நான் தப்பு செஞ்சு இருக்கேன்...'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.