(Reading time: 18 - 36 minutes)

ல்லடா அண்ணா…இது உனக்கு பிடிச்சவங்களப் பத்தி இல்லை…எனக்கு பிடி…” தயக்கமாய் நிறுத்தினாள். அடுத்த கணம் சடன் பிரேக்… கீழே இறங்கினாள் மனோஹரி.

 “ஏன் மகி நீ யாரையும்….உனக்கு யாரையும் பிடிச்சிருக்குதா….?” தன் தங்கை யாரையும் விரும்புகிறாளோ என்று தோன்றிவிட்டது அகதனுக்கு.

 “ம்…..அது…. என் ஆஃபீஸ்ல தான் வர்க் பண்றாங்க…ஆமாம்….அவங்கட்ட பேச ஆரம்பிச்ச உடனே இவங்க நம்ம சொந்தம்ன்ற மாதிரி ஒரு ஃபீல்…” தலை குனிந்து கொண்டாள்.

“வாவ்….” என்று தன் சந்தோஷத்தையும் சம்மதத்தையும் காண்பித்தான் அவன். மெல்ல நிமிர்ந்து தன் அண்ணனைப் பார்த்தாள் மனோஹரி. அவ்வளவு எளிதாக ஒத்துக்கொண்டானா? இந்த விஷயத்தில் இவன் இப்படித்தான் ரியாக்ட் செய்வானா?….

“உன் மேரேஜ்ன்றது நம்ம எல்லோரட வாழ்க்கையிலும் ரொம்ப முக்கியமான விஷயம்…அத பத்தி ஆரம்பிச்ச முதல் பேச்சையே நான் மறுத்ததா இருக்க கூடாது அதான் நான் நெகடிவா எதுவும் சொல்லலை மகி……. “

‘அதான பார்த்தேன்….நம்ம கேர்ஃபுல் காஷியஸ் கன்சர்ன்ட் லவ்விங் ப்ரதர் இந்த மேட்டரை இப்படி ஹேண்டில் பண்றது ஆப்ட்டா இல்லையேன்னு…சரி இவன் இந்த விஷயத்தை எப்படி எடுத்துப்பான்னு தான் பார்ப்பமே….’ மனோஹரியின் மனதுதான்…. அதற்காக அவனை கன்டின்யூ செய்ய அனுமதிக்கும் வண்ணம் அமைதியாய்   நின்றாள்….

“நீ வெறும் பீலிங்க்ஸ் பேஸ்ல இவ்ளவு பெரிய முடிவு எடுத்திருக்க மாட்ட….” அகதன் தொடர்ந்தான்.

 “ஒருத்தர பார்த்து பிடிச்சிருக்கிற மாதிரி மனசுக்கு வர்ற ஃபீலெல்லாம் டெம்ப்ரரி…..நமக்கு ரொம்ப பிடிச்சமான ஜாமானை வாங்கினப்ப வர்ற சந்தோஷம் மாதிரிதான் இதெல்லாம்…கொஞ்ச நாள்ள வடிஞ்சிடும்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்….நீ ஃப்ளெஷ்ல டிசைட் பண்ணாம ஸ்பிரிட்ல தான் டிசைட் பண்ணிருப்பன்னு நம்புறேன்… இருந்தாலும் இந்த இவ்ளவு  ஷார்ட் பீரியர்ட்ல இவ்ளவு பெரிய முடிவுக்கு வர்றதுக்கு முன்னால இன்னும் கொஞ்ச நாள் இந்த விஷயத்தை ப்ரேயர்ல வச்சு….இவங்கதான் உனக்கான காட் சென்ட் னு உன் இன்னர் ஸ்பிரிட்ல தெரிஞ்ச பிறகு ஒரு முடிவுக்கு வர்றது நல்லாருக்கும்னு எனக்கு படுது…. எல்லாத்துக்கும் மேல எல்லாம் கைகூடுற வரைக்கும்….மனசுல ஆசைய வளர்த்துகாத மகி குட்டி…” முதலில் அழுத்தம் திருத்தமாக பேசிக் கொண்டே வந்தவன் குரல் கடைசி வரியில் அவன் தவிப்பை காண்பிக்க….

“சரி நீ கிளம்புண்ணா……நானே போய்கிறேன்….” அவன் உணர்சி வசப்படுவதை தவிர்க்க அவன் கவனத்தை திசை திருப்பினாள் மனோஹரி.

“ஹேய்…என்ன….? அதெல்லாம்….நீ முடிவெடுக்க டைம் எடுத்துக்கோ ஆனால் இப்பவே எனக்கு அவர காமி ….நான் கண்டிப்பா பார்க்கனும்….…..கிளம்பு ”  அகதன் சொல்ல, மீண்டுமாய் பைக்கின் பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள் அவன் தங்கை.

அப்பொழுது அதே நேரம் அருகிலிருந்த ஒரு ரெசிடென்ஷியல் சொசைட்டியிலிருந்து வெளி வந்த மித்ரனின் கார் கண்ணில் பட்டது அவளுக்கு. அந்த சொசைட்டியின் பெயரைப் பார்த்தாள். ப்ரவ்ண் ஸ்டோன் என்றது காம்பவ்ண்ட் என்ட்ரன்ஸில் இருந்த அந்த எலிகண்ட் நேம் போர்ட்.

நேற்றைய நிகழ்வு அதற்கு முந்தய அவன் செயல்களால் இவளுக்குள் அவன் மீது உண்டாகி இருந்த நெகடிவ் இமேஜை தூக்கிப் போட்டிருக்க, அப்பாவிடம் இவனைப் பற்றி பேச தடுக்கும் விஷயம் என்ன என்ற செல்ஃப் ஆராய்ச்சியை அன்று இரவு வைத்துக் கொள்ளலாம் என மனம் போஃஸ்ட்போன் செய்திருக்க

இவன் வீடு பேரு ஏதோ அகாபே ‌னு வரும்னு சொன்னாங்கதானே….அவன் வீடைப் பத்தி சொன்ன எந்த டிஸ்க்ரிப்ஷனிலும் இந்த சொசைட்டி ஃபிட் ஆகலையே…. அப்ப இங்க இவனுக்கு எதுவும் வேலையோ? இருந்தாலும் இவ்ளவு மார்னிங் ஒரு வேலைய முடிச்சுட்டு அடுத்த வேலைக்காக ஆஃபீஸா…? கஷ்டம்தான் என அவனுக்காக அக்கறை பட முடிந்தது அவளால். அடுத்து மனமெங்கும் அவன் வேலை அதற்கான டைம் ஷெட்யூல் எப்படி இருக்கும் என நினைவிலேயே நின்றது. பார்வை அவனது காரின் மேலே.

ட்ராஃபிக்கில் இவர்களை  கடந்து முந்திச் சென்றது மித்ரனின் கார்.

இதற்குள் இவர்கள் ஆஃபீஸ் நெருங்கவும்….ஒரு பரபரப்பு இவளுள். கையில் வாட்சைப் பார்த்தாள். இது சரியான டைம் தான்.

மெயின் கேட்டில் நுழைந்தான் அகதன். “இங்கயே நிப்பாட்டு அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ்” இவள் சொல்ல நிறுத்தினான்.

“அவர் வந்திருப்பாரா மகி….அவர் நேம் என்ன?”

“அதெல்லாம் வந்துட்டாங்க….”. 

“அவங்களைப் பார்க்கனும்னு சொன்னல்ல ஒரு சர்ப்ரைஸ்….நேமெல்லாம் அவங்கட்டயே கேட்டுக்கோ….” பைக்கிலிருந்து இறங்கிய அகதன்  கண்ணை பின்னாலிருந்து இரு கைகளால் மூடினாள் இவள்….

”ஏய் வாலு இதென்ன வெளிய வச்சு இப்படி ஒரு விளையாட்டு…?” அகதன் தான்.

“ம் அப்ப நீ வேணா இப்ப வீட்டுக்கு போ…..நான் அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்…”

“ஆனாலும் உனக்கு ரொம்ப கொழுப்பு மகி…”

இப்பொழுது இவர்கள் பார்வைக்கு நேராக தொலைவில் காரைப் பார்க் செய்துவிட்டு இறங்கிய மித்ரன் அருகிலிருந்த செக்யூரிட்டியிடம் நின்று ஏதோ பேசுகின்ற காட்சிக்கு போகிறது இவள் கவனம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.