(Reading time: 18 - 36 minutes)

ல்ல மனு…..ஷெட்யூல் ரொம்ப டைட்டா இருக்குது…….சாப்ட டைம் செட் ஆகலை….”

“நினச்சேன்……இப்ப முதல்ல சாப்டகிளம்புங்க நீங்க….”

“ஷ்யூர்…. உன் ப்ரதரை மீட் பண்ணிட்டு கிளம்புறேன்….சரியா?” இவளிடம் அனுமதி கேட்கிறான் அவன்….

சம்மதமாக தலையாட்டினாள் இவள்.

அடுத்து அகதனிடம் “அண்ணா இவங்க மித்ரன்….. டெபுடி சி இ ஓ  …..” என ஃபார்மல் இன்ட்ரடக்க்ஷன் செய்து வைத்தாள்.

 அவள் அதை சொல்லும் போதும் ஒரு கணம் இவளை திரும்பிப் பார்த்தான் மித்ரன். உனக்கு என்னைப் பற்றி எவ்ளவு தெரியும் என்ற ஒரு கேள்வி அந்த பார்வையில்.….. சின்ன புன்னகை கிடைத்தது பதிலாக இவளிடமிருந்து.

அடுத்து  மித்ரன் அழைப்பின் பேரில் அருகிலிருந்த ஹோட்டலுக்கு இவர்கள் நால்வரும் கிளம்ப…..ஹோட்டலில் வட்ட டேபிளை சுற்றி இவளுக்கு வலப்புறம் மித்ரன் இடப்புறம் அகதன் எதிரில் திரவியா.

ஆண்கள் இருவரும்தான் பேசிக் கொண்டனர். மனோஹரி நான் காலையிலே சாப்டுட்டேன்……என்ற காரணத்தோடு காஃபி கூட குடிக்காமல் நடந்து கொண்டிருந்த உரையாடலை கவனிக்கும் பாவத்தில், மித்ரன் எந்த டிஷ்ஷை எப்படி சாப்பிடுகிறான் என கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் லாங்குவேஜ் மாதிரி அவன் சாப்பாட்டு முறையும் முழு இன்டியனாய் இல்லை.

திரவியா ஒரு காஃபி கப்பை வாங்கிக் கொண்டு அவ்வப்போது அகதனையும் இடையிடையே காஃபியையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதிக நேரம் செலவழிக்க நால்வருக்கும் வழி இல்லை என்பதால் சீக்கிரமே இவர்கள் மூவரும் பயோஸி கிளம்ப அகதன் விடை பெற்றான்.

அடுத்து அவர்களது ட்ரெய்னிங் செஷன் ஆரம்பிக்கும். மனோஹரி திரவியாவுடன் ட்ரெய்னிங் ஹாலுக்குள் நுழைந்தாள். எதேச்சையாய் கண்ணில் படுகிறது உள்ளுக்குள் முளைத்திருந்த நியூ சிசிடிவி….நேற்று இவள் யோசித்ததுதான்….அதற்குள் அதை இம்ப்ளிமென்ட் செய்தது யாராக இருக்கும் என அவளுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டியது இல்லை.

இன்னொரு மாற்றமாக பேட்சில் பூனம் இருந்தாள் தான்…..ஆனால் ட்ரெய்னராய் கிருபாகரன் தான் இல்லை. இன்டெர்னல் ட்ரான்ஸ்ஃபெர்….வேற டிபார்ட்மென்ட்டுக்கு மாற்றியிருந்தனர் அவனை.

லன்ச் ப்ரேக்….திரவியாவுடன் சாப்பிட உட்கார்ந்தவளுக்கு மித்ரன் சாப்பிட்டானா என்ற ஒரு கேள்வி. காலையில் சாப்டாம வந்தான்தானே…..மொபைலை எடுத்து அவன் எண்ணை அழைத்தாள்.  நேத்து அவன் நம்பர் கொடுத்திருந்தான் தானே…. இவள் அழைப்பை ஏற்கவில்லை அவன். துணுக்குற்றது இவள் மனது. அவன் எங்கே? நான் எங்கே? அதிகமாக உரிமை எடுக்கிறேனோ?

“லன்ச் கிளம்புறேன் மனு….போய்ட்டு வரவும் உன்ட்ட கொஞ்சம் பேசனும்” என்ற sms அவனிடமிருந்து வரும் வரையும் சாப்பிடவே ஓடவில்லை இவளுக்கு.

இவள் சாப்பிட்டு முடிக்கும் நேரம் அதற்குள் “மிஸ் மனோஹரி…..2ண்ட் ஃப்ளோர் ஜிஎம் ஆஃபீஸ் வாங்க” என்றது எதோ ஒரு ரஞ்சனியின் குரல் மொபைலில். இதற்குள் வந்துவிட்டானா? எதுக்கு ஜிஎம் ஆஃபீஸுக்கு?

மித்ரனை எதிர் பார்த்து தான் சென்றாள். அவன் அங்கு இல்லை ஆனால் இவளை  பயோஸியின் ரிசர்ச் ஸ்காலர்ர்ஷிப்  ப்ரோக்ராமிற்கு செலக்ட் செய்திருப்பதாக சொல்லிய அஃபீஷியல் லெட்டர் அங்கு இருந்தது.

இந்த ஸ்காலர்ஷிப்…...ஃப்ரான்ஸின் CNRS ஸின் லேப்கள் ஒன்றில் பயோஸியின் எம்ப்ளாயியாக லைஃப் சைன்ஸ் ரிசர்ச்சில் ஈடுபடலாம் இவள். அதற்கான அத்தனை செலவுகளையும் பயோஸி ஏற்கும்……அதோடு மந்த்லி சேலரி வேறு. இந்த ஸ்காலர்ஷிப் அவளது லட்சியம்…..இவளது லட்சியமாக மட்டும் அது இருக்காது இந்த பயோஸியில் வேலை செய்யும் எத்தனையோ சைன்டிஸ்டுகளுக்கு இது தான் லட்சியமாக இருக்கும்…..ஏன் இவளோட காலேஜில் ஜூனியர்ஸ் எத்தனை பேர் இதற்காக கனவுகாண்கிறார்கள் என இவளுக்கு தெரியுமே…. மனம் வலித்தது மனோஹரிக்கு. பயோஸில எத்தனை பேர் இதுக்காக காத்துட்டு இருப்பாங்க….இவள் இன்னும் ஃபர்ஸ்ட் மந்த் சேலரி கூட வாங்கவில்லை . இவள எந்த பேஸ்ல செலக்ட் செய்தாங்க? ஆக இது மித்ரனோட வேலை…..அவன் இவளைப் பத்தி என்ன நினச்சுகிட்டு இருக்கான்….?

இவளுக்கு அந்த ஸ்காலர்ஷிப் ஆஃபர் லெட்டர் கொடுத்த ப்ரதிபனைக் கேட்டாள் மனோஹரி “என்ன பேஸ்ல என்னை இதுக்கு செலக்ட் செய்திருக்காங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? நான் இங்க ஜாய்ன் செய்து இன்னும் வன் மந்த் கூட ஆகலை…..அது தெரியுற வரை நான் இதுல சைன் செய்ய முடியாது”

இவளை ஏதோ ஏலியன் போல் பார்த்தவன்…தன் முன் இருந்த கம்ப்யூட்டரில் குடைந்து “உங்க காலேஜ் ப்ராஜக்ட் ரிப்போர்ட் பேஸ்ல கொடுத்றாங்க மேடம்….அதுல நீங்க ஹேண்டில் செய்திருக்க பயோ இன்ஃபர்மேட்டிக் பார்ட் ரிலேட்டா பஅரிஸ்ல நடக்ற ஒரு ப்ராஜக்ட்ல தன் உங்களை இன்க்ளூட் செய்திருக்காங்க….” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.