(Reading time: 18 - 36 minutes)

வள் ப்ராஜக்ட் ரிப்போர்ட் ஒரு வகையில் எக்‌ஸ்ட்ரார்டினரி தான்….ஆனாலும்….லாஜிகலி சரியா இருந்தாலும்….. ஏதோ உள்ளுணர்வுக்கு சரி இல்லை என படுகிறது. அதோடு இவளுக்கு பயோ இன்ஃபர்மெடிக்ஸை விட பயோஸியில் கையாளும் வெட் லாப் தான் இஷ்டம்…. இந்த ஸ்காலர்ஷிப் வேண்டாம் என ஆன் த ஸ்பாட்டில் எழுதிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டாள் மனோஹரி.

அடுத்த இரண்டாவது நிமிடம் இவளை கூட்டிப் போய் ஜி எம் முன் நிறுத்தி இருந்தனர். அவர் மட்டுமில்லை விஷயம் கேள்விப்பட்ட  ஒவ்வொருவரும் இது உலக மகா வாய்ப்பு….ஒரே வார்த்தையில் வேண்டாம்னு சொல்லாதே என்றே அட்வைஸ் நல்கினர்.

 “ஆன் த ஸ்பாட்லாம் இப்படி ரிஜக்க்ஷன் கொடுக்க முடியாது மிஸ்.மனோஹரி….உனக்கு 10 டேஸ் டைம்….அதுக்குள்ள வீட்ல பேரண்ட்ஸ்ட்ட..…உங்க காலேஜ்  ஸ்டாஃப்ஸ்….நீங்க ப்ராஜக்ட் செய்த லேப்….எல்லார்ட்டயும் டிஸ்கஸ் செய்துட்டு…அப்புறம் வந்து இந்த ஸ்காலர்ஷிப்க்கு அக்சப்டன்ஸோ டினையலோ கொடு….அப்பதான் உங்க டெஷிஷனை நாங்க ஏத்துக்க முடியும்…தென் க்யூல நெக்ஸ்ட் இருக்றவங்களுக்கு ஆஃபர் கொடுப்போம்…. “ என்று எம்டி டைம் கொடுத்திருந்தாலும் மனோவைப் பொறுத்தவரை….தட் நோ இஸ் அ நோ இஸ் அ நோ… 

இன்ஸ்டென்டாய் மனோஹரி ஆஃபீஸில் ப்ரபலாமாகி இருந்தாள். “ஒரு நியூகம்மர்க்கு ஸ்காலர்ஷிப்பாம்….அந்த பொண்ணு அதை வேண்டாம்னுட்டாம்…. “ அதுதான் அப்போதைய பயோஸி டாக்….

சற்று நேரத்தில் மித்ரனிடமிருந்து கால். அதை கட் செய்தவள் “நான் ட்ரெய்னிங்கை மிஸ் செய்ய விரும்பலை” என மெசேஜ் செய்து வைத்தாள். நடந்த கூத்தின் காரணகர்த்தா இவனாகத்தானே இருந்திருக்க முடியும்?

அடுத்து ட்ரெய்னிங்கில் அமர்ந்திருந்தாலும் இருப்புக் கொள்ளவில்லை அவளுக்கு. ஏதேதோ உள்ளுக்குள் அலைகழித்தது அவளை….இதற்கு மேல் இங்கு சமாளிக்க முடியும் என்று தோன்றவுமில்லை….

பெர்மிஷன் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்…..மிக நன்றாய் ஆரம்பித்தது போல் தோன்றிய நாள் மிக மோசமாக முடிவது போல் ஒரு உணர்வு…… இன்னமும் அந்த நாளின் மிக மோசமான நிகழ்வை அவள் ஃபேஸ்பண்ணி இருக்கவில்லை என அவளுக்கு அப்போது தெரியாது.

லிஃப்டை நோக்கிப் போனவளுக்கு ஸ்டேர்கேஸ் வழியாக இறங்கலாம் என தோன்றிவிட்டது. மூட் டல்லடிச்சா மனோ பின் பற்றும் விஷயங்களில் இதுவும் ஒன்று. கடகடவென வேகமாக இறங்கும் அந்த உணர்வு உற்சாகம் சேர்க்கும் அவளுக்கு.

ஆக இப்பொழுதும் அதைத்தான் செய்தாள்…. ஆனால் சில நிமிடங்களில் கீழிருந்து மேலாக இவளைப் பார்த்து வந்து கொண்டிருந்தான் மித்ரன்.

அவன் இவளைப் பார்த்தும் விட்டான். “ஹேய் மனு….ட்ரெய்னிங் மிஸ் பண்ண இஷ்டமில்லைனு சொல்லிட்டு இங்க என்ன செய்துட்டு இருக்க….?” அவன்தான். மேலேறியபாடியே கேட்டான். குரலில் மட்டுமல்ல அவன் முழுமுகத்திலும் அந்த ட்ரேட் மார்க் துள்ளல்.

அவ்ளவுதான் இருந்த எல்லா உணர்வையும் தாண்டி அவன் முகத்தில் முழிக்க கூடாது என்ற எண்ணம்தான் அதிகமாக தலைதூக்க…… சட்டென பக்கவாட்டில் அப்பொழுதுதான்  வந்து நின்று வாயைத் திறந்த லிஃப்டிற்குள் நுழைந்தவள் கண் முன்பாக அதன் ரெட்டைக் கதவு மூடும் போது அந்த சிறு இடைவெளியின் வழியாக மித்ரன் அங்கு வந்து சேர்ந்து இவளைப் புரியாமல் பார்க்கும் பாவமும்….”ஹேய் மனு என்னாச்சு ? “ என கேட்கமும் சத்தமும் கிடைக்கிறது இவளுக்கு.

அதே நேரம் லிஃப்டினுள் இருந்த ஒரு குட்டை குண்டுப் பெண்…..50 வயது மதிக்கலாம்….இவள் அருகில் வந்து சிறு புன்னகையுடன் “என்ன லவர்ஸ் ஃபைட்டா?”  என இவள் எதிர்பாராத கேள்வியை கேட்டவர்…..மனோஹரி எதிர்பார்க்கும் முன்னாக அவள் மூக்கில் வைத்தார் தன் கர்சீஃபை…..

“ஹெல்ப் மீ மித்ரன்……” இவள் கத்திய சத்தம் அவனுக்கு கேட்டதா என தெரியாமலே மயங்கி சரிந்தாள் மனோஹரி…. 

மித்ரனுக்கு மனோஹரி இப்படி மாட்டிக் கொண்டிருக்கிறாள் என்றெல்லாம் தெரியாது….ஆனால் அவளிடம் அவனுக்கு இப்போது பேசியாக வேண்டிய காரணம் இருந்தது. இப்ப என்ன நடந்துட்டுன்னு இவனை அவாய்ட் பண்றா அவள்?

எப்படியும் க்ரவ்ண்ட் ஃப்ளோர்ல பொண்ணு இறங்கித்தான ஆகனும்…. வேக வேகமாக ஸ்டேர்கேஸ் வழியா கிரவ்ண்ட் ஃப்ளோர் வந்தான். லிஃப்டிற்கு முன்னால் இவன் வந்துவிட்டான் தான்…..ஆனால் லிஃப்ட் தான் அங்கு நிற்காமல் இன்னும் கீழே பேஸ்மென்ட்டை பார்த்துப் போனது….நான் ஸ்டாப் ஆப்ஷனை லிஃப்டின் உள்ளிருப்பவர் பயன்படுத்துகிறார்….அதாவது இந்த மனு பொண்ணா? அப்படி என்ன கோபம்? ஆனாலும்….

பேஸ்மென்டைப் பார்த்து ஓடினான்…. அவன் கண்முன்னாக அந்த வைட் இனோவா சீறிக் கொண்டு போனது…..லிஃப்ட் கதவு இன்னும் திறந்த நிலையில் காலியாய்…..மனுவை யாரோ கிட்நாப் செய்றாங்க…..தன் காரைப் பார்த்து ஓடத் தொடங்கி இருந்தான் மித்ரன்……

Episode # 03

Episode # 05

தொடரும்!

{kunena_discuss:928}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.