(Reading time: 18 - 36 minutes)

வாவ் பெர்ஃபெக்ட் மொமன்ட்.

“அண்ணா இப்ப கண்ணத் திறந்து எதிர்ல பாரு…..நான் சொன்னவங்க இவங்க தான்…” அகதன் கண்களிலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டாள்.

கண் திறந்து பார்த்த அகதனுக்கு ஒரு கணம் தூக்கி வாரிப் போட்டது. ஆனந்த ஷாக்.

இவர்கள் நின்ற இடத்திற்கு பக்கவாட்டில் இருந்த வாசலிலிருந்து அப்பொழுதுதான் வெளிப்பட்ட திரவியா நின்று கொண்டிருந்தாள் இவர்கள் எதிரில். மனோஹரி நினைத்த பெர்ஃபெக்ட் மொமன்ட் திரவியாவின் வருகைதான்.

அகதன் தன் காதலை பற்றி சொன்ன அன்று அவள் இருந்த மனநிலையில் அண்ணன் விரும்பும்  பெண்ணின் பெயரை கேட்க கூட தோன்றவில்லை மனோஹரிக்கு. இவள் கல்யாணத்தைப் பத்தி பேசி எரிச்சல் படுத்திவிட்டானே அகதன். நேற்று இரவு அதைப் பற்றி யோசிக்கும் போதுதான் அவளுக்கு சட்டென விளங்கியது அது திரவியாவாக இருக்கும் என. காரணம் அகதன் தான் விரும்பும் பெண் தன் காலேஜ் ஜூனியர் என்றிருந்தான். திரவியாவும் அதே காலேஜ் தான் என இவளுக்கு தெரியும்.

அந்த பெண்ணின்  வீடு இருக்கும் இடம் என அகதன் குறிப்பிட்டதும் திரவியாவின் வீட்டு ஏரியாவைத்தான். திரவியாவிற்கும் எஸ்பிஐ பேங்கில் வேலை பார்க்கும் ஒரு அண்ணன் உண்டு….. ஆக திரவியாவிற்கு போன் செய்து “உனக்கு அகதன்னு யாரையாவது தெரியுமா? “ என்ற ஒற்றைக் கேள்வியில் சந்தேகமில்லாமல் மனோஹரிக்கு உறுதியாகி இருந்தது தனக்கு அண்ணியாக வரப் போவது இந்த திரவியாதான் என….

“இவங்களைத்தான் எனக்கு இவ்ளவு ஷார்ட் பீரியட்ல நம்ம சொந்தம்னு ஃபீல் ஆச்சுது….” மனோஹரி சொல்வது அகதன் காதில் விழுகிறதா?

“நீங்களா….? எப்டி இருக்கீங்க….?” என உற்சாக துள்ளலாக ஆரம்பித்த திரவியாவுமே அகதனின்

“நானேதான்…” வந்த தொனியில் அவன் முகபாவத்தில் எதையோ உணர்ந்து அவன் பார்வையை தவிர்க்க தரை பார்த்து பின் மீண்டுமாய் அவன் விழி பார்க்க என திணற இதற்கு மேல் அங்கே நிற்பது சரியில்லை என உணர்ந்து மனோஹரி சற்று நகர்ந்தாள்.

பார்வை திரவியாவின் மீதே இருந்தாலும் நகர்ந்த தங்கையின் கையைப் பற்றி நிறுத்திய அகதன் ….”வா உன்னை கவனிச்சுகிறேன்….” என்று வார்ன் செய்தான். அவன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் சந்தோஷம்.

“கவனிக்றதுனா நைட் ஹோட்டல் பார்க் ல டின்னர் டேபிள் புக் பண்ணி கவனி…..” என்றுவிட்டு அவர்களை விட்டு நன்றாகவே விலகிக் கொண்டாள் மனோஹரி. பார்வை மித்ரனை தேடியது.

இப்பொழுதும் அதே இடத்தில் தான் நின்றிருந்தான் மித்ரன். இரண்டு பாக்கெட்டிலும் கைவிட்ட படி அவன் பேசிக் கொண்டிருந்த அந்த பாடி லாங்குவேஜ்….சரியில்லையே…... ‘காலையிலேயே இவனுக்கு என்னாச்சு? ஒரு வேளை சாப்ட டைம் இல்லாம வந்திருப்பானோ?’  வேற யாரு இவள் மனம் தான்.

சிறிது நேரம் அவனையே கவனித்திருந்தாள். தொலைவில் இருந்ததால் அவன் பேசுவது ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் அவன் ஏதோ இன்ஸ்ட்ரெக்க்ஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறான் என புரிந்தது.

சில நிமிடங்களில் இவள் இருந்த திசை புறம் திரும்பியவன் பார்வை இவள் மீது பட்டிருக்குமா? இது இவள்தான் என அவனுக்கு புரியுமா? அவன் அருகில் இருந்தவர்கள் கிளம்பிச் செல்ல அவன் இவள் இருந்த திசை நோக்கி நடக்க தொடங்கினான்….

வைத்த கண் வாங்காமல் அவன் நடந்து வருவதையே  பார்த்திருந்தாள் மனோஹரி. டக் இன் செய்யப்பட்ட மைல்ட் pear க்ரீன் ஃபுல் ஸ்லீவ் ஷர்ட்  ப்ளாக் பேண்ட்ஸில்…..ஆறடி மூன்றங்குல உயரத்தில் அவனிருக்கிறான்…..என்பதையோ இவள் பார்வையை அவன் உணர்கிறான் எனபதையோ அவள் மனம் குறிக்கவே இல்லையே…. ஒரு கட்டத்தில் நீ இப்டி பார்க்றதை கவனிச்சா அவன் என்ன நினைப்பான்? என்றது மனம்.

‘பார்க்கிறது ஒரு தப்பா? அதுல தப்பா நினைக்க என்ன இருக்குது?’ என அதற்கு பதில் சொல்லியது இவள் உள்ளம். தப்பு இது என பெண்மை தடுமாறும் படி, சலனம், தடுமாற்றம் தவிப்பு, கிளர்ச்சி என எதையும் இவளுக்குள் எழுப்பாமல் இயல்பாய் இவளுள் இறங்கிக் கொண்டிருந்தான் அவன். அதை தடுக்க தெரியவில்லை என்றில்லை…..தடுக்க வேண்டும் என்று கூட தெரியவில்லை அவளுக்கு.

இப்பொழுது இன்னும் அருகில் வந்திருந்தான்…… இவளுமே அவனை நோக்கி நடந்தாள்.

“என்ன மனு ? என்ன சொல்லனும் என்ட்ட?” என்றபடி இவளை நோக்கி வந்தான் அவன்.

“காலைல சாப்டீங்களா?” என்ற இவள் கேள்வியில் அவன் மட்டுமல்ல இவளும் தான் ஸ்தம்பித்து போனாள்.  அவன் சாப்பிட்டிருக்க மாட்டான் என இவள் நினைத்துக் கொண்டிருந்தாள் தான். ஆனால் அதை அவனிடம் கேட்டு வைப்பாள் என அவளே எதிர்பார்த்திருக்கவில்லை….. அவளுக்கு தெரியாது அந்த ஒற்றைக் கேள்வியின் விளைவு அப்போது.

அடுத்து அவன் முகத்தில் வந்த அத்தனை சந்தோஷத்தைப் பார்த்தபின்… ..இப்ப கேட்டாச்சு இனி பேக்‌ஸ்லைட் ஆவதில் அர்த்தம் இல்லை என அதை பேட்ச் அப் செய்ய எதாவது சொல்லலாம் என்று நினைத்ததையும்  அப்படியே ட்ராப் செய்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.