(Reading time: 21 - 42 minutes)

தற்குள் கதவை திறந்து, அடுத்த நொடி  உள்ளே ஏறி இருந்தாள் அவள்.

“ப்ளீஸ் பீ சீட்டட் “ என தன் மனைவிக்கு அருகில் உட்கார சொல்லி இடம் காண்பித்தார் ரிடையர்ட் ஆர்மி கேப்டன் பொற்பரன் இந்த மூன்று மகன்களின் அப்பா. 

“ரொம்ப நன்றி….இட்ஸ் எ டைம்லி ஹெல்ப் “ நடுங்க நடுங்க கை குவித்தாள் அவள். அவள் தமிழும் கண்ணிலிருந்த கண்ணீரும் போதாதா பொற்பரனுக்கு?

அதற்குள் இவள் முதுகு புறம் இருந்த மரகதமோ அவளது தோள்களை பற்றி தன் அருகில் அமர வைத்துக் கொண்டார்.

“எதுனாலும் பயப்படாதம்மா…என்ன விஷயம்னு சொல்லு….” அவர்தான்.

 “ஒரு விட்ச் கோழி என்ன துரத்துது…..ஐ மீன்….மூக்குல ஃபெதர் வச்சு விச்சுக்ராஃப்ட் செய்த கோழி…..” நடுங்கும் கைகளுடன் அத்தனை ஆக்க்ஷனும் விரிந்த கண்ணுமாய் அவள் சொல்லிக் கொண்டு போக

 மனதில் வந்திருந்த வலி மறந்து அபயன் வாய் பொத்தி சிரித்தான் எனில், அதிபன் “எப்டி ட்ராமா ஸ்டார்ட் பண்றா பாரு…“ என முனங்கினான். யவ்வனோ அந்தப் பெண்ணின் நேரடிப் பார்வையில் இருந்ததால் ஒருவரின் பயத்தைப் பார்த்து சிரிப்பது நாகரீகமாக இருக்காது என  வந்த சிரிப்பை கஷ்டபட்டு அடக்கி இயல்பாய் இருப்பது போல காண்பிக்க முயன்றான்.

ஆனால் எந்த ஒளிவு மறைவுமின்றி வாய்விட்டு சிரித்தது பொற்பரன்  தான். எதிலும் நடிக்க வராது அவருக்கு. “ அது அப்படி இல்லமா….முட்டை போட்டு முடிக்கவும் அடைகாக்க ஆசைப்படுற கோழிய அடைகாக்க வேண்டாம்….திரும்பவும் முட்டைதான் போடனும்னு அதை வளர்க்கிறவங்க நினைச்சாங்கன்னா இப்படி மூக்குல இறகு சொருகி விடுவாங்க நம்ம பக்கம்….  இல்லைனா அது வழக்கமா முட்டை போடுற இடத்துல போய் சுணங்கி சுணங்கி கிடக்கும்…இற மேயாது…..இப்படின்னா கொஞ்ச நாள்ல தெளிஞ்சி பழைய மாதிரி ஆகிடும்…ஒழுங்கா மேயும்….முட்டை போடவும் ஆரம்பிக்கும்….” பயம் போக்க விளக்கமும் சொன்னது அவரேதான்.

அவர் விளக்கத்தை முழுதாக ஏற்கவும் முடியாமல் அதை நம்பாமல் முன் போல் பதறவும் முடியாமல் சுற்றி இருந்த ஒவ்வொருத்தர் முக பாவத்தையும் பார்த்து விழித்தாள் அவள். பிறர் முக பாவத்தில் பொற்பரன் சொன்னது முழு உண்மை என புரிகிறது அவளுக்கு.

“இல்ல நிஜமாவே ஒன்னும் செய்யாது அது….” அதற்குள் மீண்டுமாக மரகதம் அவளை ஆறுதல் படுத்த முயன்றார்.

“இல்ல அது என்னை துரத்திட்டு வந்துச்சு…..சாதாரண கோழி துரத்தாதுல….அதான்……சாரி” இப்பொழுது புன்னகை அரும்ப தொடங்கி இருந்தது அவள் முகத்தில்.

“குஞ்சு பொரிச்ச தாய் கோழி தான் குஞ்ச தொந்தரவு செய்றப்ப கொத்தும் துரத்தும்….ஆனா இது அவ்ளவா அப்படிலாம் செய்யாது….ஆனா கொஞ்சம் நல்ல மனநிலைல இருக்காது இந்த நேரத்துல….அதனால எப்படி வேணும்னாலும் நடந்துக்கும்…” வந்தவள் பயம் போய்விட்டது என புரிந்தாலும் அவளை இயல்பாக உணரவைக்க வேண்டும் எனதான் இதை சொன்னது மரகதம்.

ஆனால் “ஓ….பாவம்ல….தனக்குன்னு குழந்தை வேணும்….குடும்பம் இருக்கனும்னு நினைக்கிறது மூச்சு விடுற மாதிரி எவ்வளவு இயல்பான உணர்வு….அதைபோய் வேண்டாம்னு இப்படி கட்டுபடுத்தினா பாவம் அந்த கோழிக்கு எவ்ளவு கஷ்டமா இருக்கும்ல….” என பதில் சொல்லி ஒரு சாட்டையடியை இறக்கினாள் அவள் இவர் மனதில்.

மூச்சு விடுற மாதிரி இயல்பான ஒன்னு….அதைப் போய் வேண்டாம்னு….. அவர் கண்கள் அதுவாக ரியர்வியூவில் மூத்த மகன் அதிபனின் முகம் காண ஓடுகிறது. ‘என் பிள்ள மனசுல எவ்ளவு வலி இருக்கனும்…? இவன் எப்ப இதிலிருந்து வெளியே வர போறான்? இல்ல இப்படியே தனிமரமா நின்னுடுவானா? ‘அதுவரையும் அவனும் ரியர்வ்யூ வழியாக தாயையும் அந்த அவளையும் பார்த்துக் கொண்டிருந்தவன் தன் அம்மாவின் பார்வையிலிர்ந்த உணர்வினை தாங்க முடியாமல் கண் பார்வையை இவர்கள் மீதிருந்து வெளிப் புறமாக திருப்பினான்.

“சரி….அப்பனா இனி எனக்கு பயமா இல்ல…..நன்றி….நான் நடந்தே போய்டுவேன்….கொண்டல்புரம் போகனும்னா எப்படி போகனும்? இன்னும் எவ்ளவு தூரம் இருக்கும்?” கேட்டபடி இப்பொழுது அவள் இறங்கவென எழுந்திருக்க மரகதம் மனம் மீண்டும் அந்த பெண்ணிடம் வந்துவிட்டது.

பொற்பரனோ….”கொண்டல்புரமா…..அங்க யாரு வீட்டுக்கு போகனும்….? எதுக்கு இந்த பட்டிகாட்டை தேடி வந்திருக்கமா? அதுவும் தமிழ் வேற பேசுற? உன் பேரென்ன?” என அறிமுக விசாரிப்புக்கு வந்தார்.

“அங்க பூங்காவனத்தார் குடும்பம்னு சொன்னா சிலருக்கு அடையாளம் தெரியும்னு சொல்லி அனுப்பினாங்க கனி ஆன்டி…….” சற்று தயக்கத்துடன் சொன்னாள் அவள்.

அவ்வளவுதான் இப்பொழுது ஒருவித அதிர்ச்சி கலந்த ஆர்வ பாவத்திற்கு வந்திருந்தார் பொற்பரன். “பூங்காவனத்தார் உன் அந்த கனி ஆன்டிக்கு யாருமா?”

“ஃபாதர் இன் லா….” அவ்வளவுதான் அவளது பதிலில் பொற்பரன்…

“டேய் அதி நீ காரை ஸ்டார்ட் பண்ணு…..நேரமாகுது பாரு…அங்க பொண்னு வீட்ல காத்துட்டு இருப்பாங்க…..லேட்டானா என்னமோ ஏதோன்னு தோணிடும்….இது நம்ம விருந்தாளி…….நம்ம கூட தூத்துகுடி வந்துட்டு வரட்டும்….திரும்பி வந்து அவங்க வீட்ல ட்ராப் பண்ணிக்கலாம் “ என மகனைப் பார்த்து கட்டளையாய் சொன்னவர்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.