(Reading time: 21 - 42 minutes)

னிச்சை செயலாய் அவளையும் மீறி நிமிர்ந்து பார்த்தாள் அந்த புன்னகைக்கு சொந்தக்காரனை….. முன்புறம் மட்டும் மேலும் கீழுமாய் சிலும்பி இருந்த கற்றை முடியும்….மாநிறத்துக்கும் சற்று மேலான அவன் நிறமும்…. தேவைக்கு மேலாக எதுவும் இல்லாத அந்த பெர்ஃபெக்ட் முகமும்….லைட் பீச் நிற ஷஅர்ட்டும்….க்ரீம் நிற பேண்ட்ஸும்…. இன்னும் அதே சிரிப்பும்…..மொத்தமாய் பார்க்கும் போதும் முதலில் சிரிப்பை மட்டும் பார்த்த போது வந்தே அதே உணர்வுதான் வருகிறது….

“நிலு…” அக்காவின் குரலில் சூழ்நிலை உறைக்க சட்டென குனிந்து கொண்டாள்……ஒரு வேளை அவன் நமக்கு தெரிஞ்சவனோ….? இல்லைனா நமக்கு ஹெல்ப் இவன் மூலமா வருமோ….அதான் பார்க்கவும் இப்படி நல்ல ஃபீலெல்லாம் வருதோ…..எப்படியும் கடவுள் என்னை கைவிடமாட்டார்…எவ்ளவு ப்ரேயர் பண்ணிருக்கேன்….

நினைத்துக் கொண்டே அக்காவைப் பின் தொடர்ந்தாள். அதுவரை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒரு அழுத்தம் மனதை விட்டு விலகியது போன்று இருந்தது அவளுக்கு….எப்படியும் இந்த கல்யாணம் நின்னுடும்…

அக்கா எந்த காலருகில் எல்லாம் நின்றாரோ அங்கெல்லாம் இவளும் நின்று ட்ரேயை நீட்டினாள்……இப்பொழுது ஒரு க்ரீம் நிற பேண்ட்ஸ்…..அவனோ? மீண்டும் பார்க்கத் தோன்ற…..கொஞ்சமே கொஞ்சோண்டு மில்லிமீட்டர் அளவில்  கண்ணுயர்த்திப் பார்த்தாள்….அவருக்கு 60 வயது இருக்கலாம்….சே… அவசரமாக தலையை குனிந்து கொண்டாள்…..

அடுத்து சிலரை தாண்டியதும்….மீண்டும் ஒரு க்ரீம் பேண்ட்ஸ்…..மெல்ல கண் நிமிர்த்தினாள்….இது அவனில்லை…..அதேநேரம் இவள் நீட்டிய காஃபியை மெல்ல எடுத்த அந்த இளைஞன் இவள் பார்வையை சந்தித்து….…சின்ன புன்னகையுடன் தேங்க்ஸ் அண்ணி… என்றான். இவள் பார்ப்பதை அவன் கவனித்து விட்டது தர்மசங்கடமாக இருக்க அவசரமாக அடுத்த ஆளைப் பார்த்துப் போனாள்.

 அடுத்து சில நீண்ட நிமிடங்களும் சில கப் காஃபிகளும் செலவான பின் மீண்டுமாய் அவள் கண்ணில் படுகிறது க்ரீம் நிற பேண்ட்ஸ்…..அதாவது அடுத்து இவள் அவனுக்கு கொடுக்க வேண்டியிருக்கும்….இவனைப் பார்க்க நிமிரவா வேண்டாமா? இவன் அவனா வேறவானா? போன முறை மாதிரி இவனும் இவள் பார்ப்பதை பார்த்துவிட்டால் என்ன செய்ய? இப்படி யோசனையுடன் மெல்ல நகர்ந்தவள் அவன் முன் சென்றடையவும்….

அவளையும் அறியாமல் ஒரு உந்துதலில் பார்வையை சற்று நிமிர்த்த….இந்த முறை ஏமாற்றமில்லை….அந்த அவன்தான்….. பாவை பார்வை அதுவாக இன்னும் உயர்கிறது….அவனும் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். முதலில் பார்த்தது போல் பளீர் புன்னகை இல்லை எனினும் இப்பொழுதும் முகத்தில் ஒரு இயல்பு புன்னகை குடி இருந்தது. இவள் அவனுக்கு ட்ரேயை நீட்டப் போக…..அக்கா மெல்ல இவள் கையை பிடித்தாள்.

அதுவரைக்கும் அக்கா சொல்லியிருந்த சீக்ரெட் கோட் எல்லாம் மறந்து போக, குனிந்திருந்த நிலையிலேயே  தலையை சற்றே திருப்பி அக்காவை ஓரக்கண்ணால் பார்த்து  என்ன என்பது போல் சிறிதாய் தலையசைத்து சைகையில் கேட்டாள் நிலவினி.

மற்ற யாருக்கும் இது ஒன்றும் தெரியப் போவதில்லை தான். ஆனால் இவள் எதிரில் இவளையே பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு தெரியும் தானே….நிலவினியுடன் நிற்கும் அந்த உறவுப் பெண்….சைகையில் இதுதான் மாப்பிள்ளை என சொல்ல முனைவதும்…. இவள் அது புரியாமல் முழிப்பதும்…..” நான் தான் யவ்வன்….நாம ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிறதுக்கும்……நம்ம மேரேஜ் ப்ரபோசல் பத்தி பேசுறதுக்கும் தான் இன்னைக்கு இங்க வந்திருக்கோம்…” அவளுக்கு பிடித்த புன்னகையுடன் பாம் ப்ளாஸ்ட் செய்தான் அவன். ஓ மை காட் இவன்தான் மாப்பிள்ளையா?

தொடரும்!

Episode # 02

Episode # 04

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.