(Reading time: 21 - 42 minutes)

நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டு….இந்நேரம் இங்க வந்து எனக்காக அந்த பிஎம் தலையில மாடியில இருந்து மாவாட்டுற கல்லை தூக்கி போட்டுறுக்க வேண்டாமா…? போடி பொறுப்பில்லாத பனமரம்…யூஸ்லெஸ் பொரஸ்….எனக்குன்னு யாருமே இல்லை….” கோபமாய் ஆரம்பித்து முடிவில் அழுகையின் ஆரம்பத்தில் நின்றது நிலுவின் குரல்….ஃபோனில் அவள் பவிஷ்யாவிடம்தான் குமுறிக் கொண்டிருந்தாள்…..

“என்ன நிலு இது…? பொண்ணு பார்க்கிற நாள்ல நான் வர்றதை எங்க வீட்டிலயும் விரும்ப மாட்டாங்க…உங்க வீட்லயும் விரும்ப மாட்டாங்கன்னு உனக்கு தெரியாதா?  இன்னைக்கு கை மாறத்தான போறாங்க……எங்கேஜ்மென்டுன்னாத்தான் நான் வரமுடியும் ….”

“புபலஸ் ஆர்னி…செர்கோபித்திசீடியே….ஈகுஸசினஸ்….நீ வர்றதுக்காக நான் இந்த அர்ஜென்டிவென்டர் கூட எனேஜ்மென்ட் வேற செய்யனுமா நான்?”

“அம்மா தாயே உலகநாயகி….எனக்கு ரொம்ப புரிஞ்சிட்டு….”

இதற்கு பதில் சொல்லும் முன் இவளிருந்த அறைக்குள் ஆள் வரும் சத்தம்…..இவள் முறைப்பாய் நிமிரும் போதே ஒரு கூட்டம் வருவது தெரிகிறது…..நடுவில் அந்த குண்டு குட்டை தங்கமணி  அத்தை……. எப்பொழுதும் எதெற்கெடுத்தாலும் உறவு இருக்கின்றது என்ற பேரில் இவளது அம்மாவையும் அப்பாவையும் குறைசொல்லிக் கொண்டே இருப்பார்… அவரோட அரை லூசுப் பையனுக்கு அத்தனை சொத்தையும் எழுதி கொடுத்துட்டு இவளை இனாமா தரனும்னு கேட்ட பெருந்தன்மையாளர்…. இவர் முன்னால அம்மா அப்பா தலை குனியுற மாதிரி எதையும் இவள் செய்து வைத்திட கூடாது…..

மாப்ளையத்தான துரத்தனும்…..மாப்ள வீட்டுக்காரங்கட்ட கூலா நடந்துக்கிறதுல ஒன்னும் தப்பு இல்ல…. அந்த நிமிடம் முடிவெடுத்தாள்.

கையில் இருந்த மொபைலில் காலை கட் செய்துவிட்டு  “எங்க வீட்டுக்கு ஒரு லோக்ஸோ‌டொன்டா வந்திருக்குது…..அதுக்கு இன்னைக்கு என் ஸ்பெஷல் காபில ஒரு கப் நிச்சயம் உண்டு….” குனிந்து மொபைலை பாராமலே மெசேஜ் டைப் செய்து அனுப்பி வைத்தாள் பவிஷ்யாவிற்கு…

அதற்குள் “வா நிலு….. உன்னை எல்லோரும் பார்க்கனும்ன்றாங்க……வந்து நான் யார் பக்கதுலல்லாம் போய் நிக்கனோ அவங்களுக்கு இந்த காபிய குடுத்துகிட்டே வா….” என்றபடி இவள் கையில் காஃபி கோப்பைகள் ஏந்திய ட்ரேயைக் கொடுத்தது இரு வருடம் முன்பு மணமாகி துபாய்  சென்றுவிட்ட பெரியம்மா மகள் தமிழினி…

“அக்கா…” அத்தனை சூழலிலும் இவளுக்கு படு ஆனந்தமாக இருந்தது…அக்காவைப் பார்த்து எவ்ளவு நாளாச்சு? இன்னைக்கு அக்கா வந்திருப்பதே இவளுக்கு தெரியாது…. “எப்படி வந்தடி தமிழ்க்காரி…?”

“ஷ்…மெதுவா …அப்றமா பேசுவோம்…..நான் நேத்து தான் தென்காசி வந்தேன்….இன்னைக்கு இங்க விஷேஷம்னு கேட்டதும் மாமா அத்தைட்ட உங்க அத்தான் கெஞ்சி கூத்தாடி பெர்மிஷன் வாங்கி கூட்டிட்டு வந்தாங்க… “

அத்தானுக்கு வேலை துபாயில் என்றாலும் அவரது பூர்வீகம் தென்காசி…..அக்கா அவளது அம்மா வீட்டிற்கு வர எத்தனை பேரிடம் பெர்மிஷன் வாங்க வேண்டுமாம்? ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்த நிலவினியின் மனம் இன்னுமாய் கொதிக்கிறது. உள்ளுக்குள் மிரண்டு போகிறாள் பெண்.

இப்பொழுது அந்த பெரிய வரவேற்றைக்குள் நுழையும் இடத்தில் கையில் சுமந்த ட்ரேயுடன் கலையும் மனதுடன் இவள். மனம் தாறுமாறாய் எங்கெங்கோ ஓட, கால் கூட எடையேறித் தோண…. எதோ ஒரு உணர்வில் சட்டென நிமிர்ந்து பார்க்கிறாள். வாசலின் பக்கவாட்டில் நிற்பதால் இவளால் அங்கிருப்பவர்களை பார்க்க முடிகிறதே தவிர…..அங்கிருப்பவர்களால் இவளை இப்போது பார்க்க முடியாது…..

அத்தனை கூட்டம் கண்ணில் தெரிகிறது….அவளையும் மீறி ஒருவித பயம்….முதல் செமினார்க்கு க்ளாஸ் முன்னால போய் நின்னப்ப வந்த பயம் மாதிரி….வைவாவோஸ் அப்ப தோணிய மாதிரி….ரோலர்கோஸ்டர்ல ஏறின மாதிரி….

“ஷ்….நிலு….குனிஞ்சுக்கோ….நிமிர்ந்து பார்க்காதே….தேவையில்லாம உனக்கு தான் டென்ஷனாகும்….மாப்பிள்ள பக்கத்துல வரவும் நான் உன் கையை பிடிப்பேன்….அப்ப மட்டும் நிமிர்ந்து பார்த்துக்கோ…”

அக்காவின் அட்வைசை அப்படியே பின் பற்ற தோணுகிறது இப்போது…… ஆனால் அந்த அர்ஜென்டிவேட்டரையும் நிமிர்ந்து பார்க்க போறதா இல்லை இவள். நினைத்தபடியே அவசரமாக குனியும் போது எதேச்சையாக கண்ணில் படுகிறது பக்கவாட்டு சோஃபாவில் இருந்தவனின் அரை முகம்….குனிந்து கொண்டிருக்கும் போது கவனித்ததால் மூக்கும் அதற்கு கீழுள்ள தாடையும் தான் கண்ணில் படுகிறது….பளீர் புன்னகையோடு யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான் அவன்…

ஏதோ என்னவெல்லாமோ அவள்மீது ஏறி அமுக்கிக் கொண்டிருந்தது போல் இருந்த அந்த சூழலில், கண்ணில் பட்ட அந்த புன்னகையில், இவள் சூழலுக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு விடுதலை இருப்பது போல் ஒரு உணர்வு…. என்னமாதிரி உணர்ந்தாள் என துல்லியமாக குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை அவளால்…ஆனால் தவிக்கும் மனதுக்கு இதமாய் …. மிரண்டிருக்கும் மனதிற்கு ஏதோ ஒருவகையில்  பாதுகாப்பாய்…. மறுவகையில் மிகவும் அந்நிய சூழலில் கண்ட, பழகிய ஒன்றாய்……

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.