(Reading time: 25 - 49 minutes)

ண்மையில் இந்த தார்கிகாவின் நோக்கம் பணம்தானா? என அலை பாய்கிறது இவளது ஆறாம் அறிவு….

“பயோசில இருந்து பணத்தை எப்படி நீ எடுக்கனும்..அதை எனக்கு எப்படி தரனும்… இன்பா எப்டி உன் கைக்கு வருவான்ற டீடெய்லை நாளைக்கு சொல்றேன்….” சொல்லிக்கொண்டு வந்த தார்கிகா சட்டென இணைப்பை துண்டித்துவிட்டாள்.

சற்று நேரம் அப்படியே நின்று போனாள் மனோ.

‘ஐயோ அண்ணி சேஃபா இருக்கனுமே….இப்பவே இவ்ளவு பயந்தாங்களே….. என மனம் ஒரு பக்கம்  பதறுகிறது எனில்…. தார்க்கிகாவோட டார்கட் யாரு? இன்பாவா இல்லை இவளா? என கேட்கிறது இன்னொரு பக்கம்….

இப்படி எண்ணியவள், முதல்ல இந்த தார்கிகா சொன்ன மாதிரி நிஜமாவே இவளை மானிடர் செய்றாளா என தான் இருந்த அறையை பரபரவென நோட்டமிட்டாள். எங்கும் எதுவும் வித்யாசமாக படவில்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

ஆனாலும் அப்படி மானிடர் செய்யப் படவில்லை என நம்பவும் முடியவில்லை….. செய்வது தார்கிகா இல்லை, மண்டை கணத்த மாசிரன் ஆயிற்றே….. அவன் எந்த அளவுக்கு டெக்னிகலி மானிடர் செய்வான் என மனோவுக்கு புரிதல் இருக்கிறது…..

‘கிட்டதட்ட 6 வருஷமா சந்தேகமே வராம மித்ரனை கண்காணிச்சிறுக்கான்…. இப்பவும் ஸ்விஸ்ல போய் ஆக்சிடென்ட் செட் செய்துறுக்கான்…. ஆக எங்கு இருந்து எப்படி கண்காணிக்கிறானோ’ என்றும் இருக்கிறது….

 இருந்தாலும் மித்ரனிடம் விஷயத்தை சொல்லிவிட்டால் என்ன என தடதடத்து தவிக்கிறது உள்ளம்…. ஆனால் அதன் பின் விளைவு இன்பாவின் மேல் என்னதாய் இருக்கும்….. என்ற நினைவு ஏறுமாறாய் மிரட்டுகிறது.

நாளை வரை பல்லைக் கடித்துக் கொண்டு காத்திருப்பதை தவிர இவளுக்கு வேறு வழி இல்லையோ…? இறுகி இருந்த உடலையும் மனதையும் இழுத்துப் போய் தூங்கும்  மித்ரன் அருகில் படுக்கையில்  அமர்ந்தாள். அவன் அருகாமையாவது இவளை அடித்து துவைக்கும் அலைகழிப்பை குறைக்குமா?  

சட்டென தோன்றுகிறது  ‘என்னை யாருக்கும் தெரியாம பணம் எடுக்க வச்சு…..அத காமிச்சே  என்னை யார்ட்டயும் மாட்டிவிடப் பார்க்காளா இந்த தார்கிகா??.....யார்ட்ட மாட்டிவிட? மித்ரன் அம்மாட்டயா…..? ஆனா அதனால தார்கிகாவுக்கு என்ன ப்ரயோஜனம்…..

 ஒரு வேளை மித்ரன்ட்டயா…… ? எங்க ரெண்டு பேரையும் பிரிக்க ப்ளான் செய்றாளா? மித்ரன் தான் தார்க்கிகாட்ட இவள கேர்ஃபுல்லா இருன்னு முதல்ல சொன்ன ஆளே….அவனே இவளை நம்பாம தார்கிகா திட்டத்துல ஏமாறுவனாமா?....

இப்படி ஓடிய இவள் மனம் அப்பொழுதுதான் இதை உணருகிறது……கல்யாணம் முடிந்து வந்ததும் வராததுமாய் இவள் என்ன செய்து வைத்திருக்கிறாள்….? பிடிவாதம் பிடித்து மித்ரன் வீட்டு பயோசியை கையில் எடுத்துறுக்கிறாள்…. அடுத்து இப்படி பணத்தை வேறு எடுத்தால்…?? மித்ரன் இவளை நம்புவானா? அவன் பணத்துக்காக எத்தனை பேர் எத்தனை விதமா அவனை சுத்தி நாடகம் ஆடிருக்காங்க… இவளையும் அப்டித்தான்னு அவன் நினச்சுடுவானா?

ஒரே ஒரு நேனோ செகண்ட் திக் என்றாலும் அடுத்த நொடி அவள் நினைவை நினைத்து அவளுக்கு சிரிப்பு வந்தது….ஆம் அத்தனை சூழலிலும் மனோவுக்கு தன் நினைவு குறித்து சிரிக்கத்தான் தோன்றியது…..அத்தனை அபத்தமாய் பட்டது அது…..

இவள் வாய் திறக்கும் முன்னமும் இவள் வாயின் வார்த்தைகளை அறிந்து கொள்பவன் அவன்….நிமிர்ந்து இவளைப் பார்க்காமலே இவள் நினைவுகளை புரிபவன்….அவனாவது இவள சந்தேகப் படுறதாவது…..

பயோசி சி இ ஓ ஆகப் போறேன் என இவள் பிடிவாதம் பிடித்த போது இவள் பாதுகாப்பை குறித்து மட்டும் அவன் அக்கறைப்பட்டது ஞாபகம் வருகிறது இவளுக்கு…. ஏன் மித்ரன் குடும்பத்து மொத்த சொத்தான நேஷன் க்ரூப்ஸையே மனோ பொறுப்பில் விடலாம் என இன்பா சொன்னதுக்குமே மித்ரன் பாதுகாப்பை தவிர எதை பற்றியும் சிந்திக்கவே இல்லையே….

சில விஷயங்கள் நம் அறிவுக்கு தெரிந்துதானிருக்கும்…..ஆனாலும் அதை உணர்ந்து கொள்ளுதல் என்பது வேறு நிலை…..அப்படித்தான் மனோவுக்கு அவனது இவள் மீதான நம்பிக்கை பற்றி ஏற்கனவே தெரியும்தான்……ஆனாலும் அதன் அளவை இந்த நொடி அதன் அடி அகலத்துடன் முழுவதுமாய் உணர்ந்தாள்…..

அவளையும் மீறி தூங்கும் தன்னவன் மீது சென்று அமர்கிறது அவளது கரம். அவனிடத்தில் சற்று அசைவு…..அவன் தூக்கம் கலைகிறதோ…சட்டென தன் கையை எடுத்துக் கொண்டாள்.

ஆனால் அவனோ சற்று முன் வரை இவள் படுத்திருந்த இடத்தை கண்கூட திறவாமல் கை நீட்டி துழாவினான். அதாவது தூக்கத்திலும் இவளை தேடுகிறான்…..அவசரமாய் அவளிடத்தில் படுத்துக் கொண்டாள்.

இதில் இவள் மீது அவன் கைபட அடுத்த நிமிடம் இவளை தன்னோடு இழுத்து சேர்த்திருந்தான் அவன்….

இப்போதெல்லாம் ஒவ்வொரு நொடியும் அவன் அருகாமையில் அவள் அனுபவிக்கும் இன்ப கிளர்வும், இனிய தவிப்பும், பரவச படபடப்பும் எதுவும் இப்போது தோன்றவில்லை….அவளை சூழ்ந்து பொதிந்திருந்த அவன் கைக்குள் அசையாமல் அப்படியே கிடந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.