(Reading time: 25 - 49 minutes)

த்தனை நேரம் அந்த கனவின் பாதிப்பிலும், அடுத்து வந்த இந்த இன்பா கடத்தலிலும் கலங்கி, கணத்து, வலித்து இருந்த மனம் எடை இறங்கி எப்படியோ இலகுவாய்…..

‘இன்பாவை பத்திரமா மீட்ட பிறகு இந்த விஷயத்தை இவ மித்ரன்ட்ட சொல்றப்ப எந்த ஆதாரம் இல்லைனாலும் அவன் இவள நம்புவான்… இவள நம்பி தார்க்கிகா க்ரூப்பை கண்டிப்பா பிடிப்பான்…..

இப்ப முக்கியம் இன்பாவ காப்பாத்றதுதான்….. இதுக்கு இடையில் இன்பா பத்ரமா தப்பிச்சு வர்றதுக்கு முன்னமே, மித்ரன்ட்ட இன்பா விஷயத்தை தார்க்கிகாக்கு தெரியாம சொல்ல சான்ஸ் கிடச்சா சொல்லிடனும்….. இல்லனாலும் மித்ரன் இவளை பத்தி என்ன நினைப்பான்னு பதற அவசியம் இல்ல….’ முடிவுக்கு வந்தாள்.

அன்று இரவு முழுவதுமே மனோ தூங்கினாள் என்று இல்லை…..எப்போது விடியும்? அடுத்து என்ன என்ற பரிதவிப்பில் எப்படி தூங்க முடியும்?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

காலையில் விழித்தெழுந்த மித்ரனோ நேற்று ஒவ்வொன்றையும் தானே செய்வேன் என்று நின்றவன் இன்று ஒன்றோன்றுக்கும் இவளை நாடினான்…..

சின்னதோ  பெருசோ எல்லாத்துக்கும் மனுப் பொண்ணு வர வேண்டி இருந்துது அவனுக்கு….. இத்தனைக்கும் நேற்றைவிட தெளிவாய்  பலமாய் இருந்தான்….

‘நீங்க என் கண்ணுக்குள்ளே இருக்கனும் போல இருக்கு’ என்ற இவளது வார்த்தை காரணம் எனப் புரிந்தது மனோவுக்கு….

அதோடு அவன் இவளை நாடுவது இயல்பல்லவா….?!!!!

இவளுக்குமே அவனோடு இருப்பதில், அவனுக்கு செய்வதில்தான் மனம் ஓடுகிறது…. ஆனால் உள்ளே இன்பா நிலை குறித்து இடுங்கி நடுங்குகிறது உயிர்….

‘எப்ப தார்கிகா கூப்டுவா? எங்க வரச் சொல்லுவா? என்ன செய்ய வேண்டி இருக்கும்…தெய்வமே அண்ணிய பத்ரமா திருப்பி கொடுத்துடு….’ நொடிக்கு நொடி வேண்டிக் கொண்டாள்.

அடுத்து தார்கிகா இவளை கூப்பிடும் போது, கட்டிலில் முதுகு சாய்த்து அமர்ந்திருந்த இவளவன் காயம்படா தோளோடு தோள் சாய்ந்து, இவளுக்கு பிடித்தமான ஒரு தமிழ் நாவலை அவனுக்கு வாசித்துக் காண்பித்துக் கொண்டிருந்தாள் மனோ.

அதாவது அவன் ஆசையாய் கேட்டதை செய்து கொண்டிருந்தாள்… ஆனால் அதன் சுகம் அனுபவிக்காமல் உள்ளுக்குள்ளோ ஒவ்வொரு நொடியும் வெந்து கொண்டிருந்தாள்.

பாக்கெட் உள்ள குர்தி அணிந்து அதில் வைப்ரேஷன் மோடில் மொபைலை போட்டு வைத்திருந்தவள்…..அதிர்வு உணர்ந்து அவசரமாய் அவன் முகம் பார்த்தாள்.

அழைப்பது தார்கிகாவாய் இருக்கும் என்பது இவளது யூகம்….அவன் முன் இணைப்பை ஏற்க முடியாதே…..

“ஒரு நிமிஷம் மனுப்பா…” என்றபடி பாத்ரூம் சென்று இணைப்பை ஏற்றாள்.

“உன் லேப்டாப்பை மட்டும் எடுத்துட்டுவா……நீ எங்க வரனும்னு இப்ப சொல்வேன்…..அதுக்கு முன்னால நான் சொல்றத அப்டியே நீ கேட்கனும்…..” என சொன்ன தார்கிகா, அடுத்து சொன்ன கட்டளையில் தான் கடுமையாய் கொதித்துப் போனாள் மனோ.

“இப்ப நீ மித்ரன்ட்ட போய் உங்களுக்கு ஜூஸ் எடுத்துட்டு வரேன்னு சொல்லு…”

‘ஃபீவர் வந்து போய் இருப்பதால் அவ்வப்போது அவனுக்கு ஜூஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறாள் தான்….. ஆனாலும் திடுதிப்பென இப்படி சொன்னால் சரி என்பானா இல்லை புத்தகத்தை கன்டின்யூ செய்யுன்னு சொல்வானா?....’ என்ற நினைவுடன் இவள் நிற்க….

“நான் லைன்ல இருந்து அடுத்து என்ன செய்யனும்னு சொல்லிட்டே இருப்பேன் நீ போ….” என ஏவினாள் தார்கிகா….

மொபைலை அப்டியே பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வெளியே வந்தாள் மனோ…

பெட்டில் உட்காந்திருந்தவன் இவள் முகத்தை ஆவலாய் எதிர் நோக்கினான்….

“நான் போய் ஜீஸ் எடுத்துட்டு வரேன்….” இயல்பாய் அதை சொல்லி முடிக்கும் முன் படாதபாடு பட்டுப் போனாள் இவள். அவனிடம் நடிப்பதென்பது சாதாரணமாக இருக்கிறதாமா என்ன?

“ரெண்டு பேருக்குமா கொண்டு வா மனு….உன்னை பார்க்கவும் ரொம்ப டயர்டா தெரியுது…..” என சம்மதித்தவன்

“எதுக்கெடுத்தாலும் உன்னையவே கூப்ட்டு ரொம்ப கஷ்டபடுத்துறனோ மனு…?” என்றபோது அவன் குரலில் அதீத அக்கறை இருந்தது.

அப்படியே அவனிடம் ஓடிப் போய் அவளுக்கு பிடித்த வேலையான அவனது முன் உச்சி முடி கலைத்து “அப்படில்லாம் எதுவும் இல்ல மனுப்பா….” என சொல்ல விரும்பிய மனதை….. அப்படியே அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு ‘அண்ணிய கிட்நாப் பண்ணிட்டாங்க…..காப்பாத்துங்க மனு’ என கதற விரும்பிய கணத்த இதயத்தை கடிவாளம் போட்டு கட்டுப் படுத்தினாள்.

இருக்கும் மன நிலையில் அவன் அருகில் போனதும் இவள் என்ன செய்து வைப்பாளோ….இல்லை சொல்லி விடுவாளோ…

“சே அப்டில்லாம் இல்ல மனுப்பா….எனக்கு இப்டி எல்லா நேரமும் உங்க கூட இருக்க ஆசையாதான் இருக்கு….” என சொல்லி கிளம்பும் அடையாளமாக சின்னதாய் தலையாட்டி விடை பெற்றாள்.

தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்த பின் மொபைலை மீண்டும் காதுக்கு கொடுத்தாள்…..

“களஞ்சியம் ஆன்டி ரூம்க்கு போ” என்று வந்தது தார்கிகாவின் கட்டளை.

சென்றாள் மனோ…. ‘அவங்களப் பார்த்தா என்ன சொல்ல…..மனுவ இன்னும் கூட வந்து பார்க்கலை… அவ்ளவு விலகி இருக்கவங்களை இவளா தேடிப் போனா என்ன நினைப்பாங்க….” என்ற நினைவு துணை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.