(Reading time: 22 - 43 minutes)

சுசீ..மதி எப்படி இருக்கிறாள்?குப்த இளவரசன் ஹஸ்தனை நினைத்து மிகவும் மனம் வாடி விட்டாளா?ஒரு வாரமாய் அவள் சரியாக உணவும் உண்ணவில்லை போலும்..என்னையோ அவளது தந்தையையோ ஏன் சுந்தரனையோ கூட சந்திக்கவும் விரும்பவில்லை.நாங்களாய்ச் சென்று அவளைச் சந்தித்தாலும் சரியாய்ப் பேசுவதில்லை.அப்படிச் சொல்லும் போதே அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

மகா ராணி...சுசீயின் குரலில் வியப்பு...

எனக்கு மதியின் மனதிலிருப்பது எப்படித் தெரியும் என வியக்கிறாயா?

சுசீயால் ராணியின் கேள்விக்கு பதிலே சொல்ல முடியவில்லை...மகா ராணி...அது வந்து..அது வந்து...

எனக்கு எல்லாம் தெரியும் சுசீ..விமலாதித்தன் கொலையுண்ட அன்று குப்த இளவர்சன் ஹஸ்தன் கைது செய்யப்பட்டானல்லவா அன்று என் மகள் மதியைப் பார்க்க அவள் அறைக்கு வந்தேன் அப்போது அவளுக்கு உனக்கும் இடையே நடந்த உரையாடலைக் கேட்டேன்.அப்போது மதி ஹஸ்த குப்தன் மேல் கொண்டிருக்கும் விருப்பத்தை அறிந்து கொண்டேன்.அவள் உன்னிடம் பேசிய பேச்சுக்கள் எனக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது சுசீ..நான் என்ன செய்வேன் சுசீ..என்ன செய்வேன்?ஹஸ்தன் யார்?அவன் எங்கோ இருக்கும் குப்த ராஜியத்தின் இளவரசன் என தன்னைச் சொல்லிக்கொள்கிறான்.இனம் மதம் மொழி பண்பாடு நாகரிகம் பழக்க வழக்கம் அனைத்திலும் வேறு பட்டவன். ..நம்மோடு இவை அனைத்திலும் சமமாக இருக்கும் அண்டை தேசத்து இளவரசர்கள் பலர் இருக்கையில் அவர்களில் ஒருவனைத் தேர்ந்தெடுக்காமல் சம்பந்தமில்லாத ஒருவனைத் தேர்ந்தெடுத்தால் நம் மன்னரின் கவுரவமும் பாண்டிய நாட்டின் பெருமையும் என்னாகும்?இனிமேல் ஆவதற்கு என்ன இருக்கிறது?சோழ இளவரசன் நம் பாண்டிய நாட்டில் கொலை செய்யப்பட்டிருப்பதன் மூலம் மன்னரின் கவுரவமும் பாண்டியனாட்டின் பெருமையும் பாழ்பட்டுப் போய்விட்டது.அதற்கு மதி விரும்புவதாகச் சொல்லும் இந்த ஹஸ்த குப்தனே காரணம்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்...

கொலை குற்றம் சாட்டப் பட்டு சிறையில் மரண தண்டனைக் கைதியாக இருக்கும் ஒருவனை நினைப்பதும்..நினைத்து வருந்துவதும் அறிவுள்ள செயலாய் ஆகாது. மதியின் தந்தையாகிய மன்னர் தன் மகளின் இந்த நினைப்பை அறிந்தால் எவ்வளவு வேதனைப் படுவார்?நல்ல வேளையாக மகளின் விருப்பத்தை அவர் இன்னும் அறியவில்லை.இவளின் விருப்பம் நிறைவேறக் கூடிய காரியமா?நீயே சொல் சுசீ..மதியைப் பெற்றவளாகிய நான் இவ்விஷயத்தில் என்ன செய்வேன்?என்ன செய்வேன்..?மன்னரின் வேதனைக்கு மருந்தாக இருப்பேனா?மகளின் விருப்பம் நிறைவேற துணையாக நிற்பேனா?சோழ இளவரசன் விமலாதித்தனின் உயிரற்ற உடலை சோழ மன்னரிடம் ஒப்படைக்கச் சென்றவர்கள் நேற்றிரவு திரும்பிவிட்டார்கள். மகனின் உயிரற்ற உடலைக் கண்ட சோழ மன்னன் கதறிய கதறல் மனதை உருக்குவதாக இருந்ததாம்.சோழ நாடே கலங்கிப்போய் உள்ளதாம்.சோழ மன்னன் வெகுண்டெழுந்து பாண்டிய நாட்டின் மீது போர் தொடுப்பேன் எனச் சூளுரைத்தானாம்.?அதோடு கூட தன் மகனைக் கொன்ற கொலையாளியைத் தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டுமென்றும் அவனுக்குத் தன் கையாலேயே மரணத்தை அளிப்பேன் என ஆத்திரம் கொண்டு அறிவித்தானாம்.அத்தோடு இன்னொன்றையும் சோழன் செய்வேன் எனச் சத்தியம் செய்தானாம்..சுசீ..அது அது..அக்கம் பக்கத்து நாடுகளின் உதவியோடு நம் நாட்டின் மீது போர் தொடுத்து நம்மை வீழ்த்தி இளவரசி மதியை சிறையெடுப்பானாம்.இது பாதிக்கப்பட்ட அரசர்கள் பொதுவாய்ச் செய்யக்கூடியதுதான்.அப்படி ஏதும் நடந்து விட்டால்..நடந்து விட்டால்.அப்புறம் நம் மதியின்.. என் மகளின் கதி?

நம் மன்னர்க்கும் சோழனின் இந்த முடிவால் மிகுந்த அச்சம் தோன்றியுள்ளது.மிகவும் கலக்கமாகக் காணப்படுகிறார்.இப்படிச் சொல்லும் போது மகாராணி ருக்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.கேவல் வெளிப்பட்டது.சுசீயின் கண்களிலும் கண்ணீர்.சிறிது நேரம் அங்கே மௌனமே ஆட்சி செய்தது.

இத்தனை நேரம் நா தழுதழுக்க அழுதவாறு பேசிக்கொண்டிருந்த மகாராணி திடீரென கணீரென்று உறுதியான குரலில் பேச ஆரம்பித்தார்.இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டவேண்டும் சுசீ..என் மகள் துன்பப்படுவதை காண எனக்குச் சகிக்காது.வேற்று நாட்டினன் மதியைக் கவர்ந்து செல்வதை நான்  அனுமதியேன்.   இப்பாண்டிய நாட்டில் சோழனுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டு விட்டது.இதனை மறுக்க முடியாது.அதன் காரணமாய் என் மகளை இழக்க நான் தயாராய் இல்லை.என் மகளைக் காப்பாற்றும் பொறுப்பு என்னுடையது.என் கணவராகிய மன்னருக்கும் இப்பொறுப்பு உண்டென்றாலும் நான் எடுக்கப்போகும் முடிவினை அவர் கட்டாயம் ஏற்கமாட்டார்.தன் உயிரினும் உயிரான மகளே ஆயினும் மதியின் விருப்பத்திற்கு அவர் உடன்பட மாட்டார்.கணவர் எவ்வழி செல்கிறாரோ அவ்வழிதான் மனைவியின் வழியுமாகும் என்பதை நானறிவேன்.ஆனால் இதில் என் மகளின் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.கணவரின் முடிவுக்கெதிராய் எதனையும் செய்யவோ அவர் அறியாமல் எச் செயலையும் நிறைவேற்றவோ எனக்குச் சிறிதும்விருப்பம் இல்லை.ஆயினும் என் மகளுக்காக இச் செயலைச் செய்ய என் மனம் விழைகிறது.இரவு முழுதும் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.அந்த முடிவின் படியே நான் நடக்கப் போகிறேன்.எனக்கு உன் உதவி வேண்டும் சுசீ...செய்வாயா..?என்று இறைஞ்சுவது போல் மகாராணி கேட்கவும் அப்ப்டியே தவித்துப் போய்விட்டாள் சுசீ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.