(Reading time: 22 - 43 minutes)

வைத்தியரே..நான் சொல்லப்போகும் இவ்விஷயம் மிக முக்கியமானது..நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாது..

சொல்லுங்கள் மகாராணி...

வைத்தியரே..நான் செய்யப்போகும் ஒரு செயலுக்காக நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்..

உதவி என்று சொல்லாதீர்கள் மகாராணி...ஆணையிடுகிறேன் என்று சொல்லுங்கள்..எங்கள் பரம்பரையே இந்த பாண்டிய அரச குடும்பத்தின் அடிமைகள்.. விசுவாசிகள்..இந்த உயிரும் உடலும் இன்னாட்டிற்கே சொந்தம்..அப்படியிருக்க நீங்கள் சொல்வதைச் செய்வதை விட மகிழ்ச்சி வேரொன்று உள்ளதா என்ன..?

காத்திருக்கிறேன் மகாராணி...

அடுத்து மகாராணி ருக்மா தன் திட்டத்தை அவரிடம் சொல்லச் சொல்ல வைத்தியரின் முகத்தில் வேதனை, பயம்,பீதி மூன்றும் மாறி மாறித் தோன்றி மறைந்தது.உடல் வியர்த்துப் போயிற்று.நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

சொல்லி முடித்து விட்டு மகாராணி அவர் முகத்தைப் பார்க்க..வியர்த்துப்போய் அமர்ந்திருந்தார் அவர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "விடியலுக்கில்லை தூரம்.." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

வைத்தியரே..வைத்தியரே...மகாராணி அழைத்ததும் சுய நினைவுக்கு வந்தார் வைத்தியர்.

ம..ம..மகாராணி..அடிமை நான் இவ்வாறு பேசுவதைத் தாங்கள் தவறாக எண்ணுதல் கூடாது..இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னியுங்கள் மகாராணி..தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவது அவ்வளவு எளிதான காரியமாய்த் தங்களுக்குத் தோன்றுகிறதா?அதுவும் மன்னருக்குத் தெரியாமல் செயலாற்றுவது எங்கனம்?

இவ்விஷயம் பற்றி மன்னர் அறியவந்தால் என்னாகும்?மன்னர் அறியாது இப்படியொரு காரியம் செய்வது அவருக்குச் செய்யும் துரோகம் ஆகாதா?இது சின்ன விஷயம் இல்லை மகாராணி.பாண்டிய நாட்டின் பழம் பெருமையும் மேன்மையும் மன்னரின் கௌரவமும் இதில் அடங்கி இருக்கின்றன.இப்படி ஒரு காரியத்தைச் செய்வதன் மூலம் இவை அனைத்தும் பாழ்பட்டுப் போகாதா?அடிமை நான் மிக அதிகமாகப் பேசுவதாய் நினைக்கவேண்டாம் மகாராணி.இவ்விஷயத்தில் தாங்கள் உறுதியோடு இருப்பின் நானும்

இவ்விஷயத்தில் என்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆயத்தமாகவே உள்ளேன்.

ஆம் வைத்தியரே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான்.தாங்கள் சொன்ன அனைத்தையும் நானும் யோசித்தேன்.ஆனாலும் என் மகளின் வாழ்க்கையையும் நாம் கொஞ்சம் சிந்தித்துப்பார்க்கவேண்டும். விதியின் காரணமாய் நடந்துவிட்ட இப்பெரும் துயரின் பொருட்டு என் மகளின் எதிர்காலம் பாழாவதையும் எதிரியின் கைசேர்ந்து அவள் துன்பப்படுவதையும் நான் எங்கனம் பார்த்திருப்பேன்?மன்னரும் இதை சிறிதும் பொறுக்கமாட்டார் என்றாலும் என் முடிவையும் அவர் ஏற்கமாட்டார்.நான் மனமறிந்து அவருக்கு துரோகம் செய்யவில்லை.என் மகளின் வாழ்க்கையைக் காப்பாற்றவும் அவளின் விருப்பத்தை நிறைவேற்றவுமே இச்செயலைச் செய்யத் துணிகிறேன்.பல முறை ஆழ்ந்து சிந்தித்தே இச்செயலில் இறங்கியுள்ளேன்.எனவே செய்யும் இச் செயலால் ஏற்படும்  விளைவுகளைச் சந்திக்கவும் துணிந்துவிட்டேன் என்றார் மகாராணி...

மகாராணி தங்களின் இத் துணிவு கண்டு நான் வியக்கிறேன்..நானும் தங்களின் முயற்சியில் தங்களுக்கு உறுதுணையாய் இருப்பேன் என உறுதியளிக்கிறேன்.எத்தகைய துன்பம் வந்தாலும் ஏற்பேன்.... 

நன்றி..மிக்க நன்றி வைத்தியரே...

இப்போது நான் என்ன செய்ய வேண்டு மகாராணி... சொல்லுங்கள் செய்ய சித்தமாய் உள்ளேன்..

வைத்தியரே..இன்னும் சிறிது நேரத்தில் நான் அந்த அந்தணரைச் சந்திக்க உள்ளேன்..அவரை சிறைக்கு அனுப்பி ஹஸ்த குப்தனிடம் பேசவைத்து கொலை நடந்த இடத்தில் என்ன நடந்ததென்ற விபரத்தையும் ஹஸ்தன்தான் கொலைகாரனா என்பதையும் அவன் விமலாதித்தனைக் கொலை செய்யக் காரணம் என்ன என்பதையும் அப்படி அவன் கொலை செய்யவில்லை எனில் வேறு யார் அக்கொலைக்குக் காரணம் என்றும் அறிந்து வரச் செய்யப்போகிறேன்.

மகாராணி..சிறைச் சாலைக்குச் செல்வது அவ்வளவு எளிதல்லவே?சிறைச்சாலையைச் சுற்றிக் கடுமையான காவலல்லவா இருக்கும்?அதைத் தாண்டிச் செல்வது மகாராணியான தங்களுக்கும் கூட எளிதல்லவே?

அப்படியிருக்க அந்த அந்தணர் சென்றுவருவது எப்படிச் சாத்தியம்?

ஆம் வைத்தியரே நீங்கள் சொல்வது சரிதான்..ஆனால் நான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டேன்.

இதனை மன்னரும் அறியமாட்டார்.....இப்படி மன்னர் அறியாவண்ணம் எதையும் செய்ய என் மனம் ஒப்பவில்லைதான் ஆனாலும் அப்படியொரு நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டுள்ளது என் விதிதானேயன்றி வேறென்ன?

மகாராணி....அந்தணரிடம் குப்தன் உண்மையைத்தான் சொல்வான் என்பதை எப்படி நம்புவது?கொலைகாரன் உண்மையை ஒப்புக்கொள்வானா?கொலை செய்த எவன்தான் ஒப்புக்கொள்வான்?தன்னை நிரபராதி என்றுதானே சொல்வான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.