(Reading time: 22 - 43 minutes)

காராணி..என்ன இது..நீங்கள் இப்படிக்கேட்பதா?ஆணையிடுங்கள் மகாராணி..இந்த அரச குடும்பத்து அடிமை நான்..இந்த உடலும் உயிரும் இந்த நாட்டுக்கே உரியவை.நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதையே செய்வேன்.அதன் பொருட்டு என் உயிரே போனாலும் சரி..கட்டளையிடுங்கள் மகாராணி...

அடுத்த சிறிது நேரம் மகாராணி தானும் சுசீயுமாய் செய்ய வேண்டியவை என்ன என்ன என்பதை விரிவாக எடுத்துச் சொன்னபோது..அப்படியே ஆடாமல் அசையாமல் கேட்டுக்கொண்டிருந்த சுசீ சிலையாகியவள் போல அமர்ந்திருந்தாள்.ஒரு தாயின் மனம் இப்படித்தான் இருக்குமோ?தாய்மைக்கு ஈடானது இவ்வுலகில் ஒன்றுமே இல்லை என்று சொல்வது எப்பேர்ப்பட்ட உண்மை..?தன் இரு கைகளையும் கூப்பி மகாராணி ருக்மாவை வணங்கினாள் சுசீ.அப்போது அவரை அவளுக்கு மகாராணியாய்த் தெரிய வில்லை.தாய்மையின் மொத்த உருவமாகவே தெரிந்தார்.

சரி மகாராணி..அவர்களே..இதோ இக்கணத்திலிருந்து உங்கள் கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்கிறேன்.அதில் கொஞ்சமும் பின்வாங்க மாட்டேன்.என் உயிரே போனாலும் உங்களின் ஒவ்வொரு செயலிலும் உங்களுக்கு உறு துணையாக இருப்பேன் என உறுதி கூறுகிறேன்.சத்தியம் செய்கிறேன் மகாராணி.இதோ புறப்படுகிறேன்...இனி சுசீ உங்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வரை ஓயமாட்டாள்.

விடை கொடுங்கள் மகாராணி..தலை தாழ்த்தி வணங்கி விடை பெற்றாள் சுசீ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

இனி ஒவ்வொரு அடியையும் வெகு ஜாக்கிரதையாக வைக்க வேண்டும்..மிகக் கவனமாகச் செயல் படவேண்டும் பிறருக்குத் தன் மீது எவ்வித சந்தேகமும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவோடு அங்கிருந்து அகன்ற சுசீ முதலில் சந்தித்தது அரண்மனை வைத்தியரையும்.அடுத்து ஹஸ்த குப்தனுக்கும் மன்னர் அதிவீரனுக்குமிடையே நடந்த உரையாடலை மொழி மாற்றம் செய்த அந்தணரையும்தான்.இருவரையும் மகாராணி சந்திக்க விரும்புவதாகச் சொன்ன போது அவர்களுக்கு ஒரே வியப்பு.அதிலும் ரகசியமாய் சந்திக்க விரும்புவதாகச் சொன்னதும் அவர்களின் வியப்பு பன் மடங்கானது.

மகாராணி காத்திருந்த ஒரு ரகசிய இடத்திற்கு அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று விட்டபிறகு பரபரப்பானாள் சுசீ.

அடுத்து.. முதல் நாள் ஹஸ்த குப்தன் சிறைக்கு அனுப்பப் பட உள்ளதாகவும் அங்கே அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவன் உடல் நிலை சீரானதும் மன்னர் அவனுக்கு மரண தண்டனை அளிக்கவிருப்பதாகவும் விபரம் சொன்ன போர்வீரன் காளியை சந்தித்தாள்.அவனிடம் சிலவற்றைச் சொல்லி பலவற்றைச் சொல்லாமல் விட்டு மகாராணியின் பொருட்டு தான் செய்ய எடுத்திருக்கும் முயற்சிக்கு உதவும் படி கேட்டபோது சுசீ உன்னோடு வாழ்க்கை முழுதுமே நிழலாக வரவிரும்பும் நான் இக்காரியத்தில் உன்னோடு வர மறுப்பேனா என்ன..?உன் நிழலாய் நான் இருப்பேன் என உறுதி கூற தக்க சமையத்தில் அவனின் உதவியை நாடுவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.

ப்படிக் கிளம்பியவள்..காளீ... இன்னொன்றையும் உன்னிடம் கூற வேண்டும் எக்காரணம் கொண்டும் உயிரே போகும் தருணத்திலும் கூட நாம் மகாராணிக்காக இவ்வேலையைச் செய்கிறோம் என்பதை எவரிடமும் கூறிவிடாதே..என்னிலையிலும் ராணியின் பெயர் வெளிவருதல் கூடாது.மன்னரே கேட்டாலும் சொல்லுதல் கூடாது..இளவரசி மதியும் இது பற்றி அறியக்கூடாது என் கையடித்து சத்தியம் செய் காளி...

அவனும் அவள் கைமீது தன் கைவைத்து சத்தியம் செய்ய சுசீ.மீண்டும் மகா ராணியைக் காண அவரின் இருப்பிடம் நோக்கிச் சென்றாள்.

மகாராணி ருக்மாவைச் சந்திக்க ரகசிய இடத்திற்கு சுசீ கொண்டு விட்டதும் அரண்மனை வைத்தியர் முதலில் உள்ளே அழைக்கப்பட்டார்.

வணக்கம் மகா ராணி அவர்களே..

வாருங்கள் வைத்தியரே...ஒரு முக்கியமான பணிக்காகவே உம்மை அழைத்தேன்....

காத்திருக்கிறேன் மகாராணி அவர்களே..கட்டளை இடுங்கள்...

அதற்கு முன் ஒரு விஷயம் சொல்லுங்கள் வைத்தியரே...விமலாதித்தனைக் கொன்றதாய் பழி சுமத்தப்பட்டு சிறையிலிருக்கும் குப்த இளவரசன் ஹஸ்த குப்தனின் உடல் நிலை எப்படி உள்ளது?அவன் பிழைத்துக் கொள்வானா?ஏதும் பேசுகிறானா?

ஆம் மகாராணி..அவன் பிழைத்துக்கொண்டான்..அவன் உடல் நிலையும் தேறி வருகிறது.ஆனால் இன்னும் எழுந்து அமரமுடியாத நிலையில்தான் உள்ளான்.விரைவில் சரியாகிவிடுவான்.அடிக்கடி ஏதோ சொல்லிப் புலம்புகிறான்.ஆனால் மொழி தெரியாமையால் அவன் சொல்வது எனக்குப் புரியவில்லை...

நேற்று கூட மன்னரைச் சந்தித்து இது பற்றிக் கூறினேன்..அவர் நாளை அவனைப் பார்க்க சிறைக்கு வரவிருப்பதாகவும்..அப்போது நானும்...அவனோடு பேசக்கூடிய அவனின் மொழி தெரிந்த அந்த அந்தணரும் உடனிருக்க வேண்டும் என்றும் விமலாதித்தனின் கொலை பற்றி அந்தணர் மூலம் அவனிடம் விசாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார் மகாராணி..

ஆ..அப்படியா?நல்ல வேளையாக இந்தத் தகவலை தக்க சமயத்தில் சொன்னீர்கள் வைத்தியரே...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.