(Reading time: 22 - 43 minutes)

ம் மிகச் சரியாகச் சொன்னீர்கள்..ஆனாலும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் அக்குற்றம் சாட்டப்பட்டதாலேயே குற்றவாளியாகிவிட மாட்டர்.அவர் தன் பக்க நியாத்தை எடுத்துச் சொல்லவும் தான் குற்றவாளியல்ல என்பதை நிரூபிக்கவும் வாய்ப்புத் தரப்பட வேண்டும்.இதனை நம் மன்னரும் அறிவார்.

ஆனாலும் சோழ மன்னன் கொடுக்கப்போகும் நெருக்கடியால்  அதற்கான கால அவகாசம் கிடைப்பது சந்தேகமே என எண்ணுகிறார்.அதற்காக குப்தனை வெளியேவிடவும் அனுமதிக்க மாட்டார்....

சரி மகாராணி..எதையும் தங்கள் சித்தப்படி செய்யுங்கள்....இனி இவ்விஷயத்தில் என் பணி என்ன என்பதைத் தெளிவு படுத்துங்கள் மகாராணி அவர்களே... 

வைத்தியரே..நான் சொல்லப்போவதை மிகக் கவனமாக் கேளுங்கள்...நாளை மன்னரோடு நீங்கள் ஹஸ்தனைக்காணச் செல்லப்போவதாகச் சொன்னீர்கள் அல்லவா?

ஆம் மகாராணி...

அப்படிச் செல்வதற்கு முன்பு ஒரு முறை நீங்கள் மட்டும் தனியாகச் சிறைக்குச் சென்று ஹஸ்தனைக் காணுங்கள்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

இப்படிச் சொன்ன மகாராணியை கேள்விக் குறியோடு பார்த்தார் வைத்தியர்...

ஆம் வைத்தியரே..அங்கு நீங்கள் ஒரு மிக முக்கியமான காரியம் ஒன்றைச் செய்யவேண்டும்..

மகாராணி குரலைத் தாழ்த்திக்கொண்டு வைத்தியரின் காதுகளில் மட்டும் விழுமாறு ஒன்றைச் சொன்னார்.

அதைக்கேட்டு விக்கித்துப்போய் நின்றார் வைத்தியர்.

எ..எ..என்ன சொல்கிறீர் மகாராணி..?

ஆம்... வைத்தியரே..தயங்குகிறீர்களா என்ன?

மகாராணி..அது.. அது..சரியான செயலா?மன்னர்க்குத் தெரிய வந்தால்?

தெரிய வராமல் வெகு ஜாக்கிரதையாகத்தான் செய்ய வேண்டும்...இன்று நடு இரவில் செல்லவேண்டும் சிறைக்கு... தயாராய் இருங்கள் வைத்தியரே..உம்மோடு அந்த அந்தணரும் வருவார்..உங்கள் இருவரையும் இளவரசியின் தோழி..உங்களுக்குத்தான் தெரியுமே அந்த சேடிப்பெண் சுசீ..அவள் உங்களுக்கு அறிமுகப்படுத்தும் ஆள் ஒருவன் உங்களைச் சிறைவரை அழைத்துச் செல்வான்..... 

சரி மகாராணி..தாங்கள் சொல்லியபடியே செய்கிறேன்...வருகிறேன் மகாராணி..மனதில் குழப்பத்தோடும், பாரத்தோடும் அவ்விடம் விட்டு அகன்றார் வைத்தியர்.

காராணி ருக்மாவின் அழைப்பின் பேரில் வந்து காத்திருந்த அந்தணருக்கு இருப்புக் கொள்ளவில்லை.

ராணி தம்மை எதற்காக அழைத்திருப்பார் என்ற குழப்பத்தோடும் தவிப்போடும் ..நின்றிருந்தார் அறை வாசலில்.

அழைப்பு வந்ததும் உள்ளே சென்றவர் வணங்குகிறேன் மகாராணி என ராணியை வணங்கினார்.

வாருங்கள் அந்தணர் அவர்களே..உமது உதவி எனக்குக் தேவைப்படுகிறது...

என் உதவியா?வேதமும்,மந்திரமும் சொல்வதைத் தவிற வேறு எதனையும் அறியாதவன் நான் மகாராணி அப்படியிருக்க..

இல்லை..இல்லை உங்களால் மட்டுமே செய்யக்கூடிய காரியம் ஒன்றிருக்கிறது அந்தணரே...

அப்படியாயின் சொல்லுங்கள் மகாராணி.. உதவி என்று சொல்லாதீர்கள்...கட்டளையிடுங்கள்....

விமலாதித்தனைக் கொன்றதாக கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் குப்த இளவரசன் ஹஸ்தகுப்தன் இருப்பது உமக்குத் தெரியுமல்லவா?

தெரியும் மகாராணி...

அவன் பேசும் மொழியை அறிந்தவர் நீர் ஒருவர்தான்.எனவே கொலை பற்றி அவனிடம் விசாரிக்க மன்னர் உங்களை நாளை தம்முடன் சிறைக்கு அழைத்துச் செல்லவிருக்கிறார்.

அப்படியா மகாராணி..இது பற்றி இதுவரை நானறியேன்..

ஆனால் அதற்கு முன் இன்றே நீர் ஹஸ்தனைச் சிறைக்குச் சென்று சந்திக்க வேண்டும்..

என்ன சொல்கிறீர்கள் மகாராணி?

ஆம்..இன்று நடு இரவில் நீர் சிறை சென்று ஹஸ்தனைச் சந்திக்க வேண்டும்.உம்மோடு வைத்தியரும் வருவார்.

நீர் ஹஸ்தனைச் சந்திக்கும் போது நான் இப்போது சொல்லப்போவதை அப்படியே ஹஸ்தனிடம் சொல்லவேண்டும்.

என்ன சொல்லவேண்டும் மகாராணி..?

கவனமாகக் கேளுங்கள்..அந்தணரே..நான் உங்களோடு இப்போது உரையாடுவதை அப்படியே அவரிடம் உரையாடுங்கள்...

குப்த இளவரசர் ஹஸ்தன் அவர்களே...அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஒருவரால் நான் உமைச் சந்திக்க மிக ரகசியமாய் அனுப்பப்பட்டுள்ளேன்.அவர் உமக்கு உதவவே விரும்புகிறார்.நீங்கள் பேசும் மொழியை அறிந்தவர் நான் ஒருவனே என்பதால் உம்மைச் சந்திக்க என்னை அனுப்பியுள்ளார்.விமலாதித்தனை நீர்தான் கொன்றீறா அல்லது வேறு யாராகிலுமா?கொலை நிகழ்ந்த இடத்தில் என்ன நிகழ்ந்தது?உம்மைக் காயப்படுத்தியது யார்?நீங்கள் நிரபராதி எனில் அதனை எவ்வாறு நிரூபிப்பீர்?இச் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முடியவே முடியாது.அப்படியிருக்கையில் உம்மை எவ்வாறு

நிரபராதி என நிரூபிப்பது சாத்தியம்?உண்மையை ஒளிக்காது அனைத்தையும் சொல்லிவிடுங்கள்.உம்மை... நீர் தவறே செய்திருப்பினும் இச் சிறையிலிருந்து நீர் தப்பிக்க உதவுவதாய் அந்த முக்கியப்பட்டவர் என்னிடம் சொல்லியனுப்பியுள்ளார் எனச் சொல்லுங்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.