(Reading time: 22 - 43 minutes)

னக்கு உதவுவதாய் சொன்னவர் யார்?யார்? என வற்புறுத்தி அவர் கேட்டாலும் அவரிடம் எக்காரணம் கொண்டும் என்னைக் குறிப்பிட்டு விடக்கூடாது..அதைச் சொல்வதற்க்கில்லை என உறுதியாகச் சொல்லிவிடுங்கள். கொலைபற்றி அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கவனமாக் கேளுங்கள்.

இன்னொரு அதி முக்கியமான செயல் ஒன்றையும் நீங்கள் செய்யவேண்டும் அந்தணரே......

ஏற்கனேவே திகைத்துப்போய் நின்றிருந்த அந்தணருக்கு மேலும் திகைபேற்பட்டது..

வேறென்ன மகாராணி என்றார் சுதாரித்துக்கொண்டு...

ஹஸ்தனிடம் மேலும் இவ்வாறு கூற வேண்டும்...

குப்த இளவரசே..மிக முக்கியமான செய்தி ஒன்று..இளவரசி மதிவதனி உங்களைப் பார்க்க விரைவில் வர இருக்கிறார்...எனச் சொல்லிவிட்டு... இவ்விஷயத்தைக் கேட்டதும் ஹஸ்த குப்தனிடம் என்ன மாற்றம் தெரிகிறது?அவன் முகத்தில் பரபரப்பும் சந்தோஷமும் ஏற்படுகிறதா?அவனை அறியாமல் அவன் என்ன சொல்கிறான் என்பதை மிக உன்னிப்பாக கவனித்து வாருங்கள்.இது மிகவும் முக்கியமான பணி.எக்காரணம் கொண்டும் இக்காரியங்களில் நான் ஈடுபட்டிருப்பது உமக்கும் வைத்தியருக்கும் என்னால் நியமிக்கப்பட்டுள்ள  சிலரைத்தவிர வேறு யாருக்கும் ஏன் இளவரசி,மன்னர்,ஹஸ்தன் இவர்களுக்கும் கூட தெரியக்கூடாது.வெகு ஜாக்கிரதையாக இருங்கள் என்றார் மகாராணி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "அன்பே உந்தன் சஞ்சாரமே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

நீங்கள் மதிவதனி உங்களை வந்து சந்திப்பார் என்று சொன்னதும் ஹஸ்தன் இளவரசி எப்போது வருவார் என்று  கேட்டால் அது பற்றி எனக்குத் தெரியாது என்று சொல்லிவிடுங்கள்...எனக்கு உதவி செய்ய விரும்புவது இளவரசி மதிவதனியா எனக் கேட்டால் அது பற்றியும் தெரியாது எனச் சொல்லிவிடுங்கள்.

அப்படியே செய்கிறேன் மகாராணி..நான் மன்னருடன் நாளை சிறை சென்றதும் என்ன செய்ய வேண்டும் மகாராணி..?

ஆம்.நாளை ஹஸ்தனைச் சந்திக்க உமக்கு மன்னரிடமிருந்து அழைப்பு வரும்.அப்படி நீங்கள் ஹஸ்தனைப் பார்க்க மன்னருடன் சிறைக்குச் சென்று கொலை பற்றி விசாரிக்கையில் ஹஸ்தன் சொல்லும் பதில் எதுவும் தெளிவாக இல்லை என்றும் என்ன சொல்கிறார் எனப் புரியவில்லை என்றும் மன்னரிடம் சொல்லவேண்டும்.

மகாராணி ஏன் இப்படிச் சொல்கிறார் எனப் புரியாமல் ராணியின் முகத்தையே பார்த்தார் அந்தணர்.

அந்தணரே ..நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என இப்போது உங்களுக்குப் புரியாது..நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் போதும்..

அப்படியே செய்கிறேன் மகாராணி..நான் சிறைக்கு எப்படிச் செல்வது?

உங்களோடு கூட வைத்தியரும் வருவார்..உங்கள் இருவரையும் நம்பகமான ஒருவர் சிறைவரை அழைத்துச் செல்வார்.

நல்லது மகாராணி..விடை கொடுங்கள்..

இருங்கள் அந்தணரே...இன்னொரு மிக முக்கியமான பணி இருக்கிறது உமக்கு..

சொல்லுங்கள் மகாராணி..

இளவரசி மதிவதனிக்கு... ஆங்..நீங்கள் ஹஸ்தனோடு எம் மொழியில் பேசுவீர்கள்?

சமஸ்கிருதமும் மகதமும் கலந்த மொழி மகாராணி....

ஆம்..அம்மொழியைக் கற்றுத் தரவேண்டும் இளவரசிக்கு...அதுவும் இன்று முதலே..ஓரளவு பேச மட்டும் கற்றுக்கொடுத்தால் போதும்....

அப்படியே ஆகட்டும் மகாராணி..விடை கொடுங்கள் மகாராணி என அந்தணர் கேட்கவும் வாசலில் சுசீயின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.

உள்ளே அழைக்கப்பட்டாள் சுசீ.

அந்தணரே..இவள் சுசீ..உங்களயும் வைத்தியரையும் இவளே வழி நடத்துவாள்.என் பணியில் பெரும்பங்கு எனக்கு உதவியாய் இருக்கப் போபவள் இவளே.. என்னிலையிலும் இவளை நீங்கள் நம்பலாம். நீங்கள் செல்லுங்கள்...இன்று சிறை சென்று ஹஸ்தனைச் சந்திக்க இரவு உங்களுக்கு அழைப்பு வரும்.

மகாராணியை வணங்கி விடைபெற்று வெளியே வந்த அந்தணருக்கு பல கேள்விகள் நெஞ்சில் எழுந்தன.

அவரவர்களுக்குத் தரப்பட்ட பணியைச் செவ்வனே செய்வார்களா இவர்கள்?ஹஸ்தனை மதிவதனி சந்திப்பது எப்போது?காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

தொடரும்...

Episode 17

Episode 19

{kunena_discuss:956}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.