(Reading time: 23 - 45 minutes)

தாத்தா அருகில் அமர்ந்தவள் அவர் கைகளை தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டு அவர் முகத்தையே பார்த்திருந்தாள். என்னதான் தாத்தா நடந்துச்சு? காலையில நானும் பாட்டியும் தான் கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தோம்... வீட்டுலையும் பூஜை முடிஞ்சு நானும் கிளம்பி ஹாஸ்பிட்டல் வந்துட்டேன்... அப்புறம் பார்த்தா ஹாஸ்பிட்டல் வந்து நிக்கறீங்க? அதுவும் பாட்டிக்கு நெஞ்சுவலினு??? என்ன ஆச்சு தாத்தா?

இரண்டு நாளைக்கு முன்னாடி லட்சுமி அண்ணி நம்ம வீட்டுக்கு போன் பண்ணியிருந்தாங்க... ஒரே அழுகை...உன் ஆருயிர் தோழிக்கிட்ட போன் போட்டு பேசினாங்க போலயிருக்கு... இவங்க ஏதோ கேட்க... அவ ஏதோ பேச... போன்லியே பயங்கர சண்டை ரெண்டு பேருக்கும்...'என்னால இனிமே யாரு வாழ்க்கையும் நாசமாகாது...நீயும் உன் குடும்பமும் சந்தோஷமா இருங்க' நுட்டு போனை வெச்சிருக்கா அவ...' என்றார் மூத்த மாமி தெய்வநாயகி.

சரி... அதனால என்ன பிரச்சனை மாமி இப்போ?

இன்னைக்கு காலைலையும் மறுபடியும் போன் செய்தாங்க அண்ணி... ஆனா.. அவங்க சொன்ன விஷயம்...

ஏன்??? என்ன ஆச்சு??

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

இல்ல... உன் தோழிய.... ஏதோ ஒரு கும்பல்...

ஏதோ... ஒரு கும்பல்...? என்ன ஆச்சு மாமி??' என்றாள் தேவி பதற்றத்துடன்.

ஏதோ ஒரு கும்பல்... பிணை கைதியா கடத்திட்டாங்கனு... ஏதோ நியூஸ் இண்டர்னட்ல வந்திருக்குனு... உண்மையா... பொய்யானு தெரியலைனு... ஒரே அழுகை...அப்போ வீட்டுல யாருமேயில்ல... நானு... மாமா.. அத்தை.. மூணு பேரு மட்டும் தான் இருந்தோம்... இவங்க பதட்டமா பேசுறதை பார்த்து... நானும் டிவியில நியூஸ் பார்க்க வெச்சேன்..'

என்ன ஆச்சு??

அந்த நியூஸ் உண்மைதான்... ஏதோ ஒரு கும்பல் மதியை கடத்திட்டாங்கனு பிளாஷ் நியூஸ் ஓடிக்கிட்டு இருந்துச்சு! அதை பார்த்ததும் உங்க பாட்டி நெஞ்சை பிடுச்சுகிட்டு கீழே விழுந்துட்டாங்க...

என்னது??' என்று அதிர்ந்திருந்தனர் அந்த குடும்பத்திலிருந்த அனைவரும்.

உடைந்து அழ ஆரம்பித்தார் தாத்தா... எதற்குமே கலங்காது கம்பீர்மாய் நிற்கும் மனிதன் இன்று சிறு பிள்ளை போல் கண்ணீர் சிந்துவது கண்டு மனம் நோந்தாள் டாக்டர் தேவா.

என்ன சிவா?? நீங்களும் படுத்துகிட்டா யாரு உங்க ரெண்டு செல்லங்களையும் பார்த்துக்கறது?? உங்க பொஞ்சாதி என்ன நா வந்து படுத்துகிட்டாங்க... அங்க இன்னோரு செல்லத்தை கடத்தி வெச்சிருக்காங்க... நீங்கதான் இப்போ வேலை செய்யனும்...'என்று அவள் கூறும் போதே

டாக்டர் மேம்... பேஷண்ட் பேரு சொன்னா... இந்த டிடைல்ஸ் எல்லாம் ஃபில் பண்ணிட்டா... இனிஷியல் பேமண்ட் செய்யனும்..' என்றபடி வந்தாள் ஒரு நர்ஸ்.

கலா.. அவங்க பேரு திருமதி. செண்பகவள்ளி சிவப்பிரகாசம்...நீங்க அந்த பேப்பர்ஸை என் டேபிள்ல வைங்க நான் ஃபில் செய்யறேன்' என்றாள்.

இல்லடா.. நானே எழுதறேன்... இங்க கொடுங்க நர்ஸ்..நான் போய் காசு கட்டிட்டு வரேன்' என்று அதை வாங்கினார் மூத்த மாமா சுந்தரமூர்த்தி.

பாட்டியை பார்த்துவிட்டு வந்தவள் நேரே டாக்டர்ஸ் ரேஸ்டிங் ரூமிற்கு சென்றாள். அங்கு இரண்டு டாக்டர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாது அங்கிருந்த டிவியை உயிர்பித்து நியூஸ் சேனலை வைத்தாள்.

என்ன தேவா? எங்களையேல்லாம் அதை உபயோகப்படுத்தக்கூடாதுனு சொல்லிட்டு நீங்களே அதை யூஸ் செய்யறீங்க??' அங்கிருந்த டாக்டர்களில் ஒருத்தி.

தேவா இவர்கள் கேள்வி கேட்பதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் நியூஸ் சேனலை திருப்பினாள்.

எதுக்கு இவ்வளவு அவசரமா நியூஸ் வெக்கறீங்க?? என்ன விசயம்?? ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க??? ஏனி இஸ்யூஸ்??' என்று கேட்டார்கள் அந்த அறையிலிருந்த மருத்துவர்கள்.

அவளிடம் இருந்து அதற்கும் பதில் இல்லை. டிவியில் பிளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது. "ஸ்பேஷல் ஹை கமிஷனர் ஆஃப் டரக் மாஃபியா இன்வஸ்டிகேஷ்ன் வாஸ் கிட்னாப்ட் பை தி இண்டர்னல் அஜிடேட்டர்ஸ் இன் ஹரியானா. நீலாம்பரி ஐஏஸ் வாஸ் கிட்னாப்ட் பை த அஜிடேட்டர்ஸ்" என்று மாற்றி மாற்றி பிளாஷ் ஒளிபரப்பாகியது.

பிளாஷ் நியூஸ் பார்த்து அப்படியே போய் உரைந்து நின்றாள் தேவமனோஹரி. கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது!

பார்த்தீங்களா டாக்டர்.. அந்த ஐஏஸ் ஆபிசருக்கு சின்ன வயசு தான்... கலவரக்காரங்களா... இல்ல திவிரவாதிகளா?? யார் கடத்தினாங்கனே தெரியல! கடத்தி ரெண்டு நாள் வேற ஆகுதாமே? நியூஸ் இப்போ தான் லீக் ஆகியிருக்கு...என்ன நிலவரம்னு கூட தெரியலையாம்... சென்னை தான் பூர்வீகமாம்...சொந்தம்னு யாரும் இல்ல போல... ' என்றார் அங்கிருந்த மருத்துவர்களுள் ஒருவரான டாக்டர் லதா.

இல்லையே...தம்பி மட்டும் தானாம்... அதுவும் யூஸ் ல இருக்காங்கலாம்...மீடியாவால அவங்களை ஸ்பாட் செய்ய முடியலை போல....இல்லைனா அந்த பையனை போட்டு வருத்து எடுத்திருப்பாங்களே!' என்றான் டாக்டர் பரத். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.