(Reading time: 23 - 45 minutes)

தற்குள் உள்ளேயிருந்து ஹரி வேகமாய் வெளியில் வந்தான். டாக்டர்.. ஷி இஸ் அகைய்ன் இன் டூ க்ரிட்டிகல் ஸ்டேஜ்..' என்று சொல்ல மீண்டும் அந்த மோடிற்கு தாவினாள் டாக்டராய்!

கலா... போய் சீவ் டாக்டரை கூப்பிடு... என்று குரல் கொடுத்தவள்.. பரத்..நீ என்கூட வா..' என்று உள்ளே விரைந்தாள்.

கேஸ் ஷீட்டை பார்த்திருந்தான் பரத்... அதற்குள் ஹரியிடம் திரும்பியவள் 'பிளட் க்ளாட்ஸ் ஏற்படாமல் இருக்க ஏற்கனவே ஆஸ்ப்ரின் கொடுத்திருக்கு..' 

மூச்சுக்கு தினறியவரை பார்த்து..ஏற்கனவே இருந்த ஆக்ஸிஜன் லேவலை சிறிது கூட்டி நைட்ரோ க்ளிசறீன் டிரீட்மண்டை தொடங்கியிருந்தாள். 

கேப்டோப்ரில்.. எனலாப்ரில்...ரெண்டுத்துல எது ஸ்டாக் இருக்கு...' என்று தேட அதற்குள் ஹரி எனலாப்ரில் இன்ஜேஷன் போட்டிருந்தான். 

அதற்குள் அவள் எனேக்சோபரின் இன்ஜேஷநோடு வந்து நின்றாள். சடசட வென்று நிலைமையை சமாளித்து... அவர் மூச்சு திணறலை கட்டுப்படுத்தி.. அடுத்தக்கட்ட நடவடிக்கையாய் நைட்ரோ க்ளிசறீன்.. ஆண்ட்டி கோயாகுலண்ட்ஸ்... ஏசிஇ இன்ஹிபிட்டார்ஸ்... என்று கொடுத்து.. நிலைமையை கொஞ்சம் சீராக்க பாடுப்பட்டாள்.

பாட்டி பக்கத்திலேயே அவர் கையை பிடித்து அமர்ந்து கொண்டாள். மெதுவாய் அவர் அருகில் அமர்ந்து பேசத்தொடங்கினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

பாட்டிம்மா... இங்க பாருங்க... உங்க பேத்திக்கு எதுவும் ஆகாது...அவ நல்ல படியாதான் இருப்பா... 

வெற்றி மாமா அவ விஷயமா தான் அங்க அலஞ்சிட்டு இருக்கார்... இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் தான்... அதுக்குள்ள இவ்வளவு அவசரப்படுறியே... 

என்ன நானும் உன் பேத்தி தான்...அது மறந்து போச்சா?? 

இப்போ என்ன உனக்கு?? உன் மாப்பிள்ளை பேரனுங்க ரெண்டு பேரையும் உனக்கு பார்க்கனும்....அதுவும் எங்க கூட ஜோடியா அவ்வளவு தானே...அதுக்கு இப்டியேல்லாம் பயமுறுத்தனுமா?? நீயே சொல்லேன் பாட்டிம்மா?? 

இங்க என் வீட்டுல இருக்காதடீ... போ.. போய் புருஷனோட சேர்ந்து வாழுநு துறத்தி விட்டிருக்கனும் பாட்டிம்மா நீ! அதை விட்டுட்டு... கொஞ்சின... அதுதான்... எங்களை அடிச்சாவது மாமியார் வீட்டுக்கு அனுப்பி வெச்சிருக்கனும்...அதை விட்டுட்டு இப்படி செய்யறியே? உனக்கே இது நியாமா படுதா... இந்த வயசுல உனக்கு இது எல்லாம் தேவையா??

உனக்கு உடம்பு முடியலைனா யாரு என் பிள்ளைகளையும் அவ பிள்ளைகளையும் நல்லபடியா வளர்த்து ஆளாக்குவாங்க?? 

உன் மருமகள்களையும்... மகள்களையும் நம்பி நாங்க அந்த பொறுப்பை கொடுக்கமாட்டோம்... அவங்க பிள்ளைகள வளர்த்த லட்சணம் தான் தெரியுதே.... எங்க பிள்ளைங்க உன் பிள்ளைங்க மாதிரி வளரனும்...

நாங்க பிள்ளைகளுக்கு ஒரு வழி செய்யலாம்னு பார்த்தா... நீ இப்படி வந்து படுத்துக்கிட்ட...அப்ப உனக்கு கொள்ளு பேரனுங்க வேணாமா?? நாங்க ஒன்னா சேர்ந்து வாழ வேணாமா?? 

பாருங்க உங்க சிவாவை யாரு கவனிப்பாங்க?? உங்க பசங்களா இல்ல பொண்ணுங்களா... யாரு வந்தாலும் உனக்கு உன் புருஷன் தான்... உன் புருஷனுக்கு நீ தானு டையலாக் எல்லாம் விட்டீங்க... அது எல்லாம் உங்களளுக்கு கிடையாதா?? அவரும் உங்களுக்கு போட்டியாய் உடம்பை கேடுத்து உங்க பக்கத்து பேட்டுல படுத்துக்கிடவானு கேட்கறாரு... யாரு அவரை தட்டி கேட்கறது?? உங்க புருஷனுக்கு ஒன்னுனா உங்களுக்கு பரவாயில்லையா??

மிரட்டல்....விளக்கம்... கெஞ்சல்... கொஞ்சல்... சமாதானம்...சாட்சியம்... ஒப்புதல்... வாக்குமூலம்... என்று வேவ்வேறு பாவனைகளை கொண்டிருந்தது அவளது வாய்மொழி... 

கண்களோ.... எழுந்து வந்துடுங்க என்றவாரு ஒரு பரிதாப பார்வையை பாட்டியின் முகத்தில் இருந்தது. அத்துணை நேரம் மூச்சு வாங்க கெஞ்ச... சிறிது சிறிதாய் முன்னேற்றம் கண்டது அவரது உடல்னிலை!

எழுந்து வெளியில் சென்றாள் அங்கு மொத்த குடும்பமும் நின்றிருந்தது. எல்லோரையும் பார்த்து சிறிதாக புன்னகைத்தவள்...' இப்போ அவங்களுக்கு கொஞ்சம் பரவாயில்ல... ஆனாலும் நீங்க யாரும் இப்போ பார்க்க முடியாது... லேட் ஹர் ஸ்டேபிலைஸ் லிட்டில் மோர்... அப்புறமா அனுப்பறேன் உங்களையேல்லாம்... தாத்தா.. உங்களுக்கும் சேர்த்து தான்!' பின்னோடு ஹரியும் பரத்தும் நின்றிருந்தனர். மாற்று டாக்டரை உள்ளே கவனிக்க வைத்துவிட்டு தான் வெளியில் வந்திருந்தனர்.

தாத்தாவை சமாதானப் படுத்தும் நோக்கில்...'சியர் அப் சிவா... பாருங்க என்னோட பிரண்ட்ஸ் இவங்க... டாக்டர் பரத்... சர்ஜன்... டாக்டர் ஹரி... ஐசியு டாக்டர்! அவங்க முன்னாடி அழுது என் மானத்தை வாங்காதீங்க தாத்தா!' என்று அதட்டினாள்.

தாத்தா... பாருங்க... உன் அன்பு மனைவி... இன்னும் இரண்டு நாளுல வீட்டுக்கே எழுந்து வந்திடுவாங்க... அப்போ... நீங்க அழுததை உங்க அழுகாச்சி காவியத்தை அவங்ககிட்ட நிச்சயமா சொல்லிடுவேன்!' என்று செல்லமாய் மிரட்டினான் பரத். அங்கிருந்த எல்லோர் முகத்திலும் அரும்பாய் சிறு புன்னகை!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.