(Reading time: 23 - 45 minutes)

ன்னவோ போங்க டாக்டர்... இந்த மாதிரி வேலையேல்லாம் பொண்ணுங்களுக்கு லாயக்கியே கிடையாது... ஏன் தான் இப்படியேல்லாம் தானா போய் சிக்கிக்குறாங்களோ! நம்மளால என்ன முடியுமோ அதை செய்யனும்... அதை விட்டுட்டு... இப்படி ஏதோ படிச்சிட்டு... அப்புறம் குய்யோ முய்யோனு கத்தி கதறி கூப்பாடு போட வேண்டியது..' என்று சலித்துக்கொண்டாள் டாக்டர் பரத்துடன் பேசிக்கொண்டிருந்த டாக்டர் லதா. 

பேசியதோடு நிறுத்திக்கொள்ளாமல்...என்ன டாக்டர் தேவா? நான் சொல்றது சரி தானே?' என்று ஒப்பினியன் வேறு கேட்டாள். சும்மா இருந்த சிங்கத்தை வேறு சொரிஞ்சு விட்டா...அது சும்மா இருக்குமா??. 

கண்களில் நீர்மணிகள் திரண்டிருந்தாலும் அதனை கட்டுப்படுத்திக்கொண்டு தீர்கமான அனல் பார்வை ஒன்றை லதாவிடம் வீசியவள்... அதுவரை லதா கூறுவதை காதில் கேட்டாலும் உணர்ச்சிக் குவியல்களுக்கு நடுவில் போராடி தன்னை வெற்றிகறமாய் திடப்படுத்திக்கொண்டவளை வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்த டாக்டர் பரத்திடம் திரும்பினாள்....

பரத்... நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்கல... அப்படி இருந்தாலும் பரவாயில்லை...உங்க டாக்டர் தோழி...பொண்ணு தானே! அதுவும் கைனிக் வேற! இல்ல?? இப்படியோரு ....தோழி உங்களுக்கு இருக்காங்கனா...இனி நீங்க எனக்கு பிரண்ட் கிடையாது...எதுவும் அஃபீஷியல் ரிலேஷன்ஷிப் கூட நமக்கு நடுவில இருக்காது... குட் பை!' என்றுவிட்டு விறு விறு என்று பாட்டியின் அறையை நோக்கி நடந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்...

கோபமே வராத அவளுக்கு கோபம் வந்ததை அதிசயமாய் பார்த்து ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றவன்... அடுத்த நோடி...'தேவா...' என்று அழைத்துக்கொண்டு அவள் பின்னே ஓடினான்.

மொபைலில் வாட்ஸ் ஆஃபை செக் செய்துக்கொண்டு நடந்தவளுடன் வேகமாய் வந்து இணைந்துக்கொண்டான் பரத். என்ன தேவா??? தேவ் ஒரு நிமிஷம்...என்ன சட்டுனு இப்படி சொல்லிட்டு வந்துட்ட...அவங்க நம்ம ஹாஸ்பிட்டல்ல சீனியர் டாக்டர்... தெரியும்ல...மதுரையில பிரபலமான கைனிக்... அவங்களை போய்....' பேசிக்கொண்டே வந்தவன் அவள் நின்று முறைத்துக்கொண்டிருப்பதை பார்த்து அவனும் நின்றான். 

'என்ன ஆச்சு தேவ்??' 

வில் யு ஸ்டாப் ஆல் திஸ் நான்சென்ஸ்! டோண்ட் ஸ்பீக் ஆபோட் யுவர் ஃபிரண்ட் டு மீ!' என்று ஏறக்குறைய கத்தினாள் அடிக்குரலில் அவனுக்கு மட்டும் கேட்குமாறு!

பாட்டியின் நிலவரத்தை பார்த்துவிட்டு வெளியில் இருந்த குடும்பத்தினரிடம் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு வருமாறு வற்புருத்தி தாத்தாவுடன் அனுப்பி வைத்தவள் அவர்கள் வரும்வரை தான் பார்த்துக்கொள்வதாய் கூறிவிட்டு அங்கே தாத்தா அமர்ந்திருந்த நாற்காலியில் அமர்ந்தாள். 'டாக்டர் ஹரி.. எனக்கு கொஞ்சம் கால் செய்ய வேண்டியது இருக்கு...அவங்க வருவதுக்குள்ள செய்யனும்... நீங்க கொஞ்சம் பாட்டிக்கூட இருங்க...நான் இங்க தான் இருக்கேன்.. ஒரு டேன் மினிட்ஸ் ப்ளீஸ்!' என்றுவிட்டு தான் வந்து அமர்ந்தாள். பரத்தும் அவள் அருகில் அமர்ந்தான்.

தயவு செய்து தனியா விடறீயா பரத்..

நான் ஒன்னும் செய்யல பா... யூ கண்டின்யூ!

போனை காதுக்கு கொடுத்தவள் அப்படியே அமர்ந்திருந்தாள். அழைப்பு எடுக்கப்படவில்லை!

திரும்பவும் டயல் செய்ய அந்த புறம் அழைப்பு ஏற்கப்பட்டது.

தியாகு அண்ணா .... 

சொல்லு டா தேவி...' என்றான் தியாகு எங்கிற தியாகராஜன்.

பாட்டிக்கு ஹார்ட் அட்டாக்...ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம் அண்ணா...

எப்போ... என்ன ஆச்சு?? எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க?? மச்சானுக்கு தெரியுமா??

உங்க மச்சானுக்கு தான் முதல்ல தகவல் சொல்ல கால் அடிச்சேன்... அவர் எடுக்கல...வசந்தி அண்ணிகிட்ட சொல்லுங்க... நீங்க எங்க இருக்கீங்க??

வசந்தி....சீக்கிரம் வாயேன்... என்று குரல் கொடுத்துவிட்டு 'எந்த மச்சானுக்கு கால் அடிச்ச??' என்று பதில் கேள்வி கேட்டான் தியாகு.

தியாகுணா... உங்க பொண்டாட்டி வசந்திக்கு எத்தனை உடன்பிறப்பு இருக்கு?? அவங்களுக்கு தான் அடிச்சேன்... அவர் எடுக்கவேயில்ல

டேய் தேவி.... நான் தேவா கிட்ட சொன்னியானு கேட்டேன்..

அண்ணா.. நான் வெற்றி மாமாக்கு தான் கால் செஞ்சேன்...சரி அதேல்லாம் விடுங்க... நீங்க சீக்கிறமே கிளம்பி மதுரை வாங்க... நான் வேலை செய்யற ஹாஸ்பிட்டல்ல தான் இருக்காங்க..நான் வெச்சிடுறேன்...' என்று போனை அணைத்துவிட்டாள்.

பரத் ஏதோ கூறத்தொடங்க அழைப்பு வந்து அவர்கள் உரையாடலை தடை செய்தது.

வெற்றி... நான் தேவா பேசறேன்....' என்றாள்

சொல்லு தேவி..

டேய் வெற்றி மாம்ஸ்... நம்ம பாட்டிக்கு உடம்பு சரியில்ல...ஹார்ட் அட்டாக்...கொஞ்சம் சீக்கிரமா நீயும் உன் வைஃப்பும் கிளம்பி வரீங்களா??

ஹே... என்ன ஆச்சு.... எப்படி திடீர்னு... காலையில மதியை பத்தின நியூஸ் பார்த்தாங்களா?? அதுக்கு தான் கால் செய்தியா??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.