(Reading time: 23 - 45 minutes)

மாம்ஸ்....எனக்கு பயமா இருக்கு... பாட்டி காலையிலேயே ரொம்ப வருத்தப்பட்டாங்க... நம்மை பத்தின கவலை தான் அதிகமா இருக்கு அவங்களுக்கு.... 

....

அவங்களும் படுத்துக்கிட்டாங்க... தாத்தா அழறாரு...மாமா.. மாமி சித்தி.. சித்தப்பா... எல்லாரும் பதட்டமா இருக்காங்க... மதி நிலைமை என்னனு வேற தெரியல...நீங்க எல்லாம் வர வரை நான் எப்படி சமாளிக்க போறேனு தெரியல... ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்ல மாம்ஸ்...' என்று உடைய தொடங்கினாள்

தேவி அழாதடா...மஞ்சு வருவா அங்க... நீ பயப்படாத... நான் மதி விஷயமா தான் அலஞ்சிட்டு இருக்கேன்... அவ ஒருத்தினால எவ்வளவு பேருக்கு பிரச்சனை பாரு... சொன்னா நீதான் அவளுக்கு வக்காலத்து வாங்குவ.. நான் வேணா... தேவாகிட்ட பேசி பார்க்கவா... அவனை வந்து துணைக்கு இருக்க சொல்லவா??

வெற்றி... உன் வேளையை மட்டும் பாரு...' என்று அவள் பற்களை கடிக்க

சரிமா சரி... உன் நண்பிய நான் எதுவும் சொல்லலை...நான் அங்க வந்திடுறேன்... அப்புறமா பேசிக்கலாம்...' என்று கூற

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

நீ... நீலாவை பத்தி இன்ஃபோ கலக்ட் செய்துட்டு இன்னும் அரைமணி நேரத்துல என்னை கூப்பிடு.... நான் லட்சுமி மா கிட்ட வேற பேசனும்...இப்போ போனை வை!' என்று அணைத்துவிட்டு கண்கள் மூடி பின்பக்க சுவரில் அப்படியே சாய்ந்தாள்.

மனதில் அவ்வளவு வேதனை மண்டிகிடந்தது. ஒரு போதும் இவ்வாறு கலங்கியதில்லை அவள் மனம். தன் வேதனையை போக்க...ஆறுதல் கூற...அன்பான வார்த்தைகளுக்கு... தஞ்சம் தரும் ஒரு தோள்...அவனை நினைத்து மனம் மேலும் வலித்தது...

என்ன தேவா?? என்ன ஆச்சு??' என்று அருகிலிருந்த டாக்டர் பரத் அவள் கைபிடித்து அழுத்தி கொடுக்க

ச்ச்ச்ச்... என்ன தேவா??? அழக்கூடாது தேவா... ஒரு கார்டியாலஜிஸ்ட் நீ... உன் இதயமே இவ்வளவு பலஹினமா இருந்தா... அப்புறம் எப்படி உன்னை நம்பி பேஷண்ட்ஸ் வருவாங்க??...நாம டாக்டர்ஸ்... ஏமோஷன்ஸ்க்கு இடம் கொடுக்கக்கூடாது...அது நம்ம வேலைக்கு ஆகாது தேவா... அதை புரிஞ்சுக்கோ!' என்றவாறு மறுபடியும் அழுத்தி கொடுக்க

அவன் அழுத்தத்தில் வேறுபாட்டை உணர்ந்தவள்...அப்போது தான் அந்த காரிடரில் அவன் இவளது கைபிடித்து அமர்ந்திருந்ததை உணர்ந்து கைகளை சட்டேன்று உருவிக்கொண்டாள்.

டாக்டர் பரத்தும் எந்தவிதமான விகல்பத்துடனும் அவள் கையை பற்றி அழுத்தி கொடுக்கவில்லை... சாதாரணமாய் ஒரு தோழிக்கு செய்யும் வகையில் தான் அவள் கையை பிடித்ததே...ஆனால்...ஆனால்... அவன் மனதின் ஓரமாய் அவள் மீது குடிக்கொண்டிருக்கும் ஆரவம்...அவன் மனதின் ஆழத்தில் புதைக்கப்பட்டிருக்கும் அவள் மீதான காதல் உணர்வு அந்த நிமிடம் தட்டி எழுப்பப்பட... ஒரே ஒரு நிமிடம் அவனது காதல் அந்த கை அழுத்தத்தில் வேறு விதமாய் வெளிப்பட்டுவிட...தன்னிலை உணர்ந்தவன் தன்னை சுதாரித்துக்கொள்வதற்குள் தேவமனோகரி அவன் கையை உதரி.. தன் கையை உருவிக்கொண்டாள். 

ஒரு ஆணின் தொடுகையில் இருக்கும் வேறுபாட்டை அவளும் அறிவாளே... மருத்துவராய் இல்லாமல்...உணர்ச்சிகளுள்ள ஒரு மங்கையாய்!

ஐ டோண்ட் லைக் திஸ் பிஹேவியர் பரத்... யூ டூ??' என்றாள் காரமாய். உன்னை என் நல்ல நண்பனாய் நம்பினேனே...நீயுமா இப்படி?? என்றது அதன் தோணி.

சாரி தேவா... திஸ் வில் நாட் ஹாப்பன் அகைய்ன்...ஐ டோண்ட்... இட் வாஸ் அன் இண்டன்ஷ்னல்....ஐ டோண்ட் மீன் இட் தட் வே.....' என்று உளரி கொட்டி கிளறிக்கொண்டிருந்தான் பரத். 

அவனையே தீர்கமாய் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் தேவமனோகரி. அவள் கண்களை நேராய் சந்திக்கமுடியாமல் அமர்ந்திருந்தான் பரத். 'உன் தொடுகையே உன் மனசுல என்ன இருக்குனு எனக்கு சொல்லிடுச்சுடா...ஆனாலும் என்னால நம்பவே முடியல... நீயா...இப்படி? நீ உன் வாயை திறந்து சொன்னா தான் இந்த இடத்தை விட்டு நகருவேன்' என்றது அந்த பார்வை.

ஆழ்ந்த மூச்சு எடுத்தவன் 'தேவா... திஸ் இஸ் நாட் தி ரைட் பிளேஸ்...அண்ட் ரைட் டைம் டூ கன்வேஸ் தீஸ் திங்க்ஸ்..' என்றான் மெதுவாக.

'நீ சொல்லாமல் நான் நகர மாட்டேன்..' என்பது போல அமர்ந்திருந்தாள்.

ஒகே தேவா... நான் சொல்லாம நீ நகர மாட்டனு தெரியும்...ம்ம்ம்ம்.. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு தேவா...லவ்வுனு சொல்ல மாட்டேன்... ஆனா நீ என் மனைவியா காலம் முழுக்க என் கூட வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கறேன்...இப்போ சொல்லனும்னு இண்டேஷ்ன் இல்ல... பட் என்னையும் மீறி அது வெளியில வந்திடுச்சு...நீ முதல்ல பாட்டிய பாரு.. நாம அப்புறம் இத பத்தி பேசலாம்..' என்றான் கண்களை நேராய் பார்த்து. இது தான் பரத்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.